Skip to main content

Posts

Showing posts from February, 2010

வாசகி நானல்ல! - பக்கம் 1

இன்றுடன் 2 மாதங்கள் ஆகி விட்டன. பிரியா இனி வரமாட்டாள் என்று அவனால் ஏற்க முடிய வில்லை. மனக்குரங்கு செய்யும் சேட்டை இது என்று மூளைக்கு தெரியும். ஆனால் மனம் செய்யும் அட்டகாசம் தான் அடிப்படையில் இந்த உலகையே ஆட்டி வைக்கிறது. ஹரி தன் கணினியை வெறித்ததுக்கொண்டிருந்தான். அவன் இப்படி தன்னிலை மறக்கும் அளவிர்க்கு என்றும் நேர்ந்ததில்லை. பிரியாவை சந்திக்கும் வரை. பிரியா ஒரு ப்ராஜெக்ட் நிமித்தமாக அவன் உடன் பணி செய்தவள். பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று ஹரி ஒரு கற்பனையும் வைத்தததிருக்க வில்லை. அவன் இது வரை எந்த பெண்ணுடனும் பழகி இருக்கவும் இல்லை. அவன் ஒரு சாமியார் என்றே சொல்ல வேண்டும். அவன் மேலாளரும் அவனுடன் பணிசெய்யும் மற்ற சாகாக்களும் அவனை இது பற்றி கிண்டல் செய்வதுண்டு. "டேய் சாமியார்! பாத்துக்கிட்டே இரு ஒரு ரதி உன் தவத்தை கலைச்சிட்டுப் போக போறா பாரு!" என்று பலவாறு கிண்டலுக்கு உட்படுவதும் உண்டு. ஆனால் ஹரி அது பற்றி கவலைப் படுவதில்லை. "சிங்கம் சிங்களாவே போகும் அப்பிடியே தான் இருக்கும் மச்சி!"என்று பீற்றிக்கொள்வதும் ஆர்கட்டில்(Orkut) போன்ற நண்பர்கள் வட்டார வலை தளத்திலும் கூ