Skip to main content

KAmini_Yogini 3

காமினி யோகினி 3

எ சி பி சுவாமிநாதன் களைப்புடன் தன் நாற்காலியில் சாய்ந்தார். 48 வயது ஆனாலும் அவரது கட்டு மஸ்தான உடலும்  நரைக்காத மீசையும் இன்னமும் அப்படியே இருந்தது. வயதானாலும், இத்தனை மோசமான பணி பளுவிலும் அவரது தலை நரைகாதது அவரது அத்ரிஷ்டம் என்றே சொல்ல வேண்டும்.  அன்று மின்சாரம் வரவில்லை ஆதலால் ஏ சி வேலை செய்யவில்லை.
ஏட்டு யோவ் ஏட்டு என்று பலமாக கத்தினார். விறைப்பாக சல்யுட் அடித்து ஒரு பெண் காவலர் உள்ளே வந்து நின்றார்.
குட் மார்னிங் சார்! இன்ஸ்பெக்டர் கங்கா சார் ஸ்பெஷல் பிராஞ்ச் கிரிமினல் சார்!" என்று விறைப்பாக ஒரு சல்யூட் வைத்தாள்.
என்னது நீ கிரிமினல் ஆ என்று களுக் என்று சிரித்து விட்டார் சுவாமிநாதன்.
சாரி சார் வந்து ஸார் கிரைம் பிராஞ்ச் என்று சொல்ல வந்தேன் சாரி  சார் என்று இளித்தாள்.
நாசமா  போச்சு நம்ம டிபார்டுமெண்டு! ஏம்மா கங்கா! எத்தனை முறை சொல்லுறேன்,  தினமும் இப்படி சல்யுட்டு வேக்கதேன்னு. ஆனாலும் நீ இதே தப்பு செய்யுறே. இந்த லட்சனதிலேயே இன்ஸ்பெக்டர் வேற ஆகிட்டே. போகட்டும் அந்த பேனை போடும்மா என்றார்.
அவள் செல்லும்போது அவளை தன்  பார்வையால் அவளை எடை போட்டார்.
சுமாரான அழகு , பெண்களுக்கு ஏற்ற உயரம், சற்று பருமனான உடல் வாகு. சற்று உடல் எடை போட்டு இருந்தது. கேஸ் விஷயங்களில் கொஞ்சம் பழம் தின்று கோட்டை போட்டவள் என்று தெரியும். கல்யாணம் ஆகவில்லை ஆனால் அதை போன்ற தோற்றம்.  மொத்தத்தில் சொல்ல போனால் நடிகை கோவை சரளா மாதிரி இருந்தாள்.உள்ளே பர்மிச்சன் கேக்காமல் வந்ததும், என்ன டிபார்டுமெண்டு என்று சொல்ல தெரியாமல் விழித்ததும் அவளுக்கு கொஞ்சம் ஐ கியூ கம்மி என்று தெரிந்தது. ப்ரமோஷன் வேண்டுமென்று காசை தள்ளி விட்டு வந்திருக்க வேண்டும். எதற்கும் உதவாது என்று விட்டு தொலையாமல் இந்த பெண்ணை கிரைம் பிரான்சு வரை கூட்டி கொண்டு வந்து விட்டார் இந்த கமிஷனர் . இதில் மந்திரி ரெகமண்டேசன் வேறு.ஆனால் சொன்ன வேலையை செய்வதில் கெட்டிகாரி. ஒரு தகவல் வேண்டுமென்றால் அதனுடன் பல புது தகவல்களையும் திரட்டி தருவதில் கில்லாடி. இதனாலேயே இவள் முட்டாளா அல்லது முட்டாள்தனமாக தன்னை கட்டி கொள்கிறாளா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. நிறைய ஆட்கள் செல்வாக்கு. அதில் குறை சொல்ல முடியாது.  நல்ல லட்சணம் நம்ம துறை என்று அவருக்குலேயே ஆயிரம் தர்க்கங்கள்.
இனிக்கி என்னமா கேசு ரிப்போர்டிங் என்று மின்விசிறியின் கீழ் நின்று தலையை மேல்நோக்கி சாய்த்தவாறு கேட்டார் சுவாமிநாதன். கற்று வீசும் சுகத்தினை கண்மூடி ரசித்து கொண்டிருந்தார்.
வந்து சார் அந்த மூணு பொண்ணுங்க ஸெல்ப் மர்டர் கேசுக்காக ஒரு இந்பர்மேசன் தெரியனும் சார். என்று சொன்னாள் கங்கா.
ஓஹோ அதை மர்டருன்னு முடிவு பண்ணியாச்சா, அது என்ன ஸெல்ப்  மர்டர்?
இல்ல சார் அவங்க தனக்குள்ளேயே போட்டி போட்டுகிட்டு கார் ஓடுனாங்க ன்னு ஒரு ஸ்டேட்மெண்டு  பதிவாகி இருக்குதுங்களே அதுனாலே இப்படி சொன்னேன் சார்.
உன் சொந்த கண்டு இபிடிப்பா அது? வழங்கும்! சரி இது வரைக்கும்  எத்தனை பேரு பாடி கிடைசித்து?
மொத்தம் 4 பொண்ணுங்க ஒரு டிரைவர் சார், டிரைவரை பின்னாடி உக்கார வெச்சிட்டு மத்த பொண்ணுங்க மூணு பெரும் மாதி காரை டிரைவ் பண்ணி இருக்காங்க சார். 600 அடி பள்ளத்துல கவுந்து வெடிச்சி சிதறிடுச்சு சார்  காரு. கிடைச்சது 4 பாடி சார்
அப்போ அந்த அஞ்சாவது பாடி எங்கே?
அதான் தெரியல்லை ஸார், ஒரு வேளை கரடி சிறுத்தை இழுத்துகிட்டு போயிருக்கும் சார் வறுத்த கரி வாசம் அதுங்களுக்கு தெரிஞ்சிருக்கும் இல்ல என்று சிரித்துகொண்டு சொன்னாள் கங்கா.
அட ச்சே லொள்ளு பேசாதம்மா! வெடிச்சி சிதறின வண்டியிலே இருக்கிற அத்தனை போரையும் விட்டுட்டு ஒரு பாடியை மட்டும் தூக்கிட்டு பொய் பிரியாணி சாப்பிட போகுதா என்ன?
அப்படி இல்ல சார்
சரி சரி!ஃபயர் சர்வீசு. ரெகவரி ஆளுங்க மலை ஏறுற பசங்க எல்லாரையும் வெச்சி சர்ச்சு பண்ணினீங்களா?
பண்ணினோம் சார் அதுல பதினைஞ்சு வருஷம் முந்தி செத்து போன எலும்பு கூட  கிடைச்சிட்டு 15 நாளுக்கு முன்ன செத்து போன பொண்ணு தான் காணோம்! என்ன இழவோ
செத்தாதானே இழவு! இது இன்னும் கிடைக்கலியே.
ஆமாம் கருமாதி பண்ண கூட முடியாது, சுப்பு வாத்தியாரு கூட புலம்பினாரு.
என்னத்துக்காம்? அவருக்கு பிசினஸ் வரலியேன்னா?
அமாம் சார்! அதுக்கும் கமிஷன் வரும் பாருங்க, அவுங்க பொண்ணு என் அக்க மவன் காலேஜிலே தான் படிக்கிறது, செக்யுரிட்டி பாருங்க.
சரியாய் போச்சு போ! அவன் இவளுக்கு செக்யுரிட்டி யா விளங்கிடும்!
சரி இப்போ நாம அந்த பொண்ணு வீட்டுக்கு போவோம் இன்வெஸ்டிகேஷன் கொஞ்சம் பாக்கி இருக்குன்னு சொன்னயே ரெண்டு பெறுமா போவோம். போய் வண்டியை எடுக்க சொல்லுங்க. அன்று சொல்லி கிளம்ப ஆயத்தமானார் சுவாமிநாதன்.

வண்டி நேரே காமினி சுகுமார் எஸ்டேடுக்கு சென்று கொண்டிருந்தது. செத்து போன மற்ற மூன்று பெண்களின் உடல்களும் அந்த டிரைவர் சடலமும் இருக்க காமினியின் சடலம் மட்டும் ஏன் காணமால் போக வேண்டும்  என்ற கேள்வி மீண்டும் மீண்டும் அவர் மூளையை அரித்து கொண்டிருந்தது. செத்து போனவர்கள் எல்லோரும் பெரிய இடத்து பெண்கள்.சாதாரண விபத்து என்று எடுத்துகொண்டாலும்இல்லை பொது ஜனத்தில் யாரேனும் செத்து போனாலே காவல் துறையில் கேள்வி மேல் கேள்வி ஏழும்.செத்து போன இந்த நால்வரும் பெரிய புள்ளிகள் .ஆனால் இந்த மூன்று பெண்களுடைய பெற்றோர்களும் வேறு வேறு தொழில் செய்பவர்கள் அதை வைத்து பார்க்கும் போது இது சொத்து தகராறோ அல்லது தொழில் போட்டிகாகவோ நடந்த திட்டமிட்ட கொலையாக இருக்கலாம். ஆனால் யாருக்காக வைத்த கன்னி இது, அல்லது இது ஓர் விபத்தாகவோ கூட இருக்கலாம். இப்படி எண்ணி கொண்டே சென்ற சுவாமிநாதனை கங்கா பின் இருக்கையில் இருந்து
சார்! அவங்க வீடு வந்திருச்சு என்று அவர் நினைவை கலைத்தாள்.

 அத்தனை பெரிய வீட்டில் என்றும இல்லாத சோகம் கப்பி கொண்டிருந்ததை சுவாமிநாதன் எளிதில் புரிந்து கொண்டார். உள்ளே இருவரும் சென்றனர்.
பல மொபைல் கைபேசிகள் அங்கு அலறி கொண்டிருந்தன. அவைகளை அங்கிருந்த அலுவலக மானேஜர் எடுத்து பேசி கொண்டிருந்தார்.  வேலை காரர்கள் அனைவரும் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார்களே அன்றி யாரும் பேசிக்கொள்ளவில்லை. அனைத்தும் இயந்திரகதியில் ஒரு வகை மௌனமாகி இருந்தது. அவரது மேலாளரிடம் தான் வந்திருப்பதாக சொல்லி அவரை பார்க்க அனுமதி கேட்டார். சற்று நேரத்துக்கு எல்லாம் அவர்களை மாடிக்கு வர சொல்லுவதாக மேலாளர் சொன்னார்.

ரமேஷ் மிகவும் சோர்வுடன் காணப்பட்டார்.  வசந்தி அழுது அழுது கண்கள் வீங்கி கிடந்தாள். சுகுமார் அவர்களுக்கு அருகில் படுத்து கொண்டிருந்தான்.
யாருமே சரியான மன நிலையில் இல்லை என்று புரிந்து கொண்டனர் இருவரும். சுவாமிநாதன் வருகையை தெரிந்து கொண்ட ரமேஷ் அவரை உட்காருமாறு சைகை காண்பித்தார்.
உங்களை தொந்தரவு பண்ணுறதுக்கு மன்னிக்கணும்
பரவா இல்லை சார்! உங்கள் கடமை அதை செய்ய வந்துருக்கீங்க! ஏதாவது தகவல் தெரிஞ்சிதா?
இன்னமும் உங்கள் மகளை பதிதின தகவல் கிடைக்கல்லை சார்! இன்னைக்கு டி என் ஏ டெஸ்டு முடிவு தெரிஞ்சிடும். உங்கள் மகள் பத்தின தகவல் வந்த உடனே சொல்லிடுவோம்.
அம்மா உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்க?
எனக்கு யார் மேலேயும் சந்தேகம் இல்லை. அவளுக்கு ஜாதக விசேஷம் போய்ட்டா! என்று விசும்பலானார் அவர்.
ஸார்! அப்படி சொல்லாதீங்க. எதுவும் நடக்கலாம், நல்லதே நம்புங்க!
ஆமாம் சிவா சுவாமி எனக்கு சொல்லி இருக்கார். நல்லதையே நினைத்து தான் நானும் நம்பிக்கயோட இருக்கேன். ஆனால் விதின்னு ஒன்னு இருக்கே! இருந்தாலும் என்னோட குரு எனக்கு ஒரு வழி காட்டுவார்ன்னு நம்பிண்டு இருக்கேன், இல்லைன்னா இது  மனசை தேத்திக்கணும். ஆமாம் மத்த எல்லருடைய டெஸ்டு ரேபோர்டும் வந்திடுச்சா? என்று கேட்கவும் எஸ் பியின் போன் சிணுங்கவும் சரியாக இருந்தது.
சொல்லுங்க நான் தான் பேசுறேன்.
என்ன ஜி ஹெச்சா...டாக்டரா? அந்த டி என் ஏ ரேபோர்த்டு, ஓஹோ அதை பத்தி பேசணும்னா
சரி இனிக்கி வரேன், என்ன அர்ஜண்டா? சரி...ரமேஷ் சார் விட்டிலேயே தான் இருக்கேன்..அப்போ நீங்களே இங்கே வந்துடுங்களேன். என்று சொன்னார் அப்போது ரமேஷ் அவர்களின் பார்வை பூஜை அறைக்கு சென்றது..பட பட வென்று தீபத்திளிரிந்து பொறி பறந்தது. சுவாமிகள் படதிர்க்க்கு நேர் எதிர் பூஜை மணிகள் தொங்க விட பெற்றிருந்தன, அது தானாகவே அசைந்து ஓசை எழுப்பியது. "ரமேஷ் தம்பி ஒன்னுக்கு இனி  நல்ல விஷயம் நடக்கும், மனம் தளராமல் இருங்க!" என்று ரமேஷ் காதின் அருகே ஒரு குரல் கேட்டது. ரமேஷ் பரவசம் ஆனார்!
----------------------------------------------------------------------------------------------------------------
நாம் இன்றைக்கு 15 முன்னால் பயணம் செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம். நன்றாக சொல்ல போனால் காமினி பெரிய பெண்ணாக ஆனதின் காலத்திற்கு கூட பயணம் மேற்கொள்ள வேண்டி வரும்.முதலில்
ரமேஷ் காமினியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பொருட்டு தொட்ட பெட்டா பயணிகள் விடுதிக்கு பேசி அவர்கள் அங்கு தங்கி மதிய உணவு உண்பதற்கும் பிற இடங்களை சுற்றி பார்ப்பதர்க்கான ஏற்ப்பாடுகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு ஏற்பாடுகளை செய்து டிரைவர் குமாரசாமியின் வரவுக்காக காத்திருந்து விட்டு அவன் வராமல் போகவே, பூஜை செய்ய சென்று விட்டார். ஆனால் குமாரசாமியின் வண்டி நடு வழியிலேயே கார்புறேடரின் லைன் பழுது ஏற்பட்டு படுத்து விடவே, யாவன் நிலைமையை கூற, காமினி அவனை கடிந்து கொள்கிறாள், நேரமாக ஆக, அவர்களின் பொறுமை போகிறது, உடனே கீர்த்திகா அவளது அண்ணனுக்கு பேசி அவர்களது நிலைமை பற்றி சொன்னால், அவன் உதவுவான் என்று கூற அவர்களும் அந்த யோசனைக்கு உடன் படுகின்றனர். அவள் அண்ணன் ஸ்ரீ சம்பத் குமார சுவாமிகளின் சீடன் என்பதும் அவன் இங்கு இருக்கும் ஆசிரமத்தின் கிளை நிர்வாக இயக்குனர் என்பதும் யாருக்கும் தெரியாது. அவன் உடனே ஒரு புதிய வண்டியை ஏற்ப்பாடு செய்து தருகிறேன் என்று அதை  குமராசாமியிடம் சொல்லி விட வேண்டும் என்றும் கூறி அவன் போன்  நம்பரை வாங்கி கொள்ளுகிறான். சற்று நேரத்திற்க்கெல்லாம் ஒரு புதிய காரினை அனுப்பி வைக்கிறான். குமாரசாமியிடம் அவன் வர வேண்டாம் என்றும் புதிய வண்டி ஏற்பாடாகி விட்டது என்றும், இந்த யோசனை அவர்கள் பெற்றோருக்கு பிடிக்காமல் நிகழ்ச்சியினை ரத்து செய்து விட வாய்புள்ளது என்றும் அதனால் குமாரசாமயே தன கார் ரிப்பேர்  ஆகி விட்டதால் வேறு வண்டியை அனுப்பி இருக்கிறான் என்று சொல்லி விட்டு கிளம்புங்கள் என்று சொல்லி விடுகிறான். அது போலவே அந்த கார் டிரைவரும் வசந்தியிடம் நம்பரை காட்டி அவள் நம்பிக்கையை பெறுகிறான். அந்த நான்கு பெண்களும் அந்த வண்டியில் பயணம் ஆகிறார்கள்.
குமார சாமியிடம் விஷயம் தெரிவிக்க படுகிறது அவனும் வேறு வண்டி வந்தால் போதும் என்று இருந்து விடுகிறான். ஆனால் தொட்ட பெட்டாவில் எந்த விடுதிக்கு செல்ல வேண்டும் என்று புதிய டிரைவருக்கு தெரியாது, மேலும் அந்த விடுதி மேனேஜருக்கு அவனை தான் தெரியும். ஆகவே அந்த தகவலை தெரிவிக்க மறுபடியும் சம்பத்திற்கு முயற்சிக்கிறான், ஆனால் போன் கிடைக்க வில்லை.
ஆகவே அவன் நேரே வண்டியை சரி செய்து கொண்டு மீண்டும் ரமேஷ் வீட்டிர்க்கே வருகிறான், விஷயத்தை தெரிவிக்கிறான். ஆனால் ரமேஷிடம் சம்பத் விவரத்தை தெரிவிக்க வில்லை. தான் போகாமல் வேறு எவரோ அவர்கள் நால்வரையும் அழைத்துக்கொண்டு போயிருக்கலாம் என்று தெரிந்தவுடம் நிலைமை  அனைவருக்கும் புரிகிறது. அனைவரும் தங்களுக்கு கிடைத்த தொலைபேசி எங்களை தட்டுகின்றனர். ஆனால் யாருடைய எண்ணும் கிடைப்பதில்லை. எனவே அனைவரும் வண்டியை எடுத்துக்கொண்டு தொட்ட பீட்டா செல்கின்றனர். அங்கே காமினி யோ அல்லது அவர்கள் நண்பிகளோ சென்று அடையவே இல்லை என்று தெரிந்து கொள்கின்றனர்.
அவர்கள் திரும்பி செல்ல கிளம்பும் பொது பொது ஒரு அதிர்ச்சி செய்தி அவர்கள் இருக்கும் இடத்திலேயே கிடைக்கிறது. ஒரு கார் பெரும் விபத்துக்குள்ளாகி மலை சிகரத்தில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து வெடித்து சிதறியதாகவும் அதில் பலர் இறந்திருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் ஒருவன் வந்து சொல்ல சொல்ல, ரமேஷுக்கு என்னவோ போல இருந்தது. உடனே அவர் கிளம்பி அந்த இடத்திற்கு சென்றார். அங்கு பெரும் கூட்டமும் பல போலிஸ் வேன்களும் ஒரு தீயணைப்பு வண்டியும் ஆம்புலன்சுகளும் நின்று கொண்டிருக்கவே நிலைமை பெரும் விபரீதமாக இருப்பது தெரிந்தது. எட்டி பார்க்கும் போது பள்ளத்தாக்கில் புகை மூட்டமாக இருந்ததும், சில மரங்கள் எரிந்து கொண்டிருந்ததும். அதை தீயணைப்பு வீரர்கள் அனைத்து கொண்டிருந்ததும் தெரிந்தது. பக்கத்தில் ஒரு கார் முற்றிலும் எரிந்து போய் கிடந்தது. சில உடல்கள் கருகி கிடந்தது. அதை சில பேர் தூக்கி ஸ்டேச்சரில் வைத்து தொக்கி கொண்டு வந்தனர். உடல் அடையாளம் தெரியாத அளவிற்கு கருகி போய் இருந்தாலும் அதில் உடைகள் மீதம் விட்டு போயிருந்தன. ஒரு உடலை பார்த்த உடன் ரமேஷுக்கு அது காமினியின் தோழி அணிந்திருந்த உடை தான் என்று தெரிந்து போயிற்று. பதறி போன அவர் விவரங்களை அங்கிருந்த காவலர்களிடம் தெரிவிக்கவே அவர்கள் உடனே தேடுதல் வேட்டையை துரித படுத்தினர். ஆனால் காமினியின் உடலை தவிர மற்ற நால்வரின் உடல்களும் கிடைக்கவே மேலும் நிலைமை பரபரப்பானது.
அங்கிருந்த ஒருவர் சம்பவத்தை பற்றி பார்த்ததாக சொன்னது அனைவரையும் குழப்பமடைய வைத்தது.
சார் நான் காரட்டு லாரி ஓட்டுறவன் சார்.ரெண்டு நாளைக்கு ஒருதரம் நான் லோடு ஏத்திகிட்டு கோவைக்கு காய்கரி இறக்கிட்டு வரத்து வழக்கமுங்க . இனிக்கி நீலகிரி  ரோட்டுல வந்துகிட்டு இருந்தப்போ இவங்க காரு வந்திச்சி. அவங்க ஒருத்தர் கூட சும்மாவே இல்ல, ஒரே பாட்டும் கூத்தும் அந்த காரு கவுந்திடுமொன்கிற அளவுக்கு ஒரே ஆட்டம். இந்த பொண்ணுங்க ஒவ்வொருத்தரும் முறை வெச்சி கார் ஓட்டினாங்க. அதை நானும் கிளீனர் பையனும் பாத்துகிட்டு இருந்தோம். அப்புறம் அவங்கள கடந்து நாங்க வந்துட்டோம். ஒருத்தரு வண்டியிலேருந்து இறங்கினாறு சாமியாரு மாதிரி இருந்தாரு. அவரோட ஒரு பொண்ணு இறங்கிச்சி. மறுபடியும் அதே போல கார் வேகமா போச்சி. இப்போ கண்ணாடி எத் தி விட்டு இருந்திச்சி. நான் சாப்பிட ஒரு பரோட்டா கடையிலே நிறுத்திட்டோம். அப்புறம் கொஞ்ச நேரம் ஒரே போலிஸ் வண்டிகளும் அம்புலன்சும் போச்சி நானும் இங்க வந்து பாத்தா, அதே வண்டி இங்கே பள்ளதுலே கவுந்து கிடக்குது சார். என்றான்.
அது முதலே ரமேஷுக்கும் சுவாமிநாதனுக்கும் தலைவலி ஆரம்பித்தது. அவர்களும் இந்த 15 நாட்களாக தேடாத இடமில்லை. காமினியின் உடல் தொலைந்து போனதால் அவள் இருக்கிராள இல்லையா என்ற விவரம் தெரியவில்லை.
மேற்கொண்டு ரமேஷ் அவர்களுக்கு வரும் ரகசிய குரு வாக்கியமும் வரவில்லை. ஆகவே அவர் குடும்பம் முழுவது பைத்தியம் பிடித்தாற்போல மாறினர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------

 சரி இன்றைக்கு என்ன நடக்கிறது என்று போர்ப்போம். ரமேஷ் வீட்டின் சற்று தொலைவில் தான் அரசு தலைமை டாக்டர் வீடு இருந்தது. ஆகவே அவர் வீடிற்கு வரும் முன்னர் அவர்களுடைய பெற்றோரும் அந்த இடத்திற்கு வந்து விபத்து கிறித்து அறிந்து அவர்களது சடலங்களை பெற்று கொண்டு சென்று விட்டனர். எல்லோரிடமும் பெறப்பட்ட மாதிரிகளையும் மற்ற பெண்களின் சடலத்திலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளும் மரபணு சொதனைக்கு அனுப்பபட்டிருந்தது. மாதிரிகளை டில்லியிலிருந்து வந்த மரபணு சோதனை முடிவுகளை பற்றி ஒரு பெரிய வித்தியாசமான முடிவு வந்திருந்தது. அதனை இவ்விரண்டு பேர்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தார். உடனே அவர் சுவாமிநாதனுக்கு பேசினார். பின் கொன்ஞ்ச நேரத்திற்கு அவர் கார் வேகமாக வந்தது.
பரபப்புடன் வந்த அவர் "சார்! ஒரு பெரிய விஷயம் கிடைச்சிருக்கு. செத்து போன அந்த மூணு பெண்களுடைய மரபணுவும் தங்கள் குடும்ப உறுப்பினர்களோட மரபணுவுக்கு ஒத்தே போகல்லை."
அப்படின்னா?
செத்து போனது அவங்க இல்லை!
என்ன?
கங்கா குறுக்கிட்டு, அப்போ பொணத்தை செட் பண்ணி விட்டு அது எரிஞ்ச மாதிரி காண்பிச்சி இருக்காங்களா என்ன?
ஆமாம் முன்னாடியே செத்து போன பாடியை வெச்சு அழகா பிளான் பண்ணி இருக்காங்க. தத்துரூபம அவங்க அப்போ தான் செத்து போனா மாதிரி செட் பண்ணி விட்டு நம்ப வெச்சிருக்காங்க. உடம்பு மொத்தமா எரிஞ்சு போச்சுனா அவங்க மாத்ரிகளை சேகரிக்க முடியாது, ஆனா துரதிர்ஷ்ட வசமா படி எரிஞ்சும் போகல, சொன்ன மாதிரி அவங்களுக்கு 6 பாடியும் கிடைக்கல்ல.

இதுலே ஒரு பெரிய சதியே இருக்குன்னு என்னோட முடிவு. அவங்க அப்போ பண்ணிருக்கிறது ஆள் கடத்தல் அது மட்டும் இல்லை. இங்கே கொலையே நடக்கலே இது ஒரு திட்டம் போட்ட கடத்தல். ஆனா பண்ணினது யாரு.

ரமேஷுக்கு ஒன்றும் புரியவில்லை. சார் என்னனமோ சொல்லுறீங்களே, எனக்கு ஒன்னும் புரியல.
சுவாமிநாதன் சொன்னார் உங்களுக்கு நல்ல சேதி ரமேஷ் உங்க பொண்ணு சகல கடத்த பட்டு இருகாங்க, இன்னமும் அவங்க உயிரோட தான் இருக்கணும். அவங்க மட்டும் இல்ல அந்த பொண்ணுங்க யாருமே சாகல்ல.
அப்போ நீங்க எனக்கு முன்னாடி சொன்னா மாதிரி யாரோ ஒரு ஆசிரமத்து ஆளுங்க இதை செய்திருப்பாங்கன்னு புரியுது. ஆனாலும் அவங்க எந்த நோக்கத்துக்காக செய்து இருக்காங்கன்னு தெரியல்லே. இருக்கட்டும் என்றார் சுவாமிநாதன்.

அப்போ சிவா ஸ்வாமிகள் சொன்னது நிஜம் தான். என்று நினைத்து கொண்டார் ரமேஷ். சில பெரியோர்கள் சொல்வதில் எத்தனை அர்த்தம் இருக்கும் என்று இப்போது தான் புரிந்து கொண்டார் அவர்.

மறந்துட்டேனே என்றாள்  கங்கா.
உங்க பொண் ணை  எதுக்காக தொட்ட பெட்டா அனுப்பி வெச்சீங்க?
அவங்க பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக.
உங்க பொண்ணு பிறந்த நாள் தானே ?
இல்ல அவங்க நாலு பேருக்கும் அன்னைக்கு தான் பிறந்த நாள்.
என்ன என்று அதிர்ந்தனர் மூவரும்.
ஆமாம் அவங்க நாலு பெரும் ஒரே நேரத்துல பிறந்தவங்க.
ஒரே தேதி ஒரே நட்சதிரம், ஒரே ஜாதகம்
என்ன? என்று அனைவரும் ஆச்சரிய பட்டனர்.
ஆமா அதனாலதான் ஒரே நேரத்துல அவங்களுக்கு எல்லாம் ஒன்னு போலவே நடந்திருக்கு.
=================================================================

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
Kamini_Yogini 7 காமினி_யோகினி 7 எஸ் பி ஸ்வாமிநாதன் கொஞ்சம் ஆடித்தான் போனார். அடேயப்பா! என்னய்யா இது? இந்த ஆசிரமன்தான் இவங்க எட் ஆபிஸா? என்றார் ஆச்சரியம் தாளாமல் இல்ல சார்! இது இவங்களோட தமிழ்நாடு பிராஞ்சு ஆபீஸ் சார் .எட் ஆபீஸ் மைசூரில் இருக்குது சார். என்றாள் கங்கா ஓ அப்படியா! இந்த பிள்டிங்கே  கோடி கணக்கிலே மதிப்பிற்கும் போல இருக்குதே இதுவே மாளிகை போல இருக்குதுன்னா அப்போ அங்கேனே? சொர்க்கம் போல இருக்கும் சார்  அதோ அங்க பாருங்க! என்று கங்கா சுட்டி காட்டிய திசையில் படிய வாரிய தலை, கொஞ்சம் மாநிறம். நரைத்த திருத்தப்பட்ட மீசை தாடி. அகலமான நெற்றியில் குங்கும பொட்டு.  இளம் சிவப்பு நிற வெட்டி அதில் வெள்ளை பச்சை நீல கரை கதர் சட்டை வைர மோதிரம் பிரேஸிலேட் மின்ன வேட்டை நாய் போல கத்தி கொண்டிருந்த சேகரமூர்த்தி தென்பட்டார். பல பேர் அங்கு பளிங்கு தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதில் பலரும் வட நாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் என்று அவர்கள் முகத்தை பார்த்த உடனே தெரிந்து கொண்டனர் போலீசார். பலர் பெரிய ரோஜா தோட்டத்தினை செப்பனிட்டு கொண்டிருந்தனர். வானளா...