Skip to main content

Posts

Showing posts from September, 2016

Kamini_Yogini 5

காமினி யோகினி 5 இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனுக்கு இன்று தினசரி ராசி பலன் பார்த்திருப்பார் என்றால் அவருக்கு இன்று அதிர்ச்சி ஆச்சரியம் எதிர்பாராத திருப்பம் என்றே போட்டிருக்கும். அன்று அவர் அலுவலகத்திற்கு ஒரு ஃ போன் வந்தது. அதில் காமினி இருக்கும் இடம் தனக்கு தெரியும் என்றும் உடனே தான் சொல்லும் இடத்திற்கு வருமாறு சொல்லிவிட்டு மறுமுனையில் இருந்த நபர் தொடர்பை துண்டித்து விட்டார். அந்த இடம் ஊட்டி மைசூரு  ஒட்டி ஒரு மலை கிராமம் என்று தெரிந்து கொள்ளவே சுவாமிநாதனுக்கு பத்து நிமிடம் பிடித்தது. அங்கு எதற்காக இந்த நபர் வர சொல்கிறான் என்று சந்தேகி த்துக்கொடே ஒரு சிகரெட்டை பற்ற வைத்து கொண்டார். இப்போதெல்லாம் அவருக்கு இந்த பழக்கம் புதிதாய் தொத்தி கொண்டது. கங்கா அவளின் பதவியையும் மீறிய ஒரு உரிமையில் கடிந்து கொண்டாள் . அதனால் இந்த பழக்கத்தை ஒருவாறாக  கட்டு படுத்த படாத பாடு பட்டு கொண்டிருந்தார். கங்கா என்னமா! அங்க உனக்கு தெரிஞ்ச ஆளுங்க  யாராவது அங்கே இருக்காங்களா? என்று கேட்க இருக்கானே சார் என்ன ஒண்ணுவிட்ட அண்ணன் மவன் கான்ச்டபிள் செல்வம். என்று ஒரு போடு போட்டு விட்டு அவன் என்னை டயல் செய்ய ஆரம்பித்து வி