Skip to main content

Posts

Showing posts from July, 2015

KAmini_Yogini 3

காமினி யோகினி 3 எ சி பி சுவாமிநாதன் களைப்புடன் தன் நாற்காலியில் சாய்ந்தார். 48 வயது ஆனாலும் அவரது கட்டு மஸ்தான உடலும்  நரைக்காத மீசையும் இன்னமும் அப்படியே இருந்தது. வயதானாலும், இத்தனை மோசமான பணி பளுவிலும் அவரது தலை நரைகாதது அவரது அத்ரிஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.  அன்று மின்சாரம் வரவில்லை ஆதலால் ஏ சி வேலை செய்யவில்லை. ஏட்டு யோவ் ஏட்டு என்று பலமாக கத்தினார். விறைப்பாக சல்யுட் அடித்து ஒரு பெண் காவலர் உள்ளே வந்து நின்றார். குட் மார்னிங் சார்! இன்ஸ்பெக்டர் கங்கா சார் ஸ்பெஷல் பிராஞ்ச் கிரிமினல் சார்!" என்று விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தாள். என்னது நீ கிரிமினல் ஆ என்று களுக் என்று சிரித்து விட்டார் சுவாமிநாதன். சாரி சார் வந்து ஸார் கிரைம் பிராஞ்ச் என்று சொல்ல வந்தேன் சாரி  சார் என்று இளித்தாள். நாசமா  போச்சு நம்ம டிபார்டுமெண்டு! ஏம்மா கங்கா! எத்தனை முறை சொல்லுறேன்,  தினமும் இப்படி சல்யுட்டு வேக்கதேன்னு. ஆனாலும் நீ இதே தப்பு செய்யுறே. இந்த லட்சனதிலேயே இன்ஸ்பெக்டர் வேற ஆகிட்டே. போகட்டும் அந்த பேனை போடும்மா என்றார். அவள் செல்லும்போது அவளை தன்  பார்வையால் அவளை எடை போட்டார். சுமாரான அ

Kamini_Yogini 2

காமினி யோகினி 2 --------------------------------- காமினி சொல்ல சொல்ல ரமேஷ் இப்போது உண்மையிலேயே பதட்டமானார். நிஜமாகவா என்றார், ஆமாம் அப்பா நம்ம வீடு இருக்கிறது மலை மேல. பின்னாடி இருக்கிற பள்ளம் எவ்வளவு அடின்னு உங்களுக்கே தெரியும். அந்த பொண்ணு எப்படி நடந்து நம்ம பின் கட்டு காம்பவுண்டு சுவரை தாண்டி சர்வ சாதரணமாக நடக்க முடியும் என்னவோ படிக்கட்டிலே ஏற்ற மாதிரி பள்ளதிலேருந்து வந்தாள். அவள் நடந்து தான் வந்தாலோ இல்லை பறந்து தான் வந்தாலோ தெரியல. நல்ல வெள்ளை வெளேருன்னு புடவை கட்டிக்கிட்டு உடம்பெல்லாம் ஜ்வெல்லரி போட்டுக்கிட்டு இருந்தா ஜன்னலை கடந்து போகுன்போது என்ன பார்த்தா. அவ சிரிப்பு இன்னும் நடுக்கத்தை தான் குடுக்குது. ரமேஷ் திடீர் என்று சிரிக்க ஆரம்பித்தார். அவரின் இந்த வித்தியாசமான சிரிப்பு காமினியை எரிச்சல் அடைய செய்தது. என்னப்பா கிண்டல் பண்ணுற மாதிரி சிரிக்கிறீங்க? என்னை நம்பல்லியா? இல்ல யில்ல மா, நீ நேத்திக்கு நடந்த ஷாக் ட்ரீட் மெண்டு லே இருந்து இன்னும் மீண்டு வரல்லன்னு நினைக்கிறேன். நீ ரொம்ப பயந்து போயிருக்கே அம்மா.  விளையாடாதீங்க அப்பா. உங்களுக்கு சயன்சும்  தெரியும் ஆன்மீகமும

Kamini_Yogini- short novel

காமினி யோகினி -1 நடு  நிசி நீண்டு கொண்டிருந்தது.காற்று கூட சத்தம் போடாமல் மெலிதாக தன் கரங்களை இலைகளின் ஊடே  அலசி கொண்டு அடித்தது. குளிர் காற்று அங்கு இருந்த அத்தனை பொருட்களின் மீதும் பரவி அங்கு தட்ப வெப்பம் குளிர்ந்து காணப்பட்டதை உணர்த்தியது. எங்கும் பனி பெய்து அங்கு இருந்த மரம் மட்டைகளை கூட புகை மூட்டம் போல மூடி விட்டது. எதற்கும் நடுங்காத சுவர்கள், கட்டிடங்கள் கூட ஏனோ மெலிதாக வியர்த்து விட்டார போலே இருந்தது. குளிரின் மிகுதியால் காமினியின் வாய் தட்டச்சு இயந்திரத்தை போலே மெலிதாக சப்தம் செய்து கொண்டிருந்தது. "இந்த சுகுமாருக்கு ஏன் தான் இப்படி போகுதோ ! சரியான குரங்கு புத்தி! எனக்குன்னு ஒரு தம்பியை தவமா பெத்து போட்டிருக்கு பாரேன் எங்க அம்மா அவங்களை சொல்லணும்! யாரை கேட்டு இந்த ஊசி குத்துற குளுருல ஃ பேன் போட்டுட்டு போயிருக்கான்!சுவிட்சு  எங்கே இருக்குன்னே தெரியல்ல என்று நொந்து கொண்டு அரை தூக்கத்திலிருந்து எழுந்த கோபத்தில் வெய்து  கொண்டிருந்தாள்.  வெண்டைக்காய்  போன்ற அவளது விரல்கள் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு இருந்ததால் நிறம் சிவந்தன. பர பரவென தேய்த்து கொண்டு சூடு ஏற்படுத்த முயன்