Skip to main content

Posts

Showing posts from August, 2010

வாடகை வயிறு

ரேகாவுக்கு அவளையே பார்த்துக்கொள்வது போல இருந்தது. மணி போல இரு கண்கள், திறந்தும் திறவாமலும் பாதி மலர்ந்த மல்லிகைப் பூ போல இருந்தது. கீரை தண்டு போல இளசாக இருந்த கைகளும் கால்களும், கூரிய மூக்கும், சுருளாக முளைத்திருந்த தலை முடியும், தங்கப் பதுமை போல இருந்த உருவமும், அஹா! பார்த்தவுடனே அழுகை பீரிட்டு கொண்டு வந்தது. தனக்கு இதனால் ஒரு கேவலமும் இல்லை என்றே தோன்றியது. ரவியின் நல்ல குணமும், அவனுடைய துன்பமும் அவன் வெளிப்படையாக அதே சமயம் ஞாயமான அவன் வேண்டுகோளும் அவளை இப்படி ஒரு காரியத்திற்கு துணிய வைத்தது.  தன் மூலம் அவனுக்கு ஒரு குழந்தையினை கொடுக்க முடியும் என்ற திருப்தியும், தைரியமும் அவளுக்கு வந்ததால், இன்று அவன் மூலம் அவள் ஒரு குழந்தையின் தாயாக ஆகிவிட்டாள் . "கங்க்ராட்ஸ் மிஸ்டர் ரவி! உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு." என்று டாக்டர் ஹேமா வாழ்த்தினார். ரவிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை. "கடவுளே எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல்ல டாக்டர். நான் இப்போவே வர்றேன். ரேகா பக்கத்துல இருந்தா குடுங்க. ...ஹலோ ரேகா கண்ணா.. வாழ்த்துக்கள்...இதோ வரேன்." ரவி கிலோ கணக்கில் இனிப்புக