Skip to main content

Posts

Showing posts from August, 2011

மாங்கொத்து

வள்ளி கிழவி இதோடு 6 குடம் தண்ணிர் பிடித்து இறைத்து விட்டாள். "ஏன் கிழவி இந்த மரத்துக்கு போய் தண்ணி விட்டு என்னத்துக்கு ஆகப் போவுது? நீயும் தினமும் குளத்திலிருந்து இந்த மா மரத்துக்கு தண்ணி ஊத்துற, இந்த மரம் பூக்குதா, காய்குதா? என்றான் சோமு துண்டை உதறிக்கொண்டு. "அட சோமு! என்ன தான் இருந்தாலும் இந்த மரமும் ஒரு உயிர் தானே டா! நான் ஆசையா வெச்சது, அது என் புள்ளை மாதிரி வளந்திருச்சு. அது பூக்கும் காய்க்கும் ன்னு பலனை எதிர்பாத்தா அதுக்கு சேவகம் செய்ய சொல்லுற?"என்றாள் அவள் போக்கை வாய் சிரிப்புடன். சோமு சலித்துக்கொண்டே எழுந்தான். "உன்ன திருத்த முடியுமா கிழவி? சரி சரி நான் வேலைக்கு போறேன். நி உன் மா மரத்தோட பேசிகிட்டே வேலைய பாரு. என்று துண்டை தலையில் முண்டாசு கட்டி கொண்டே சைக்கிளில் அமர்ந்து செல்ல தொடங்கினான். அடுக்களையில் சோற்றை போல் அவள் மனமும் பொங்கியது. எவ்வளவோ ஆசையுடன் வைத்த மரம் கன்று அது? எத்தனை வருடம் ஆகி இருக்கும் அந்த பழத்தை சுவைத்து? சாமியார் கொடுத்த அருள் பெற்ற மாங்கனி என்று அந்த கிழவன் கொடுத்தானே! அதன் ருசி தான் என்ன? அதற்க்கு காரைக்கால் அம்மையாரின் கதை வேறு சொன்னன