Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி.

இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர்.

கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான்.

ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி.

எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை.

விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான்.

"அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான்.

"என்ன மச்சி நீயே இப்டி சொல்லிட்டே! நான் பண்ணது தப்பா?"

"பின்ன? யாரா இருந்தாலும் அவங்க மனசு பூண்படும் படி பேசுறது தப்பு தான் அது decency கிடையாது போய் சாரி கேளு!"என்றான்.

ஒரு வாரம் ஓடிற்று. பிரியாவும் ஹரியும் மௌனம் காதத்னர்.

மற்றொரு நாள் ஹரி அவளிடம் சென்றான்.

"பிரியா.." என்றான்.

"சொல்லுங்க ஹரி ஸார். என்ன வேணும்? என்று மிரட்சியுடன் நோக்கினாள் அவள்.

"என்கூட இனிக்கி மத்தியானம் சாப்பிட வரீங்களா?" என்றான்.

"என்ன ஹரி திடீர்னு கேக்குறீங்க? சரி வர்றேன்." என்று கேள்விக்குறி புன்னகையுடன் விடை அளித்தாள் பிரியா.

அன்று சாப்பிடும் அறையில் பிறந்தநாள் கொண்டாட்டம் ஏதும் இல்லை என்றாலும் தண்ணீர் குடிக்கும் சாக்கிலும் காப்பி பிடிக்கும் சாக்கிலும்,அடுத்த மேசையில் சாப்பிடும் சாக்கிலும் பலரும் ஹரியும் பிரியாவும் சேர்ந்து சாப்பிடும் காட்சியினை கண்டு அதிசயித்தனர்.

வாய் இருந்தது அப்போது சாப்பிட மட்டுமே என்று சாப்பிட்டு கொண்டிருந்தார்கள் இருவரும்.

முதலில் மௌனம் கலைத்தது ஹரி தான்.

"என்ன..மன்னிச்சிடு..பிரியா உன்கிட்ட அன்னிக்கி கடுமையா நடந்துகிட்டேன்.சாரி! நீ..வா.. போ..ன்னு ஸொல்லலாம்ல?"

"பரவால்ல ஹரி ஸார். எதுக்கு இப்போ நீங்க திடீர்னு மன்னிப்பெல்லாம்?"

"ப்ளீஸ் என்ன இனிமே ஹரின்னு பேர் சொல்லியே கூப்பிடலாமே!" என்று ஹரி மறுமொழி கூறினான்.

"நீங்க ஓகே சொன்னா அப்டியே கூப்பிடுறேன் ஹரி;-)!" என்று பட்டென பதில் அளித்தாள் பிரியா.

"சரி சந்தோஷம். பட் வேலை செய்யும் போது வேண்டாம்.பார்க்கிறவங்க ஏதாச்சும் சொல்லுவாங்க."

"ஹ்ம் அப்டியே தங்கள் உத்தரவு."

"நல்லா பேசுற, நல்ல வாயும் ஆடுற ..."

"ஒரு உண்மைய சொல்லணும்னா நான் வேணும்னே இத்தனை நாள் உன்ன திட்டல்ல..
ஆனா வேலை ன்னு வந்துசின்னா நான் அதுல தான் ரொம்ப ஆழமா போய்டுறேன். என்ன பண்றது?"

"எனக்கு தெரியும் ஹரி ஸார் சாரி :-) ஹரி நீங்க work tensionல நெறைய பண்றீங்க அதுனால என் activities உங்களுக்கு பிரச்னையா இருந்தது வாஸ்தவம் தான் என்னயும் மன்னிக்கணும்."

"இருந்தாலும் நான் கொஞ்சம் அதிகாமவே பேசி சாரி திட்டி இருக்கேன்.."

"அய்யோ அது என் நல்லத்துக்காக தானே ..."

"சரி சரி இனிமே நாம ஃப்ரண்ட்ஸ் ஆக வே இருப்போம் என்ன சொல்ற ஹரி?"

இன்ப அதிர்ச்சிக்கு அவ்வளவாகவே பழக்கபடாதவன் ஹரி. எனினும் சுதாரித்துக் கொண்டான்.
நெடுநேரம் போனது கூட தெரியாமல் உணவு உண்டனர் இருவரும்.
சிரிப்பும் ரசிப்பும் கலந்து அன்று நீண்ட மதிய உணவாக போனது அவர்கள் இருவருக்கும்
---------------------------------

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...