Skip to main content
Kamini_Yogini 6

காமினி யோகினி பகுதி 6

சுவாமிநாதனுக்கு பல கோணங்களில் இருந்த சந்தேகம் இப்போது ஊர்ஜிதமாகியது. ஆகா இது ஒரு இயற்க்கைக்கு மீறிய சதி இவ்வளவு பெரிய கடத்தல் நடந்திருக்கு. கடத்த பட்டது பெரிய இடத்து பெண்கள். இவங்களை இவ்வளவு சாமர்த்தியமான கடத்திகிட்டு போயும் கடத்தல் காரங்க இவங்க உயிரோட இருக்கிறதை மறைச்சு செத்து போனவங்களோட உடலை மாற்றி வெச்சு இந்த கேமே வித்தியாசமாக இருக்கே. இவங்களுக்கு என்ன வேண்டும்? ஒன்னும் புரியல்லியே  என்று மண்டையை குடைந்து கொண்டிருந்தார்.
அப்போது சப் இன்ஸ்பெக்டர் சிவகிரி உள்ளே நுழைந்தார். சொல்லுங்க சிவா, என்ன சமாச்சாரம் ?சார் நம்ம ஐ ஜி ஆபிஸ் செக்க்ஷனிலே இருந்த ஒரு மெஸேஜ் வந்திருக்கு! அ டுத்த வாரம் யோகினி மாய பீடம் னு ஒரு டிரஸ்டு அவங்களோட ஒரு ஆசிரமத்தை இங்கே கட்டி இருக்காங்க. அதான் தெரியுமே போறவன் வரவன்னெல்லாம் அங்கே தான விழுந்து வெக்கிறான்
அவங்க கெட்டியிலே இருக்கிற பெரிய மைதானத்தில் வர சனிக்கிழமை ஒரு யாகம் நடத்துறாங்களாம் அதுக்கு செக்கியூரிட்டி கொடுக்க சொல்லி வ்வையர்ல்ஸ் மெஸேஜு அனுப்பிருக்காங்க.
இருக்கிற குழப்பத்தில் இது வேற. ஆமா அது என்ன ஆசிரமம்? யோகினி மாய பீடம் சார்! அது எங்கே இருக்குது ன்னு சொன்ன? கெத்தி ல ஸார் சரி சரி அப்போது கங்கா வும் வரவே. எம்மா கங்கா  இந்த ஆசிரமம் பத்தி தானே அன்னிக்கு யுடியூபிலே காண்பிச்ச? என்று கேட்டார்  ஆமாம் ஸார்  என்று சொன்னாள். எத்தனை பொண்ணுங்க பசங்க சார் அது ஆசிரமமா இல்லை லவ்வர்ஸ் பார்க்கா ன்னே தெரியல சார் அவ்வளவும் மைதா மாவுங்களா இருக்குது ! அது என்னவா மைதா மாவு! எல்லாமே வடக்கிலிருந்து வந்தவங்க போல இருக்குது சார்! ஹை ஹை ன்னு ஹிந்தியில் நம்ம குதிரை சவாரி பசங்க மாதிரி வாயாலேயே குருதை  ஓட்டுறாளுவோ! பழனி மலைக்கு போன கூட இத்தனை மொட்டை தலை இருக்காதுங்கோ  முழுக்க போன முடியோட சேர்த்து மூளையும் ஷேவிங் பண்ணி விட்டு தான் வெளியில அணுப்போவானுவோ போல எப்போ பார் மாயா மாய ன்னு போதையே புலம்புறானுவோ அந்த மாயாவை தான் யாருன்னு தெரியல! என்று சிரித்தாள் .
சிவகிரி ஒரு வெடி சிரிப்புடன் அம்மா அம்மா கடவுளை பழிக்காதீங்க அது அவங்க கும்பிடுற சாமி பெரு! சார் கங்கா ம்மா சொல்றதும் சரிதான் சார். விசாரிச்சு பார்த்தேன். இப்போ இருக்கிற டீ  தோட்டத்திலே வேலை பார்க்கிற அத்தனை பேரையும் க மா  க சேகர மூர்த்தி வளைச்சு போட்டு வேலை வாங்குறாரு. ஒன்னரை வருஷத்துக்குள்ளேயே இவ்வளவு பெரிய ஆசிரமம் கட்டி முடிச்சிருக்காங்கோ! கோடிக்கணக்கில் செலவு பண்ணி ரொம்ப ஜோராய் இருக்குது அந்த ஆசிரமம். அவ்வளவும் பெரிய கைங்க, எல்லாரும் அவங்க காலேஜில் படிக்கிறானுவோ! அது மட்டும் இல்லாம அத்தனையும் ஆந்திரா கர்நாடகா மத்திய பிரதேஷ்  குஜராத் டெல்லின்னு எங்கே எல்லாம் கருப்பு பணம் விளையாடுது.  வெளி நாட்டு பக்தர்கள்  வேற குவிஞ்சி கிடக்காங்க அத்தனை மாநிலத்திலிருந்து இறக்குமதி. கொஞ்ச நாளாவே  நம்ம ஏரியாவில் சரக்கு விற்பனை அமோகமா நடக்குதுன்னு ஒரு இன்பர்மேஷன் சார். அங்கே ஸ்டெல்லா ன்னு ஒரு வெள்ளைக்காரி சாமியார் அம்மா இருக்காங்கோ அவங்க தான் மொத்த இசார்ஜு அவங்களை நாம பார்த்து செகியூரிட்டி கொடுக்க சொல்லி ஆர்டர்.
சுவாமிநாதனும் சிரித்து கொண்டே  சரி சரிஅவங்க ஆபீஸ் எங்கே இருக்கு? என்று சொன்னவர் பாண்டி ஜீப்பை எடுப்பா என்று மிடுக்காக நடந்தார்.
==================================================
ரமேஷுக்கு முகம் எப்படி களை  இழந்திருந்ததோ அப்படி தான் அந்த வீடும் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தது. வேலையாட்கள் தம் கடமையை செய்து கொண்டிருந்தனர் தவிர யாருக்கும் வேலை ஓடவில்லை. காமினியும் அவர்களை சேர்ந்தவர்களும் இறந்து போயிருப்பார் என்று எண்ணி இருந்தவர்களுக்கு அதற்க்கு மேல் தகவல் சொல்லப்பட வில்லை என்பதால் யாருக்கும் உற்சாகம் வர வில்லை. வசந்தாவும் மன  நோயால் பீடிக்க பட்டவள் போல் புலம்பி கொண்டிருந்தாள். சுகுமார் பள்ளிக்கு  சென்றிருந்தான் இன்ஸ்பெக்டர் வரவால் ரமேஷ் சற்று பரபரப்படைந்தான். கங்காவை வசந்தாவை கவனித்து கொள்ள சொல்லி விட்டு ஸ்வாமிநாதன் சார் உங்களுக்கு யோகினி மாய ஆசிரமத்துக்கு என்ன தொடர்பு? என்றார்.
ரமேஷ் சொன்னார்.
யோகினி மாய ஆசிரமம் பல கட்ட தொழில் குழுமங்களின் அதிகாரிகளுடன் தொடர்பு பெற்றிருந்தது. அவர்கள் நுழையாத துறையே இல்லை, சாப்பிடும் அரிசி முதல் பெரிய ஆன்லைன் வர்த்தகம் வரை அவர்கள் மூக்கை நுழைக்காத துறைகளே இல்லை என்று இயங்க முடிவெடுத்தனர். அதில் ஒரு குறிப்பிட்ட பெரிய மனிதர் ம கா க  கட்சி யின் சட்டமன்ற உறுப்பினர் சேகரமூர்த்தி ஊட்டியில் ஒரு பிரபல கட்டிட காண்டிராக்டர்  மேலும் காமினியின் பள்ளி தோழி கலைவாணியின் அப்பா.சமீபத்தில் அந்த ஆசிரமத்தின் அத்யந்த சிஷ்யர்களில் ஒருவர். ஆதாயம் இல்லாமல் கால் வைக்க மாட்டார் சேகரமூர்த்தி இதில் அவருக்கு நிறைய தொடர்புகள் ஆதாயங்கள். இவரின் பங்காக கட்சிக்கு இந்த ஆசிரமம் பல கோடி ரூபாய்களை அள்ளித்  தந்துள்ளது.  அதனால் இந்த சுவாமிஜியின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். இந்த ஆசிரமம் கலை கலாச்சாரம் முதல் அனைத்து விவசாய துறைகளிலும் வணிகம் செய்து கொண்டிருந்தது.அதில் ஒன்று இயற்க்கை டீ தேயிலை இறக்குமதி செய்து அதனை அவர்கள்  வர்த்தகம் செய்வது. ஆகவே தேயிலை வணிகத்தில் பல முனைவர்கள் அவர்களுக்கு தேவை பட்டனர்.  அவர் மூலம் அந்த சுவாமிஜியின் பிரதம சீடர் சம்பத் அறிமுகம் ஆனான். தேயிலை கொள்முதல் வியாபாரத்தில் பெரும் பங்கு தங்கள் ஆசிரமத்திற்கு வேண்டும் என்று அதில் ரமேஷிற்கு நிகர லாபத்திலுருந்து சற்று குறைத்து கொடுக்க வேண்டும் முதலில் என்றும் பேரம் பேசப்பட்டது. ஆனால் சில நாட்களில் அவருக்கு  வியாபாரம் தோது  படவில்லை என்று புரிந்து விடத்து. என்றாலும்  சேகரமூர்த்தி  மூலம் அவர் அந்த ஆசிரமத்திற்கு சில தடவைகள் விஜயம் செய்திருந்தார். ஆனால் பிறகு அவர் குருவான சிவா சாமிகளின் உத்தரவின் பேரில் மெல்ல தன்  தொடர்பினை நிறுத்தி கொண்டார்.
மேலும் அவர் தங்களை தொடர்பு கொள்ள விரும்பினால் மின்னஞ்சல் மூலம் தகவல்களை  பரிமாறிக்கொள்ளலாம் என்று கூறினார். அவர்களின் ஆசிரமம் வட இந்தியாவில் பிரபலம் ஆனாலும் அவர்கள் வியாபார தொடர்பினை நிறைய தமிழர்களிடம் வைத்திருந்தது ரமேஷிற்கு ஆச்சரியமளித்தது.
உங்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி இருக்கு ரமேஷ் என்று சொன்ன ஸ்வாமிநாதன் இந்த வீடியோவை பாருங்க என்றார்.
அந்த வொளிக்காட்சி ரமேஷை அதிர வைத்தது. அம்மா காமினி  என்று அவரை அறியாமல் சத்தம்போட்டு அழ தொடங்கி விட்டார்.
====================================================================
சம்பத் படுத்திருந்தாலும் அவன் மனது தூங்கவில்லை. எவ்வளவு துரோகம், தீட்டிய மரத்தினையே தீர்த்து கட்ட பார்த்து விட்டானே துரோகி. இந்நேரம் அந்த பிரேசில் காரனுடன் தீக்ஷண்ய ஸ்வாமி ஐயாயிரம் கோடிக்கு டீல் போட்டிருப்பான். சே பணம் பதவி எவ்வளவு கொடுமையானது. நான் எவ்வளவு உழைத்திருப்பேன். நான் அந்த பாவிக்கு நான் என்னுடைய தேஜஸ் அனைத்தையும் கொடுத்து விட்டது எத்தனை பெரிய தப்பு. யோக சித்தி என்பது அவனே அடைவது அது தனக்குள்ளே உணர்வது. இந்த அல்ப பணத்திற்கு உயிரை திருப்ப முடியுமா? அல்லது போகும் உயிரை தடுக்க இயலுமா? இந்த மகான் யாரென்றே தெரியவில்லை நிச்சயம் பெரிய சித்தராய் தான் இருப்பார். இவர் என்னுடைய உயிரை காப்பாற்றி இருக்கிறாரே, ஒரு வேளை  இவர் தான் அந்த யோகினி சித்தாரா? எழுந்து சுற்றி முற்றும் பார்த்தான் அவர் எங்கும் தென்படவில்லை. ஒரு திரை மட்டும் போடப்பட்டிருந்த குகை எந்த பாதுகாப்பும் இல்லை வெளியே வந்தான் குளிர் தாங்க முடியவில்லை. ஆனால் உள்ளே இதமாக இருக்கிறதே! அண்ணாந்து பார்த்தான் முழு நிலவு சற்றே தேய்ந்திருந்தது. ஐயோ இன்னமும் 12 நாட்கள் தானே இருக்கிறது! அவன் அந்த பெண்களை எதற்க்காக இவ்வளவு மெனக்கெட்டு கடத்தி இருக்க வேண்டும்?இதன் மூலம் அவன் சாதிப்பது என்ன?ஒன்றும் புரியவில்லையே?
என்னப்பா அண்ணாந்து பார்த்தால் தலை சுத்துதா என்று குரல் கேட்டது. ஆனால் அந்த இடத்தில் யாருமே இல்லை. விக்கித்து போனான் சம்பத்
ஹஹ்ஹ தம்பி நான் பேயில்லையப்பா கொஞ்சம்  அண்ணாந்து இந்த பக்கம் பார் என்று அந்த குரல் அழைத்தது. அங்கு ஒரு பாறை மேல் ஒற்றை காலில் தவ நிலையில் இருந்து சிவா ஸ்வாமிகள். ஸ்வாமி என்று கை  கூப்பினான்.
மாயா மந்திர ஜாலம் எப்படி இருக்குமோ நமக்கு தெரியாது. இறங்காமலேயே அந்தர் தியானியாகி அவன் முன்னர் சடாரென்று குதித்தார் சிவா ஸ்வாமிகள்.
பயப்படாதே இதெல்லாம் உன்ன மாதிரி உபாசகர்களுக்கெல்லாம் சும்மா குழந்தை விளையாட்டு! என்று நகைத்து கொண்டே சொன்னார் அவர்.
ஸ்வாமி என்னோட சித்தியெல்லாம் வெறும் கண் கட்டு வித்தை. நிஜமான யோகி இதெல்லாம் பார்த்து மயங்க மாட்ட்டான்
ஓ ஹோ தத்துவமெல்லாம் ஜோரா பேசிறியே! தீக்க்ஷண்யன் உனக்கு இதெல்லாம் சொல்லி கொடுத்தானோ!  என்று சொன்னார்.
அய்யா என்னை எதுக்காக காப்பாத்தினீங்க? நான் செத்து போயிருக்க வேண்டியவன்.
அப்படி உன்னை ஈசன் ஆணை இடவில்லையப்பனே! உன்னோட நாடி இன்னமும் இயங்கிக்கொண்டே இருக்கனும்ன்னு சிவனோட விருப்பம்.
விருப்பப்படி வாழ முடியல விரும்பாம சாக முடியல! என்ன வாழ்க்கை இது என்று நொந்து கொண்டான்.
சம்பத் அதோ பார் என்றார் சிவா ஸ்வாமிகள் ஐயோ என்ன கொடூரம் ஒரு எருமை கன்றுக்குட்டி அதனை பல காட்டு நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதற முற்பட்டன. ஐயோ சாமி பாவம் அந்த குட்டி என்று வெடுக்கென்று நகர முற்பட்டான்.  அவசரப்படாதே என்று கையாய் பிடித்து நிறுத்தினார். என்ன ஸ்வாமி அது செத்து பொய்யுரும் எவ்வளவு நாயிங்க! என்று பதறினான். கொஞ்சம் அவசரப்படாம இரு பார் என்ன நடக்குதுன்னு.
நாய்கள் இன்னும் கொஞ்ச நேரம் அதை நெருங்கினால் அதன் உயிர் போய்விடும், அப்போது சடாரென்று ஒரு பெரிய சத்தம். அதனை காண முடியவில்லை. ஒரு பெரிய காட்டு மரம் சடசட  வென்று சரிந்து கொண்டிருந்தது. அம்மே என்று அதன் தாயை பார்த்து கத்திய படி அலறியது அந்த காட்டெருமை கன்று. அதன் தவிப்பை இறைவனே அறிவார்.
சொல்லு சம்பத் இப்போ அந்த கன்னுகுட்டி பிழைக்குமா?
ஐயோ முன்னே நாய்க இப்போ மரம் வேற சிவா சிவா என்றான் சம்பத்.
அதன் மந்தையோ வெகு தூரம் சென்று விட இது அங்கு செல்லாமல் அலறியபடி அந்த பள்ளத்தில் நெருங்கி அதன் கன்றையும் தூக்கி விட முடியலாம் அவதி பட்டு கொண்டிருந்த பொது ஒரு பெரிய மரம் சட சடவென்று முறியும் சத்தம் கேட்டு நாயகள் பதறின. சற்றும் எதிர் பார்க்காமல் நேரே அந்த மரத்தில் அடிவரை நான்கு அடியில் ஒரு முறிவு ஏற்பட்டு அந்த நாய்க்கு மேல் தடால் என்று விழுந்தது. அந்த கன்று குட்டி அந்த மரத்தின் அடியில் இருந்தது. ஆனால் உயிரோடு எந்த அடியும் படாமல் அம்மே என்று அலறியது. நாய்கள் நான்கைந்து இருக்கும் எதுவும் ஓட முடியவில்லை ஆனால் இப்போது எதுவுமே மிஞ்சவில்லை.  எல்லாமே அந்த மரத்தின் கீழே சிக்கி நசுங்கி இறந்து விட்டன. ஆனால் கன்று குட்டி சிறு காயங்களுடன் அந்த விழுந்த மரத்தின் மீது மேல் ஏறி தட்டு தடுமாறி தன தாயுடன் சேர்ந்து ஓடியது.
இப்போ சொல்லு சம்பத்  இது விதியா இல்ல சதியா?
இல்லை அய்யா இது ஈஸ்வர சித்தம்
புரிஞ்சிகிட்டே! இது தான் வாழ்க்கை. கடவுள் பலம் பொருந்தியதை எப்போவுமே நல்ல நடவடிக்கை இருக்கிற வரைக்கும்தான் வெச்சுப்பார். எங்கே தர்மம் இல்லையோ அங்கே இறைவன் இல்லை. வா போகலாம் என்றார்.
சம்பத் உனக்கு இனி நிறைய வேலைகள் இருக்கு அதுக்கு முன்னர் உனக்கு நிறைய சித்திகள் ஈஸ்வர கிருபையால் கிடைக்க போகிறது. இதை நீ நினைத்தாலும் நல்லதுக்கு தவிர உன்னால் வேறு வழியிலே செலுத்த முடியாது. உனக்கு அந்த அல்ப ஆசைகளும் இனி வரப்போவது இல்லை.உன்நிலை இனிமேல் மேம்படப்போகிறது . மேலும் உனக்கு ஒரு வாழ்க்கை துணை வரப்போகிறது. ஆச்சரியமாக இருக்கலாம் இருந்தாலும் அதுவே விதி. என்று முழு மூச்சாய் முடித்தார்.
அய்யா என்னவெல்லாமோ சொல்லுறீங்க நீங்க எனக்கு உயிர் கொடுத்த தகப்பன் போல, மேலும் என்னுடைய குருவே இனிமேல் நீங்க தான் அதனால் நீங்கள் எதை சொன்னாலும் அதை என் தலைமேல் வெச்சி நடப்பேன். என்றான். நல்லது முதலில் நீ செய்ய வேண்டியது இது தான் என்று அவன் பயிற்சியை ஆரம்பித்தார் பாலை சித்தர்.
==================================================
ஸ்டெல்லா யோகினி மாயா ஆசிரமத்தின் புதிய கிளையின் திறப்பு விழாவிற்காக பம்பரம் போல சுழன்று கொண்டிருந்தாள். பல வேலைகள் பல பேருக்கு அழைப்பிதழ்கள் தங்குவதற்கு ஏற்பாடு பிரபல ஊடகங்களுக்கு பேட்டிகள் மேலும் ஸ்வாமிகளின் நிர்வாக அலுவல்கள் என்று அவளால் ஒரு இடத்தில் நிற்க முடியாத அளவிற்கு அவள் இந்த புதிய வேலைகளில் சிக்குண்டாள். ஆனாலும் அவளுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை ஸ்வாமிகள் இப்போது யாரிடமும் பேசுவதிலை, மேலும் அவருக்கு பல புதிய மனிதர்களின் தொடர்பும் அவர்களுடன் பெரும் பகுதியை செலவிடுவதும் அதில் தான் சேர்த்துக்கொள்ள படுவதில்லை என்றும் உணர்ந்தாள் அதனாலேயே கர்நாடகத்திலிருந்து தன்னை இந்த புதிய  மடத்தின் திறப்பு விழாவிற்கு அவ்வப்போது அனுப்பி விடுகிறார் என்று நினைத்தாள். மேலும் அவளுக்கு பெரும் புதிர் ஒன்று உள்ளே குடைந்து கொண்டு இருந்தது, சம்பத் எங்கே? சில நாட்களாய் அவன் எங்கே போனான்? இதுவே அவனை பற்றிய நினைப்பை அதிகமாக தூண்டியது. அம்மா உங்களுக்கு அழைப்பு என்று உப சிஷ்யை ஒருத்தி அலை பேசியை அவளுக்கு முன் நீட்டினாள். இப்போதெல்லாம் ஸ்டெல்லா அதிகமாக உப சிஷ்யர்களை நியமித்திருந்தாள். அவளுக்கு தேவைப்படும் என்று ஸ்வாமிகள் அவர்களை அனுமதித்திருந்தார்.  அதற்க்கு ஸ்வாமிகள் நிறைய அதிகாரத்தினை அளித்திருந்தார்.
ஸ்வாமிகள் மறுமுனையிலிருந்து, ஜெய் யோகமாயா நான் தீக்ஷண்ய ஸ்வாமி பேசுகிறான்  என்ன ஸ்டெல்லா ?நீ ?நலம்தானே ? உங்கள் கிருபையால் எல்லோரும் நலம் ஸ்வாமிஜி . நல்லது!வேலை எல்லாம் நன்றாக நடக்கிறதா? என்று கேட்டார் ஆம் சுவாமி தங்கள் ஆசிர்வாதத்தால் செவ்வனே இயங்குகிறது.
சொன்ன தேதியில் நாம் கிளை ஆசிரமத்தினை நிறுவி விட முடியுமா? தப்பாமல் சுவாமி இங்கு தங்கள் வருகையை தேவை மேற்கொண்டு அனைத்து ஏற்படுகளும் முடிவடைந்து விட்டன.
நல்லது! சேகர மூர்த்தி எங்கே?
அவர்இ இப்போதெல்லாம் வீட்டிற்க்கே செல்வதில்லை சுவாமி நிறைய நேரம் இங்கேயே இருந்து கொண்டு  இந்த ஆசிரம அமைப்பினை முழுமையாக அமைத்திட தலை மேல் போட்டு கொண்டு வேலைகளை  எடுத்து செயகிறார். உங்களை காண நாளை மறுநாள் என்னுடன் வருவேன் என்று சொன்னார்.
மிக்க மகிழ்ச்சி!
அவர் மனநிலை சரியாக உள்ளதா? தன மகளின் மறைவு அவரை பாதித்திருக்கும் என்றே எண்ணி இருந்தேன் அவனை ஒய்வு எடுத்துக்கொள்ள அன்றோ சொன்னேன்
ஆம் சுவாமி அவர் மகள் துர்மரணம் அடைந்ததை கூட மறந்து ஓயாமல் இந்த ஆச்ரமத்திற்காக பல பணிகளை செய்து கொண்டே இருக்கிறார்.
இருக்கட்டும் சற்று பணியில் கவனம் இருந்தால் அவன் துக்கம் குறையும்.
நாம் உனக்கொரு ரகசிய பொறுப்பினை ஒப்படைக்க போகிறோம் இது மிக பாதுகாப்பாய் செய்ய வேண்டிய பணி. எனக்கு ஸ்வர்ணம் லபித்திருக்கிறது.
அப்படியா! எவ்வளவு சுவாமி?
அநேகமாய் நாம் அந்த டெமி சொன்ன இலக்கையும் தாண்டி விட்டோம்! நானும் பத்து நாட்களாக என்னுடைய மந்திர சக்தி அனைத்தையும் பிரயோகித்து விட்டேன். இன்றைய நாளில் என்னிடம் இருக்கும் ஐஸ்வரியங்களை வைத்து பார்க்கும் பொது சுமார் ஆயிரம் கோடிகளுக்கு மேல் இருக்கும். இந்த சந்தோஷ செய்தியை உனக்கு சொல்லவே நான் உன்னை இங்கு அனுமதிக்க வில்லை.
தேவை இல்லை ஸ்வாமி நீங்கள் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தம் இருக்கும்.
ஆஹா! உன்னை போலவே சொல்வதை கேட்டுக்கொள்ளும் சிஷ்யனாக சம்பத்தும் இருந்திருந்தால்.. என்று அவர் குரல் கம்மியது. சரி சம்பத்தின் நிலை என்ன? அவனை பற்றிய தகவல்  எதுவும் கிடைத்ததா?
இல்லை ஸ்வாமி மன்னியுங்கள் அவரின் தொடர்பையே என்னால் பெற முடியவில்லை இந்த ஆசிரம வேலையில் அதை என்னால் கவனிக்க முடியவில்லை.
சம்பத் பாதி தெரிந்த மேதாவி, அவன் அவ்வளவு சீக்கிரம் இறந்திருப்பான் என்று நான் நம்பவில்லை. ஆகவே முயற்சியை கை விடாதே உன்னுடைய யோக சித்தியால் கூட அவனுடைய ஆராவினை உணர முடியும், ஸ்தூலமாகவோ இல்லை உயிர் பிரிந்திருந்தால் சூட்சுமமாகவோ அவனை தொடர்பு கொள்வது சாத்தியம். என்னால் இப்போது இந்த சித்தியை பிரயோகிக்க முடியாது ஆகவே நீ முயற்சி செய் என்றார்.
சுவாமி எனக்கு ஒரு சந்தேகம்?
உனக்குமா என்ன கேள்!
சுவாமி  அட்டமா சித்திகளை சுவ்ர்னாம் லாபிக்க வேண்டி லௌகீக  தவறென்று என் மனதிற்கு படுகிறது. கொவிக்காமல்  படுத்தவேண்டும் என்று தயங்கிய படியே ஸ்டெல்லா கூறினாள்.

சற்றும் எதிர் பார்க்காமல் தீக்ஷிண்ய ஸ்வாமி கடை கடவென்று  சிரித்தார்.
ஆக நீயும் என்னை தங்க வேட்டை  செய்யும் மானிடன் என்று நினைத்தாயோ? சரி நம்  கேட்டு வரும் பக்தர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

மன்னிக்க வேண்டும் ஸ்வாமி நான் அந்த அர்த்தத்தில்...

பரவாயில்லை சந்தேகத்தை தெரிவிக்கிறேன் சொல் ஸ்டெல்லா..

சுமார் பத்தாயிரம் பேர் இருப்பார்கள் ஸ்வாமி
மருத்துவம் பொருள் உதவி ஆசிரமத்து சீடர்கள் என்று பார்த்தால் சுமார் 8000 பேர் இருப்பார்களா
ஆம் ஸ்வாமி
நான் போன பிறகு இவர்களை
சுவாமி அபச்சாரம்
ஹாஹாஹா நெருப்பென்றால் சுடும் உடல் சாவது உறுதி ஆனால் உடல் உள்ளவரை உழைப்பு அவசியம்.சாதாரணமாக இருந்த இந்த யோகா மாயா ஆசிரமம் இப்போது உலக அளவிற்கு பெருகி விட்டது அவள் ஆசி இது. அதனை முறையாக பராமரிக்க வேண்டியது அதனை நிர்வகிக்க பொருள் தேவையை அமைக்க வேண்டியது என் வேலை. இதற்கு சில சித்தி சாதகங்களை செய்ய வேண்டியது அவள் ஆஞ்யை. இதில் உனக்கு சந்தேகம் இருக்கிறதா? 
என்னை  ஸ்வாமிஜி நான் இன்னமும் பக்குவ படவில்லை.
நீ என் மகள் போன்றவள் என் சிஷ்யை இந்த நிர்வாகத்தை நடத்த வேண்டியது நீ  தான் மகளே ஆகவே என்ன சந்தேகம் இருந்தாலும் தயங்காமல்  கேள். 

உத்தரவு ஸ்வாமிஜி. மேலும் என்னவோ ரகசிய வேலை இருப்பதாக  சொல்ல வந்தீர்கள் .
ஆம் உனக்கு ஒரு முக்கிய பொறுப்பு இருக்கிறது. நம்முடைய ஆள் சூரஸ்வாமி இன்றிரவு உன்னிடத்திற்கு வருவான் அவனுக்கு இன்று முதல் நீ அவன் கேட்க்கும் அனைத்து உதவியும் செய்யவேண்டும். ஜாக்கிரதை அவனை குறித்து ஒன்றும் தெரிந்து கொள்ள வேண்டாம் அவன் என் பொருட்டு ஒரு முக்கிய கடமை ஆற்ற வருகிறான். அவனுடன் சில பேர் வருவார் அவர்களை அங்கு தங்க வைத்து பாதுகாக்க வேண்டும்.
உனக்கு மற்றொரு ஆச்சரியம்  மகளே
சொல்லுங்கள் ஸ்வாமிஜி

உனக்கு மேலும் ஒரு பதவி உயர்வு அளித்திருக்கிறேன், நீ இனிமேல் என்னுடைய  உதவி யாளர் இல்லை!
சுவாமி?
எனக்கு சில காலம் ஒய்வு தேவைப்படுகிறது, ஆசிரமம் விஸ்தாரம் அடைந்து இருப்பதால் நம்பிக்கையான ஆள் தேவை படுகிறது உன்னை தவிர சம்பத் இருந்தால் இதை செய்திருப்பேன். இனி நீ தான் என் மகள் அதாவது இந்த ஆசிரமத்தின் அடுத்த வாரிசு இனி உனக்கு சகல அதிகாரமும் அளிக்க பட்டு இருக்கிறது இந்த சொத்துக்கள் ஆசிரமங்கள் உன்னிடம் ஒப்படைக்க போகிறேன் என்னை தவிர எல்லா இடங்களிலும் உன் அதிகாரத்தை செலுத்த அதிகாரங்களை அறிவிக்கும் மின்னஞ்சளையும் ஒளிப்பதிவையும் சற்று முன்னர் தான்நம்முடைய நிர்வாக குழுவிடம் அனுப்பி இருக்கிறேன். நீ  என்னுடைய பிரதம  சிஷ்யை என்று பட்டாபிஷேகம் செய்ய முடிவெடுத்து இருக்கிறேன்.
ஸ்வாமி என்ன சொல்கின்றீர்கள் என்னை திக்கு முக்காட செய்து விடீர்கள் சுவாமி. இதற்க்கு நான் தகுதி உள்ளவளா என்று தெரியவில்லை ? என்று ஸ்டெல்லா ந தழுதழுதாள்.
எனக்கு உன்மேல் நிரம்ப நம்பிக்கை பிறந்து விட்டது. நான் புதிய ஆசிரமத்திற்கு விஜயம் செய்தவுடன்  செய்ய போகும் முதல் திருவிழா இதுதான்.  சந்தோஷமா.
எனக்கு எப்படி நன்றி சொல்வதென்று தெரிய வில்லை ஸ்வாமி என் மேல் நீங்கள் வைத்து இருக்கும் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன், உண்மையாக உழைப்பேன் இது உறுதி
இது பரம ரகசியம். ஓம் மாயா! ஜெய் மாயா! என்று கூறினார் ஸ்வாமிஜி.
அப்படியே ஆகட்டும் சுவாமி ஓம் மாயா! ஜெய் மாயா! என்று கூறி தொடர்பை துண்டித்தாள்.
ஸ்டெல்லாவிற்கு அது முதல் காரியங்கள் ஓடவில்லை. அவள் தலை குடைந்து கொண்டே இருந்தது. அவளின் பிரதம சிஷ்யை அவள் அருகே வந்தால் அம்மா
சொல் லம்மா!என்ன விஷயம் அம்மா இன்று நீங்கள் நிரம்ப வேளைகளில் இருந்தீர்கள் உங்களுக்கு இன்றைக்கு வபனம் செய்யப்பட வேண்டும் என்று கூறினாள். இன்று பௌர்ணமி. எல்லா சிஷ்யர்களும் பிரம்மச்சாரிகளும்  இன்று வபனம் என்று சொல்ல கூடிய முடி மழித்தல் சடங்கினை செய்து கொள்ளும் நாள். ஓ! நான் மறந்தே போய்விட்டேன். என்று வேகமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த புதிய அரை ஒன்றிற்கு சென்று அவள் ஆடைகளை களைந்து  மார்பையும் இடையையும் மறைக்க ஓர் ஒற்றை ஆடையுடன் வந்து அங்கு வைக்க பட்டிருந்த ஒரு முக்காலியில் உட்கார்ந்தாள்.

அது புதிய ஆசிரமானதால் முன்னர் இருந்த நாவிதர்கள் வேலை க்கு அமர்த்தப்படவில்லை. மாறாக புதிய வேலை ஆட்கள் அமர்த்த பட்டிருந்தனர். இதனால் புதிய சவர கலைஞர் வந்திருந்தான். அவன் அந்த கோலத்தில் இருந்த ஸ்டெல்லாவை கண்டு நடுங்கி விட்டான்.  பிரதம  சிஷ்யை அவனிடம் சீக்கிரம் வேலையை துவங்க சொன்னாள்.
ஸ்டெல்லா அவனை அமைதி படுத்தி நண்பரே நான் ஒன்றும் புலி இல்லை, நீங்கள் பயப்பட வேணாம். நான் ஒரு சந்நியாசினி எனக்கென்று எதுவும் இல்லை  ஆகவே என்னால் நீங்க ஏதேனும் துன்பத்திற்கு இல்லை உணர்ச்சி வசப்படுவதற்க்கோ ஆளானால் என்னை மன்னித்து விடுங்கள் சீக்கிரம் உங்கள் வேலை யை துவங்குங்கள் என்று இனிமையான ஆங்கில கலப்பு தமிழில் பேசினாள். பார்பர் உடனே கொஞ்சம் தைரியம் வந்தவனாய் மன்னிச்சிடுங்க இந்த வேலை எனக்கு புதுசு, நான் பொம்பளைங்களுக்கு இது வரை சவரம் செய்ததில்லை. அதனால் தான் என்றான் சரி அதனால் பரவாயில்லை உங்களுக்கு சங்கடமாய் இருந்தால் என்னை  ஒரு சின்ன பையனாக மதியுங்களேன் என்று சொல்லி சிரித்தாள். அமைதியான அவன், உடனே தன தொழிலை தொடங்கலானான். ஸ்டெல்லா வழக்கமான பிரார்த்தனைகளுக்கு பின் அவள் தலையை அந்த நாவிதனிடம் ஒப்படைத்தாள். அவனுடைய சவர கத்தி அவளின் தலை மீது விளையாடியது.
மிக விரைவில் தங்க நிறத்தில் படர்ந்திருந்த புல்தரை போல் இருந்த கேசம் மறைந்து வெள்ளை வெளேர் என்ற தலை பகுதி தெரிந்தது. ஷேவிங் கிரீம் கொண்டு புசு புசுவென நுரை உண்டாக்கி அவன் ஸ்டெல்லா தலையை ஒரு பளிங்கு போல சவரம் செய்து சுத்தமாக்கி விட்டான்.
தன் வேலை முடிந்ததும் விடை பெற்றுக்கொண்டான். பின்னர் ஸ்டெல்லா அந்த ஆடையுடன் புதியதாக கட்டி இருந்த குளத்து க்கு சென்றாள். அது பெண்கள் குளிக்க இருந்த பகுதி. ஆதலால் குளத்திற்கு  ஒரு பகுதி தட்டி கொண்டு மூட பெற்றிருந்தது. அவளுக்கு கொடுக்க பட்டிருந்த தீக்ஷை மந்திரங்களை ஜபித்து கொண்டே அவள் அந்த குளத்தில் மூழ்கினாள். நன்றாக தேய்த்து குளத்தில் பல முறை மூழ்கி எழுந்தாள். அவளின் பழைய நினைவுகள் அலை மோதின.தான் அமெரிக்காவின் அதிபர் மாளிகையில் பனி செய்தததும் ஒரே ஒரு முறை இணையத்தில் இருந்த யோகினி மாயை நூலை படித்ததும் அந்த தத்துவங்களின் ஈர்க்க பட்டதும், தான் தீக்ஷை பெற்று சன்யாசினி ஆகா முடிவு செய்ததும், தன் நண்பர்கள் அவளுடைய யோகினி தீக்ஷை விழாவிற்கு  வந்ததும் தன் முட்டி அளவு கூந்தலை மொட்டை அடித்துக்கொண்டதும். காஷாய வஸ்த்திரங்கள் கொடுக்க பட்டதும் தீக்ஷை மந்திர உபதேசம் பெற்றதும், திடீரென தான் தன்னை மறந்து அழுத்தும். ஸ்வாமிகள் தன்னை அனைத்து கொண்டு ஆறுதல் சொன்னதும். முதல் முறை ஜபம் செய்தது சம்பத்தை முதல் முறை கண்டது அவனுடன் முதல் முறை கடுமையான வாக்குவாதம் அதன் பின்னர் என் அவனுடன் மட்டுமே பணி  செய்ய பிடித்து போனது ஏன் என்ற கேள்வி என்று அவளுடைய எண்ண  அலைகள் அடுக்கடுக்காய் குளத்தில் திவலைகளாய் நெளிந்து சென்றது .பின்னால் இருந்து ஒரு குரல் அவள் காதின் அருகே மிகவும் சன்னமாக ஒலித்தது ஸ்டெல்லா! உனக்கு ஒரு ஆபத்து இருக்கிறது ஜாக்கிரதை பெண்ணே! இன்று முதல் ஜாக்கிரதை! என்று ஒலித்தது. திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள். சற்று தூரத்தில் இருந்து ஒரு பெரிய மரத்தின் பின்னால் சம்பத்தின் முகமும் உருவம் தெரிந்தது. நொடிப்பொழுதில் அவன் உருவம் மாயமாய் மறைந்தது.  

Comments

Popular posts from this blog

KAmini_Yogini4

காமினி யோகினி 4 இந்த கதையில் பல சொற்கள் பயன்படுத்துவதால் அதன் அர்த்தத்தை எனக்கு தெரிந்த வரையில் கூறுகிறேன். ஜபம்- உரு போடுதல் உபாசனை- தீவிர பிரார்த்தனை சாதனை - செயலாக்குவது கிரியை-செயல், பிரயோகம்- பயன்படுத்துதல் என்ற வார்த்தைகள் பயன் படுத்த பட்டுள்ளன. இவை அனைத்தும் வடமொழி சம்ஸ்க்ரித சொற்களாகும். இதன் பொருளை உணர்ந்து படிப்பதற்கும், யோகினி என்பது கடவுளர்கள் இல்லை. தேவர்களும் இல்லை, ஆனால் தேவர்களின் நிலைக்கு ஏறக்குறைய பெற்றிருக்கும் தேவதைகள் என்று சொல்லலாம். இவர்களை யோகிகளின் மனைவிகள் என்றும் துணை தேவதைகள் என்றும் சொல்ல படுவதுண்டு. இவர்கள் யட்சிங்கள், கணங்கள், பூதங்களுக்கும் சற்று மேலே சக்தி பொருந்திய தேவதைகள் என்று சொல்ல படுகின்றன. இதற்க்கு மந்திரங்கள் உபாசனை முறைகள், அதற்க்கான பலன்கள் உண்டு என்று அதர்வ வேதமும் யோகினி தந்திர உபாசனை நூல்களும் குறிப்பிடுகின்றன. இவர்களை அம்பிகை பண்டாசுரனுடன் போர் புரிந்த காலத்தில் தன் உப தேவிகளுக்கு துணை யாக போர் புரியவும், அசுர படைகளின் மேல் போர் செய்ய 64 படை தலைவிகளும் தேவைக்காக இவர்களை படைத்ததாகவும், இவர்கள் கீழ் முறையே 1000 கோடி தேவதைக

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண
காமினி யோகினி - பகுதி 10 காமினி எழுந்திரு சீக்கிரம் காமினி காமினி? கேக்குதா? எழுந்திரு கிளம்பு காமினி?!! எங்கோ ஒரு சந்தில் இருந்து யாரோ கத்தும் ஓசை போல கேட்டு மெல்ல சுய  நினைவிற்கு வந்தால் காமினி. தலை சுற்றியது யாரோ சம்மட்டியால் அடித்தது போல  வலி விண்ணென்று தெறித்தது. மெல்ல கண்களை திறந்தாள். யாரோ  மூட்டைகளை தன்   மேல் போட்டத்து போல பாரமாக இருந்தது.  சுதாரித்து கொண்டு எழுவதற்குள் போதும் போதும் என்று ஆனது.  மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். யாரோ  அடித்தது போல இருந்தது. எதோ ஒரு பெண்ணின் முகம் மங்கலாக தெரிந்தது. சுளீர் சுளீர் என்ற அடிகளுக்கும் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை மாறாக எறும்பு கடிப்பது போல இருந்தது. கலைந்த தலை முடியுடன் அலங்கோலமான வெள்ளை அங்கியுடன் இருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் நம்பிகளான  கார்த்திகா, கலை, கனகதுர்கா மூவரும் அவள் அருகிலேயே அதே நிலையில் கிடந்தனர். இவர்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று புரியாமல் விழித்தாள்.  கார்த்தி டீ கார்த்தி எழுந்திருடீ ! கலை கனகா !  இவங்களுக்கு  பரபரப்புடன் மற்ற மூவரையும் உலுக்கினாள். மெல்ல மற்ற மூவரும் முனகி கொண்டே நெள