Skip to main content

Posts

Showing posts from August, 2014
விபரீத விளையாட்டு- 17 கண்மணி கண் திறந்து பார்த்த போது மங்கலான வெளிச்சத்தில் ஒரு அறையில் இருப்பது தெரிந்தது. சிகப்பு நிறத்தில் மினுக் மினுக் என்று ஒளி  வீசி கொண்டிருந்தது. எதோ ஒன்று அவளின் முன்னர் வைக்க பட்டிருந்தது அவள் உணர்ந்தாள். தான் ஒரு படுக்கையில் ஆடைகள் களையப்பட்டு படுக்க வைக்க பட்டுள்ளதையும் அவள் முன் ஒரு காமிரா வைக்க பட்டு இருப்பதையும் கண்டு அவள் இதயம் ஒரு நொடி நின்றது. ஐயோ என்ன ஆச்சு எனக்கு? இங்க என்ன நடக்குது? நான் இங்கே எப்படி வந்தேன்?என்ன யார் இப்படி செஞ்சது?என்று கையை நகர்த்தி பார்த்தாள். கை கால்கள் இருந்தனவே அன்றி அவைகள் அசையவில்லை.வலி உயிரை கொன்றது!தலை சுற்றலாக இருந்தது.தன கண்களை அகல விரித்து சுற்று முற்றம் பார்த்தாள். அரை கதவு பாதி திறந்திருப்பது தெரிந்தது.  கொஞ்ச தூரத்தில் ஜான் இருப்பது தெரிந்தது. ஆனால் அவன் இவள் இருப்பதை உணரவில்லை. அவன் யாருடனோ பேசுவது கேட்டது ஆனால் அவளால் கத்த முடியவில்லை. ஜான் ஜான் என்று கத்தி பார்க்க முயன்றாள். ஜான் நான் இங்கே இருக்கேன் என்று கத்த முற்பட்டாள் ஆனால் அவளின் குரல் அவளுக்கே கேட்க முடியவில்லை. ஒருவனின் பின் பக்கம் தெரிந்தது?யார் அ
விபரீத விளையாட்டு - 20 செந்தில் கருணா சொல்லியிருந்த வீட்டை கண்டு பிடிக்க நெடு நேரம் ஆனது, போலீஸ் ஜீப் ஒன்று நிற்பதை பார்த்து குழப்பமாய் இருந்தது, ஒருவேளை வேளை நம்முடைய திட்டம் வெற்றி பெற்றுவிட்டதோ என்று ஒரு நிமிடம் நிம்மதி அடைந்தான். வாசலில் ஜான் நின்று அவனுக்கு செய்கை காட்டி அவனை உள்ளே வரும்படி சொன்னவுடன் அப்படி எதுவும் நடக்க வில்லை என்று எண்ணிகொண்டான். இவர்கள் கண்மணியை என்ன செய்து தொலைத்தார்கள் என்று ஒரு வித அச்சம் பரவியது. வழக்கத்துக்கு மாறாக ஜானின் முகம் கொஞ்சம் கடு கடுப்பாக இருந்தது. செந்தில் உள்ளே சென்றதும் அவனை கருணா சிரித்தபடியே தொளில் கை போட்டு உள் அழைத்து சென்றான். மறு நிமிடம் அவன் பின் மண்டையில் ஒரு கிரிகெட் மட்டை நன்கு பதம் பார்த்தது. ரதம் ஒழுக, பின் பக்கம் கைகள் கட்ட பட்டு தரையிலே கிடந்தான் செந்தில். அவன் தலை சுக்கு நூறாக போய்விட்டதை போன்று இருந்தது. நன்றாக கண்களை திறந்து பார்த்தான். அவன் கண்கள் சிகப்பு நிறமாகி மங்கலாக தெரிந்தன. இன்னமும் அவன் நினைவு தெளியவில்லை. ஜான் அவன் முகத்தில் ஐஸ் தண்ணீரை அடித்தான். ஊசி குத்தியதை போல வலித்தது.செந்திலுக்கு இப்போதுதான் நினைவு ம
விபரீத விளையாட்டு - 11  தப்பு செய்யறவங்க யாரும் எனைக்குமே சுதந்திரமா வாழ முடியாது ஒன்னு தெரியுமா? குத்தம் செய்யறவேன் தன்னையே அறியாமல் எதாவது ஒரு சாட்சி வெச்சிருப்பான். அந்த உண்மை அவனை எப்படியாவது மாட்டிவிட்டுறும். ஒரு அலைவரிசையில் மதிய நேரம் தமிழ் சினிமா ஓடி கொண்டிருந்தது. சிவாஜி யின் கணீர் குரல் வசனம் ஒன்று தெளிவில்லாமல் யோசித்து கொண்டிருந்த செந்திலுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. நல்லவன் வாழ்வான்! தப்பு பண்ணவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும்! ராமுவின் வார்த்தைகள் அவன் காதில் ஒலித்து கொண்டிருந்தது. தப்பு செஞ்சவங்களை மாட்டி விடனும் ஆனால் எங்கேருந்து ஆதாரம் சிக்குறது. ஜான் வீட்டில் இல்லை, கண்மணியுடன் தான் சென்றிருப்பான் என்று தெரியும். சரி வீட்டை துழாவ வேண்டியது தான் என்று முடிவு கட்டி ஒவ்வொறு பக்கமாக தேட ஆரம்பித்தான். அப்போது ஒரு துணி குவியலில் லேசாக அதிர்வு தெரிந்தது. எலி வந்து விட்டதா என்று எண்ணியவன் துணியை விலக்கி பார்த்தான். ஒரு செல் பேசி. மணி ஒலித்து கொண்டிருந்தது. செந்தில் சிரித்தான்.ஜான் தனக்கு தெரியாமல் ஒரு செல் இணைப்பு வைத்து இருக்கிறானா? எடுத்து பேசினான்   ஹே கண்ணா! நான
விபரீத விளையாட்டு  - 6 தெளிந்து கிடக்கும் தண்ணீரில் மீன்கள் நீந்தினால் நமக்கு தெளிவாய்  தெரியும். குழம்பி கிடக்கிற சேற்று குட்டையில் மீன் பிடிக்க முடியாதல்லவா? செந்தில் மனம் அவ்வாறு தான் இருந்தது. ஒரு முடிவுக்கும் வர அவனால் இயலவில்லை. தான் செய்தது மாபெரும் தவறு என்று அவனுக்கு புரிந்தது. ஆனால் பசிக்கும் மனதிற்கும் சண்டை நடக்கும் பொது வேதாந்தம் வேலை செய்யுமா? இன்றுடன் இரண்டு நாட்கள் ஆயிற்று. செந்தில் அவன் அம்மாவுக்கு மணி ஆர்டரில் கொஞ்சம் பணம் அனுப்பி வைத்தான். அவளுக்கு எழுதிய வரிகள் நன்றாக நினைவில் இருந்தன. அம்மா, நான் இங்கு இருக்கிறேன். அக்காவை இன்னமும் தேடிகொண்டிருகிறேன் எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் கவலை படாதே, இங்கு ஒரு வேலையில் சேர்ந்துவிட்டேன். கொஞ்சம் முன் பணம் வாங்கி கொண்டு உனக்கு அனுப்பி இருக்கிறேன். பத்திரம் - செந்தில் எப்படியோ அந்த பணம் சேர்ந்தாலும் அம்மாவுக்கு நிம்மதி கிடைக்க போவதில்லை. ரம்யாவை காணோம், எங்கிருந்து திரும்ப கண்டுபிடிக்க ஆரம்பிப்பது ? இந்த முறை அவள் கிடைப்பாள அல்லது ஒரே அடியாக போய் விட்டாளா? என்று குழம்பி போனான்.கண்களை மூடி சற்று தூங்கலாம் என்று நினைத்த
விபரீத விளையாட்டு - 1 உ   அருள்மிகு வடபழனி ஆண்டவர் துணை  திருமண அழைப்பிதழ்  அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. அன்புடையீர், எல்லாம் வல்ல முருகன் அருளாலே பெரியோர்கள் ஆசியுடன்  நிகழும் சர்வதாரி வருடம் ஆனி திங்கள், 9 ஆம் நாள் (23.06.2008)அவிட்ட நட்சத்திரம், மிதுன லகினத்தில் (6:00- 7:30 AM) கூடிய சுப முகூர்தத்தில்  திருவாளர் இராமு - திருமதி வசந்தம்மாள்   அவர்களின் கனிஷ்ட  புத்திரி  திருநிறை செல்வி  இரா. கண்மணி  க்கும்,  அமரர் திரு. இராமேஸ்வரன் -திருமதி பார்வதியம்மாள்  அவர்களளின் கனிஷ்ட குமாரர்  திரு நிறை செல்வன்   இரா.செந்தில்வேல்  க்கும் அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் சந்நிதானத்தில் 15 இலக்க தூண் அருகில் நடை பெறுவதால் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வந்து மணமகளை வாழ்த்த வேண்டுகிறோம். திரு.இராமு,                               திருமதி வசந்தம்மாள், 12, தெற்கு ரயில்வே குடியுருப்பு, பெரம்பூர், சென்னை 600 011. அவ்வண்ணமே கோரும் மாப்பிள்ளை திரு. வசந்தன்  பெண் திருமதி.ரஞ்சன