Skip to main content

Posts

காமினி யோகினி - பகுதி 10 காமினி எழுந்திரு சீக்கிரம் காமினி காமினி? கேக்குதா? எழுந்திரு கிளம்பு காமினி?!! எங்கோ ஒரு சந்தில் இருந்து யாரோ கத்தும் ஓசை போல கேட்டு மெல்ல சுய  நினைவிற்கு வந்தால் காமினி. தலை சுற்றியது யாரோ சம்மட்டியால் அடித்தது போல  வலி விண்ணென்று தெறித்தது. மெல்ல கண்களை திறந்தாள். யாரோ  மூட்டைகளை தன்   மேல் போட்டத்து போல பாரமாக இருந்தது.  சுதாரித்து கொண்டு எழுவதற்குள் போதும் போதும் என்று ஆனது.  மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். யாரோ  அடித்தது போல இருந்தது. எதோ ஒரு பெண்ணின் முகம் மங்கலாக தெரிந்தது. சுளீர் சுளீர் என்ற அடிகளுக்கும் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை மாறாக எறும்பு கடிப்பது போல இருந்தது. கலைந்த தலை முடியுடன் அலங்கோலமான வெள்ளை அங்கியுடன் இருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் நம்பிகளான  கார்த்திகா, கலை, கனகதுர்கா மூவரும் அவள் அருகிலேயே அதே நிலையில் கிடந்தனர். இவர்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று புரியாமல் விழித்தாள்.  கார்த்தி டீ கார்த்தி எழுந்திருடீ ! கலை கனகா !  இவங்களுக்கு  பரபரப்புடன் மற்ற மூவரையும் உலுக்கினாள். மெல்ல மற்ற மூவரும் முனகி கொண்டே நெள
Recent posts
காமினி யோகினி - 8 காமினி இப்போதும் ஒரு ரண வேதனையை அனுபவித்து கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போது வரைக்கும் எங்கிருக்கிறோம் தான் யார் என்பது கூட தெரியாமல் போயிருந்தது. தன்னுடைய ஸ்நேகிதிகளுடன் வரும்போது ஒருவர் காரில் ஏறிக்கொள்ள லிப்ட் கேட்டதும் பின்னர் அவரிடமிருந்து ஒரு கடுமையான வாடை வந்ததும் அதில் அவர்கள் மயக்கமுற்று கொண்டைஊசி வளைவில் தங்களுடைய வாகனம் மோதி தலைகுப்புற விழுவதும் மட்டுமே அவளுக்கு நினவிருந்தது. அதுவும் யார் எதற்க்காக அவர்களோடு வந்தனர் என்று தெரியவில்லை. சூரஸ்வாமி அவர்களை ஒரு பெட்டியில் வைத்து ஆசிரம நிலவறையில் கிடத்த  சொன்னதும் உப சீடர்கள் அவர்களை பெட்டியில் வைத்து பின்னர் அவர்களை கிடத்தி கொண்டு போயினர். அப்போது இருபதடி உயரத்தில் ஆஜானுபாகுவாக ஒரு பெரிய படம் அவள் கண்களில் தென்பட்டது. பெட்டியில் கிட்டத்தட்ட சவம் போல அசைவின்றி படுத்திருந்த அவளுடைய கண்கள் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தன. அவை பெட்டியின் துவாரத்தின் வழியே அந்த படத்தினை பார்த்தன. ஆமாம் அது அந்த உருவம் யாரோ ஸ்வாமியை போல உள்ளதே, ஆமாம் இதை நான் எங்கோ கண்டமாதிரி இருக்கே என்ற கேள்விகளுடன் அவள் நினைவு மெல்ல திரும்ப ஆரம்
காமினி யோகினி -9 சம்பத் எனக்கு தெரிந்த வித்தையெல்லாம் சொல்லி கொடுத்திட்டேன். இவ்வளவு சீக்கிரம் கிரகிச்சு ஒரு சிஷ்யனை நான் கண்டதில்லை. என் பாக்கியம் சுவாமி . உனக்கு நான் இனியும் என்ன செய்யணும்.எனக்கு தீக்ஷை கொடுங்க சுவாமி. கொடுக்கலாம் ஆனால் நீ ஏற்கனவே ஒரு குரு கிட்டே இருந்து தீக்ஷை வாங்கிட்டு வந்திருந்தா மறுபடியும் எனக்கு தீக்ஷை கொடுக்க அவசியம் இல்லை. அது சரி உன் குரு கிட்டே இருந்து தீக்ஷை வங்கிட்டயா? இல்லை சுவாமி என்னை அவர் சிஷ்யனாய் மதிக்க வும் இல்லை, அவர் எனக்கு எதையும் சொல்லி தரவும் இல்லை.சில பல சித்து வேலைகளை ஜபம் பண்ணி வர வெச்சாரு ஆனால் அதையும் திரும்ப வாங்கிக்கிட்டாரே.  அதனால் அவர் எனக்கு எப்படி குரு ஆக முடியும்? உன் குரு பத்தி நீ சரியாய் புரிஞ்சி வெச்சிருக்க. ஆமாம் என்ன இருந்தாலும் அவர் உனக்கு சோறு போட்டவன். நன்றி இருக்கணுமில்லே?என்று கூறினார் சிவா ஸ்வாமிகள்.  நன்றியா?அவர் இப்போது செய்த வேலைக்கு நன்றியா? ஊரான் பணத்தை எல்லாம் உலையில் போட்டு உத்தமன் மாதிரி கையயை தூக்கி ஆசிர்வாதம் செய்துகிட்டு தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்றி அவர் வாழ்ந்திருக்காரு. அவங்களை நம்பி வந்த சாதகர
காசுக்கு போட்ட கோஷம் காலை மணி 9:45. அண்ணா சாலையில் வழக்கம் போல பல் பசையை பிதுங்கி பசை எடுப்பது போல மெல்ல மெல்ல ஊர்ந்து சென்ற வாகனங்கள் அவைகளின்  ஜனத்தொகை பெருகியதை காட்டி கொடுத்தது. ரகு நந்தனுக்கு ரத்தம் கொதித்தது. முன்னை போல நேரம் கழித்து proxy போடும் நிலைமையில் அவன் வேலை பார்க்கும் மத்திய அரசு அலுவலகம் இல்லை. அண்ணா சாலையில் கூட்டம் தள்ளியது. என்னவென்று பார்த்தான் . "போராடுவோம்! போராடுவோம்!" "மத்திய அரசே! மாநில அரசே காவேரி தண்ணீரை தர மறுத்த மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமறுத்த மத்திய அரசே! கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!"  மோடி ஒழிக! என்று கோஷம் ஒலித்தது! "ஆமாம் மோடி ஒழிக  நம்மை ஆபீஸ்ல வேலை பார்க்க சொல்லுறான் என்று மனதிற்குள் சொல்லி சிரித்து கொண்டான் ரகு நந்தன். "சரி இனிமே பஸ் ஓடாது லேட்டா ஆகும் போல இருக்கே!" என்று சொல்லி அவன்  மேலாளருக்கு  அழைத்துவிட்டு சார்.. என்று இழுத்தான். "தெரியுமய்யா ரோடு ரோக்கோ தானே நானும் அந்த பக்கம் தான் நிக்கிறேன். ஆஃபிஸில் க்கு இன்பர்மேஷன் கொடுத்தாச்சு! ஆபீஸ் முன்னாடி நின்னு கட்சி காரங்க தகராறு செய்யுறாங
Kamini_Yogini 7 காமினி_யோகினி 7 எஸ் பி ஸ்வாமிநாதன் கொஞ்சம் ஆடித்தான் போனார். அடேயப்பா! என்னய்யா இது? இந்த ஆசிரமன்தான் இவங்க எட் ஆபிஸா? என்றார் ஆச்சரியம் தாளாமல் இல்ல சார்! இது இவங்களோட தமிழ்நாடு பிராஞ்சு ஆபீஸ் சார் .எட் ஆபீஸ் மைசூரில் இருக்குது சார். என்றாள் கங்கா ஓ அப்படியா! இந்த பிள்டிங்கே  கோடி கணக்கிலே மதிப்பிற்கும் போல இருக்குதே இதுவே மாளிகை போல இருக்குதுன்னா அப்போ அங்கேனே? சொர்க்கம் போல இருக்கும் சார்  அதோ அங்க பாருங்க! என்று கங்கா சுட்டி காட்டிய திசையில் படிய வாரிய தலை, கொஞ்சம் மாநிறம். நரைத்த திருத்தப்பட்ட மீசை தாடி. அகலமான நெற்றியில் குங்கும பொட்டு.  இளம் சிவப்பு நிற வெட்டி அதில் வெள்ளை பச்சை நீல கரை கதர் சட்டை வைர மோதிரம் பிரேஸிலேட் மின்ன வேட்டை நாய் போல கத்தி கொண்டிருந்த சேகரமூர்த்தி தென்பட்டார். பல பேர் அங்கு பளிங்கு தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதில் பலரும் வட நாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் என்று அவர்கள் முகத்தை பார்த்த உடனே தெரிந்து கொண்டனர் போலீசார். பலர் பெரிய ரோஜா தோட்டத்தினை செப்பனிட்டு கொண்டிருந்தனர். வானளாவ  நிரப்பி பெரும் மலைகளை போல நின்ற
Kamini_Yogini 6 காமினி யோகினி பகுதி 6 சுவாமிநாதனுக்கு பல கோணங்களில் இருந்த சந்தேகம் இப்போது ஊர்ஜிதமாகியது. ஆகா இது ஒரு இயற்க்கைக்கு மீறிய சதி இவ்வளவு பெரிய கடத்தல் நடந்திருக்கு. கடத்த பட்டது பெரிய இடத்து பெண்கள். இவங்களை இவ்வளவு சாமர்த்தியமான கடத்திகிட்டு போயும் கடத்தல் காரங்க இவங்க உயிரோட இருக்கிறதை மறைச்சு செத்து போனவங்களோட உடலை மாற்றி வெச்சு இந்த கேமே வித்தியாசமாக இருக்கே. இவங்களுக்கு என்ன வேண்டும்? ஒன்னும் புரியல்லியே  என்று மண்டையை குடைந்து கொண்டிருந்தார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் சிவகிரி உள்ளே நுழைந்தார். சொல்லுங்க சிவா, என்ன சமாச்சாரம் ?சார் நம்ம ஐ ஜி ஆபிஸ் செக்க்ஷனிலே இருந்த ஒரு மெஸேஜ் வந்திருக்கு! அ டுத்த வாரம் யோகினி மாய பீடம் னு ஒரு டிரஸ்டு அவங்களோட ஒரு ஆசிரமத்தை இங்கே கட்டி இருக்காங்க. அதான் தெரியுமே போறவன் வரவன்னெல்லாம் அங்கே தான விழுந்து வெக்கிறான் அவங்க கெட்டியிலே இருக்கிற பெரிய மைதானத்தில் வர சனிக்கிழமை ஒரு யாகம் நடத்துறாங்களாம் அதுக்கு செக்கியூரிட்டி கொடுக்க சொல்லி வ்வையர்ல்ஸ் மெஸேஜு அனுப்பிருக்காங்க. இருக்கிற குழப்பத்தில் இது வேற. ஆமா அது என்ன ஆசிரமம்? யோகினி