Skip to main content

Posts

Showing posts from July, 2010

நுனிப்புல்

"உங்க அப்பாவுக்கு அறிவு வேலை செய்யுதான்னு பட்டிமன்றம் தான் வெக்கணும்." காலையிலேயே அர்ச்சனை ஆரம்பமானது சேக‌ருக்கு எரிச்சலை அதிகரித்தது. ஏழாவ‌து மாடிதான் என்றாலும் அவ‌ர்க‌ள் சண்டை நிலவரை கார் நிறுத்துமிடம் வரை கேட்கும். இது அவ‌ர்க‌ள் அபார்ட் மெண்டு சின்ன பய்யன் வரை பிரசித்தம். "ஏய்! என்ன ரொம்ப தான் வாய் நீளுது! நானும் போனா போகுது, உன் சைடு ஞாயம் இருக்குதேன்னு சும்மா இருந்தா ரொம்ப ஓவரா பேசுற?" என்று எதிர் வாதித்தான். " ஆமாமாம்! என்ன அடக்கத்தான் உங்களால முடியும். உங்க அப்பா அங்க பண்ற அக் கிரமத்த தான் ஊர்ல எல்லாரும் பேசிகிறாங்களே, அவங்கள உங்களால என்ன பண்ணிட முடியும்? என் கிட்ட‌தான் உங்க வீரத்த காட்டுவீங்க. அய்யோ! என் மானம் போவுது! இந்த வயசுல‌ செய்யுற காரியங்களா இதெல்லாம்?" கங்கா பொரிந்து தள்ளினாள். கங்கா "stop this!" இதுக்கு நானே நேரா போய் விசாரிச்சி முடிவு தெரிஞ்சிக்கிட்டு வறேன். அது வரைக்கும் இத பத்தி எந்த விவாதமும் பண்ண வேண்டாம்.நீ போய் வேலை இருந்தா பாரு."என்று முடிதான் சேக‌ர்.முகம் காட்டி விட்டு பொனாள் கங்கா. ஒருவனுக்கு வாழ்க்கை பட