Skip to main content

Kamini_Yogini- short novel

காமினி யோகினி -1

நடு  நிசி நீண்டு கொண்டிருந்தது.காற்று கூட சத்தம் போடாமல் மெலிதாக தன் கரங்களை இலைகளின் ஊடே  அலசி கொண்டு அடித்தது. குளிர் காற்று அங்கு இருந்த அத்தனை பொருட்களின் மீதும் பரவி அங்கு தட்ப வெப்பம் குளிர்ந்து காணப்பட்டதை உணர்த்தியது. எங்கும் பனி பெய்து அங்கு இருந்த மரம் மட்டைகளை கூட புகை மூட்டம் போல மூடி விட்டது. எதற்கும் நடுங்காத சுவர்கள், கட்டிடங்கள் கூட ஏனோ மெலிதாக வியர்த்து விட்டார போலே இருந்தது.
குளிரின் மிகுதியால் காமினியின் வாய் தட்டச்சு இயந்திரத்தை போலே மெலிதாக சப்தம் செய்து கொண்டிருந்தது. "இந்த சுகுமாருக்கு ஏன் தான் இப்படி போகுதோ ! சரியான குரங்கு புத்தி! எனக்குன்னு ஒரு தம்பியை தவமா பெத்து போட்டிருக்கு பாரேன் எங்க அம்மா அவங்களை சொல்லணும்! யாரை கேட்டு இந்த ஊசி குத்துற குளுருல ஃ பேன் போட்டுட்டு போயிருக்கான்!சுவிட்சு  எங்கே இருக்குன்னே தெரியல்ல என்று நொந்து கொண்டு அரை தூக்கத்திலிருந்து எழுந்த கோபத்தில் வெய்து  கொண்டிருந்தாள்.  வெண்டைக்காய்  போன்ற அவளது விரல்கள் ஒன்றை ஒன்று பின்னிக்கொண்டு இருந்ததால் நிறம் சிவந்தன. பர பரவென தேய்த்து கொண்டு சூடு ஏற்படுத்த முயன்று தோற்று போய் எழுந்திரிக்க முயன்றாள். அரை தூக்கம் சொக்க போர்வைக்குள்ளிருந்து வெளிப்பட்டது கூட்டிலிருந்து வெளி வரும் வண்ணத்துபூச்சியினை நினைவு படுத்துவது போல இருந்தது. அழகிய அவளது தேகத்தினை கரும் பச்சை நைட்டி மறைக்க முடியாமல் திணறி கொண்டிருந்து . அதன் மேல் போட்டிருந்த மஞ்சள் ஸ்வெட்டர் கன கச்சிதமாய் போருந்தி இருந்தது அவளின் அழகை இன்னும் பல படிகள் தூக்கி வைத்தது. மது சிந்தும் கன்னங்கள் ஆப்பிள் பழங்களை நினைவூட்டியது. அவளின் அதரங்கள் குளிரால் துடிதுடிப்பது மீன்களை தண்ணீரிலிருந்து வெளியே போட்டது போல் இருந்தது. பாதி விரிந்த மல்லிகை மொட்டுகளின் மேல் அமர்ந்த தேனீக்கள் போல அவளது வெண்மையான கண்கள் நடுவே இருந்த அழகிய கரு விழிகள் நினைவு படுத்தின.  மெதுவாக எழுந்து அவள் சுவிட்ச்சை போட முயன்றாள் . தீடீரென்று ஒளி தடை பட்டது. மின் விளக்கு எரியவில்லை. 
போச்சு! லைட்டு போச்சா !
டேய் சுகுமார்! குரங்கு! எங்கே பொய் தொலைஞ்சே! என்று சொல்லி  க்கொண்டே ஜிலீர் தரையில் அவளது பாதங்களை வைத்தாள் . அம்மா! ஊ! என்று நடுங்கி கொண்டே கூச்சலிட்டாள்! பாம்பு அம்மா பாம்புமா! அப்பா மிதிச்சிட்டேன்! ஊய் ! என்று அவள் போட்ட சத்தம் வீடே அதிர்ந்தது . மெதுவே அவள் தன் தலையை சுற்றி பார்த்தால். சில முகங்கள் இருட்டில் தெரிந்தது. அம்மா! அம்மா! இங்க வாயேன் என்று அலறிக்கொண்டே படுக்கையில் இருந்து எழுந்து கதவின் அருகே ஓடினாள் ! அந்த முகங்கள் அவள் அருகே வருவதை உணர்ந்தாள். கிட்டே வராதிங்க. அம்மா! அப்பா! என்று உளறினாள். அந்த கரிய உருவம் அவள் அருகில் வந்து வேகமாக அதன் மூச்சு காற்றை விட்டது. தன கையை தூக்கி அவளை அடிக்க எத்தனித்து. காமினிக்கு ஒரு நொடி என்ன நடக்கிறது என்று புரியவில்லை. தன கைகளால்  தன கண்ணை பொத்தி கொண்டாள். தீடீரென்று  ஒளி வெள்ளம் பாய்ந்தது. மின்சாரம் வந்துவிட்டது. 
காமினி! ஹேப்பி பர்த்டே!என்று சத்தம் கேட்டது! ஹே! ஹிப் ஹிப் ஹுர்ரா !என்ற பல ஓசைகள் காதை கிழித்தது! 
பயம் தெளிந்த காமினி சுற்றும் முற்றும் பார்த்தாள்! அவளுடைய கண்களை அவளால் நம்ப முடியவில்லை! தன் தோழிகள் புடை சூழ, அவளின் தம்பி சுகுமார், மற்றும் அவளது அம்மா அப்பாவும் சிரித்த முகத்துடன் அவளின் 20வது பிறந்த நாள் கேக்கை சுமந்த படி நின்று கொண்டிருந்தனர். 

தன் பிறந்த நாள் இப்படி ஆரம்பிக்கும் என்று கனவிலும்  எதிர்பார்க்கவில்லை காமினி. அனைவரும் ஆவலுடன் உற்சாகமாக பிறந்த நாள் கலாட்டா செய்து கொண்டு அவளை வாழ்த்தினர்.சுற்றி வீடுகள் இல்லை அதனால் கவலை இல்லாமல் அனைவரும் காதுகள் பிளக்கும் படி கத்தி கூச்சல் போட்டார்கள். அவளின் முகத்தில் ஆளுக்கு இரு கைகளிலும் கேக்கு கிரீம் களை எடுத்து காமினி முகத்தில் க்ரீம் காப்புகளை அலங்கரித்தனர்! சத்தமாக சி டி  பிளேயரில் பாட்டை போட்டு நடனம் ஆடினர். அவர்களின் அப்பா ரமேஷும் அம்மா வசந்தியும் தடுத்தும் விட்ட பாடில்லை. இந்த நான்கு பெரும் சேர்ந்து செய்த "கே 4 டெவில்ஸ்"   குழுவை ஆரம்பித்து இன்றுடன் 3 வருடம் ஆகிறது. கார்த்திகா, கலை என்ற கலைவாணி , கனகதுர்கா,காமினி என்று இந்த நான்கு பெண்களும் கல்லூரியில் இளங்கலை பொறியியல் பட்டதாரிகள். உயர் குடி வகுப்பை சார்ந்தவர்கள், கஷ்டம் இல்லாத வாழ்க்கை, சாதிக்க துடிக்கும் பருவம் ,இவர்கள் பி. இ.  ஆவார்களோ இல்லையோ ஆனால்அறுந்த வாலுகள்  என்கிற பட்டதை ஊட்டியில் எப்போதோ வாங்கி விட்டனர். இந்த வாலுகளின் லூட்டிகள்  போலீஸ் கண்டிப்பு வரை வரம்பை மீறி விட்டாலும் இன்னும் இவர்கள் சேஷ்டைகள் செய்து கொண்டு தான் இருந்தனர். பணக்கார குடும்பங்கள் இருக்கும் தீமை புத்தி இல்லாமல் கள்ளம் கபடம் அற்ற தூய உள்ளங்களையும் பெற்று இருந்தனர்.பிறருக்கு உதவுவது, கேளிக்கை நிகழ்சிகள் சமூக சேவைகள் என்று நல்ல செயல்களால் இவர்களை கல்லூரியில் தொலைந்து போகட்டும் மன்னித்து விட்டு வைத்திருந்தனர். அப்பா ரமேஷ் 500 ஏக்கர் டீ எஸ்டேட் அதிபர், அம்மா வசந்தியை காதலித்து மணந்தவர். அவர்களின் மூத்த மகள் காமினி. அடுத்து சுகுமார். இவளின் வயதை ஒத்த தோழிகளும் பெரிய இடத்தின் வளர்ந்தவர்கள். அகவே இவர்களின் தோழமை வளமாக இருந்ததற்கு சந்தேகமே இல்லை.

ஏய் கொள்ளி  கண்ணு! உன்வேலை தான இது எல்லாம்? 
ஆமா எப்டி என் பேய் வேஷம்?
ஏண்டி இவ்ளோ கஷ்டம்?நீ சும்மாவே நின்னுகிட்டு இருந்தா அவ பயந்து இருபால்ல!
யாரு நானா போடிங்கோ! என்று கேட்டாள் காமினி.
அவுனு ரா  செல்லம்! மேமு எல்லாரும் சூப்பரா ஒக பிளான் வேசி இந்த மாதிரி செலேபெரட்டு பண்ணலாம்னு இங்க வந்தோம். 
சுகுமார் நடுவில் வந்து, ஹலோ ஹலோ என்னை மறந்துடீன்களே! நான் மட்டும் இந்த ஐடியா குடுக்கலை, நீங்க இப்படி வந்து காமினிய பயமுறுத்த முடியுமா?
கொரங்கு குமாரு! நீ கூடவா ?என்று செல்ல மாக கோபித்து அவனை அடிக்க பாய்ந்தாள் காமினி.
சரி காம்ஸ் மறுபடியும் அரம்பிகத்தே! நாங்க ப்ராமிஸ் பண்ணினா மாதிரி உனக்கு மறக்க முடியாத பர்த்டே பார்டி குடுத்தாச்சி பொழுது விடிஞ்சா சண்டே அதனால இப்போ தூங்கிட்டு நாம எல்லாரும் காலையிலேயே கிளம்பி ஊர் சுத்த போறோம் சரியா? என்றாள் கலை. 

இங்கேயே தூங்க போறீங்களா? என்றா சுகுமார்.
அவுன்ரா  கோதி! நாங்க எல்லாரும் வீட்டுல சொல்லிட்டு தான் பக்கா  பிளானோட வந்திருக்கொம்! என்று சொன்னாள் கனகா .

சரி சரி உன் ஈனாடு சென்னலை ஆரம்பிக்காதே! நேரம் ஆகுது எல்லாரும் தூங்குங்க. காமினி முகத்தை  கழுவிகிட்டு வந்து தூங்கு என்று கட்டளை இட்டாள் அம்மா.

காமினி அவளைத் தோழியருடன் அன்று இருந்தது மிகுந்த மகிழ் வை கொடுத்து.அவள் தன் அறையிலிருந்து வெளிப்பட்டு நேரே படிகளின் வழியாக குளியலறைக்கு வந்தாள் . தற்செயலாக அவள் கடிகாரத்தை நோக்கினாள். மணி 12:35 என்று காட்டியது. "இந்த நேரத்துல வந்து கோட்டம் அடிசிருகாளுங்க பாரேன்!"என்று மெலிதாக சிறிது கொண்டு குளியல் அறையின் வாயிலில் உள்ள வாஷ்  பேசினில் அவள் வெந்நீரை திருகி விட்டாள் . கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள். அவள் முகம் எங்கும் கேக்கு க்ரீம் அப்பி கிடந்தது. படுபாவிங்க இப்படி பண்றீங்களே மா! என்று சொல்லி கொண்டே அதனை வழித்து விட்டு முகத்தை சோப்பு  விட்டு கழுவினாள். அப்போது கண்ணாடி பிம்பத்தில் எங்கோ ஒரு மூலை ஒன்று மின்னிக்கொண்டு இருப்பது போல இருந்ததை கண்டாள். நன்றாக உற்று கவனித்தவள் திடுக்கிட்டு பார்த்தாள். ஒரூ  ஒளி வடிவமாக எதோ ஒன்று ஜன்னல் வெளியே நகர்வது போல தெரிந்தது. அவளுக்கு புரியவில்லை. அவள் வீடு ஒரு பெரிய பங்களா. அது ஒரு பெரிய மலை மேட்டின் மீது கட்டப்பட்டது. அவள் வீட்டின் பின்னால் இருப்பது பெரிய மலை பள்ளம். அதன் பிம்பம் தான் வழக்கமாக தெரியும் .அதன் மீது ஒருவர் நடந்து போவது இயலாத ஒன்று. என்னவாக இருக்கும் என்று புரியவில்லை.  அவள் விரைவாக ஒளி வந்த திசையில் உள்ள ஜன்னலின் அருகில் வந்தால். ஒளி வடிவமாக எதோ ஒன்று செல்வது தெரிந்தது. மேலும் உற்று பார்த்தாள்.தூரத்தில் அந்த சிறு பள்ளதாக்கில் அடியில்  ஒரு பெண் கடந்து போவது தெரிந்தது. அவள் அதிர்ச்சியில் உறைந்து போனாள் .கரடிகள், சிறுத்தை, நாய்களும், நரிகளும் திண்டாடும் அந்த பள்ளத்தாக்கில் எந்த துணையும் இல்லாமல் தனியே நடந்து போகும் பெண்ணை பார்த்து அவளால் நம்ப முடியவில்லை. வெண் பட்டாடை அணிந்து சர்வ அலங்காரமாக வனப்பும் வாளிப்பும் பொங்கும் இளமையுடன்சர்வ அலட்சியமாக நடந்து சென்ற அவளை பார்க்க பீதி அடைந்தாள். தொண்டை குழியில் எதோ அடைத்து கொண்டது.நடந்து வந்த அந்த பெண் மெதுவாக ஜன்னலில் அவளை அண்ணாந்து பார்த்தாள்.அவளின் இரு விழிகள் காந்தம் போல காமினியை கிரகித்தது. அவள் தலை முதல் கால் வரை எதோ நகை கடை முழுவதும் இறங்கிய து போல தங்கம் வைரம் வைடூரியம் என்று வித விதமாக நகைகளை அணிந்திருந்தாள் போல தோன்றினாள். அவை அந்த கருமையான இருளிலும் ஜக ஜோதியாக மின்னிகொண்டிருன்தது. அதன் ஒளியோ அல்லது அவளின் முகத்தின் பிரகாசமோ  அத்தனை ஒளியையும் பாய்ச்சி கொண்டிருந்தது. அந்த ஒளி வடிவமான பெண் திடீரென்று காமினியின் அருகில் வந்துவிட்டாள்.  அவளை பார்த்து தன பற்கள் அனைத்தும் தெரியும்படி  சிரித்துவிட்டு சட்டென்று மாயமாகி போனாள். அவளின் முகம் அப்படியே காமினியின் முகம் போல இருந்தது. காமினி அதிர்ச்சியில் உறைந்து போனாள் .திடீரென்று அவளின் மேல் ஒரு கை பட்டது. காமினியின் சப்த நாடியும் சில்லிட்டு போனது. மெதுவே திரும்பி பார்த்தாள். கனகா நின்று கொண்டிருந்தாள்.
எமிவே அலா சுச்டு உன்னாவு, தைய்யம உன்னாயி ? (என்னடி அப்படி பார்த்துகிட்டு இருக்கே அங்கென்ன  பிசாஸா இருக்கு ?) என்றாள் . காமினி பேசாமல் இருந்தாள் . கார்த்திகா அங்கு வந்து பாத்ரூம் போயிட்டு வரதுக்கு இவ்ளோ நேரம் பண்ற பொண்ண இப்போ தான் பாக்குறேன். 
அட ச்சே! நீயா ஏண்டி இப்படி வந்து பயமுறுத்துற? 
பின்ன எவ்வளவு நேரம் உனக்காக காத்துக்கிட்டு இருக்கிறது? மணி என்ன பாத்தியா நைட்டு 1 டீ!   இவ்ளோ நேரம் என்ன பண்ணற?
சரி சரி வா?போவும் என்று காமினி அவர்கள் மூவரும்  மேலே சென்றனர்.கனகாவின் துணையோடு வெளிறிய முகத்துடன் காமினி மாடி அறைக்கு சென்றாள். 

மறுநாள் அவர்கள் அனைவரும் தொட்ட பெட்டா செல்ல ஆயத்தமானார்கள். அனைவரும் உணவு அருந்த அமர்ந்திருந்த போது காமினி வழக்கமான உற்சாகம் இல்லாமல் காணபட்டாள். அவளுடைய அப்பா அவளுக்கு புதிதாய் வாங்கி தந்திருந்த ஐ போன்  கூட அவளை அவ்வளவாக கவர வில்லை. மீண்டும் மீண்டும் காமினியின் மனதில் அந்த பெண் வந்து வந்து போய்கொண்டிருந்தாள்.அவளின் சிரிப்பு அவளை கண்ணிமைக்க கூட விடாமல் பயமுறுத்தியது. நண்பிகள் அவளை சட்டை செய்வதை காணோம். காலையிலேய கூத்தும் கும்மாளமுமாக சந்தோசம் பரவிக்கிடந்தது.கார்த்திகா மட்டும் அவளை கவனித்து விட்டாள். அவளுடன் இருக்கும் இணை பிரியா தோழி கார்த்திகா மட்டும் தான்.
காமினி யனச்சு டி?காலையிலேருந்து மூஞ்சி நல்லாவே இல்ல, உனக்கு தான் பர்த்டே நீ என்னவோ யாருக்கோ கொண்டாடுற மாதிரி இருக்க?
அதெல்லாம் ஒண்ணுமில்லை சும்மா தான்.  
பொய் சொல்லாதே! நானும் காலையிலிருந்து கவனிசிகிட்டு வரேன். உன் மூஞ்சி கொஞ்சம் கூட சகிக்கல்லை. ஏதாவது உடம்பு சரியில்லையா என்ன? இல்லை நாங்கதான் உன்னை அவ்வளவு பயமுருத்திடோமா?
ச்சே ச்சே ஸ்டுபிட்! அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை செல்லம். எனக்கு லேசா தலை வலி. சரி சரி நீங்க சாப்பிட்டு கிட்டே இருங்க நான் அப்பா கிட்ட பேசிட்டு நமளோட டிராவல் பிளான் பத்தி விசாரிசிக்கிறேன். என்று அரை குறையாக விண்டு வித்திருந்த இட்லி யை  விழுங்கி விட்டு மேலே சென்றாள்.

ரமேஷ் எப்போதோ ஒரு அலுவலகத்தில் மாத சம்பளத்தில் வேலை பார்த்தார். சுகுமார் பிறந்த வுடன் அவர் மனைவியின் ஒன்று விட்ட சகோதரி எஸ்டேட்டில் வேலை இருபதாக சொல்லி அவர்களை இடம் பெயர வைத்தாள் . மிகுந்த பணக்காரியான அவள் சொல்லை தட்ட மாட்டாமல் இவர்கள் உதகைக்கு மாற வேண்டி வந்தது. கமலம்மாள் என்ற அந்த பெண்மணி இந்த எஸ்டேட்டில் வாழ்க்கை பட மிக குறுகிய காலத்தில் அவளின் மன வாழ்க்கை முடிந்து போயிற்று .சொத்து இருந்தும் அதனை அனுபவிக்க முடியாமல் வாரிசற்றவளாக, நோய் கண்டு இறந்து போனாள். கடைசி காலத்தில் வசந்தியும் ரமேஷும் அவளுக்கு அன்பாகவும் கவனத்துடன் ஒத்தாசையாக இருந்ததால் சுயமாக இருந்த சொத்தை சட்டப்படி ரமேஷுக்கு எழுதி வைத்து விட்டு இறந்து போனாள்.ரமேஷும் தன வேலையை விட்டுவிட்டு நொடிந்து போயிருந்தஎஸ்டேட்டில்  இயற்க்கை விவசாயத்தினை கற்று  தன்  கடின உழைப்பின்  மூலம்  விவசாயம் செய்து அதிக விளைச்சலை கண்டு அதனை முறையாக அங்குள்ள பகுதிகளில் சிறு வியாபாரம் செய்து படிப்படியாக முன்னுக்கு வந்து இப்போது அதனை போல 10 எஸ்டேட்டுக்களை வாங்கிவிட்டார். தொழில் நுட்பத்தின் மூலம் உலக நாடுகளில் உள்ள கொள்முதல் முனையத்தில் வியாபாரம் செய்து புத்திசாலிதனமாக முன்னேறிய முதலாளியாக திகழ்ந்தார். ஆனால் அதன் மூலம் பல போறாமைக்கரர்களுடன் மனகசப்பு வளர்த்து விட்டிருந்தார். சொந்தங்கள் சொத்து பிரச்சனைக்காக அவரை அங்கொன்றும் இங்கொன்றுமாக நச்சரித்து கொண்டிருந்தன. பண பலத்துடன் இருந்த அவர்களை லாவகமாக சமாளித்து கொண்டிருந்தார் ரமேஷ். அவர் எப்போதும் மிகுந்த சுறுசுறுப்பாக எதோ ஒரு வேலை செய்து கொண்டு இருக்க பழகியவர். நவீன தொழில் நுட்பத்தில் இருக்கும் அத்தனை விஷயங்களையும் அதே சமயத்தில் ஆன்மீக விஷயத்திலும் சமமாக விஷய ஞானம் பெற்றவர். அவருக்கு மகா பெரியவர், ரமணர், சாய் பாபா போன்ற மகான்களின் புத்தகங்களும், பிற மத புத்தகங்களும் இன்னும் வேதங்கள் உபநிஷத்துக்கள், புராணங்கள் தந்திர சாஸ்திரங்கள் மந்திர புராண சாஸ்திரங்களை பற்றிய புத்தகங்கள் நிறைய ஈடுபாடு கொண்டு அதனை படித்தவர். பல மந்திர ஜெபங்களை பயின்று அதே சமயம் அதனை உபாசிக்கவும் கற்று வந்தார்.அங்கு வசித்து வந்த சிவா சுவாமிகளின் உபதேசத்துடன் அதனை நன்கு பயின்று தேர்ச்சி பெற்றார்.அதோடு நில்லாமல் நவீன தொழில் நுட்பங்களை வைத்து ஆன்மீகத்தை ஆராயவும் செய்தார்.ஜோசியம் ஜாதகம் பற்றியும் கற்று வந்து ஆராய்ச்சி செய்து வந்தார்.  காமினி பல சந்தேகங்களை அவரிடம் தெரிந்து கொள்வது அவளுக்கு மிகவும் பிடிக்கும் ஆயினும் கதைகளை கேட்கவே அவளுக்கு மிகுந்த ஆர்வம். அவள் அம்மா வசந்தியோ வீடு  மற்றும் எஸ்டேட்டு பணியாளர்களின் வேலை வாங்குவது என்று மகளிர் மன்றம் என்று போவாளே தவிர இதில் கொஞ்சமும் நாட்டம் இல்லை. ஆகவே அப்பா தான் காமினிக்கு பிரியம் அதிகம். அம்மா கண்டித்தாலும் அவளிடம் என்றும் அன்பும் பாசமும் கொண்டவள்.  
காமினி வரும்போது அப்பா மும்முரமாக தன ஐ பேடில் கவனத்துடன் எதையோ படித்து கொண்டிருந்தார். அவர் நெற்றியில் கவலை ரேகைகள் அப்பி கிடந்தன.
அப்பா !என்னப்பா? எதோ கவலைய இருக்கீங்க? என்ன மெயில் அது? என்று கேட்டாள்.
காமினி குட்டி வந்துட்டியா?வா வா உக்கார் என்றார் ஆவலுடன். அது ஒன்னும் இல்லை காமினி, சின்ன விஷயம் தான். ஆமா நீங்க எல்லாம் தயாரா? சார் இன்னும் 10 நிமிஷத்தில் வந்திடும். நம்ம குமாரசாமி தான் வண்டி எடுத்துகிட்டு  வரான்,
எல்லாரும் தயார் தான் பா, ஆனா நீங்களும் அம்மாவும் கூட வந்தால் இன்னும் ஜாலியா இருக்கும். 
நான் வேலைய விட்டுட்டு எப்படிம்மா வர முடியும்? அது போக இன்னிக்கு அச்சொசியேஷன் போர்டு மீட்டிங் இருக்கு. எல்லா மேம்பெர்சும் போயி ஆகணும் .அதை தவிர்க்க முடியாதே.
அமாம் அமாம் யாருப்பா அந்த கோமாளிங்க? சண்டே கூட மீட்டிங் வெச்சிகிட்டு. என்று சோபாவில் தொப்பென்று உட்கார்ந்தாள்.
சரிம்மா, நாம அடுத்த வாரம் ஒன்ன போயிட்டு வரலாம். கவலைய விடு.என்று ஆமாம் நீ ஏன் இணைக்கு ஒரு மாதிரி இருக்க? இந்த மாதிரி உன்னை நான் பார்த்தது இல்லையே அம்மா? என்று அன்பாக அவள் முதுகில் தடவிக் கொடுத்தார்.
அப்பா அது ஒன்னும் இல்லையே ?
எனக்கு தெரியாத அம்மா? இன்னைக்கு நீ சரியா பேச கூட இல்லையே?சுவாமி படத்துக்கு கூட விளக்கு போடுறவள் இனிக்கு பர்த்டே அதுவுமா போடவே இல்ல அப்போவே தெரியாத நீ எது மூட் அவுட்டுல இருக்கேன்னு?
அப்போது தான் அவளுக்கு தான் ரமேஷின் குருவும் அவர்கள் பூஜை செய்யும் மகான் சிவா சுவாமிகளின் ஞாபகம் வந்தது.
அது வந்துப்பா எப்படி சொல்றதுன்னே தெரியல்ல. நேற்றைக்கு ராத்திரி ஒரூ பயங்கரமான விஷயத்தை பார்த்தேன். கேட்டா நம்புவீங்கன்னு சொன்ன நான் சொல்லுறேன்
சொல்லு மா
நேத்தைக்கு ராத்திரி நான்.. அப்பா கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு கதை சொல்லி இருக்கீங்க நினைவிருக்க?
எதை பத்தி மா?
சொர்ண யோகினி பத்தி
ஆமாம் அதுக்கு இப்போ என்ன?
நேத்தைக்கு பர்த்டே கொண்டாட்டம் நடந்துசில்லையா ? இவங்க எல்லாரும் என் முகத்திலே கேக்கை பூசி விட்டாங்க இல்லையா?

ஆமாம் தெரியுமே.
அம்மா முகத்தை கழுவிட்டு வர சொன்னாங்கன்னு நானும் கீழே பொய் முகம் கழுவிகிட்டு  இருந்தேன் அப்பா அப்போ ஒரு வெளிச்சம் கண்ணாடியிலே தெரிஞ்சது.
நான் அதை கவனிச்சு பார்த்தேன். பின்னாடி இருக்கிற பள்ளதிலேருந்து வந்தா  மாதிரி இருந்தது.
நானும் பின் கட்டு வழியா பொய் ஜன்னல்  கிட்டே நின்னு பார்த்தேன் அப்போ யாரோ வேகமா நடந்து போன மாதிரி இருந்தது. அது யாருன்னு நினைகிறீங்க?
யோகினியா?
ஆமாம் அப்பா
ரமேஷ் காமினியை வெறித்து பார்த்தார். திடீரென்று ஹஹஹஹா என்று சிரித்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------













Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...