Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 9

ஆசை ஒரு பக்கம் பயம் ஒரு பக்கமும் பிடுங்கி தின்றன ஹரிக்கு.இந்த நாள் அவன் வாழ்க்கையை எப்படி திருப்பி செலுத்த போகின்றது என்று அவனுக்கே தெரியாது. எதுவானாலும் சரி இன்று கேட்டு விடுவது என்றும்,அதே சமயம் எப்படி கேட்பது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தான் அவன். வீட்டில் யாரும் இல்லை.அன்று விடுப்பு வேறு இன்று தான் சரியான தினம் என்று முடிவு செய்தான்.

சரியான சமயத்தில் செல்பேசி அடித்தது.

"ஹலோ ஹரி!"

"...."

"ஹரி??!"

"ஹ்ம்ம் சொல்லு பிரியா.."

"இப்போ தான என்திரிசீங்க?என்ன சமையல்? வீட்டுல யாரும் இல்லேன்னு நேத்திக்கி மெசேஜ் பண்ணி இருந்தீங்க? இன்னிக்கி என்ன ப்ரோக்ராம்?"என்று கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தாள் அவள்.

"ஒண்ணும் இல்ல..இனிக்கி திருவல்லிக்கேணி கோயிலுக்கு போறேன்.. நீயும் வரியா ..எனக்கு ஒரு சந்தேகம்..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பிரியா..இன்னிக்கி நீ என்கூட வர சம்மதமா?"

"என்னடா இது?சார் அதிசயமா இன்னிக்கி கோயிலுக்கு எல்லாம் போறீங்க? என்ன மத்தியானம் லஞ்சு அங்கேயேவா :-D? சரி சரி என்ன திடீர்னு?" என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்டாள் பிரியா.

"அதை தான் சொன்னேனே! உன் கூட பேசணும் வர முடியுமா முடியாதா?"

"அப்படி என்ன விஷயம் இருக்குன்னு கண்டிப்பா தெரிஞ்சிக்கணும். சரி ஆனால் சாயங்காலம் தான் என்னால வர முடியும். ஏன்னா இனிக்கி ரூம் லே எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதை முடிச்சிட்டு வரேன்..சரியா?"

"சரி" என்று சம்மதம் தெரிவித்தான் ஹரி.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் அன்று ஏகாந்தமாய் இருந்தார்.அவன் அலுவலகம் மட்டும் அன்று விடுமுறை நாள் ஆனதால் கூட்டம் இல்லை. நெடு நேரம் அவன் தரிசனம் செய்து கொண்டிருந்தான். பின் பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்த அவனை பின்தொடர்ந்து வந்த பிரியா,"அப்பா! என்ன இவ்வளவு மெதுவா சுத்துறீங்க? ஏன் உடம்பு சரியில்லயா?"என்று பேச்சை தொடங்கினாள்.

"மனசு தான் சரியில்ல.. "

"மனசுல ஏதாவது குட்டி சாத்தான் மாதிரி உக்காந்துகிட்டு இருந்தா அப்படி தான் இருக்கும்."
என்ன ஆச்சு உனக்கு ?" என்று அவனை மண்டபத்தில் உட்கார வைத்தாள் அவள்.
எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தான் தெரியல பிரியா. சொல்லலாமா வேண்டமான்னு யோசிக்கிறேன். எனக்கு சொல்ல தைரியமும் இல்ல, சொல்லாம இருக்கவும் முடியல. நீ அத்த எப்படி எடுத்துக்குவ ன்னும் தெரியல."என்ன ஹரி :பீடிகை எல்லாம் பலமா இருக்கு? " நமக்குள்ள என் இந்த ஒளிவு மறைவு ? எதுவ இருந்தாலும் என்கிட்ட மறைக்காமல் தைரியமா சொல்லு.."
மெலிதான புன்னகையுடன் பிரியா அவனை பார்த்து சொன்னாள்.
"உன்னை நான் ரொம்ப நாளா கவனிக்கிறேன் ஹரி. உன் கிட்ட ஏதோ ஒரு மாற்றம் தெரியுது. அதை என்னனு என்னால புரிஞ்சிக்க முடியல்ல."

"சரி இத்தனை நாள் என்ன பத்தி படிச்சென்னு சொன்னியே அப்படி என்ன படிச்ச?"

"விஷயம் என்னன்னு சொல்லு?"

"கண்டிப்பா சொல்றேன் பா! தயவு செய்து முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லேன்."

"ம்ம்..உங்களை பத்தி சொல்லணும்னா..நிறைய்யா நல்ல விஷயம் இருக்கு. பொறுப்பு, கண்டிப்பு,பாசம்,நல்ல பழக்க வழக்கம். எல்லாமே இருக்கு. இது எல்லாருக்கும் வராதது. அவங்களுக்கே இருக்கிற குணம்.கொஞ்சம் சிடு மூஞ்சி,ஆனால் உங்க கிட்ட மறைக்கிற தன்மை இருக்கு இதோ. இப்போ மறைக்கிறீங்க அதை மாதிரி தான்." என்று கிண்டல் தொனியில் சொல்லி சிரித்தாள்.

"வளர்ப்பு அது!அதுனால தான் எங்க அப்பா அம்மா மாதிரி வந்துட்டேன்."

"நான் நிறைய இழந்து இருக்கேன் பிரியா.எவ்வளவோ கடந்து வந்திட்டேன்.நிறைய சந்தோஷங்களை தியாகம் பண்ணிட்டேன்.அதுனால தான் எனக்குள்ள ஒரு வட்டத்தை போட்டுக்கிட்டேன். அதுல வாழ்ந்தேன். எனக்கு பெண் ஸ்னேகிதி அப்படின்னு சொன்னா நீதான்."

"தெரியுது..அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

"சம்பந்தம் இருக்கு பிரியா..ஒண்ணு தெரியுமா இன்னும் ரெண்டு வாரத்துல இந்த ப்ராஜெக்ட் முடிய போகுது.."

"அப்படியா..ஆனால் அது எனக்கு தெரியும்."

"ம்ம்..சொல்லி இருப்பங்கன்ணு எனக்கு தெரியும் . இருந்தாலும் இதை சொன்னாங்களா ன்னு எனக்கு தெரியாது. இன்னும் ஒண்ணு தெரிஞ்சிக்கோ! எங்க ஆபீஸ் மேனேஜர் பேசி இருக்கார் உங்க 15 பேருல அஞ்சு பெருக்கு எங்க கம்பெனியில வேலை தருவதா சொல்லி இருக்காங்க.அதுல உன் பேரயும் சேர்க்க சொல்லி இருக்கேன். இன்னும் ரெண்டு வரத்துல நீ போயிடுவ அப்புறம் உன்ன விட்டுட்டு இருக்கணுமே .."

"என் மேல் இவ்வளவு அக்கறை காட்டினத்துக்கு ரொம்ப நன்றி! நான் ரொம்ப நாள் இங்கே வேலை பார்க்க இஷ்டம் இல்லை. சொல்ல போன எனக்கு ஊருக்கு போய் என் குடும்பத்தோட மறுபடியும் சந்தோஷமா இருக்கணும் தான் ஆசை. எங்க வீட்டை விட்டுட்டு இங்க இருக்கிறததுக்கு நீங்க ஒரு காரணம்.நீங்க இல்லேன்னா நான் எப்பவோ இங்கெருந்து ரஜினமா பண்ணிட்டு போய்ருப்பேன். உங்களுக்கு ஒண்ணு சொல்ல மறந்துட்டேன். எங்க அக்காவுக்கு கல்யாணம் முடிவு ஆயிடுச்சி. எங்க அக்காவிர்க்கு அமைந்த வரன் ரொம்ப தங்கமானவங்க. கொஞ்சம் கூட காசு செலவு இல்லாம கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டாங்க. இருந்தாலும் என்னோட பணம், அப்புறம் அப்பா கொஞ்சம் பாங்க்ல வெச்சிறுக்கிறதையும் சேர்த்து கல்யாணத்தைப் பண்ணாலாம்னு முடிவு பண்ணியாச்சு. என்ன கூட அங்கேயே அங்கேயே ஏதாச்சும் இருந்தா பாத்துக்கலாம்னு சொல்லிட்டாங்க தெரியுமா? ஆமாம்? என் மேல என்ன இவ்வளோ அக்கறை?"

"என்னா உன்ன விட்டுட்டு என்னால இனிமே இருக்க முடியுமான்னு ஒரு சந்தேகம்."

"இன்னிக்கி நான் நாளைக்கு மற்றொருத்தர் இதுல என்ன இருக்கு ஹரி? நண்பர்கள் வட்டம் வளர்த்துகிட்டே போகும் இது தான் வாழ்க்கை"

"உன்ன அந்த மாதிரி என்னால பக்க முடியலியே ?"

"அய்யோ எனக்கு ஒண்ணுமே புரியல ஹரி!! இன்னிக்காவது கொஞ்சம் புரியரா மாதிரி பேசுங்களேன்.."

"சரி சொல்லிடுரேன் உன்னை நான் விரும்புகிறேன் பிரியா.."

மின்சாரம் பாய்ந்தது போல தள்ளி நின்றாள் பிரியா. அவள் கண்கள் குழம்பிய குட்டை போல அலை பாய்ந்தது. "என்ன? என்ன சொன்னீங்க?"

"பிரியா!என்னிக்கு உன்னோட சகஜமா பழக ஆரம்பிச்சேனோ அந்நியிலிருந்து உன் மேல எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டுது. அது எப்போ காதல மாறி போனதுன்னு எனக்கு சொல்ல தெரியல்ல. இனிமே உன் கிட்டே இருந்து மறைச்சிகிட்டு போலித்தனமா இருக்கிறது எனக்கு புடிக்கல்ல. அதனால தான் இனிக்கி சொல்லிடணும்ன்னு முடிவெடுதுட்டேன். அதை உன் கிட்ட சொல்லிட்டேன்...இப்போ சொல்லு பிரியா நான் உன்னை காதலிக்கிறேன்! நீ என்னை காதலிக்கிறியா?"என்று கூறி முடித்தான் ஹரி.

வானம் இருண்டு போனதை போல் இருந்தது பிரியாவின் முகம்.

"அடக் கடவுளே! அப்போ நீங்க இத்தனை நாளா என்கூட இந்த என்ணத்தோட தான் பழகி இருக்கீங்க! இல்ல?"

"அப்படி சொல்றதுக்கு இல்ல. நீதான் எந்த விஷயத்தையும் மறைக்க கூடாதுன்னு என்கிட்ட சொன்ன? அதுனால தான் என் மனசில அறிச்சிக்கிட்டு இருந்த எண்ணத்தை உன் முன்னால சொல்லிட்டேன். "

"நல்லது! நீங்க என்ன சொல்லணும்னு இப்போ எதிர் பாக்குறீங்க?

"சரின்னு சொன்னாலும் சந்தோசம். இல்லைன்னு சொல்லுவது உன் விருப்பம்."

"ரொம்ப வெளிப்படையா சொன்னதுக்கு ரொம்ப நன்றி ஹரி. ஆனால் இதை பத்தி நல்ல யோசிச்சி தான் பேசினீங்களான்னு எனக்கு தோனல்ல.

"உங்க அப்பா அம்மா வீட்டுல இல்லை! உங்க மனசு நிலையில இல்லை இப்போ இதை பத்தி பேச வேண்டாம் ஹரி. வாங்க போகலாம்." என்றாள் .

"என்ன பேசுற பிரியா? நான் ரொம்ப முக்கியமான விஷயம் பத்தி பேசிக்கிட்டு இருக்கேன்!" என்ன உனக்கு புடிக்கலையா? "

"இந்த மாதிரி பேசுற ஹரியை தான் இப்போ எனக்கு புடிகல்லை."

"அப்படின்னா? நீ இத்தனை நாளா என்னோட பழகினது, என் மேல உள்ள விருப்பதினால இல்லயா? பரவால்ல இப்போவே எதுவானாலும் சொல்லிடு பிரியா..நான் ஏத்துக்கிறேன்."

"கண்டிப்பா சொல்றேன்..இப்போ நான் கிளம்புறேன். பை!" என்று வெள்ளி நூல் போன்ற கண்ணீரிணை துடைத்து கொண்டே விருட்டென எழுந்து சென்றாள் பிரியா.

"பிரியா! நில்லு..நில்லு...சே!" என்று நொந்து கொண்டே சென்றான் ஹரி.

அன்று இரவு நரகமாக கழிந்தது அவனுக்கு. பலமுறை மன்னிப்பும் கேட்டு விட்டான் ஹரி. ஆனால் பதில் குறுந்தகவல் வரவில்லை. ஹரி மிகவும் பயந்து போனான்."போனது போனது தான் போல இருக்கிறதே நாளை அவள் முன்னால் எப்படி விழிப்பது. அவள் சரி என்று சொல்வாளா. இல்லை நாம் மிகப்பெரிய தவறு செய்து விட்டோமோ? என்றெல்லாம் அவன் மனத்தில் அரைத்தததுக்கொண்டிருந்தன.
வானம் இருண்டது. மின்னல் வெட்டியது இடி இடித்தது. மழை பெய்தது. ஹரியின் மனத்திலும் தான்.
******************************

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...