Skip to main content
விபரீத விளையாட்டு  - 6

தெளிந்து கிடக்கும் தண்ணீரில் மீன்கள் நீந்தினால் நமக்கு தெளிவாய்  தெரியும். குழம்பி கிடக்கிற சேற்று குட்டையில் மீன் பிடிக்க முடியாதல்லவா?

செந்தில் மனம் அவ்வாறு தான் இருந்தது. ஒரு முடிவுக்கும் வர அவனால் இயலவில்லை. தான் செய்தது மாபெரும் தவறு என்று அவனுக்கு புரிந்தது. ஆனால் பசிக்கும் மனதிற்கும் சண்டை நடக்கும் பொது வேதாந்தம் வேலை செய்யுமா? இன்றுடன் இரண்டு நாட்கள் ஆயிற்று. செந்தில் அவன் அம்மாவுக்கு மணி ஆர்டரில் கொஞ்சம் பணம் அனுப்பி வைத்தான். அவளுக்கு எழுதிய வரிகள் நன்றாக நினைவில் இருந்தன. அம்மா, நான் இங்கு இருக்கிறேன். அக்காவை இன்னமும் தேடிகொண்டிருகிறேன் எப்படியும் கண்டுபிடித்துவிடலாம் கவலை படாதே, இங்கு ஒரு வேலையில் சேர்ந்துவிட்டேன். கொஞ்சம் முன் பணம் வாங்கி கொண்டு உனக்கு அனுப்பி இருக்கிறேன். பத்திரம் - செந்தில்

எப்படியோ அந்த பணம் சேர்ந்தாலும் அம்மாவுக்கு நிம்மதி கிடைக்க போவதில்லை. ரம்யாவை காணோம், எங்கிருந்து திரும்ப கண்டுபிடிக்க ஆரம்பிப்பது ? இந்த முறை அவள் கிடைப்பாள அல்லது ஒரே அடியாக போய் விட்டாளா? என்று குழம்பி போனான்.கண்களை மூடி சற்று தூங்கலாம் என்று நினைத்த போது திடீரென ஒரு குரல் அவனை உலுக்கியது. "ஹலோ ப்ரதர்!" என்று கருணா அவனுடைய பாண் மசாலா வாய் சிரிப்புடன் அவன் தோளில் கை போட்டான்.
செந்தில் திடுகிட்டான். ஒரு வினாடி அவர் ஈரல் குலை நடுங்கியது. இவன் என்னை கண்டு பிடித்துவிட்டான்?நாம் இனி தொலைந்தோம் என்று பேய் விழி விழித்தான்.
என்ன ப்ரதர் உங்க அம்மாவுக்கு பணம் அனுபிடிங்களா ? எப்படி இருகாங்க பதில் போட்டாங்களா ? என்று கருணா கேள்விகளை அடுக்கினான்.
 என்ன சம்பந்தம் இல்லாம ஒளர்ரீங்க?என்று பதில் தர எண்ணினான் ஆனால் அவன் விலிருந்து எந்த பணம் எந்த அம்மா? என்று உளறலாக பதில் வந்தது.

என்னப்பா ஒரே அடியா டபாய்க்கிற? ஹோட்டலிலே இருந்து ஒருத்தன் பார்ச திருடின,அவன் கார்ட எடுத்திகிட்டு நேர பொய் 50000 திருடின,மீதி பணத்த எடுத்துகிட்டு  எப்படி பொண்ணுங்களோட கூத்தடிக்க இங்க உக்காந்துகிட்டு ப்ளான் தான போட்டுக்கிட்டு இருக்க அப்படி தானே ? என்று அடுக்கி கொண்டே போனான் கருணா.

செந்திலுக்கு வயிற்றில் புளியை கரைத்தது. எப்படி தப்பிக்க போகிறோம் என்று விழித்தான். "சார் வந்து நான் ஒரு தப்பும்--என்று இழுக்க ஆரம்பித்தான்.
"சரி, சரி!சார் எதுக்கு  இங்க நின்னுகிட்டு நேரத்த வீணாக்கணும் ? மேல பேச வேண்டியது நம்ம மாமியார் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா!" என்று சட்டை காலரில் கை வைத்து ஜீப்பில் தள்ளினான்.
சார் சார் வேண்டாம் நான் ஒன்னும் பண்ணல!..என்ற அவன் ஈன ஸ்வரமும் ஜீப் புகையில் கரைந்து போனது.

ஒரு திருடன் அதுவும் முதல் முறை திருடன் போலீசிடம் சிக்கினால் அவன் அடுத்து அனுபவிக்க போகும் மரியாதைகள் சொல்ல தகாது.
நரகம் 28 விதம் என்று சொல்லுவார்கள். இந்த கருணாவின் போலீஸ் ச்டேஷனும் 29 ஆம் நரகம் என்று தெரிந்து கொண்டான் செந்தில்.
இரண்டு நாட்களாக அவன் பட்ட நரக வேதனையிலும் ஒரு எண்ணம் தான் அவன் உள்ளத்தில் ஆணி இறக்கி இறுகி இருந்தது.பண வெறி! நாம் எப்படியும் பணத்தை ஜெயித்து விட வேண்டும் என்ற வெறி. அதனால் அவன் பயித்தியம் ஆனான் என்று நினைத்து கொள்ளாதீர்கள் நண்பர்களே! அவனை இந்த கைய்யயாளுமை அவன் மனதை வஜிரம் போல ஆக்கியது. மனமும் உடலும் புண்ணாகி போனது.சாக்கடையில் விழுந்து விட்டான், இனி திரும்ப முடியாது, எனவே மேலும் கெட்டது செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் விழுந்தான். இறுதியில் மனம் மரத்து போனது. கருணா மீண்டும் ஒரு அடிமையினை அடைந்து விட்டான்.

செந்தில் எழுந்தபோது அவன் ஜெயில் கம்பிகளை காணவில்லை, ஜெயில் கம்பிகள் ஒரே மொத்தமாக உருளையாக இருக்கும், ஆனால் இது டிசைன் கிரில் கம்பிகளால் ஆனா ஒரு அரை. அங்கு தனிமையில் இருந்த அவனுக்கு தான் எப்படி வந்தோம் என்று புரியவில்லை.
கொஞ்ச நேரம் படுத்து கொள்ளலாம் என்று நினைத்து சும்மா இருந்தான். அருகில் பல மருந்து வைக்க பட்டிருந்த தட்டுகளும், பினைல் வாடையும் அவனுக்கு அது ஒரு மருத்துவமனை என்று உணர்த்தியது. தான் சரியாக 2 நாட்கள் இருந்தது போல அவனுக்கு நினைவு.

அறைய கதவு பூட்டியிருந்தது அதனால் வெளியே நடப்பது தெரிய வாய்ப்பில்லை. ஜான் கருணாவின் வரவுக்கு காத்து கொண்டிருந்தான். கருணா வந்தவுடன் அவன் திட்டத்தை ஜான் அறிந்து கொண்டான்.அரை கதவினை லேசாக திறந்து விட்டு, கருணாவை திட்டுவது போல் நடித்தான்.

என்ன சார் நீங்க? யாரோ திருடன் என் கார்ட எடுதுட்டான்னு கம்ப்ளைண்டு கொடுத்த என்னோட நண்பனை புடிச்சி இப்படி அடிசுருகீங்க ?
சாரி சார் எதோ தெரியாம தப்பு நடந்து போச்சு,
சார் நிங்க சொல்டீங்க ஆனா அவன் போயிருந்தா என் மேல இல்ல கொலை பழி விழுதுருக்கும்.
சரி தம்பி நடந்தது நடந்து போச்சு.இப்போ என்ன பண்ணனும்கிற?
சார் என்னோட கேசை வாபஸ் வாங்கிக்குறேன். நான் தான் தவறுதலா கம்ப்ளைன்ட் கொடுத்தேன்னு எழுதி கொடுக்கிறேன் நீங்க கிளம்பும்க சார் என்று சொல்லி விட்டு ஜான் கதவை சாத்தினான்.
கொஞ்ச நேரம் கழித்து ஜான் உள்ளே வந்து செந்திலை சந்தித்தான்.
என்ன செந்தில் எப்டி இருக்கீங்க?
நீங்க? நீங்க ஏன் என்னை காபாத்துனிங்க?
ஆமாம் நான் தான்! உங்க கிட்ட பர்ச பரி கொடுத்தும் நான்தான் அதை பத்தி போலீசுல சொன்னதும் நான்தான். இபோ உங்களை கப்பாதுனதும் நானே  தான் என்று சொன்னான்.
செந்தில் நன்றி பெருக்குடன் அவனை பார்த்தான். ஜான் தன திட்டம் வெற்றி பெற்ற மகிழ்ச்சி.
ஏன் என்னை காப்பதுநீங்க? நான் பண்ணது திருட்டு இல்லையா?
ஒஹ்!அப்படியா? சரி அது திருட்டா?
விளையாடாதிங்க சார்.

"இல்ல என்கிட்டே இருந்ததை நி உன் தேவைக்காக எடுத்துகிட்ட அவ்வளவு தான். இது உன் திறமைக்கு கிடைச்ச பரிசு. ஆக்சுவல்லா உங்க திருடின ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிச்சி போச்சு தெரியுமா?
புரியல்ல சார்?உங்க வேதாந்தம் ரொம்ப புதுசா இருக்கு.நீங்க என்னவோ திருடன் மாதிரி பேசுறிங்க.

ஹேய்! நீ புத்திசாலிதான்!ஆமாம் நானும் உன்ன மாதிரி திருடன் தான். ஆனால் என் திருட்டு பெரிய அளவில இருக்கும். எனக்கு ஒரு புத்திசாலி தேவை.உன்னை முதல்ல ஹோட்டலில பாத்த போவே நி காசில்லாமல் வந்திருக்கேன்னு தெரிஞ்சிகிட்டேன். ஆனா அதை எப்படி சொதிகிறது? அதுனால தான் உனக்கு ஒரு டெஸ்ட் வெச்சேன். என்ன உன் திறமையால நீ கவுத்துட்ட. உன்ன வேளிய எடுத்தேன். என் திருட்டு கேஸ வாபஸ் வாங்கிட்டேன். என்ன சொல்ற நீ என்னோட செர்ந்துக்குவியா?

இல்ல நான் எதோ ஒரு வேகத்துல தவறை செஞ்சிட்டேன் ஆனா இது என் மனசுக்கு பிடிச்சி செய்யல.பசி கொடுமை வாழ்க்கையில வெறுப்பு!வேண்டாம் நான் இதுல சேர எனக்கு விருப்பமில்ல.

சூப்பர்! ஆனா செந்தில் உனக்கு தெரியுமா? நீ பண்ணது ஒரு திருட்டு அதுவும் போலீசுல மாட்டிகிட்ட திருட்டு! எப்போ போலிஸ் உன்ன சந்தேக பட ஆரம்பிச்சிருச்சுசோ இனிமே இனி நீ எங்க மாட்டினாலும் அது உன்னை தான் கோர்த்து வாங்கும். உன்ன நிம்மதியா இருக்கவே விட மாட்டாங்க.உன்ன பாத்தா ஊருக்கு புதுசு  போல தெரியுது. தப்பு பண்ணி பழக்கம் இல்லை, மாட்டிகிட்ட. என் கூட இருதிடறது தான் உனக்கு நல்லது. யோசிச்சு சொல்லு. இப்போ ரெஸ்ட் எடு நாளைக்கு நீ டிஸ்சார்ஜ் ஆகிடலாம் என்று சொல்லி விட்டு போய்விட்டான்.

செந்தில் யோசித்தான் என்ன கஷ்டம்! சின்ன சபலமும் பொய்யும் அவனை எத்தனை ஆழ படு குழியில் தள்ளி விட்டது?
========================================================================
செந்தில் வழிக்கு வந்து விட்டானே தவிர, அந்த தொழில் அவனுக்கு தீயை தலையில் கொட்டி கொள்வது போல இருந்தது, அனால் ஜான் மூலம் அவன் அக்கா கிடைத்து விடுவாளோ, என்று ஒரு நம்பிக்கை மூட நம்பிக்கை என்று கூட சொல்லலாம், இருந்தது. தினமும் ஒவ்வுறு பெண்களிடம் அவன் அடிக்கும் கூத்தும் அதனை ரகசியமாக படம் பிடித்து கொள்வதும் அவன் தொழில். பெண்களை தேடி பிடிப்பது அவர்கள் சரித்திரம் பற்றியும் அவர்களுடன் அப்போதைக்கு பிரபலமான Orkut ,Facebook போன்ற சமூக வலைதளங்களில் கடலை போடும் விதத்தில் வசீகரிப்பதும், அவர்களை பற்றிய தகவல்களை இரகசியமாக சேகரித்து சொல்வதும் முடிந்தால் பணம் கறப்பதும் தான் செந்தில என்ற  மூளைக்கார நாய் செய்ய வேண்டிய பணிகள்.ஜான் இதில் ஒன்றும் தேர்ச்சி பெறாததால் இந்த அனுபவம் அவனுக்கு நன்றாக இருந்தது, ஒரு அடியாள் வேலைகாரன்  கிடைத்தது அவனுக்கு வேடிக்கையாகவும் வசதியாகவும் இருந்தது. பல கிரெடிட் கார்டுகள் தயார் செய்வதும் அவற்றை பண பரிவர்த்தனை திருட்டுக்களை செய்வதுமாய் அவன் கொடிகட்டி பறந்தான்.

அவனுடைய தற்போதைய தேவை ஒரு பள்ளி மாணவி இது தான் கருணா கொடுத்த அசைன்மன்ட். இப்போது ஜான் தனக்கு வேண்டிய பிளஸ் டூ மாணவியை தேர்ந்தெடுக்க வட சென்னையில் உள்ள பள்ளிகளில் வலை விரித்திருந்தான். அவனுக்கு உடனடி தேவை இருந்ததால் எல்லை மீறும் குட்டிகளை கண்ணி  வைத்திருந்தான்.
ஒரு பெண்கள் அரசு மேல் நிலை பள்ளியில் அவனும் செந்திலும் தன்  காரில் நின்று கொண்டு வேவு பார்க்கின்றனர்.

செந்தில் மிண்டும் சொல்கிறான். ஜான் இது தேவையா எதோ பெரிய பொண்ணுங்கன்ன நமக்கு எந்த பிரச்னையும் இல்லாம போய்டும். இது மைனர் விவகாரம்.மாட்ன ரொம்ப மோசமா இருக்கும்.

செந்தில் மொதல்ல பூச்சி காட்றத நிறுத்து! இது ஒன்னும் பெரிய ரிஸ்க் கான வேலை இல்ல, நாம இதை முடிச்சா இருக்கிற ரேஞ்சே வேற,ஒரு சின்ன குட்டியை ஆப்ரிக்க ஷேக்கு வேணும்னு கேட்டு பாஸ் கிட்ட கம்மிட் கொடுத்திருக்கான். அந்த பெண்ணை அவன் கலியாணம் பண்ணிக்கிற மாதிரி துபாய் கூட்டிகிட்டு போயிருவான்.அங்க அவளை வித்தா செம்ம லாபமாம். அதோட கமிசன் கூட நமக்கு வரும். தங்க முட்டை போடுற வாதாட்டம் சிக்கிருக்கான்.  நாம இதுல மாட்டவே மாட்டோம். சொன்னா புரிஞ்சிக்க.நாமளும் கூட வெளி நாட்ல பொய் செட்டில் ஆகிடலாம். ரெண்டு மாசத்துக்குள்ள இத செய்யணும் அவன். வரதுக்குள்ள பொண்ணு ரெடி பண்ணனும்.

அதுக்கு எதுவும் தெரியாத ஸ்கூல் பொண்ணுங்க வாழ்க்கையில வேளையாடுரதா ? பாவம் கொழந்தைங்க.
எது போடாங்! கொழந்தைங்கள?! இதுங்களா ? இவளுங்கள எல்லாம் விட்டா ஊரை கேடுப்பளுங்க. இவளுங்க பத்தி தெரியாம பேசாத. எல்லாம் பிஞ்சில பழுத்ததுங்க இந்த வயசிலேயே பசங்களை உஷார் பண்ணி வேசிகிட்டு அலையறாளுங்கன்னா பாத்துக்கோ. 10 வது பையனுங்க பிளஸ் டூ பொண்ணுங்களோட சுத்துரானுங்க. அவ்ளோ டெவெலப் ஆகிட்டளுங்க. அதோ அங்க பாரு என்று ஒரு பள்ளி மாணவிகளின் கூட்டத்தை காட்டினான்.
அங்கே கண்மணியும் அவள் தொழிகளும் சில பையன்களை திருட்டுத்தனமாக சைட் அடித்து  கொண்டு இருந்தனர்.
என்னவோ போ ஜான்!எனக்கு எரிச்சல இருக்கு. நான் கொஞ்சம் வெளியில பொஐட்டு தம்மடிசிட்டு வரேன். என்று காரிலிருந்து வெளியே சென்று விட்ட்டான் செந்தில்.

தனியே விடப்பட்ட ஜான் கண்மணி கூட்டத்தை கண் கொட்டாமல் நோட்டம் இட்டு கொண்டிருந்தான்.அப்போது அவன் எதிர் பாராத காட்சியை கண்டான். கண்மணியை அன்று பள்ளியிலிருந்து ராமு தன் வண்டியில் ஏற்றி கொண்டு போவதையும் கண்மணி வாக்குவாதம் செய்து கொண்டே அவன் பின்னால் வண்டியில் செல்வதையும் கண்டான் ஜான்.அவன் மனம் ஆயிரம் தேள்கள் கொட்டியது போல எரிந்தது.

ஜானின் விபரீத விளையாட்டிற்கு சரியான காய் கிடைத்து விட்டதை அவன் கோணை வாய் சிரிப்பு காட்டி விட்டது.

இன்னுமுமா புள்ள புடிக்குற? என்று செந்தில் சொன்னதும் தான் அவனுக்கு நினைவு வந்தது.சரி சரி வா போகலாம் என்று காரை செந்திலுக்கு விட்டு கொடுத்தான் ஜான்.

"புள்ளைய புடிச்சிட்டேன் செந்தில்! நாம பார்த்தோமே அந்த சென்டர் பொண்ணு அந்த குட்டி தான் என் டார்கட்(target) ." என்று விரலை துப்பாக்கி போல பிடித்து சுட்டி காட்டினான்.

விபரீத விளையாட்டு- 7
=========================

விடலை பருவம் எனப்படுன் "டீன் ஏஜ் " ஒரு கத்தி மேல் நடக்கும் வினோதமான பருவம்.
சிறு வயதில் தன எதிர் பாலர்களிடம் வருவது ஒரு வித பருவ கோளாரின் ஈர்ப்பு. (infatuation) என்பது தெரிந்தும் தெரியாமலும் பழகும் இன்பம் அலாதியானது . பலர் அந்த சக்கரத்தில் நண்பனின் அல்லது பெற்றோரின் துணையுடனோ, அல்லது தன்னிச்சையாகவோ உணர்ந்து வெளியே தப்பித்து கொள்வர்.அதில் மிக சிலர் ஆழமாக உந்தப்பட்டு அதன் வெளி வர தெரியாமல் சக்கர வியூக அபிமன்யு போல அதிலேயே அமிழ்ந்து, அழிந்து போய் விடுகின்றனர்.

கண்டவரை சொக்கி விழ வைக்கும் வாளிப்பான உடல், 17 வயதிலேயே 20 வயதுக்கு மீறின வளர்ச்சி,மூளையில் வேகம் வேகம் வேகம் மட்டுமே, விவேகத்துடன் நடக்க அவள் வயதிற்கு தெரியவில்லை. நிம்மதி இல்லாமல் மேயும் மனம் போல, துரு துரு பார்வை அப்பா   மீது துவேஷம். முழங்கால் வரை நீண்ட கூந்தலை இரட்டை பின்னல் பின்னி அதன் அழகை அடக்கி வைத்திருந்தாள் அவள் அம்மா. வளைந்த புருவங்கள் அவளின் மன்மத பாணங்களை ஏவுவதற்கு என்நேரமும் தயாராக இருந்தன.

எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருந்த கண்மணிக்கு புயல் போல வந்த ஜான் அவள் வாழ்க்கையில் குறுக்கிட்டது அவளுக்கு கொடும் வெயில் வாட்டும் பொது திடிரென ஐஸ் தண்ணீர் கொட்டுவது போல இன்பம் கூட்டியது. முதல் பார்வையிலேயே அவள் அவன் பக்கம் சாய்ந்து விட்டாள்.அவன் உருவம், மெலிந்த தேகம், அவனை ஒரு விடலை பய்யன் என்ற தோற்றத்தையே காட்டியது அன்றி அவன் வயதை கண்டு கொள்ள கண்மணிக்கு புத்தி சாலித்தனம் போதவில்லை.அவன் மேல் உடைகள் அவன் பணக்காரன் என்ற மாயை யினை தோற்றுவித்தது. தனக்காக எதையும் செய்யும் உத்தம புருஷன் என்ற கண்மணிக்கு தெரிந்தது.தனக்கு அஜித், விஜய், மாதவன் ஒன்றாக சேர்ந்து கிடைத்து விட்டது போல அகம் மகிழ்ந்தாள்.எப்படியாவது  தன் தந்தையின் பிடியில் இருந்து விடு பட வேண்டும் என்று இருந்தவளுக்கு ஜான் ஒரு வர பிரசாதம் போல தோன்றினான். சோர்ந்த வயிறுக்கு நெய் சோறு கிடைத்தால் வயிறு எவ்வளவு சந்தோஷ படுமோ. அது போல இருந்தது கண்மணிக்கு.

ஜான் கண்மணியை சென்னையின் உள்ள எல்லா இடங்களுக்கும் மால்களுக்கும், தியேட்டர்களுக்கும் கூட்டி சென்று விட்டான். அவன் கூட்டி செல்லாதது ஆஸ்பத்திரிக்கும் சுடுகாட்டிற்கு மட்டும் தான். மற்ற படி அவர்கள் மதிய வெயிலில் குடை பிடித்து மெரினா மணலில் கடலை பொரிந்து போகும் அளவிற்கு காதலித்தனர். தீவிர வாதிகள் கூட அவ்வளவு துணி சுற்றி இருக்க மாட்டான். அவ்வளவு ஜாக்கிரதையாக அவர்கள் முக்காடு காதல் வேகமாக வளர்ந்தது.

 பல வகையான பைக்குகளும், சில கார்களில் கடற் கரையினை உலா வந்த அவளுக்கு தினம் தினம் சொர்கத்தை காட்டினான் ஜான். உயர் ரக பரிசு மழையால் அவள் மனம் முதல் உடல் வரை நனைதான்.  அவளும் கள்ளுண்ட வண்டு போல அவன் சொன்னதெற்கெல்லாம் ஆடினால். இப்படியே இரு வாரங்கள் கடந்தன.இவர்கள் கண்பொத்தி காதல் அசுரத்தனமாக வளர்ந்தது.

செந்திலுக்கு இவர்களை காணும் போதெல்லாம் ரம்யாவின் நினைவு வாட்டியது. ஒரு வேளை ரம்யாவினை இவன் தான் ஏதும் செய்திருப்பானோ என்று கூட தோன்றயது. இந்த பெண்ணை தான் எப்படியாவது காப்ப்பாறினால் ஒரு வேளை ரம்யா கிடைத்து விடுவாள் என்று நினைத்தான்.

ஜான் தான் வில்லிவாக்கம் பிசா கார்னரில் இருப்பதாகவும் பாஸ் இந்த பெண்ணை பார்க்க ரகசியமாக வருவதாகவும் அவளை அழைத்து கொண்டு வில்லிவாக்கம் வந்துவிட வேண்டும் என்று ஜான் தகவல் சொன்னான்.

செந்தில் இது தான் சரியான சமயம் என்று நினைத்து கொண்டு கண்மணியின் வருகைக்காக பள்ளி வாசலில் அவர்கள் சந்திக்கும் இடத்தில காத்திருந்தான்.
கண்மணி ஜானை எதிர்பர்தவள் செந்தில் வந்திருப்பது புதிராக இருந்தது.
ஜான் சொன்ன விஷயத்தை முழுமையாக சொல்லாமல் அவளை அழைத்து கொண்டு வர சொன்னதை மட்டும் சொன்னான்.
கண்மணி வழக்கம் போல முக்காடு இட்டு கொண்டு அவன் பின்ன வண்டியில் அமர்ந்தாள்.

கண்மணி உன்கிட்ட கொஞ்சம் பேசணும்
சொல்லு செந்தில் என்ன?
ஜானை உனக்கு ரொம்ப பிடிக்குமா?
ஆமா அவன்ன எனக்கு உயிர் ஏன் கேக்குற?
இந்த ஜானை இவ்ளோ நம்புறியே அவன் உனக்கு என்ன செஞ்சிட்டான்?
என்ன செய்யல அவன் எனக்காக உயிரே குடுப்பான் தெரியுமா?
அவன் இப்படி ரொம்ப பேருக்கு உயிரை கொடுத்திருக்கான்.
சரிதான். இருக்கட்டும் என்னை பத்தி என்ன நினைக்கிற?
நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? நீ அவன் நண்பன் அவ்ளோ தானே?
என்னை பாத்தா பொய் சொல்லுரவன போல தெரியுதா?
அய்யே உன்ன பாக்கும் போது  பேக்கு போல தான் தெரியுது என்று கல கல வென சிரித்தாள் .
 கண்மணி, நான் சொல்லுறத நல்லா கேளு. நீ சின்ன பொண்ணு விவரம் தெரியாத வயசு அனுபவிக்க துடிக்கிற, எல்லை மீறுற.ஜான் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் நல்லவன் இல்ல. தயவுசெய்து அவனை மறந்துடு.என்னை நம்பு நான் உன்னை பத்தி..

கண்மணி சூடானாள்.நிறுத்து! ஜான் உன்னை பத்தி எவ்ளோ நல்ல விதமா சொன்னான். அவன் அப்படி இருக்கான் நீ இவ்ளோ சீப்பா நடந்துகிறியே?அட பாவி  சீ! நான் அப்போவே நினைச்சேன். ஜான் கூட நீ சுத்திகிட்டே இருக்கிறது என்னை மடக்கத்தான?
ஐயோ புரியாம பேசாத கண்மணி நான் சொல்றது உன் நல்லது--
அட தூ பொறம்போக்கு! நீ அவன் கூட இருந்தா அவன் மாதிரி பெரிய பணக்காரண? என்ன நினைப்பில எங்களை பிரிக்க பாக்குற? வண்டிய நிறுத்து, நான் உன் கூட வரமாட்டேன்! என்று இறங்க போனாள்.
நீ என்ன எது வேணும்னாலும் சொல்லு கண்மணி,நான் அவன் கூட இருக்கிறவன் எனக்கு தெரிஞ்சத விட உனக்கு என்ன தெரியும்? ஆனா உன் நல்லதுக்காக சொல்றேன், ஜான் நீ நினைக்கிற மாதிரி கிடையாது!ப்லீஸ் அவனை மறந்திடு!

ஜானுக்காக பாக்குறேன். உனக்கு எங்கள பிரிக்க எப்படி மனசு வருது?அசிங்க மா இல்லை?இத இப்டியே விட்டுடு. நான் அவன் கிட்டே சொல்ல மாட்டேன். ஜானையும் என்னையும் சாவால  கூட பிரிக்க முடியாது! இனிமே அவனை பத்தி தப்பா பேசின.நீ பேசினது எல்லாத்தையும் ஜான் கிட்ட போட்டு குடுத்திடுவேன்! இதுவே உன்னை நான் பாக்குறது கடைசி தடவிய இருக்கணும் ஜாக்கிரதை!என்று வான் கோழி போல கதறிவிட்டு பஸ்ஸில் ஏறி சென்று விட்டாள்.

செந்தில் இரு தலை கொள்ளி எரும்பானான். அவனால் கண்மணியின் மனதை மாற்றி திருத்த முடியாது என்று எண்ணினான். தன் கையாலாகா தனத்தை எண்ணி நொந்து கொண்டான். அவனுக்கு கொஞ்ச நாட்களாக கண்மணியின் பேரில் ஒரு அதீத பாசம் ஒட்டி கொண்டது.

"ஜான் கூட சுத்திகிட்டு இருக்கிறது என்ன மடக்க தான? "என்ற வரிகள் அவன் மனதில் பதிந்து விட்டன. அவனுக்கும் தெரியாமல் கண்மணி அவன் மனதில் புகுந்து விட்டாள்!

ஜான் செந்தில் மட்டுமே வருவதை பார்த்து கடுப்பானான்.கண்மணியை அவள் தந்தை கூட்டி சென்று விட்டதாக சொன்னவுடன் அவன் வெறுப்பின் உச்சத்துக்கு சென்றான்.
=======================================================================

விபரீத விளையாட்டு -8

டாஸ்மாக்- உண்மையின் உறைவிடம்- ஆம் போதை தலைக்கேறி பல பேர் சோதனை கருவி இல்லாமலேயே உண்மையினை சரக்குடன் கக்கும் ஒரே இடம் இது தான்.அன்று கார் ஓட்ட வேண்டும் ஆகையால் செந்தில் குடிப்பதை  நிறுத்தி கொண்டு ஜானுக்கு மட்டும் புட்டியை கவிழ்த்துக்கொண்டு இருந்தான்.

த்தா!அந்த ரயில்காரன் ரொம்ப கண்கொத்தி பாம்பா இருப்பான் போல. இருக்கட்டும் கடைசியில அவன் மகளை கந்தல் துணி போல அவன் முன்னால போட்டு சிரிக்கணும் அப்போ அவன் தூக்குல தொங்கரத பார்க்கணும் என்று சொன்னான்.
கண்மணி அப்பாவை உனக்கு முன்னாலேயே தெரியுமா?
தெரியுமாவா?மச்சி நான் இந்த நிலைமைல சுத்துறதுக்கு காரணம் அந்த பய தான். நல்ல அனுபவிக்கிற சமயத்துல என்னை கேவலபடுத்தி, என்னை கொலைகாரனாக்கி, ஜெயில போட்டு டார்ச்சர் அனுபவிக்க வெச்சி, திருடன் மொள்ளமாரி, பொறுக்கின்னு மாறி பொன நான் அவன இன்னும் மரக்கல. இப்போ வசமா மாட்னான். நான் ரொம்ப சந்தோஷமா இருகீன் செந்தில்!அவனையும் அவன் பொண்ணையும் ஆட்டை போல அறுத்து பிரியாணி போட போறேன் மாப்ள!

இது ரொம்ப அநியாயம்.அவங்க அப்பன் செஞ்ச தப்புக்கு புள்ளைங்க எதுக்கு அனுபவிக்கனும் ஜான்? அந்த பொண்ணு பாவம் விட்று ஜான்!வேனும்ன அவ அப்பனை எதாவது செஞ்சிக்கலாம் இல்ல?

வேதாந்தம் பேசாத! அப்போ எவனோ ரேப் பண்ணி கொன்ன பொண்ண நான் தான் கொன்னேன்னு பெரிய​​---இவன் மாதிரி சாட்சி சொல்லி என்ன இந்த அளவுக்கு நாசம் பண்ணவனை அப்டியே விட்டுட நான் என்ன சாமியாரா? போடா!எனக்கு எல்லா ஞாயமும் தெரியும்! இது கடவுள் எனக்கு தந்த வரம். அவன் பொண்ணு எனக்கு தான் ன்னு எழுதியிருக்கு, இல்ல இல்ல ஊருக்கு தான் எழுதியிருக்க அவல சவுக்கு நேர்ந்து விட போறேன்! என்று வெறி கொண்ட கழுதை புலி போல சிரித்தான்.

உண்மை தெரிஞ்சா? நம்ம கதை கந்தல் ஆகிடும் ஜான்!

உண்மையா?போடா  டேய்!இது நம்ம கூட்டத்துக்கே கை வந்த கலை செந்தில்!இதை போல எவ்ளோ வேலைக்கு போற பொண்ணுங்க, காலேஜ்  குட்டிங்க இள வயசு பொண்டாட்டிங்க, இவ்ளோ பேர நாங்க மடக்கி இருக்கோம் தெரியுமா! வாழ்க்கையில நான் எந்த தப்பிலுமே மாட்டிகிட்டது இல்ல. என் முதல் டெஸ்ட் காலேஜ்  பொண்ணு ரம்யா! அவள  எவ்ளோ நேக்கா மடக்கி தொழிலுக்கு வித்தோம் தெரியுமா? அதை பாராட்டி எங்க பாஸ் எனக்கு கொடுத்தது தான் அந்த கார்!
செந்திலுக்கு ஒரு வாறு உண்மை விளங்கியது!
ரம்யா வா?எப்போ நடந்தது அது?
அது சும்மா ஒரு வருஷதுக்கு கிட்டே இருக்கும். என்ன அவளோட புருஷன்னு ஏமாந்து டார்ஜலிங் வந்தது செம்ம காமடி!என்று சிரித்தான்.
இன்னொண்ணு  தெரியுமா உங்கள போல பசங்களையும் எங்கள மாதிரி பொறுக்கிகளையும் டிரைனிங் கொடுக்கிறது நம்ம பாஸ் தான். நம்ம பாஸ் வேற யாரும் இல்ல உன்ன பர்ஸ் திருடின கேசுல ரெண்டு நாளா  உள்ள விட்டு  நெபினானே இன்ஸ்பெக்டர் கருணா. அவனே தான். அவனுக்கு தான் எல்லா பொன்னும் சப்ளை. எங்க கிட்டேருந்து தப்பிக்க வே முடியாது. நாங்க மாற்கு போட்டுட்டா  நீ நரகத்துக்கு போனாலும் தப்பிக்க முடியாது.

செந்திலுக்கு வாழ்க்கை சூனியமாகி போனது.  தன அக்காவின் வாழ்க்கையை கெடுத்த ஜானும், கருணாவும் அவன் வாழ்கைக்கும் எமனாக வந்தது அவனுக்கு சம்மட்டி  அடியை போல விழுந்தது. மனது நொறுங்கி போனான்.

நல்ல கேட்டுக்கோ செந்தில் இந்த ஆட்டத்துல நீயும் சேர்ந்துகிட்டா  என்னோட எல்லா சுகங்களையும் அனுபவிக்கலாம். உன்னோட வாழ்கைய இது உசரத்துக்கு கொண்டு போய்டும்.

இப்போ வர்ற பார்ட்டி ரொம்ப பெரிய இடம். பணம் எக்க சக்கம். இப்டியே ரெண்டு பீசு டெலிவரி பண்ணா. அவன் கிட்ட ரகசியமா பேரம் பேசிட்டேன்.நம்மளுக்கு ஒரு தொழில் பண்ணி சிங்கபூர்ல விடுறேன்னு சொல்லி இருக்கான். நான் அங்க பொய் செட்டில் ஆகணும். இந்த சந்தர்பத்த நான் நழுவ விட மாட்டேன்.நீ ரொம்ப நல்லவன் மாதிரி டபிள் கேம் விளையாடனும்னு நினைச்சே என்னால உன்ன என்ன வேணும்னாலும் பண்ண முடியும்! என்று எச்சரித்தான் ஜான்.

செந்தில் மனதிற்குள் ரம்யாவை நினைத்து கோவென அழுதான். ஒரு முடிவுக்கு வந்தான்.
================================================================

விபரீத விளையாட்டு - 9

ஒருவருக்கு வாழ்கையில் இரு விதமான எண்ணங்கள் சோதனைகளின் உச்சத்தில் ஏற்படுவது உண்டு. இதை psychological extremity என்று சொல்வதுண்டு. வாழ்க்கையில் விரக்தி அடைன்தவர் ஒன்று பயித்தியம் பிடித்தவர் ஆவார்கள் அல்லது கொலை வெறி கொண்டு மிருக நிலைக்கு மாறுவார்கள். மற்றொன்று வேதாந்தியாக மாறுவர்.

போதை தெவை இல்லததால் செந்தில் குடிக்க வில்லை. ஆனாலும் அவன் அறிந்த உண்மைகள் அவனை பயித்தியம் பிடிக்க வைத்து விட்டன. குடிக்க வேண்டாம் என்ற எண்ணம் மாறி ஜானுக்கும் மிதமிஞ்சி குடித்தான்.

 தடைபட்ட மின்சாரம் சென்னையில் தாக்க தொடங்கிய காலம் அது. மின்சாரம் இல்லாத இருள் சூழ்ந்த அமாவாசை இரவு அவன் மனதின் நிலையை அப்பட்டமாக பிரதிபலித்தது . கடையிலிருந்து வெளியேறினான் செந்தில்.ஜானை வேறு வண்டி வைத்து அனுப்பிவிட்டு அவனுடைய பைக்கை எடுத்துக்கொண்டு மெதுவாக ஓட்ட ஆரம்பித்தான்.இனி என்ன செய்வது என்ற எண்ணமே இல்லாமல் அலைந்த அவன் ஒளி கீற்றையும் டீசல் புகையும் உமிழ்ந்து கொண்டே தடபுட சத்தத்துடன் சென்ற ரயில் சத்தம் அவன் மனதை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது! தற்கொலை!

எதையும் யோசிக்காமல் பைக்கை மெதுவாக திருப்பினான். மணி ஒன்றுக்கு மேல் ஆனது. ஜன சந்தடி இல்லை.இந்த நேரத்திற்கு இரு ரயில்கள் வரும் என்பது அவனுக்கு தெரியும். எதாவது ஒரு ரயிலின் ஓட்டத்திற்கு இரையாகி விட்டால் இந்த கன்றாவி உலகத்தில் இருந்து விடுதலை என்று முடிவு கட்டினான்.விரைவு ரயிலில் நசுங்கி வாலிபர் மரணம் என்று அவன் மனதிற்குள் தலைப்பு செய்தி வரிகள் கண்முன் ஓடியது. லேசாக நகைதான்.
 வண்டியை மெதுவாக லெவல் கிராசிங் அருகில் நிறுத்தினான். மெதுவாக அதனை ஒட்டி நடந்து சென்றான்.ஒரு இடம் அவனுக்கு த்ருப்தியாக இருந்தது. ரயில் வரும் ஓசை கேட்டது.  மெதுவாக ரயில் பாதையின் மத்தியில் நின்றான். மனதிற்குள் ரம்யாவும் அம்மாவும் நிழலாடியது.
"அம்மா! ரம்யா! ரொம்ப சாரி! என்று அழுதான்.இன்னும் சில நொடிகள் தான் என்று மனம் அடித்து கொண்டது.
ரயில் சமீபதில் வந்தது. திடீரென்று ஒரு கை அவனை பிடரியில் பிடித்து அப்பால் இழுத்து!
ரயில் சரளை  கற்கள் தெறிக்க விழுந்த செந்திலை ஒரு கை பிடித்து இழுத்தது. சடக்கென்று ஒரு வெளிச்சம் ஒளிரவே, ராமுவின் முகம் செந்திலுக்கு புலப்பட்டது. அவன் மயங்கி ராமுவின் மேல் சாய்ந்தான்.
======================================================================

விபரீத விளையாட்டு- 10

செந்தில் கண்விழித்த பொது அவன் ஒரு அறையில் கிடப்பதை உணர்ந்தான். அவன் முதுகு வலித்தது. ஒரு நெடி, பெயிண்ட்  அல்லது ஒரு வித மண் எண்ணெய்  நெடி அவன் மூக்கை துளைத்தது.ஸௌதெர்ன் ரயில்வே ஈ எம் யூ  கார்ட் ரூம் என்று படிதான்.
ராமு அரை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.செந்தில் அவன் பேரில் ஆத்திரம் கொண்டான்

நீங்களா கடைசியில நீங்களா என்னை காபாத்துனீங்க ?எதுக்கு ?

ராமு அவனை பார்த்து கோபமாக சீறினான்!என்ன பெரிய இவனா? நீ செத்தா எல்லாம் முடிஞ்சு போச்சா? இது என் வொர்க் ஏரியா! இங்க நீ செத்து வெச்சா என் தலைய தான டா உருட்டுவங்க பெனாதி பயலே!

ச்சே என்ன வாழ்க்கை இது இருக்கவும் முடியல சாகவும் முடியல! உங்களால நான் அனுபவிக்கிற கஷ்டங்களை சரி கட்ட முடியுமா? மெல்லவும் முடியல முழுங்கவும் முடியல!போங்க சார்!

சட்டென ராமு தணிந்த குரலில். தம்பி தற்கொலை பண்ணிகிறது தப்பு. மகா பாவம்.வயசு பய்யன், வாழ வேண்டிய வயசு, அநியாயமா போக விட வேண்டாம்னு தான் தடுத்தேன்.

வாழ்க்கையே முடிஞ்சு போச்சு எனக்கு! சுலபமா சொல்லிடீங்க. நான் எதுக்கு வாழணும்னு எனக்கே சந்தேகமா இருக்கு. நான் அனுபவிக்கிற கஷ்டம் தெரியாது உங்களுக்கு!உங்க சுயநலத்துக்காக என்னை காப்பாதிடீங்க இனி நான் என்ன செய்வேன்?

ரொம்ப  பேசுற! என்ன கஷ்டங்களை கண்டுட்ட நீ ?எதுக்கு இந்த முடிவு? எந்த பொண்ணாவது உன்ன வேண்டாம்னு சொல்லிச்சா ? திருடினியா?இல்ல கொலை பண்ணுனியா? இல்ல வியாதியில சாக போறியா ?
உங்கள மாதிரி பசங்க என்ன மாதிரி கஷ்டங்களை அனுபவசியிருந்தா தற்கொலை பண்ணிக்கலாம். சும்மா எடுததுகெல்லாம் இந்த முடிவா? நான் எவ்வளவு கஷ்டங்களை தாண்டி வாழ்ந்துகிட்டு இருக்கேன்னு , உனக்கு புரியாது தம்பி! இனி இத போல செய்யாதே!

ஆச்சரியமா இருக்கு சார்! நீங்க இவ்ளோ பண்பா பேசுறீங்க! ஆனா சுத்த முரடனா இருக்கீங்க!

நீ என்ன சொன்ன? நான் கெட்டவன்னு நீ எங்க கண்டுகிட்ட?என்ன பத்தி உனக்கு என்ன தெரியும்?

உங்கள எனக்கு தெரியும் சார்! அன்னிக்கி ஒருநாள் டீ கடையில ஒருத்தன புரட்டி எடுத்தீங்களே!

எது? டீ கடையா! ஸ் ஓ அதுவா அது நால தான் நீ என்ன முரடன்னு நினைச்சே போல! ஆமாம் நான் ரொம்ப கண்டிப்பானவன் தான்!முரடன் தான்!ஆனா கெட்டவங்களுக்கு தான் நான் முரடன்!தம்பி! அந்த டீ கொடுக்கிற பையன எனக்கு தெரியும் ஒரு கால் சரி இல்லேன்னாலும் உழைச்சு சாப்பிடுவான், டீ கொடுக்க வேண்டியது தான் அவன் வேலை! கடை ல வேல பாக்குற இன்னொருத்தன் சோம்பேறி திருடன்,இந்த நொண்டி பய்யன் மேல சாமான் திருடிட்டான்னு பொய் சொல்லி பழி போட்டு மாட்டி விட பாத்தான். அந்த சின்ன பய்யன் அழுததை பார்த்த வுடனே அவன் தப்பு பண்ணலேன்னு புரிஞ்சிகிட்டேன். பழி போட்டவனை எனக்கு தெரியும் முதல் நாள் தான் திருடின சரக்க எங்க வீ ட்டு பக்கத்துல இருக்கிற மளிகை கடையில வித்தான். உண்மைய ஒதுக்கல்ல போட்டேன் நாலு போடு! பய மிரண்டுகிட்டு தப்ப ஒத்துகிட்டான்.

என்னோட  கொள்கை இதுதான்.தப்பு பண்ணினவன் தண்டனை அனுபவிச்சு திருந்தனும்! திருந்தினவனை மன்னிச்சு ஏத்துக்கணும். அப்போ தான் அவன் மறுபடியும் தப்பு பண்ண மாட்டான். இதுதான் ஆம்பிளைக்கு அழகு!நீ இவ்வளளவு விசன படுறியே ? என் கதைய கேட்ட நீ இனிமே தற்கொலை பண்ணிக்கிற நினைப்பே வராது.

நாங்க எங்க அப்பா அம்மாவுக்கு மூணு பசங்க, முதல் அண்ணன், ரெண்டாவது அக்க, நான் கடைக்குட்டி.எங்க அப்பாவுக்கு அடி தடி சண்டை எல்லாம் ரொம்ப சாதாரணம். நான் அவரை பெரிய வீரனா நினைச்சு மதிச்சேன். எங்க அண்ணனும் அப்பாவும் பெரிய வஸ்தாது. கட்டை பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு ஊரை ஏமாத்திகிட்டு திரிஞ்சவங்க, அவங்களை ஊரு விட்டு வச்சதுன்னா அது எங்க அம்மா, அக்காவாலத்தான். அவங்க உதத்மிங்க, இவங்க செஞ்ச அட்டூழியங்கள் எல்லாத்தையும் அவங்க தான் தாங்கினாங்க. எனக்கு எல்லோர் பேரிலேயும் அதிகம் பிரியம். அப்பாவை போல பெரிய வீரனா வரனுமின்னு அவர் கூட சேந்து விடலை தனமா சுத்தினேன். எங்க அம்மாவுக்கு இது ரொம்ப கவலைய போச்சு. இருக்கிற ஒரு மகனும் ஊதாரிய போனா னென்னு அழுத நாட்கள் ரொம்ப!

ஒரு பெரிய நில தகராரிலே எங்க பங்காளிங்களுக்கும் எங்களுக்கும் சண்டை வந்தது. எங்க அண்ணன் அவங்க வீட்டு பெண்ணை தூக்கிகிட்டு ஓட எங்க அப்பா அதுக்கு உடந்தையா இருந்தாரு. பெண் எங்க வசம் ஆகிட்டா நிலம் மொத்தமும் வந்துரும்னு தப்பு கணக்கு போட்டாங்க.அது எதிரிங்களுக்கு தெரிஞ்சு பெரிய சண்டை வந்தது. அருவா வெட்டு, கத்தி  குத்து, வீட்டுக்கு தீ வைக்கிறது ன்னு ஊரே ரெண்டாச்சு. நானும் என் பங்குக்கு செஞ்ச அநியாயம் கொஞ்ச நஞ்சம் இல்ல. எங்க அம்மாவுக்கு இதை தடுக்க எவ்வளவோ பார்த்தாங்க. கடைசியா தற்கொலை பண்ண முடிவெடுத்தாங்க, இது எங்க அப்பா அண்ணனுக்கும் தெரிய வர,அவங்க எங்க அம்மாவை பார்க்க வந்தாங்க.எங்க அம்மா அவங்களை எவ்வளவோ முறை விட்டுட சொன்னங்க அவங்க கேக்குற மாதிரி இல்ல, கடைசியா எங்க அம்மா அவங்களுக்கு தந்திரமா விஷம் குடுத்து கொன்னுடாங்க.கடைசியில அவங்களும் விழம் குடிச்சாங்க.சாகிற பொழுது எங்க அம்மா என்னை இந்த கெட்ட வழியில போக கூடாதுன்னு கேட்டுகிட்டாங்க. நான் எல்லாரையும் நெருப்புக்கு குடுத்துட்டு நின்னேன். என்ன ஜெயில்ல வேச்சாங்க.சரி வாழ்க்கை அவ்ளோதான்னு முடிவு பண்ணி தற்கொலை பண்ணிக்க போனேன்.

ஒரு  போலீஸ் காரர் என் மேல இறக்க பட்டு எனக்கு புத்தி சொன்னாரு.சாட்சியில்ல ன்னும், மைனர் பயன்னு சொல்லியும் அவரு என் மேல கேசு எழுதல.  அப்போ முடிவு பண்ணினேன் இந்த கேவலமான பொழப்பு வேண்டாம்னு.

வாழ்க்கை இதோட முடிய போறதில்ல.எங்க அம்மா கொடுத்த ஒரே சொத்து உழைப்பு, படிப்பு,அத்தனை கேடுகெட்டு போயும் எங்க அம்மாவால  10 வரைக்கும் படிச்சிருந்தேன். நாங்க ரெண்டு பெரும் ஊரை காலி செய்துகிட்டு சென்னை வந்தோம்.இந்த வேலைக்கு முயற்சி பண்ணினேன்.புது சிநேகிதம் கிடைச்சது. எங்க அத்ரிஷ்டம் எனக்கு இந்த வேலை கிடைச்சது.வீடும் அமைஞ்சது. எங்க அக்காவுக்கு நான் உழைச்சி சம்பாதிச்சி என்னோட வேலை பாக்கிற என் சிநேகிதருக்கு கலியாணம் பண்ணி வெச்சேன். இப்போ சொல்லு ஊதாரியா இருந்தேன், தற்கொலை பண்ணிக்க போனேன். அப்படி செஞ்சி இருந்தா எவ்ளோ பெரிய மடத்தனம்?

உன்னை போல தான் ஒருத்தன் கண்ணனு பேரு, ரொம்ப சின்ன வயசில ஒரு பெரிய தப்பு பண்ணினான். எனக்கு பொறுக்க முடியல்ல. அவனபோலீசுல மாட்டி விட்டேன்.அவனை சீர்திருத்த பள்ளில  கோர்ட்டுல சொல்லி அடைசாங்க. அவன பார்த்தபோது என்னை பார்க்கிறது மாதிரி இருந்தது. ஜெயில் அவனை எப்படியாவது திருத்தி நல்லவனா ஆகிடும் ன்னு நான் நினைச்சேன். அவனை என் கூட கூட்டிகிட்டு வந்து ஒரு நல்ல வாழ்க்கை அமச்சி கொடுக்கணும்னு துடிச்சேன். ஆனா அவன் செத்து போனான்னு சொல்லிடாங்க மனசு வலிச்சது. நான் தினமும் நைட்டு டூட்டி பார்த்து உன்ன மாதிரி யாராவது இருந்தா அவங்களை மீட்டு தற்கொலை எண்ணதிலேருந்து காப்பாத்த நான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். நாம எல்லா சுக துக்கங்களையும் ஒழுங்கா அனுபவிச்சிட்டு நம்ம நேரம் வந்தவுடன் தானா சாகலாம். அதுக்கு முன்னால நாம நம்மேயே அழிசிக்கிறது முட்டாதனம்.

நல்லவங்க நிச்சயம் வாழ்வாங்க பா. கெட்டவங்களுக்கு நேரம் இருக்கிற வரைக்குதான் காலம் துணை போகும். நல்லவங்களுக்கு சோதனை வர்றதும் கெட்டவங்க நல்ல இருக்கிறதும் ஒரு சக்கரம் மாதிரி. சக்கரம் உன் பக்கமும் சுத்தும் என் பக்கமும் சுத்தும்.
இனி இதை போல முட்டாள்தனம் செய்யாத.உன்னை பார்த்தா என் சின்ன வயசு நினைவு தான் வருது. இப்போ கொஞ்ச நேரம் படுத்து தூங்கு. காலைல எழுந்து வீட்க்கு போ!  உங்க அம்மா அப்பா உன்ன நம்பிக்கிட்டு இருபாங்க இல்ல?நான் வரேன்!

ராமு எழுந்து போய்விட்டார். அனால் செந்திலுக்கு மனம் மிகவும் கனமாக இருந்து. ரொம்ப படிக்காதவர் போலவும் முரடர் போலவும் தெரிந்த ராமு அடிப்படையில் எவ்வளவு நல்லவர்? அவர் மகள் தான் இந்த கண்மணி அவளுக்கு விழுந்திருக்கும் சுருக்கு மிக பெரியது, அதனை நீக்கி அவளை காப்பதே இப்போது அவனுடைய கடமை என்று அவன் மனதிற்கு பட்டது.
செந்தில் தூங்காமல் அன்று இரவு முழுவதும் ஒரு திட்டம் தீட்டினான். பொழுது அவனுக்கு விடிந்துவிட்டது.
==================================================================



.







Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...