Skip to main content

Posts

Showing posts from March, 2010

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள

வாசகி நானல்ல! - பக்கம் 10

--------------------------------- "பாலைவனத்தில் ஓர் சோலை தெரிந்தது.ஆசையாய் அதை துரத்தி சென்றேன். கால்கள் ஏறிய, கண்கள் கூசும் வெய்யிலில் சென்ற பின் தான் தெரிந்தது அது கானல் நீரென்று!" --------------------------------- இரண்டு நாட்கள் அவர்கள் முன்பு போல சகஜமாக பேசிக் கொள்ளவில்லை.அலுவலகத்தில் பொதுவாக ஹரியை ஓர் இடத்தில் யாரும் சேர்ந்தர்ப்போல் ஒரு ஐந்து நிமிடங்கள் கூட பார்த்தது இல்லை.பரபப்புக்கும் சுறுசுறுப்பிர்கும் பேர் போனவன் ஹரி. அவன் வேலை செய்யாமல் இருந்தே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த ஹரி சோபையுடன் காணப்பட்டது எல்லோருக்கும் சற்று ஆச்சரியத்தை அளித்தது. அவனை பார்க்கும் போதெல்லாம் பிரியா அவனிடம் முகம் கொடுக்காமல் பேசினாள். எதை கேட்டாலும் இயந்திரம் போல பதில் சொன்னாள்.வேலையை பற்றி மட்டும் பேசினாள் தவிர மற்ற நேரத்தில் மௌனீயாக அமர்ந்திருந்தாள்.மற்றொரு நாள் அவன் மிகவும் வற்புறுத்தி அவளிடம் பேச தொடங்கினான் ஹரி. "தயவு செய்து என்ன மன்னிச்சிடு பிரியா. நான் உன்னை ரொம்ப நோக வெச்சிடென்னு நினைக்கிறேன். ஆனால் என் காதல் உண்மை பிரியா. உன் கூட மட்டும் தான் பழகினேன் அப்படிங்கிறததுக்கு

வாசகி நானல்ல! - பக்கம் 9

ஆசை ஒரு பக்கம் பயம் ஒரு பக்கமும் பிடுங்கி தின்றன ஹரிக்கு.இந்த நாள் அவன் வாழ்க்கையை எப்படி திருப்பி செலுத்த போகின்றது என்று அவனுக்கே தெரியாது. எதுவானாலும் சரி இன்று கேட்டு விடுவது என்றும்,அதே சமயம் எப்படி கேட்பது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தான் அவன். வீட்டில் யாரும் இல்லை.அன்று விடுப்பு வேறு இன்று தான் சரியான தினம் என்று முடிவு செய்தான். சரியான சமயத்தில் செல்பேசி அடித்தது. "ஹலோ ஹரி!" "...." "ஹரி??!" "ஹ்ம்ம் சொல்லு பிரியா.." "இப்போ தான என்திரிசீங்க?என்ன சமையல்? வீட்டுல யாரும் இல்லேன்னு நேத்திக்கி மெசேஜ் பண்ணி இருந்தீங்க? இன்னிக்கி என்ன ப்ரோக்ராம்?"என்று கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தாள் அவள். "ஒண்ணும் இல்ல..இனிக்கி திருவல்லிக்கேணி கோயிலுக்கு போறேன்.. நீயும் வரியா ..எனக்கு ஒரு சந்தேகம்..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பிரியா..இன்னிக்கி நீ என்கூட வர சம்மதமா?" "என்னடா இது?சார் அதிசயமா இன்னிக்கி கோயிலுக்கு எல்லாம் போறீங்க? என்ன மத்தியானம் லஞ்சு அங்கேயேவா :-D? சரி சரி என்ன திடீர்னு?" என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்டாள்

வாசகி நானல்ல! - பக்கம் 8

----------- "எட்டி சென்றால் கிட்டி வரும் கிட்ட சென்றால் எட்டி போகுமோ? " -------------- மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டு விழித்தான் ஹரி. பிரியா அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள். அப்போது அவன் கால்கள் மிகுந்த வலி ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான். " சிரமப்படாத ஹரி! ஒண்ணும் இல்ல என்று அவன் நெஞ்சின் மேல் மெல்ல அழுத்தினாள் பிரியா. " பிரியா? உனக்கு ஒன்னும் ஆகலியே? அடி படல்லியே?" என்று விசாரித்தான் ஹரி. "எனக்கு என்ன ஆயிருந்தாலும் பரவா இல்ல. நல்ல வேளையா உனக்கு எதுவும் ஆகல்லை அது போதும் சாமி !". என்று கூறினாள் அவள். அப்போது டாக்டர் வந்தார். "என்ன ஹரி எப்படி இருக்கீங்க ?" "கொஞ்சம் வலிக்கிறது டாக்டர் என்னாச்சு என் காலுக்கு?" Nothing serious! Thank God there is no fracture or injury.Just a sprain தான் காலில டயர் ஏறினதால நீங்க அதிர்ச்சி ஆயிடீங்க அவ்வளவு தான். சாயங்காலம் கொஞ்சம் சரி ஆயிடும். நீங்க போயிடலாம். ரெண்டு நாள் வீட்டில ரெஸ்டு எடுத்துகிட்டு ஆபிஸ் போங்க போதும். பாவம் இந்த பொண்ணு தான் ரொம்ப பயந்து போய்ட்டா. "என்று தேற்

வாசகி நானல்ல! - பக்கம் 7

புதுவை கடற்க்கரை அன்று கூட்டமாக காணப்பட்டது. ஹரி அலுவலகம் முழுவதும் கேளிக்கை சுற்றுலா விற்கு வந்ததால் அங்கு வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் கூட்ட மிகுதியுடன் தான் காணப்பட்டது. தேவதை என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறான் ஹரி. அனால் அதை பற்றி அப்போது அவன் அதிகமாக சிந்தனை செய்ததில்லை. ப்ரியாவை அன்று பார்த்தபின் அவள் தன் தேவதையோ என்று நினைத்தான். நீள மான கூந்தல் அலை கடல் போல் பாய்ந்தது . அதில் சிறிய படகு போல் சிவந்த நிற ஒற்றை ரோஜா. . வில் புருவங்களின் கீழ் மை இட்டிறுந்தால் போல இயற்கை நிறம் கொண்ட அகலமான வேல் விழிகள். அவள் சற்று ஏறக்குறைய அகலமான நெற்றி அதில் ஒரு கற்றை முடியை அவள் சரி செய்து கொண்டாள். ஏழினை கவிழ்த்தார் போல அளவான நாசி. தன் செம்பருத்தி நிற அதரங்களை சுழித்து அவள் தோழியிடம் எதோ பேசிக்கொண்டிருந்தாள் .சந்தன நிற மேனியை மஞ்சள் நிற சுடிதார் மறைத்தது . மானம் போற்றும் மங்கை அவளல்லவா? கைகளா அது? எதோ தாமரை மலர்களின் மொட்டுக்கள் கூம்பி இருந்தது போல! அதில் வெண்டை விரல்களை 'கொன்னுடுவேன்' என்ற பாவனை செய்து அவள் தோழிகளில் ஒருத்தியை முறைத்தாள். வாழை தண்டு செதுக்கி அமைத்தார் போல

வாசகி நானல்ல! - பக்கம் 6

------------------------- "முழுச் சந்திரனை கிரகணம் பிடித்தது அன்று. சந்திரன் எந்த தவரும் செய்யவில்லை. ஏனோ இருளிர்க்கு அவளை அணைத்திட ஆசை. ஆனால் அவனுக்கு மட்டும் தான் அவள் சொந்த என்பது போல இந்த இருள் அரக்கன் சந்திரன் காணாமல் செய்து விட்டானே பாவி?" ------------------------- "நிஜமா வா சொல்றீங்க?" ஹரி முகத்தில் கலவரம் விகாரத்துடன் வெளிப்பட்டது. "இனிக்கி தான் எனக்கு தகவல் வந்தது டா. இன்னும் ஒரு மாசம் தான் நீ பண்ணிட்டு இருக்கிற இந்த Short-Term ப்ராஜெக்ட் முடிஞ்சி போய்டும். எப்படி இருந்தாலும் உனக்கு தலை வலி விட்டது." "அப்போ இந்த பசங்க எல்லாம்?" "அவங்க எல்லாரும் இன்னொரு வேலைக்கு போக வேண்டியது தான்?!" அவங்க 'Provider' ஆபீஸ்ல அத பாத்துக்க போறாங்க நாம 'Client' தானே நமக்கு என்ன கவலை?" என்று அமைதியாக பதில் அளித்தார் மேலாளர். சிறிது நேரம் அவன் முகத்தை நோக்கிய வாறே இருந்தார் அவர். மிகுந்த கவலையோடும் ஆர்வத்துடனும் ஹரி அவரை பார்த்து கொண்டிருந்தான். "டாய் சாமியார்! நீ இவ்வளோ மாறி போவேன்னு நான் எதிர் பாக்கல்ல. என்னடா லவ்வா?;-)&quo

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான்.

வாசகி நானல்ல! - பக்கம் 3

அனுப்ப பட்ட மின்னஞ்சலை மறுமுறை பார்த்தான் ஹரி. பிரியா, பட்டப் படிப்பு கணினி பொறியியல் அளவான குடும்பம், பல குறுகிய கால ப்ராஜக்ட் களில் பணி புரிந்த அனுபவமும் நற்சான்றிதழ் மட்டுமே அவள் பாயோ டேட்டாவில் இருந்தன. "You have a Meeting at 6:15 PM" என்று எட்டிப்பார்த்து வெறுப்பேற்றியது மின்னஞ்சல். ------------------------------------------------ மாலை மணி 6:30. கொஞ்சம் மங்கிய வெளிச்சமும், ஒளிக்கற்ரைகள் சிந்தும் 'ப்ரஜெக்டர்' ஒளியும் ஹரியின் மன நிலையினை இன்னும் வெறுப்பாக்கின. "Hi! Hello! And a warm welcome to you from Techspark Technologies. I am Hari Jagadeesan..I am going to be your Mentor for your entire probation period." Could you please introduce yourselves one by one?என்று கூறி அவன காப்பியை உறிஞ்சியபடி அந்த ஹாலில் உள்ள அனைவரையும் நோட்டம் விட்டான். மாலை அவன் இந்நேரம் வீட்டின் பாதி வழி சென்றிருப்பான். "கடுப்பு! இந்த சந்தை மாடெல்லாம் என்ன மேக்க விட்டுட்டு இவனுங்க எல்லாம் ஜாலியா வீட்டுக்கு போய்ட்டாங்க பாரு! என்று உள்ளூர திட்டிக்கொண்டான் அவன். மலர்.. வாசு.. தயாள்.

வாசகி நானல்ல! - பக்கம் 2

"நான் தான் கிடைச்சேனா உங்களுக்கு?" என்று எப்போதும் இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்காமல்அவர் ' டீம் லீட்' இடம் கேட்டான் ஹரி. "பின்ன? உன்ன விட்ட யாருடா அவங்களுக்கு Training குடுக்கறது? உன்ன மாதிரி Qualified employee' தான் அந்த வெள்ளக்காரிக்கு Trainer ஆ வேணுமாம் தலை ழா நிக்கிறா அவ!" என்றார் அவர். "என்னவோ போங்க என்ன வெச்சி ஏதோ விளையாடனும்னு முடிவு பண்ணிட்டீங்க. நடத்துங்க." என்று பொருமினான். "டாய்! என் டா பயப்டுற? சும்மா போய் ஜமாய் இது எல்லாம் ஒரு experience தானே ?" என்றே அவர் ஆசை அஸ்திரம் ஏவினார். "Project completion இருக்கு coding work வேற இருக்கு. இப்போ போய் எனக்கு இந்த வேலை குடுகுறீங்க நான் என்னத்த சொல்றது?" " வேண்டாம்ணு சொல்லாதே அதுசின்ன ப்ராஜெக்ட் தான் நாலு மாசத்துல முடிஞ்சிடும். இவங்களுக்கு நீ training குடுதிட்டேன்னா வேலை முடிஞ்சித்து. ஹாயா இருக்கலாம் அப்புறம் அந்த பசங்க உனக்காக வேலை பக்க போறானுங்க." என்று சாத்தான் வேதம் ஓதினார் அவர் மேலாளர். 15 பெருக்கு அவன் பணி நேரம் போக 4 மணி நேரம் கூடுதல் பயிற்சி வகுப்புகள்