Skip to main content
காசுக்கு போட்ட கோஷம்

காலை மணி 9:45. அண்ணா சாலையில் வழக்கம் போல பல் பசையை பிதுங்கி பசை எடுப்பது போல மெல்ல மெல்ல ஊர்ந்து சென்ற வாகனங்கள் அவைகளின்  ஜனத்தொகை பெருகியதை காட்டி கொடுத்தது. ரகு நந்தனுக்கு ரத்தம் கொதித்தது. முன்னை போல நேரம் கழித்து proxy போடும் நிலைமையில் அவன் வேலை பார்க்கும் மத்திய அரசு அலுவலகம் இல்லை. அண்ணா சாலையில் கூட்டம் தள்ளியது. என்னவென்று பார்த்தான் .
"போராடுவோம்! போராடுவோம்!"
"மத்திய அரசே! மாநில அரசே காவேரி தண்ணீரை தர மறுத்த மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமறுத்த மத்திய அரசே! கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!"  மோடி ஒழிக! என்று கோஷம் ஒலித்தது! "ஆமாம் மோடி ஒழிக  நம்மை ஆபீஸ்ல வேலை பார்க்க சொல்லுறான் என்று மனதிற்குள் சொல்லி சிரித்து கொண்டான் ரகு நந்தன்.
"சரி இனிமே பஸ் ஓடாது லேட்டா ஆகும் போல இருக்கே!" என்று சொல்லி அவன்  மேலாளருக்கு  அழைத்துவிட்டு சார்.. என்று இழுத்தான். "தெரியுமய்யா ரோடு ரோக்கோ தானே நானும் அந்த பக்கம் தான் நிக்கிறேன். ஆஃபிஸில் க்கு இன்பர்மேஷன் கொடுத்தாச்சு! ஆபீஸ் முன்னாடி நின்னு கட்சி காரங்க தகராறு செய்யுறாங்களாம், சோ பெர்மிசன் தரேன் மெதுவா வாங்க" என்று சொல்லி துண்டித்தார். "அப்பாடா!  கவலை வேண்டாம்" என்று சொல்லி விட்டு, அவன் வழக்கமாக டீ அருந்தும் ஹோட்டலுக்கு சென்றான். கூட்டம் இருந்தது.  இன்று சற்று துணி கஞ்சியை சேர்த்து குடித்து விட்டது போல கடமை உணர்வு போங்க போலீஸ் வழக்கமாக கடையை அடைக்க சொல்லிக்கொண்டு திமிறிக்கொண்டு சென்றனர். அங்கு வேலை பார்க்கும் நாயர்"கடையே கட்சி கரங்களோடது நாங்க பார்த்துக்குறோம்" என்று அசால்டாக சொன்னார். ஒரு புன்சிரிப்புடன் அங்கு வந்த எஸ் ஐ சரி விடுங்க நாயர் புது பசங்க நம்மளை பத்தி தெரியாது இல்ல  நம்மளுக்கு ஒரு செட் டீ வடை  என்று சொல்லிவிட்டு தொந்தியை தள்ளிகொண்டேய பந்தோபஸ்துக்கு நின்றார். "நாயர் ஒரு டீ!" என்று சொல்லி உள்ளே நுழைத்து கொண்டான் ரகு.
"அட! என்ன ரகுநாதன் சாரே எந்த உள்ளே டைம் ஷீட்டு மெஷின்  தர்ணா செய்யுன்னதோ?"  என்று சொல்லி கிண்டலடித்தார்.
"அட போங்க நாயர், இவனுங்க என்னவோ இன்னிக்கி மறியல் செய்யுறாங்க ன்னு தெரிஞ்சிருந்தா லீவ் போட்டுருப்பேன்!". என்று சொன்னான்.
"எண்டே நாட்டில் தர்ணா போராட்டம் ன்னு சொல்லியாச்சுன்னா இப்பிடி இருக்காது கேரளாவே ஸ்தம்பிக்கும் அவ்வளவு ஸ்ட்ரோங் ஆப்போஸிஷன் இருக்கும் இவிட எல்லாம் ஷோ கட்டுண்ணது" என்று கிண்டலடித்தார். 
"ஆமா! இவங்க எத்ரே வருஷம் காவேரி வெள்ளம் விடணும்னு தர்ணா  பண்ணுது ஆ ஸ்டேடில் கெர்நாடக மக்கள் சவுட்டி கலையின்னாது, ஈ தமிழ் நாட்டில் மக்கள் பிச்சை எடுக்குனது போல டீவீ லேயும் நியூசிலேயும் காட்டி சே அவமானம்!"
 என்று சொன்னார் நாயர்.
"ஆமாம் நாயர் இவனுங்க என்னவோ சொந்த செலவுல போர் போட்டு தண்ணி தர்ர மாதிரி தான் ஓவர் ஸீன் போடுறது. மழை பெய்யுது இவன் பிடிச்சி வேசிக்குறான், ஆறு ஓடுனதான் மணல் கிடைக்கும், அது கூட தெரியாம இப்போ மணலும் கிடைக்காது தண்ணீரும் வராது விவசாயம் போச்சு, என்ன கண்றாவியோ!" என்று சொல்லி சுற்று முற்றி பார்த்தான். பல தரப்பட்ட கட்சி கொடிகள் வண்ணவண்ணமாய் பறந்தன, பைக்கிலும் கார்களிலும் வேன்களுமாக சாலை முழுவதும் ஆக்கிரமித்து கொண்டு நின்றன. எங்கு பார்த்தாலும் ஒரு வித செயற்கை, மைக்கில் கோஷங்கள் சம்பந்தமே இல்லாமல் எதோ டண்லடு ட்ரம்பை வடபழனியில் வைத்து  கிண்டலடிப்பது போல மத்திய அரசு ஒழிக கோஷம் போட்டு கொண்டிருந்தன.
வெயில் பட்ட சில்லிட்ட தண்ணீர் பாட்டில் வேர்த்துக்கொண்டிருந்தது போல பலரின் உடலும் வெயிலில் வியர்வை ஊற்றி கொண்டிருந்தது. கேடயம் போல மோதிரம் போட்ட கைகள் மின்ன வெள்ளை சட்டை போட்ட பல மீசை கறுப்பர்கள். கட்சி கொடி வண்ணத்தில் தலைக்கு கலர் டை அடித்த பல செல் போன் செல்ஃ பி இளைஞர் அணிகள் எப்படா காலேஜ் க்கு கட் அடிக்கலாம் என்று துடியாய் துடித்து கொண்டிருக்கும் இளசுகள். கமிஷனிலேயே கண்ணாக கலெக்சன் செய்து கொண்டிருந்த வட்ட செயலாளர்கள். கோழி பிரியாணிக்கு குவாட்டருக்கு தள்ளு முள்ளு செய்து கொண்டிருந்த கழக குடி மகன்கள்,  குட்டி நகை கடைகள் போல கங்கணம் போட்ட வளையல்களுடன் காளி கோயில் மதில் சுவரில் குந்தி இருக்கும் சுதை பெண் தெய்வங்கள் போல பல மகளிர் அணி கழக கண்மணிகள். தங்கள் டி வி தான் கவரேஜ் காட்டி விட வேண்டும் என்ற வெறியில் மைக்கை உடைவாள் போல சுழற்றி சுற்றி வந்து பிசாசு போல கத்தி கொண்டு ரத்தம் வருமளவிற்கு  மூக்கில் குத்தி தலைவர்களை பேட்டி எடுக்க வந்த பல ரிப்போர்ட்டர் கள்ளமணிகள். எவன் வேணும்னாலும் அடிச்சிக்கிறான் நீ வா ஓரமா வேடிக்கை பார்ப்போம் என்று லத்தியை ஒய்யாரமாக சுற்று கொண்டு புது பெண் காவலர்களை கடலை போட்ட காவல்துறை, முழுக்க மூடிக்கொண்டு கண்கள் மட்டும் தெரியும் படி புது வகை பார்த்தாக்களில் நின்று கொண்டிருந்த ஆபீஸ்  மார்டன் ஆச்சார பெண்கள் பலரும் தங்கள் ஸ்கூட்டியையும் ஆக்டிவாக்களையும் உருமா விட்டு இன்னமும் நின்று கொண்டிருந்தனர். எப்படா  க்ளியர் பண்ணுவீங்க என்று கேட்காத குறையாக ஆம்புலன்ஸ்கள் அலறின. பலரும் சாஸ்திரத்திற்கு விரோதமில்லாமல் தங்கள் செல்லினை நோண்டி கொண்டிருந்தனர்.
இவ்வாறு பல சம்பவங்களையும் பார்த்துக்கொண்டிருந்த   
 சரியாய் போச்சு இவனுங்களை எதிர்த்து இவர்களே கோஷமா, என்று நக்கலடித்தார் பக்கத்தில் இருந்தவர். அப்போது சிலர் கட்சி கொடியுடன் மயங்கி கிடந்த ஒருவரை அவசரமாக அள்ளி தேனீர் கடைக்கு அருகில் கிடத்தினார். என்னாச்சு என்று பரபரப்புடன் அவனை நோக்கினான் ரகு. கலைந்த தலையும் நனைந்த கட்சி கொடி போட்ட சட்டை அணிந்த ஒரு நடுத்தர வயது ஆன் கிடந்தான். கிராமத்திலிருந்து ஆட்களை வேனில் ஏற்றி கொண்டு வந்து கோஷம் போட்டு கொண்டிருந்த கூட்டத்தில் இருந்தவன் என்று தெரிந்தது. உடனே தண்ணீரை பாக்கெட்டிலிருந்து வார்த்து அவன் வாயில் விட்டான் ரகு. டேய் குமரா! டேய் என்னடா இது என்று பதறி போனான். குமரன் அவன் தம்பியின் சிநேகிதன் அவன் ஊர்க்காரன். இங்கு எப்படி வந்தான் என்று புரியவில்லை.
குமாரா என்று கன்னத்தில் தட்டி அடித்து மயக்கத்தை தெரிவித்தான் ரகு. அண்ணே என்று மெல்ல கண்ணை திறந்து பார்த்து விழித்தான் குமரன். டேய் என்னடா இது கோலம்? எதுக்கு டா நீயெல்லாம் இங்க வந்த?என்று கேட்டான் ரகு. அண்ணா ரகு அண்ணா! பசிக்குதுண்ணா! என்று பதில் வந்தது. சற்றும் யோசிக்காமல் நாயர் தட்டில் கொஞ்சம் வடை அவர் வைத்திருந்த சோற்று குழம்புகளை ஊற்றி அவனிடம் கொடுத்து கழிக்கு என்று ஸ்திரமான பார்வையுடன் சொன்னார். கொஞ்சமும் யோசிக்காமல் குமரன் பாய்ந்து வாங்கி கொண்டு சாப்பிட ஆரம்பித்தான்.
அத்தனை சத்தங்களிலும் மெளனமாக நேரம் கடந்து சென்றது.
சற்றே தெம்பு வந்தவனாய் அழுத கண்களுடன் குமரன் சாப்பிட்டு கொண்டிருந்ததை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான். குமரன் அவ்வூர் கோயில் குருக்களின் மகன். குமரன் தாத்தா ஒரு கனபாடிகள். பஞ்சாங்கமும் பார்ப்பார், பல கோயில் கல்யாணம் விஷேஷம் என்றாலும் அவர் தான் வேத காரியங்களை செய்து வைப்பார். நல்ல செல்வந்தராய் வாழ்ந்த குடும்பம்.   அப்போது நல்ல சொத்து ஆனால் குமரனின் அப்பாவுக்கு வேதம் அவ்வளவாக படிப்பு வரவில்லை. ஆனாலும் கொஞ்சம் திறமைசாலிதான் கோயில் கல்யாணம் தேவசம் கார்யமென்று  மற்றவர்களுக்கு உதவிக்கு சென்று கொண்டிருந்தார். நில உச்சவரம்பு சட்டத்தின் படி தாத்தாவின் நிலம் போயின, போராடி பார்த்தனர்  என்றாலும் அவரால் ஊரை ஜெயிக்க முடியவில்லை, இந்த கவலையில் தாத்தா காலமானார் இவர்களை வெறுத்த மற்ற பெரிய மனிதர்கள் சொத்தை தங்களுக்கு தரவில்லை என்று  குமரனின் அப்பாவுக்கு வேலை கிடைப்பதில் தடை செய்தனர்.நல்ல பள்ளியில் படித்து கொண்டிருந்த குமரன் கல்வி தடை செய்ய பட்டது  வறுமையில் தவித்த அவர்களின் வருமானம் அந்த ஊர் சிவன் கோயில் தேங்காய் மூடியில் காலத்தை கழித்தது. குமரன் ரகுவின் அப்பா மூலம் ஒரு மடத்தின் சேர்த்து அவனுக்கு வேத பாட சாலையில் சொல்லி வைத்தனர். அவனும் நன்கு படித்தான்.படிப்பு நன்கு வந்ததினால் அவர்களே ஸ்காலர்ஷிப்பில் பள்ளி செலவையும் வேத பாடத்தினையும் கவனித்து கொண்டனர்.  அவன் அப்பாவுக்கு சற்று நிம்மதி. ஆனால் குமரனுக்கு காலேஜில் இன்ஜினியரிங் படிக்க ஆசை. இடம் கிடைத்தும் அவனால் பணமில்லாமல் படிக்க முடியவில்லை. சரியென்று அஞ்சல் வழி தேர்வில் பீ காம் படித்தான். ராகுவின் தந்தை அவனுக்கு உதவி செய்தார்.   ரகு நந்தன் மத்திய அரசு தேர்வில் படிக்கிறான் என்று தெரிந்ததும் அவனுடன் ஏதாவது கிடைக்குமா என்று பல்வேறு துறைகளில் வேலை தேட தொடங்கினான். அப்போதைக்கு அவன் ராசி அவனுக்கு வேலை கிடைக்க வில்லை, தே சோகத்தில் அவன் அப்பாவும் படுத்த படுக்கையானார். ரகுவிற்கும் அவன் தம்பிக்கும் எப்படியோ எம் பி சிபாரிசு செய்து அவன் அப்பா  வேலை க்கு ஏற்பாடு செய்து விட்டார். டில்லிக்கு சென்று தேர்வில் முடித்து விட்டு இப்போது அவன் தம்பியும் வேலைக்கு அமர்ந்து விட்டான். இடைப்பட்ட நாட்களில் அவனால் குமாரனை தொடர முடியவில்லை. இப்போது அவன் இருந்த நிலைமையில் அவனை பற்றி நினைக்க கூட இல்லை. இப்போதுதான் குமரனை பார்க்கிறான்.
டேய் என்ன ட இது என்னாச்சு ட உனக்கு சொல்லு என்று கேட்டான். அண்ணா என்னன்னா சொல்றது அப்பா போய்ட்டார். நீங்களும் வந்துடீங்க எதனை முறைதான் அப்பாவை நான் தொல்லை பண்றது. வேதம் படிச்சவங்களை மதிக்க இந்த சமூகம் தயாரில்லை. நான் கொஞ்சம் மாரி யோசித்தேன். கோயிலிலே போன வேலைக்கு சேர்த்துக்க பத்து  லட்சம் கேட்கிறா. நா எங்க போவேன்  மெட்றாஸ் வந்தேன் யாரையும் தெரியல்ல. நான் ஏன் கூட வேதம் காத்துக்கிட்டவங்க   நம்பர் வாங்கி வைக்கல. மடத்துக்கு  போனேன் கொஞ்ச நாள் இருக்க சொன்னா. அம்மாவுக்கு நெஞ்சு வலி வந்தது. டாக்டர் கிட்டே காண்பிச்சேன் ஸ்டாண்ட் வைக்கணும் ன்னு சொல்றா. இப்போதைக்கு இருக்கிற ஒரே ஆறுதல் எனக்கு ரயில்வே ல வேலைக்கு சேர கால் லெட்டர் வந்தது நீ சொன்ன எக்ஸாம் தான் அப்போ எழுதினது ஆனா என்கிட்டே கொஞ்சம் கூட காசில்லை. அங்கேயும் லஞ்சம் கேட்டே கொடுக்க முடியாது. ஏன் அங்கே போக கூட காசு கிடையாது என்ன பண்றதுன்னு தெரியல. இங்கே தான் காவேரி க்கு போராட கட்சி காரன் கோஷம் போட்ட 500 ரூபா தரனாம். ஒருத்தன் சொன்னான் நா பிரியாணி சாப்பிட மாட்டேன் அதனால பட்னியாதான்  இருதேன் அவன் 200 கொடுத்தான். அம்மாவுக்கு இன்னிக்கி மாத்திரை வாங்கணும் அதான். என்று கொட கொடவெண்டு குழந்தை மாதிரி அழுதான்.
ரகு நந்தன் தீர்க்கமாக எழுந்தான்.  டேய் நான் இன்னிக்கு லீவு போட்டுட்டேன் அம்மாவை பார்க்க போகலாம் இனிமே இந்த காசுக்கு போடுற கோஷம் வேண்டாம் உழைச்சு பிழைக்கலாம். இனி இந்த பிழைப்பு நமக்கு வேண்டாம் வா! என்று சொல்லி அவன் கையை கொடுத்து தூக்கினான். 

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
Kamini_Yogini 7 காமினி_யோகினி 7 எஸ் பி ஸ்வாமிநாதன் கொஞ்சம் ஆடித்தான் போனார். அடேயப்பா! என்னய்யா இது? இந்த ஆசிரமன்தான் இவங்க எட் ஆபிஸா? என்றார் ஆச்சரியம் தாளாமல் இல்ல சார்! இது இவங்களோட தமிழ்நாடு பிராஞ்சு ஆபீஸ் சார் .எட் ஆபீஸ் மைசூரில் இருக்குது சார். என்றாள் கங்கா ஓ அப்படியா! இந்த பிள்டிங்கே  கோடி கணக்கிலே மதிப்பிற்கும் போல இருக்குதே இதுவே மாளிகை போல இருக்குதுன்னா அப்போ அங்கேனே? சொர்க்கம் போல இருக்கும் சார்  அதோ அங்க பாருங்க! என்று கங்கா சுட்டி காட்டிய திசையில் படிய வாரிய தலை, கொஞ்சம் மாநிறம். நரைத்த திருத்தப்பட்ட மீசை தாடி. அகலமான நெற்றியில் குங்கும பொட்டு.  இளம் சிவப்பு நிற வெட்டி அதில் வெள்ளை பச்சை நீல கரை கதர் சட்டை வைர மோதிரம் பிரேஸிலேட் மின்ன வேட்டை நாய் போல கத்தி கொண்டிருந்த சேகரமூர்த்தி தென்பட்டார். பல பேர் அங்கு பளிங்கு தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதில் பலரும் வட நாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் என்று அவர்கள் முகத்தை பார்த்த உடனே தெரிந்து கொண்டனர் போலீசார். பலர் பெரிய ரோஜா தோட்டத்தினை செப்பனிட்டு கொண்டிருந்தனர். வானளா...