Skip to main content

நுனிப்புல்

"உங்க அப்பாவுக்கு அறிவு வேலை செய்யுதான்னு பட்டிமன்றம் தான் வெக்கணும்." காலையிலேயே அர்ச்சனை ஆரம்பமானது சேக‌ருக்கு எரிச்சலை அதிகரித்தது. ஏழாவ‌து மாடிதான் என்றாலும் அவ‌ர்க‌ள் சண்டை நிலவரை கார் நிறுத்துமிடம் வரை கேட்கும். இது அவ‌ர்க‌ள் அபார்ட் மெண்டு சின்ன பய்யன் வரை பிரசித்தம்.

"ஏய்! என்ன ரொம்ப தான் வாய் நீளுது! நானும் போனா போகுது, உன் சைடு ஞாயம் இருக்குதேன்னு சும்மா இருந்தா ரொம்ப ஓவரா பேசுற?" என்று எதிர் வாதித்தான்.

"ஆமாமாம்! என்ன அடக்கத்தான் உங்களால முடியும். உங்க அப்பா அங்க பண்ற அக்கிரமத்த தான் ஊர்ல எல்லாரும் பேசிகிறாங்களே, அவங்கள உங்களால என்ன பண்ணிட முடியும்? என் கிட்ட‌தான் உங்க வீரத்த காட்டுவீங்க. அய்யோ! என் மானம் போவுது! இந்த வயசுல‌ செய்யுற காரியங்களா இதெல்லாம்?" கங்கா பொரிந்து தள்ளினாள்.

கங்கா "stop this!" இதுக்கு நானே நேரா போய் விசாரிச்சி முடிவு தெரிஞ்சிக்கிட்டு வறேன். அது வரைக்கும் இத பத்தி எந்த விவாதமும் பண்ண வேண்டாம்.நீ போய் வேலை இருந்தா பாரு."என்று முடிதான் சேக‌ர்.முகம் காட்டி விட்டு பொனாள் கங்கா.

ஒருவனுக்கு வாழ்க்கை படும் மனைவி, முன் பிறவியில் அவனுடைய பரம விரோதியாவாள். ஒருவரை பழி தீர்க்க முடியாமல் இறந்து போகிறவர்கள் மறு பிறப்பில் கணவன் மனைவியாக வாழ்க்கை பட்டு ஒருவருக்கு ஒருவர் பிறவி துன்பத்தினில் ஆழ்த்தி மகிழ்வார்கள்." என்று ஒரு புத்தகத்தில் படித்து சேகருக்கு ஞாபகம் வந்தது. கங்காவை உற்று பார்த்தவனுக்கு முற்பிறவியில் பல விரோதிகள் இருபர்களோ என்று சந்தேகம் வந்தது.

அப்பாவுக்கு மூளை ஒருவேளை நிஜமாகவே வேலை செய்ய வில்லையோ. என்ன பெரிய மனிதர் இவர்? ஏன் இப்படி செய்தார்? தனக்கு எவ்வளோவோ நல்ல போதனைகளை செய்தவர் ஏன் இந்த காரியத்தை செய்தார்? என்று கேள்விக்கனைகள் அவன் மேல் அனலை பொழிந்தன. பெரிய மனிதர் என்று சொல்லும் எல்லொருக்கும் இப்படி ஒரு "weakness" இருக்கும் என்று நண்பர்கள் சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன். ஏன் பார்த்தும் இருக்கிறேன். அப்பாவும் இப்படியா?

தங்க வயல் முன்பு இருந்த சுவடு மாறி போன கிராம‌ங்க‌ளில் ஒன்று. ஓட்டு வீடுகள் எல்லாம் சிமெண்ட் விடுகளாகி போனது.ப‌சுமையெல்லாம் காய்ந்து போய்விட்ட‌து போல் இருந்த‌து. எல்லோரும் குடும்பங்களை பிரிந்து நகரங்களுக்கு குடி வந்தது முதல் தன் ஜீவன் அற்று போனது அவ‌ன் கிராமம். எதோ திருவிழா காலங்களில் கொஞ்சம் நிறம் கூடி போகும்.

இப்பொதைக்கு சேக‌ரின் வீடு தான் ப‌ழைய‌ வீடு. தோற்ற‌ம் ப‌ழைய‌து தான் என்றாலும் அத‌ன் க‌ம்பீர‌ம் குறைய‌வில்லை.அம்பலத்தார் தெரு என்றால் சும்மா இல்லை. அந்த‌ தெருவில் தான் ஊர் நாட்டாமை முதல் பண்ணையில் வேலை செய்யும் கணக்கு பிள்ளைகள் வீடு வரை இருக்கும்.ஏறக்குறைய இருபது முப்பது வீடுகள் அங்கு இருக்கும். மொத்த கிராமத்தின் மைய‌மே அந்த தெரு தான். அந்த தெருவில்இருந்த பெரிய மனிதர்கள் குடும்பங்களில் ஒன்று தான் அவ‌ர்க‌ளுடைய‌து. ஆனால் முத்துசாமி தவிர மூன்று குடும்பங்கள் தான் மீதி.

சேக‌ர் ம‌ற்றும் அவ‌ன் இரண்டு அக்காக்கள் என்று இருந்த போது வீடு அமர்க்களபடும். ஆனால் இப்போது சூனியமாய் இருந்தது. மாப்பிள்ளைக‌ள், சொத்துக்காக‌ ஏர்ப்ப‌ட்ட‌ வாய்ச்ச‌ண்டைக‌ள் எங்க‌ள் எல்லோரையும் ஆளுக்கு ஒரு ப‌க்காகமாக‌ பிரித்த‌து என்று மிக‌வும் சோர்வ‌டைந்து போன‌வ‌ர்.அம்மா இற‌ந்த‌ பிறகு களை இழந்து போனார்.மெல்ல‌ அம்மாவின் பிரிவை மறப்ப‌த‌ற்க்கு பண்ணையில் க‌வ‌ன‌ம் செலுத்தினார். ஆனால் அப்போதும் ச‌ற்று சுண‌க்க‌ம் இருந்த‌து. ஆனால் இப்போது மீன்டும் அதே க‌ளையுட‌ன் இருப்ப‌தை பார்க்க சேக‌ருக்கு ஆச்ச‌ரிய‌மாக‌வும் அதிர்ச்சியாக‌வும் இருந்த‌து. அவன் கெள்விப்ப‌ட்ட‌து உன்மையா?

சேக‌ர் ஊருக்கு போன‌ போது அப்பா சாய்வு நார்க்காலியில் உட்கார்ந்து கொன்டு இருந்தார். "அட‌டே! சேக‌ர் வாப்பா!" என்று புன்முருவ‌ல் பூத்தார்.

குச‌ல‌ங்க‌ளுக்கு ஏற்ற‌ ம‌றுமொழி பொய்யாக‌ வ‌ந்த‌து. அப்பா சீக்கிர‌மாக‌ சாப்பிட்டு விட்டு வ‌ய‌லுக்கு செனறார். சேக‌ர் வீட்டில் த‌ங்கினான். க‌ந்த‌ன் தான் ச‌மைய‌ல் செய்து த‌ருகிறான். அவ‌ன் சாப்பாடு எடுத்துக்கொன்டு வ‌ந்தான். அவ‌னிட‌ம் விஷ‌யங்க‌ளை தெரிந்து கொண்டான்.

அவ‌ன் சொல்லுவ‌தும் கேள்விப்ப‌ட்ட‌தும் ஒன்றாக‌வே இருந்த‌து. இப்போதெல்லாம் அப்பா வெளியூர் செல்வ‌தும், ஒரு வித‌வை பெண்ணை ச‌ந்திப்ப‌தும், அவ‌ர்க‌ளுக்கு இடையே திரும‌ண‌ம் ப‌ற்றி பேச்சு ந‌ட‌க்கிர‌து என்றெல்லாம் க‌ந்த‌ன் சொன்ன‌து சேக‌ருக்கு அதிர்ச்சியை ஏற்ப்ப‌டுதிய‌து. கேட்க்கும் போது த‌லை சுற்றிய‌து. அப்பாவா இப்ப‌டி என்ற‌ கேள்வி தான் மீண்டும் மீண்டும் எழுந்து கொண்டே இருந்த‌து.

ம‌திய‌ம் வ‌ய‌ல் வெளிக்கு சென்றான். தென்னை ம‌ர‌ நிழ‌லில் உட்கார்ந்து வ‌ருட‌ங்க‌ள் சென்றாலும் இன்னும் அத‌ன் நிழ‌லும் நினைவும் குளுமையாக‌தான் இருந்த‌து.

அப்பா வேலை எல்ல‌வ‌ற்றையும் முடித்து கொண்டு இங்கு தான் வ‌ருவார் என்று அவ‌னுக்குத் தெரியும். அங்கு இருந்த‌ க‌ய‌ற்று க‌ட்டிலில் உட்க‌ர்ந்து யோசித்தான். நான் அவ‌ரிட‌ம் எப்ப‌டி இதை கேட்ப‌து? ஒரு ம‌க‌ன் த‌ந்தையிட‌ம் இந்த‌ விஷ‌ய‌மாக‌ கேட்ப‌து என்ப‌து ச‌ங்க‌ட‌மான‌து தான். ஆனால் விட்டு விட்டால் முத‌லுக்கே மோச‌மாயிற்றே? காலையில் ஊருக்கு வ‌ந்த உட‌னேயே வெலையாள் க‌ந்த‌ன் அதை ஊர்ஜித‌ ப‌டுத்தி விட்டான்.அவ‌ர்க‌ள் இருவ‌ரும் க‌லியாண‌ம் ப‌ற்றி இப்போது பெசிக்கொள்கிரார்க‌ள் என்றும் அர‌ச‌ல் புர‌சால‌ விஷ‌ய‌ம் தெரிந்த‌து என்று க‌ந்த‌ன் சொன்னான்.இந்த‌ விஷ‌ய‌ம் கொஞ்ச‌ நாளாக‌ ந‌ட‌க்கிற‌து என்றும் க‌ங்கா சொல்லும்பொது அவ‌ளை ம‌றுத்தான்.அப்பா வ‌ந்த‌தும் யோசிக்காம‌ல் இது ப‌ற்றி கெட்ப‌து என்று முடிவு செய்தான்.

அப்போது அவ‌ன் தோளை ஒரு கை ப‌ற்றிய‌து. "என்ன‌ய்யா சேக‌ர்? ரொம்ப‌ யொச‌னை? என்று கேட்ட‌வாறே அப்பா அருகில் வ‌ந்து உட்கார்ந்தார். சேக‌ர் எழுந்து நிற்கப் போனான். "அட! ப‌ர‌வால்ல‌ய்யா சும்மா உக்காரு" என்று அம‌ர்த்தினார்.

"சாப்டீங்க‌ளா அய்யா? என்றான்.

"ஆமாப்பா. ந‌ம்ம‌ சிறுவ‌ய‌ல் இருக்கு பாரு? அங்க‌ நெல்லு விக்கிர‌துக்காக‌ வெள்ளேனெ போயிட்டேன். அதுனால‌ அங்கேயே சாப்பிட்டுட்டேன்.


"சிறுவ‌ய‌ல்ல‌யா? அங்கேயெதுப்பா ஒரு காப்பி க‌டை கூட‌ இல்ல‌யே? அங்கே எங்க‌‌ போய் சாப்பிடீங்க‌?"என்று கேட்டான்.

"என்ன‌ப்பா கெள்வியெல்லாம் ஒரு மாதிரி இருக்கே? சாப்பிட‌ அங்கே இட‌மா இல்ல‌?"

"சாப்பிட‌ ம‌ட்டும் தான் போனீங்களா? என்று ம‌றுப‌டியும் சேகர் கேட்டான்.

"என‌க்கு ஒன்னும் புரிய‌ல்லியே? என்றார் முத்துசாமி.

"அப்பா என‌க்கும் தான் இங்க‌ என்ன‌ ந‌ட‌க்குதுன்னு புரிய‌ல‌. உங்க‌ கிட்ட இப்பொ ஒரு பெரிய‌ மாற்ற‌ம் தெரியுது. ஆது ந‌ல்ல‌துக்கா இல்லையான்னு தான் தெரிய‌ல்ல‌. நான் உங்க‌‌ கிட்டே இத‌ ப‌த்தி எப்ப‌டி கேக்குர‌துன்னும் தெரிய‌ல்ல‌. த‌ய‌வு செய்து என‌க்கு இருக்கிற‌ உண்மையை சொல்லுங்க‌ளேன்."

"அப்ப‌டி என்ன‌ப்பா என்கிட்ட இருக்க போவுது? நானொ வ‌ய‌சான‌வ‌ன் என‌க்கு ஆத‌ர‌வு த‌ர‌ யார‌ இருந்தாலும் என‌க்கு அவ‌ங்க‌ வேண்டிய‌வ‌ங்க‌ ஆயிடுராங்க‌. இதுல‌ ஒண்ணும் புதுசு இல்ல‌யே த‌ம்பி."

"எதிர் பாராத வாய்ப்பு கிடைக்கும்போது அத‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌ பார்க்கிற‌து தான் இய‌ல்பு அய்யா."

"உன்ன மாதிரி சுத்தி வ‌ளைச்சி பேச‌ என‌க்கு தெரியாது த‌ம்பி. நேரா விஷ‌ய‌துக்கு வா."

"நேராக‌வே கேக்குரேன் அய்யா. யார் அந்த‌ பொண்ணு? எதுக்காக‌ நீங்க‌ சிறுவ‌ய‌லுக்கு அடிக்க‌டி பொரீங்க‌? அவ‌ள‌ போய் எதுக்காக‌ அடிக்க‌டி ச‌ந்திகீரீங்க‌?" ஒருவாரு தைரிய‌த்தினை வ‌ர‌வ‌ழைத்துக்கொண்டு கேட்டுவிட்டான்.


முத்துசாமி அவ‌னை ஒரு முறை தீர்க்க‌மாக‌ நோக்கினார். சேக‌ருக்கு தொன்டை வ‌ர‌ன்டு போன‌து. அவ‌ன் அவ‌ர் அருகிலிருந்து ச‌ற்று வில‌கி போனான். உட‌ல் ச‌ற்று ப‌ய‌த்தால் ந‌டுங்கிய‌து. என்ன‌தான் சேக‌ருக்கு க‌லியாண‌ம் ஆகி விட்டாலும் அவ‌ரிட‌ம் ஒரு ப‌ய‌ம், ம‌ரியாதை உன்டு. அவ‌ன் ம‌னைவி சேக‌ரிட‌ம் தான் கித்தாபெல்லாம் காண்பிப்பாளே த‌விர‌ இவ‌ர் முன் அதெல்லாம் ந‌ட‌வாது.

அவ‌னை ஒரு முறை கோப‌த்துட‌ன் நோக்கிய‌து போல‌ தென்ப‌ட்ட‌‌ அவ‌ர் முக‌ம் உட‌னே ஒரு சிறு முறுவ‌லாக‌ மாறிய‌து.

"என்ன‌ பாக்க‌ணுமுன்னு ஆசை இல்ல‌ உன‌க்கு ஹ்ம்?ஏன‌ப்பா அப்போ இத‌ கேக்க‌தான் இவ்வ‌ள‌வு நாள க‌ழிச்சு வ‌ந்திருக்க?" என்றார்.சேக‌ருக்கு என்ன‌ சொல்வ‌தென்றெ தெரிய‌வில்லை. வெட்க‌ம் பிடுங்கி தின்ற‌து.

"ச‌ரிய‌ப்பா சொல்லிடறேன். ந‌ம்ம‌ வீட்டுல‌ இருந்தானே ப‌ண்ணையாள் நாரா‌ய‌ண‌ன், அவ‌ன நென‌ப்பிருக்கா? அவ‌ன் ம‌க‌ள் தான் அந்த‌ பொண்ணு, பேரு இந்தும‌தி. அவ‌ன் ஒரு த‌ட‌வை ஜாதி க‌ல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்திச்சே ந‌ம்ம‌ ஊருல‌, அப்போ என‌க்கு ஏற்ப‌ட‌ இருந்த‌ ஆப‌த்த‌ அவ‌ன் தாங்கிகிட்டான்.அத‌ வெளியில‌ சொல்ல‌ வேண்ட‌முன்னும் த‌டுத்துட்டான். அவ்வ‌ள‌வு ந‌ல்ல‌வ‌ன் அவ‌ன்."
அவ‌ன் ம‌க‌ள் இந்தும‌தி, ந‌ட‌த்த‌யில‌ சாமி மாதிரி. உங்க‌ அம்ம‌வுக்கு எவ்வ‌ள‌வோ ஒத்தாசை செஞ்சிருக்கா. முக‌ம் சுளிச்சி பேசின‌தோ, கோப‌ப்ப‌ட்ட‌தோ, வேலை கொடுத்தா செய்ய‌ ம‌றுக்கிர‌தோ கிடையாது. உங்க‌ அம்மா சாக‌ கிட‌ந்த‌ப்போ ஆஸ்ப‌த்திரிக்கும் வீட்டுகும் ந‌டையா ந‌ட‌ந்து வேலை பாத்தா. அம்மாவுக்கு அவ‌ மேல‌ அவ்வ‌ள‌வு பிரிய‌ம். அவ‌ புருஷ‌ன் இராணுவ‌ வீர‌ன். அவ‌ க‌ழுத்துல‌ தாலி க‌ட்டின‌ அன்னிக்கே ச‌ன்டைக்காக‌ காம்புக்கு போன‌வ‌ன் பொண‌மா தான் திரும்பி வ‌ந்தான்.தாயில்லாத‌ பொண்ணுக்கு புருஷ‌னும் பொயிட்டானேன்னு நாராய‌ண‌னுக்கு வேத‌னை.ம‌க‌ளோட‌ நில‌மைய‌ பார்த்து ம‌ன‌சு வெறுத்து போய் சேந்துட்டான். உங்க‌ அம்மாவோட‌ க‌டைசி ஆசை உங்க‌ள‌ ப‌த்தி எல்லாம் இல்ல‌. அந்த‌ பொண்ணுக்கு ஒரு வாழ்க்கை அமைச்சிக் குடுக்க‌ணுமுன்னு தான்.

ஒரு ஆம்ப‌ள‌ குழந்தையா பிற்க்கிற‌ப்போ பார்க்கிற‌ பெண்ணெல்லாம் அவ‌னுக்கு அம்ம‌வா தெரியும். அவ‌ன் கொஞ‌ச‌ம் வ‌ள‌ரும்போது அவ‌ங்க‌ளே அக்கா த‌ங்கையா தெரிவாங்க‌. வாலிப‌னுக்கு க‌ண்ணுல‌ ப‌ட்ட‌ பெண்ணெல்லாம் காத‌லியா தெரிவாங்க‌. ஆம்பிள்ளையா ஆன‌வுட‌னே ம‌னைவியாக‌ தெரிவாங்க‌, வ‌ய‌சான‌வ‌ங்க‌ளுக்கு அவ‌ங்க‌ எல்லாரும் ம‌க‌ளாதான‌ப்ப்பா தெரிவாங்க‌.

அவ‌ளுக்கு நான் தான் இப்ப‌ அப்ப‌ன் இட‌த்துல‌ இருந்து க‌வ‌னிச்சிக்கிறேன்.க‌ட‌வுள் அருளால‌ ஒரு வ‌ர‌ன் கிடைச்சிருக்கு, ஆனா அந்த‌ பொண்ணுக்கு எப்ப‌டி புரிய‌ வெச்சி இத‌ முடிகிர‌துன்னு தெரிய‌ல்ல‌. அதை ப‌த்தி நென‌ச்சிகிட்டு இருந்தேன். உங்க‌ அம்மா அருளால‌யும் நாரா‌ய‌ண‌ன் பிரார்த்த‌னையும் அவ‌ ம‌ன‌ச‌ மாத்துமுன்னு என‌க்கு ந‌ம்பிக்கை இருக்கு.இப்போவும் நான் உன‌க்கு த‌ப்பான‌வ‌ன் போல‌ தெரியுரேனா ராசா?" என்றார்.


சேக‌ர் அச‌ந்து போனேன்.அப்பா இம‌ய‌ ம‌லையின் உய‌ர‌த்திற்க்கு விஸ்வ‌ரூப‌ம் எடுத்து நிற்ப்ப‌தை போல் உண‌ர்ந்தான்ன். "அவ‌ர் அதிக‌ம் ப‌டித்த‌தில்லை.ஆனாலும் வாழ்க்கையினை ப‌டித்திருக்கின்றார். நான் நிறைய‌ ப‌டித்தும் புத்தி இல்லாம‌ல் அவ‌ரிட‌ம் தோற்றுப்போனேன்."என்று நினைத்துக்கொன்டான்.


"என்னிக்குமே நுனிப்புல் மேயிர‌து போல் தான் எங்க‌ ப‌டிப்பு. உங்க‌ளை மாதிரி வாழ்க்கைய‌ அனுப‌விச்சி ஆராய்ச்சி ப‌ண்ணி ப‌டிக்க எங்க‌ளுக்கு தெரிய‌ல‌. என்ன‌ ம‌ன்னிச்சிடுங்க‌ அப்பா! வாங்க‌ப்பா நாம‌ இர‌ண்டு பேரும் த‌ங்கைய‌ போய் பார்த்துட்டு வ‌ர‌லாம். நானும் பேசி பார்க்கிறேன்.அவ‌ க‌ண்டிப்பா ச‌ம்ம‌திப்பா." என்றான் சேக‌ர்.
இப்போது சேக‌ர் முக‌த்திலும் அதே க‌ளை தெரிந்த‌து.
***************************************************

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
Kamini_Yogini 7 காமினி_யோகினி 7 எஸ் பி ஸ்வாமிநாதன் கொஞ்சம் ஆடித்தான் போனார். அடேயப்பா! என்னய்யா இது? இந்த ஆசிரமன்தான் இவங்க எட் ஆபிஸா? என்றார் ஆச்சரியம் தாளாமல் இல்ல சார்! இது இவங்களோட தமிழ்நாடு பிராஞ்சு ஆபீஸ் சார் .எட் ஆபீஸ் மைசூரில் இருக்குது சார். என்றாள் கங்கா ஓ அப்படியா! இந்த பிள்டிங்கே  கோடி கணக்கிலே மதிப்பிற்கும் போல இருக்குதே இதுவே மாளிகை போல இருக்குதுன்னா அப்போ அங்கேனே? சொர்க்கம் போல இருக்கும் சார்  அதோ அங்க பாருங்க! என்று கங்கா சுட்டி காட்டிய திசையில் படிய வாரிய தலை, கொஞ்சம் மாநிறம். நரைத்த திருத்தப்பட்ட மீசை தாடி. அகலமான நெற்றியில் குங்கும பொட்டு.  இளம் சிவப்பு நிற வெட்டி அதில் வெள்ளை பச்சை நீல கரை கதர் சட்டை வைர மோதிரம் பிரேஸிலேட் மின்ன வேட்டை நாய் போல கத்தி கொண்டிருந்த சேகரமூர்த்தி தென்பட்டார். பல பேர் அங்கு பளிங்கு தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதில் பலரும் வட நாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் என்று அவர்கள் முகத்தை பார்த்த உடனே தெரிந்து கொண்டனர் போலீசார். பலர் பெரிய ரோஜா தோட்டத்தினை செப்பனிட்டு கொண்டிருந்தனர். வானளா...