அன்புள்ள ஹரிக்கு,
உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது.
நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது.
இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள் நான். ஆனால் மற்றவர்களிடம் பழகியத்தை விட உங்களிடம் நான் சற்று அதிகமாக பாசமும் நட்பும் காட்டியது தான் என் தவறு என்று இப்போது நினைக்கின்றேன். நம் கண்ணியம் மிக்க நம் நட்பு கண்ணாடி சில்கள் போல நொறுங்கி விட்டதன் காரணம் இது தான் என்று நான் நினைக்கிறேன். நம் நட்பின் இந்த துயரமான முடிவிர்க்கு நாம் இருவரும் காரணமாகி விட்டோம். நீங்கள் எனக்கு ஒன்று மட்டும் காற்று கொடுத்து விட்டீர்கள். கசப்பான உண்மை அது! இனி யாராயும் நம்ப கூடாது என்பது தான் அது! இனி யாரிடத்திலும் நான் இவ்வளவு உயிரை பழக போவதும் இல்லை. இனி இந்த பிரியா பழய பிரியாவாக இருக்க போவதும் இல்லை.
இனி நாம் எப்போது நேருக்கு நேர் சந்தித்தாலும் இந்த எண்ணம் தான் உங்கள் மனத்தில் வருமே தவிர நட்பு வளராது என்று எனக்கு தெரியும்.
"என்னை பற்றி என்ன படித்தாய்? என்று நீங்கள் அடிக்கடி கேட்பததுண்டு. உங்களை நான் படிக்க ஆசைப்பட்டது உண்மை தான் ஆனாலும் உங்கள் புத்தகத்தின் பக்கங்களில் கிறுக்கியது என் குற்றம் தான். அப்படி பட்ட வாசகி அந்த நூலின் எதிரி. ஆம் ஹரி உங்கள் மன புத்தகதினை படிக்கும் அறுகதை இனி எனக்கு இல்லை. இனி நான் இந்த புத்தகததினை படிக்கவும் விருப்ப படவில்லை. உள்ள வாசகி நானல்ல! உங்கள் வாசகி என்றேனும் உங்களுக்கு நிச்சயம் கிடைப்பாள்.
நல்லவர்களுக்கு அழகு சொல்லாமல் போவது தான் என்று படித்து இருக்கின்றேன். ஆனால் என் நிலையை உங்களுக்கு தெளிவு படுத்தாமல் போனால் அது தவறு. ஆதலால் நான் இந்த கடிதத்தினை எழுததுகின்றேன்.
உங்களிடம் நான் கேட்பது ஒன்றே ஒன்று தான் இந்த கடிதத்தினை நீங்கள் உடனே அழித்து விடவும். அப்படியே என் எண்ணங்களையும் சேர்த்து தான். இந்த உரிமை நம் நட்பின் அடையாளமாக கேட்கின்றேன். நீங்கள் பழையபடி உங்கள் எண்ணங்களை சிதற விடாமல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்கள் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கவேண்டும்.
என் ஆசையினை நிறைவேற்ருங்கள். நான் என்னுடைய பழைய முகவரிகள், செல்பேசி சேவை அனைத்தையும் அழித்து விட்டேன். இனி என்னை தொடர்பு கொள்ள முயற்சிக்க வேண்டாம்.
இப்படிக்கு,
பிரியா.
*************
நெடு நேரம் கடிதத்தினை உற்று பார்த்துக்கொண்டிருந்தான் ஹரி. இரு கண்ணீர்த் துளிகளின் கரை அதில் ஓர் இடத்தில் சிந்தி இருந்தது. ஹரி மனத்தில் பெரிய கல் ஒன்று கனத்தது.
"என் வாசகியே! உன்னை மகிழ்விக்காத புத்தகமாக போய்விட்டேனே! உன் வேண்டுகோளை நிராகரிக்கின்றேன். ஆமாம் இந்த கடிதத்தை நான் அழிக்க போவதில்லை. உண்மையான நட்பை பகுக்க தெரியாத முட்டாள்களுக்கு இது ஒரு சாட்சி. எனக்கு இன்னொரு வாசகி கிடைப்பாள் என்பது சந்தேகமே.அப்படியே கிடைத்தாலும் அவள் உன் போல உயர்ந்த வாசகியாக இருக்க முடியாது.என்னை மன்னிப்பாயா என் தோழியே?"
அவன் அறியாமல் அவன் விட்ட கண்ணீரும் அதில் சேர்ந்து அந்த காகிதத்தில் கலந்தது. அவர்கள் தான் சேரவில்லை அவர்கள் கண்ணீராவது சேரட்டுமே!
முற்றும்
-------------------------------------------------------------------------------
(இது என் முதல் முயற்சி. முட்களோ பூக்களோ ஏதுவாயினும் நான் எற்க்கிறேன். தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய விரும்புகின்றேன்.)
நன்றி - ஸ்ரீராம்
*******************************************************************************

ஒரு அருமையான கதை, அருமையாக சொல்லப்பட்டது. முதலில் கொஞ்சம் எழுத்து நடை எளிமையாக இருந்தாலும் பின் வரும் பகுதிகள் அருமை! இன்னும் எழுத என் வாழ்த்துக்கள்.
ReplyDelete