Skip to main content

Posts

Showing posts from April, 2018
காசுக்கு போட்ட கோஷம் காலை மணி 9:45. அண்ணா சாலையில் வழக்கம் போல பல் பசையை பிதுங்கி பசை எடுப்பது போல மெல்ல மெல்ல ஊர்ந்து சென்ற வாகனங்கள் அவைகளின்  ஜனத்தொகை பெருகியதை காட்டி கொடுத்தது. ரகு நந்தனுக்கு ரத்தம் கொதித்தது. முன்னை போல நேரம் கழித்து proxy போடும் நிலைமையில் அவன் வேலை பார்க்கும் மத்திய அரசு அலுவலகம் இல்லை. அண்ணா சாலையில் கூட்டம் தள்ளியது. என்னவென்று பார்த்தான் . "போராடுவோம்! போராடுவோம்!" "மத்திய அரசே! மாநில அரசே காவேரி தண்ணீரை தர மறுத்த மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமறுத்த மத்திய அரசே! கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!"  மோடி ஒழிக! என்று கோஷம் ஒலித்தது! "ஆமாம் மோடி ஒழிக  நம்மை ஆபீஸ்ல வேலை பார்க்க சொல்லுறான் என்று மனதிற்குள் சொல்லி சிரித்து கொண்டான் ரகு நந்தன். "சரி இனிமே பஸ் ஓடாது லேட்டா ஆகும் போல இருக்கே!" என்று சொல்லி அவன்  மேலாளருக்கு  அழைத்துவிட்டு சார்.. என்று இழுத்தான். "தெரியுமய்யா ரோடு ரோக்கோ தானே நானும் அந்த பக்கம் தான் நிக்கிறேன். ஆஃபிஸில் க்கு இன்பர்மேஷன் கொடுத்தாச்சு! ஆபீஸ் முன்னாடி நின்னு கட்சி காரங்க தகராறு செய்யுறாங