காமினி யோகினி 2
---------------------------------
காமினி சொல்ல சொல்ல ரமேஷ் இப்போது உண்மையிலேயே பதட்டமானார்.

நிஜமாகவா என்றார், ஆமாம் அப்பா நம்ம வீடு இருக்கிறது மலை மேல. பின்னாடி இருக்கிற பள்ளம் எவ்வளவு அடின்னு உங்களுக்கே தெரியும். அந்த பொண்ணு எப்படி நடந்து நம்ம பின் கட்டு காம்பவுண்டு சுவரை தாண்டி சர்வ சாதரணமாக நடக்க முடியும் என்னவோ படிக்கட்டிலே ஏற்ற மாதிரி பள்ளதிலேருந்து வந்தாள். அவள் நடந்து தான் வந்தாலோ இல்லை பறந்து தான் வந்தாலோ தெரியல. நல்ல வெள்ளை வெளேருன்னு புடவை கட்டிக்கிட்டு உடம்பெல்லாம் ஜ்வெல்லரி போட்டுக்கிட்டு இருந்தா ஜன்னலை கடந்து போகுன்போது என்ன பார்த்தா. அவ சிரிப்பு இன்னும் நடுக்கத்தை தான் குடுக்குது.
ரமேஷ் திடீர் என்று சிரிக்க ஆரம்பித்தார். அவரின் இந்த வித்தியாசமான சிரிப்பு காமினியை எரிச்சல் அடைய செய்தது. என்னப்பா கிண்டல் பண்ணுற மாதிரி சிரிக்கிறீங்க? என்னை நம்பல்லியா?
இல்ல யில்ல மா, நீ நேத்திக்கு நடந்த ஷாக் ட்ரீட் மெண்டு லே இருந்து இன்னும் மீண்டு வரல்லன்னு நினைக்கிறேன். நீ ரொம்ப பயந்து போயிருக்கே அம்மா.
விளையாடாதீங்க அப்பா. உங்களுக்கு சயன்சும் தெரியும் ஆன்மீகமும் தெரியும். அதனால தான் உங்க கிட்ட எதுவானாலும் ஷேர் பண்றேன். நிங்க தான் என் பெஸ்ட் ப்ரெண்ட். நீங்களும் என்னை கிண்டல் பண்ணுற மாதிரி சிரிக்கிறது நல்லாயில்லை.
இல்லம்மா, இதுக்கு சயன்சு வேண்டாம் பொது அறிவே போதும். நேத்து நீங்க எல்லாம் லூட்டி அடிச்சிட்டு தூங்குறதுக்கு மணி 1 அதுவும் நீ பயந்து போய். வேற இருந்த. இது உன் ஆழ் மனசிலே என்னெவோ எண்ணங்கள் எல்லாம் இருந்திருக்கும். அது உன் புத்தியிலே இப்படி ஒரு கட்சியாகி வந்திருக்கு. அர்த்த ராத்திரியில எந்த பொன்னும் தனிய இருக்க பயப்படுவாங்க தான். ஏன் எனேக்கே கூட சில சமயம் இந்த பயங்கள் உண்டு. அதை பத்தி கவலை படவே கூடாது. சரி சரி நீ இதெல்லாம் ஒரு கேட்ட கனவா நினைச்சி மறந்திட்டு நல்லா போய் என்ஜாய் பண்ணு, சந்தோஷமா இரு. போம்மா!
கனவா, ஹ்ம்ம், நீங்க ஒரு முடிவு பண்ணிட்டு பேசறீங்க சரி நான் போயிட்டு வரேன் என்றாள்.
பணம் எடுத்துகிட்டு போம்மா இருக்கு பா கார்டு வேசிகிட்டு இருக்கேன் என்று விடை பெற்றால் காமினி.

மறுபடியும் அவர் வேகமாக ஐ பெடினை தேய்த்து அந்த மின்னஞ்சலை பார்த்தார்.
"மிஸ்டர் ரமேஷ்! உங்கள் மகள் பிறந்த நாள் என்று அறிந்தோம். அவள் நீண்ட ஆயுளுடன் இருக்க நீங்கள் பிரார்த்திப்பதாகவும் அறிந்து கொண்டோம். உங்கள் பிரார்த்தனை முடிந்த அளவு நிறைவேற நாங்களும் இறைவியை வேண்டுகிறோம். இறைவி அவளை பத்திரமாக வைத்து கொள்வாள் என்று அறிகிறோம் - யோகினி மாயா ஆஸ்ரமம் தென் கிழக்கு ஆசியா பிரிவு"
என்று வந்த மின்னஞ்சலை அவர் மீண்டும் மீண்டும் படித்துகொண்டிருந்தார். அவருக்கு எதுவும் புலப்படவில்லை. இந்த பெயருடைய ஆசிரம வாசியை எங்கோ ஒரு முறை பார்த்த நினைவுண்டு ஆனால் யார் அது? எங்கே சந்தித்தோம்? இத்தனை நாள் இல்லாமல் தீடீரென்று இப்படி ஒரு மின்னஞ்சல் வர காரணம் எது என்று ரமேஷுக்கு பிடிபடவில்லை.

அவர் அதனை வைத்துவிட்டு கீழே இறங்கினார். பல தொலை பேசிகள், மின்னஞ்சல்கள், ஞாயிறு திங்கள் என்று கிடையாது. வியாபாரிக்கு என்றும்மே வேலை தான். வேண்டுமென்றால் விடுமுறைதான். அத்தனையும் முடித்து விட்டு அவர் குளித்தார்.அவருக்கு பூஜை அறையின் நினைவு வந்தது.
குளித்து முடித்தவுடன் நேரே பூஜை அறைக்கு வந்தார். அழகிய வேலைப்பாடு அமைந்த பூஜை அறை கதவினை திறந்தார்.விளக்கு ஏற்ற பட்டு சாம்பிராணி ஊதுவத்தி ஏற்றப்பட்டு பூக்கள் அலங்கரிக்க பட்டு அந்த அறை தயாராக இருந்தது.இது அவர் மனைவி வசந்தியின் அத்தனை அலுவலின் மிகுதியிலும் இது அன்றாட ஒரு கடமை. அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு சேயும் முதல் வேலை இது. பின்னர் அவள் தன் அடுத்த வேலைக்கு புத்தியை செலுத்தி விடுவாள்.
அங்கு பல சுவாமிகளின் திரு உருவ படங்களும் மகான்களின் படங்களும் இருந்தது. அவற்றின் நடுவே ஒரு தவயோகியின் சிறிய படம் இருந்தது. தங்க ஃ பிரேம் போடப்பட்டுள்ள அந்த படத்தில் பரட்டை தலையுடனும், தாடி வைத்து ஒரு பழுப்பேறிய வெட்டி கட்டி சம்மணமிட்டு அருள் பார்வையுடன் இருந்த அவர் படத்தில் "ஸ்ரீ சிவா ஸ்வாமிகள் "என்று தங்க நிற எழுத்துகளால் எழுதி இருந்தது. சில ஸ்லோகங்களை படித்து விட்டு அவர் ஒரு மனைபலகையில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டார். தன மனதினை ஒருநிலை படுத்தி தியானத்தில் மூழ்கினார். அரை மணி நேரம் கழித்து அவரின் காதுகளில் ஒரு குரல் கேட்டது. ரமேஷ் தம்பி! காமினியின் ஜாதகப்படி அவளுக்கு பிராண கண்டம் ஆரம்பித்து விட்டது.நேத்தைக்கு அவள் பார்த்த கட்சி நிஜமாகும். ஒரு பட்சத்திற்கு அவளின் மீது கவனம் தேவை. நான் அம்பிகையின் துணை கொண்டு தீயவையினை ஒழிப்பேன். ஆனால் அவள் பிராணன் விதியின் கையில் உள்ளது . ஆனால் அதை மதியினால் வெல்லலாம்.ஜெய் பவானி!"
திடுக்கிட்டு கண் திறந்தார் ரமேஷ். சாஷ்டாங்கமாக அவர் படங்களின் முன் விழுந்து வணங்கினார். சுவாமி நீங்க தான் துணை! என்று கண்ணீர் மல்க வணங்கினார்.
வசந்தி என்று அழைத்தார். காமினி எங்கு என்று விசாரித்தார். விரைவாக வந்த வசந்தி என்னங்க என்ன ஆச்சு? எதுக்கு இவ்வளவு பதட்டம்? என்று விசாரித்தாள்.
எங்கே அவள்? என்று கேட்டார்.
அப்படி என்ன தலை போகிற விஷயம்?முதலில் விஷயத்தை சொல்லுங்க.
வசந்தி, வம்படிக்காதே தலை போகிற விஷயம் தான் உண்மையில். பூஜையில் த்யானம் பண்ணிக்கிட்டு இருந்தேன். சுவாமி இனிக்கி எச்சரிக்கை பண்ணினார். அவள் ஜாதக விசேஷம் வேலை செய்ய ஆரம்பிச்சது. காமினிக்கு இப்போ நேரம் சரியில்லை.

வசந்தி ஸ்தம்பித்து போனாள். ரமேஷ் அவளை அதட்டி கேட்கவே. அவளும் அவளது நண்பிகளும் காரில் சென்று விட்டனர் என்று கூறினாள். சிவ சிவா! சரி சொல்லிட்டு தானே போனா, நம்ம குமாரசாமி தானே காரை எடுத்துகிட்டு போனான்?
இல்லையே யாரோ ஒரு பையன் வந்து தானே கூட்டிகிட்டு போனான்.கேட்டதுக்கு குமாரசாமி அவர் அண்ணா தான் அவர் வண்டி சரியில்லேன்னும் வேற பயனை அனுப்பி வேச்சதாகவும் சொன்னானே. அவர் கால் பண்ணினதா அவரு நம்பர் கூட காமிச்சானே.

என்ன சொல்ற?என்று கேட்பதற்கும் குமாரசாமி அங்கே வருவதற்கும் சரியாக இருந்தது.
மன்னிசிகோங்க அய்யா, வர்ற வழியிலே வண்டி ப்ரேக் டவுன் ஆகி போச்சு, சரி பண்ணிகிட்டு வர்றதுக்குள்ள நேரம் ஆகி போச்சு. அவங்க எல்லாம் தயாரா? என்றான்.

ரமேஷும் வசந்தியும் இடி விழுந்த மரம் போல ஆகினர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------

யோகினி மாயா ஆஸ்ரமம் பெரும் பரபரபாக இயங்கி கொண்டிருந்தது. தீட்சின்ய சுவாமி அவர்கள் தலைமையாக கொண்ட அது வட நாட்டில் பெரும் புகழையும் பெருமையும் கொண்டது. பண பலம், ஆள் கட்டு என்று இருக்கும் ஆசிரமம், முன்பு 10க்கு 10 கொட்டடியில் இருந்தது என்று சொன்னால் யாரும் நம்ப தயாரில்லை. அதன் தலைவர் தீட்சின்ய சுவாமி ராஜர் என்ற சுவாமியார்.தன மந்திர பலத்தால் அனைத்து விதமான பக்தர்களையும் தன்னகத்தே ஈர்த்து கொண்ட ஒரு மனிதர்.ஆறடி உயரம், ஆஜானுபாகுவான தேகம், குங்குமபூ நிற மேனி. பிரகாசமான முகம். அதை அவ்வபோது மறைக்கும் குளிர் கண்ணாடி. காவி முண்டாசுக்குள், கட்டபட்டிருந்த அவரது கரு கரு கேசம். அளவாக வெட்ட பட்டிருக்கும் அவரது தாடி. தலை முதல் கால் வரை ஆண்களுக்கு எங்கெங்கெல்லாம் நகை போடா முடியுமோ அத்தனை இடத்திலும் நகை.ருத்திராட்ச, ஸ்படிக மாலைகள், அளவான நெற்றியில் குங்கம போட்டு, உயர் தர காவி நிற கதர் வேட்டி சட்டை. கூர்மையான பார்வை ஆனாலும் அதில் தெரியும் கம்பீரம்.யாரையும் பேச்சினால் மயக்கும் சாதுரியம். என்று வித்தியாசமான ஒரு ஆன்மீக யோகியாக இருக்கிறார். இன்று இந்தியா மட்டுமல்லாது பல வெளிநாட்டிலும் 15 கிளைகளுடன் பறந்து விரிந்து கிடக்கும் அந்த ஸ்தாபனம். நீண்ட நாட்கள் உயிர் வாழும் இரகசியத்தினை பெரும் விலைக்கு விற்று கொண்டு இருந்தது. பல பணக்காரர்கள் தன விஞ்ஞானத்தினால் கண்டு பிடிக்க முடியாத ஆயுள் விருத்தி ரகசியத்தை பற்றி தெரிந்து கொண்டு தங்கள் ஆயுளை நீட்டிக்க அவரிடம் வரிசயில் நின்று கொண்டிருந்தனர். சுவாமியருக்கே கூட 100 வயதாகி இருக்கும் என்று சொல்வதுண்டு. ஆனால் அவர் தேகம் கட்டுடன் நோயில்லாமல் இளமையுடன் இருப்பதால் தான் அவரின் ஆசிரமத்திற்கு அத்தனை புகழ். இன்று ஸ்வாமிகள் தான் சொன்ன வேலையை செய்ய அவருக்கு வேண்டிய வசதிகளை செய்து தர பல சிஷ்ய கோடிகள் பம்பரமாய் வேலை செய்து கொடுத்திருந்தார்கள். ஆனாலும் அவருக்கு தன் புகழில் மேன்மை அடைய அவர்களால் உதவ முடியவில்லை. சுவாமியாரின் முதல் வியாபாரம் ஆன்மிகம், அதிலிருந்து வரும் முதலை வேறு எங்கும் முதலீடு செய்வது, அதன் மூலம் தன கிளைகளை விருத்தி செய்வது என்று ஒரு ஹை டெக் ச்வாமியாரக இருந்தார். வியாபகம், விளம்பரம், வியாபாரம், என்று இருக்கும் அவர் அரசியலிலும் நுழைய ஆரம்பித்து விட்டார்.
அவரது இன்றைய பிரச்சனை ஒரு வெள்ளை காரன். அவன் தேவையை சிற மேற்கொண்டு செய்வது அவருக்கு மிகுந்த சிரமமாய் போயிற்று. அவர்களுக்கு அதிகபடியான வியாபரத்தினை தந்து விட்டான் அவன்.
அன்று அந்த வியாபாரி அவரை விடாப்பிடியாக பிடித்து கொண்டிருந்தான். . சுவாமிஜி உங்களுக்கு இந்த பிசினஸ் வாங்கி தர ரொம்ப கஷ்ட பட்டு இருக்கேன். எனக்கு அருள் பண்ணி நிறைய பணம் தர வேண்டும் ன்னு கேட்டுகிறேன். அப்படி நமக்கு பணம் கிடைச்சா நம்மளோட கொடி தான் இந்த உலகத்தையே ஆளும். இதன் முதல் 2000 கோடி, ஆனால் நமக்கு லாபம் 1 லட்சம் கோடி, மேற்கொண்டு இந்த என்னை வியாபாரத்தில் நிகர லாபம் பல லட்சம் கொடிகள் பெரும் ப்ளீஸ் ஹெல்ப் மீ.

முதல் தவணையாக எவ்வளவு வேண்டும்?
கிட்ட தட்ட 600 கோடி வேணும்.
எத்தனை நாட்கள் நீ காத்திருக்கலாம் ?
இது ஒரு வருஷ கால காண்டிராக்ட், நாம இன்னும் 4 மாசத்திற்குள் இதை கைபற்றனும். அப்படி மட்டும் செய்துட்டா நம்மை அந்த பெரும் பணக்காரங்க கூட கை கட்டி தான் சேவகம் பண்ணனும்.
கூகிள் ஆப்பிள் போன்ற பெரும் முதலாளிகள் கூடவா?
அவ்வளவு ஏன் சுவாமி பெரிய என்னை நிறுவனங்கள் வைர சுரங்கங்கள் கூட நாம சொல்லுறதை தான் கேட்பாங்க. அரசாங்கம் கூட நமக்கு அடிமையாகிடும்.
ஆனால் நீ சொல்வதில் எனக்கு ஒரு முரண்பாடு.
என்ன சுவாமி.
அரசாங்கம் எப்படி நமக்கு பணியும்.
சுவாமி நாம செய்ய போற திட்டம், ஒரு மாற்று எரிபொருள் திட்டம். இது முதலில் அவ்வளவு ஆதரவு கிடைக்காது. ஆனால் இன்னமும் 50 வருடத்தில் இது தான் எல்லோருக்கும் ஆதாரமாக விளங்கும். அதுக்குள்ள நாம் இந்த வியாபாரத்த கைபற்றி வைக்க போறோம். முதலில் இதுக்கு காப்புரிமை வாங்க போறேன், அதுக்கு மேலே யார் இதை தயாரிச்சாலும் நம்ம கிட்ட அனுமதி பெரனும். அப்போ நமக்கு பணம் கொட்டும். அரசாங்கமா இருந்தா கூட அப்புறம் நாம தான் இராஜா !
அவ்வளவு தானே ரொம்ப சுலபம்! என்னிடம் சொல்லி விட்டால் கடவுளிடம் சொன்னது மாதிரி ஆனால் இதுவும் நம் திட்டப்படி நேரே என் மூலம் செலுத்த இயலாது. நீங்க கொடுக்கிற நன்கொடை போல தான் கணக்குகள் இருக்க வேண்டும் சரியா? தப்பு செய்தால் கூட அதை அசட்ட பூர்வமாக செய்வதே தந்திரம்.
உங்கள் உத்தரவு படியே செய்கிறேன் சுவாமி சரி நீ கிளம்பு. ஒரு மண்டலத்திற்குள் உனக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும் என்று அவர் இருக்கையை விட்டு எழுந்து சென்றார்.
ரொம்ப நன்றி சுவாமி என்று அவர் பிரசாதமான தங்க லிங்கத்தினை பெற்று கொண்டு சென்றான். சில பேருக்கு கல் லிங்கத்தை காற்றில் இருந்து எடுத்து கொடுப்பார். சில பேருக்கு ருத்திராட்சம், சில பேருக்கு அவர்கள் இஷ்ட தெய்வம். சில பேருக்கு தங்க தெய்வ பதுமைகளை கொடுப்பது இவர் வாடிக்கை.
அவ்வளவு பெரிய ஆசிரமம் இருந்தாலும் அவருக்கு சில கோட்பாடுகள் உண்டு, அவர் தரையில் தான் படுப்பார். உயர் நாற்காலியில் உட்கார மாட்டார். அவர் சொல்லும் உணவு தான் பரிமாறப்பட வேண்டும். எப்போதும் உபாசனை மந்திரம் அவர் முனகி கொண்டிருப்பார். மனை பலகையில் தான் உட்காருவார். வேண்டிய அளவு தொலை தொடர்பு சாதனங்கள் இருந்தாலும் அவர் தன மந்திர சக்தி மூலம் தொடர்பு வைத்திருந்தார். அவர் தன் மனை பலகையிலிருந்து சற்று தள்ளி உள்ள ஒரு இண்டர்காமில் பட்டனை அழுத்தினார். ஸ்டெல்லா ஜி உள்ளே வாருங்கள் என்றார்.
என்று அழைத்தார்.

தீட்சன்ய சுவாமியின் காரியதரிசி ஸ்டெல்லா மால்கம் ஒரு வெள்ளைக்காரி. இன்று வரை அமெரிக்காவில் இருந்தாலும் ஒரு ஆன் நண்பர் கூட அவளிடம் நெருங்கியது இல்லை. அவள் ஒரு தூய்மையான பெண் என்று எந்த வித சந்தேகமும் இன்றி தெரிந்து விடும். 36 வயதிலும் சற்றும் தளராத உடல், சுருக்கம் இல்லாத முக களை. பார்பவரை வசீகரிக்கும் மஞ்சள் நிற பூனை கண்கள் என்று மிக வித்தியாசமான படைப்பாக இருந்தாள். அத்தனை அழகான ஒரு பெண்ணை எங்கிருந்து தான் பிடித்தாரோ! அவள் அமெரிக்க செனெட்டு உறுப்பினர் அவையில் அலுவலக அதிகாரியாக இருந்தவள் சுவாமியாரின் மீதுள்ள ஈடுபாடு காரணமாக அவள் அவர் ஆசிரமத்தில் இப்போது அடைக்கலம். எல்லோரையும் போல இவளுக்கும் காவி கதர் சட்டை, வெள்ளை துபட்டா, லொட லொட வென்று இருக்கும் இவள் கால் சராய். அதுவும் பருத்தி ஆடை தான்.
அழகிய அவள் தோற்றத்தில் இருந்த ஒரே ஒரு குறை அவள் தலை மழு மழுவென்று மொட்டை அடிக்க பட்டு இருந்ததே. சுவாமிகளின் ஆசிரமத்தில் இது ஒரு யுனிபார்ம். வெள்ளை கால் சராய், காவி ஜிப்பா, அங்கவஸ்திரம், மொட்டை தலை. நெற்றியில் ரத்த சிவப்பு குங்குமம். இதுவே ஆன்மீகப்பாதை கான தோற்றம் என்பதே அவர் கொள்கை ஆதலால் ஆண் பெண் வித்தியாசம் கிடையாது. சில உயர் குல மாதுகள் இங்கும் வசிப்பதுண்டு ஆனால் அவர்களுக்கு விதி விலக்கு உண்டு. சில பேர் அதற்கு விதி விலக்கு பெற பெரும் பணம் செலவு செய்து இருப்பார். சில பேர் தாந்திரீக உபாசனை செய்வது இங்கு உண்டு ஆதலால் அவர்கள் எல்லோரும் அவர் அவர் விருப்பம் போல இங்கு இருப்பார்.

ஸ்டெல்லா இனிக்கி எத்தனனை பேருக்கு தீட்ஷை குடுக்கணும்? இனிக்கி என்னென்ன ப்ரோக்ராம் ?
சுவாமிஜி மகாராஜ்! இப்படி அழைப்பைதே இங்கு வாடிக்கை
இனிக்கி மொத்தம் 200 சிஷ்யைகள் மற்றும் 600 சிஷ்யர்கள் தீட்சை குடுக்கணும், அவங்களை சவுத் இந்தியாவின் ப்ரஞ்சுகளுக்கு நம்ம உப குரு சங்கம் பாத்துப்பாங்க
மொத்த வசூல் என்ன?
மொத்தம் வசூல் 1 கோடி
என்னம்மா இது, இவ்வளவு கம்மியா இருக்கு?
சுவாமி இதுவே அதிகம், முந்தாநாள் இதை விட குறைவாக தான் வசூல் ஆகி இருக்கு
சரி இவங்க எல்லாம் ஹை ஸ்டேடஸ் பசங்களா? இல்ல சாதரனமானவங்களா ?
புரியுது சுவாமி, இவங்க இப்போ முதல் படிநிலை சிஷ்யர்கள், இவங்க எல்லோரும் ஆளுக்கு குறைஞ்சது 50 பேராவது ரெண்டு வருஷத்துக்குள்ள கொண்டு வரணும், ஆகவே குறைஞ்ச நாட்களில் நாம் அதிக வசூல் பணிக்கலாம் மகாராஜ்.
இதெல்லாம் நம்ம ஆசிரம வண்டிகளுக்கு பெட்ரோல் போட காணுமா ?
சரி மொத்தம் நம்ம ஆசிரமத்தின் வேல்யு எவ்வளவு, கையிருப்பு என்ன?
சுவாமிஜி நம்ம ஆசிரமத்தின் டோடல் வேல்யு 1500 கோடி, வருமானம் வருஷம் 100 கோடி, செலவு 150 கோடி
பத்தாது, பத்தவே பத்தாது, ஸ்டெல்லா உனக்கு தெரியுமா, காசியிலே எதுவுமே இல்லாத பிறந்த மேனியா கிடந்த துறவி நான், எனக்கு அம்மா இவ்வளவு சக்தியும் அருளையும் கொடுதிருக்கிறது எதுக்காக தெரியுமா?
இந்த மொத்த ஜகத்தையும் அவளின் ஆட்சி செய்யணும் என்று தான், அவளுடைய சாஸ்வத புத்திரன் இந்த தீட்சின்ய சுவாமி அதை பரிபாலனம் செய்யனுமின்னு தான். அப்போ எவ்வளவு பாடு படனும். இந்த பிள்ளைகளை எல்லாம் என் வசம் ஆக்கி அவங்களை கட்டுக்குள் கொண்டு வந்து அருள் ஆட்சி பண்ணனும் . சரி இப்போ கையிருப்பு 600 கோடி இருக்குமா? உடனே நம்ம டெமிக்கு கொடுத்தாகணும், அதனால் எனக்கு கிடைக்கும் பணம் எவ்வளவு தெரியுமா? கிட்ட தட்ட 1 லட்சம் கோடி.
அவ்வளவு பணம் தர் சமயம் நம் கையில் இல்லை சுவாமிஜி என்ன பண்ணுறது.
ஹ்ம்ம் தெரியும், அதுக்கு என் கிட்ட ஒரு வழி இருக்கு. நாம இப்போ புதுசா சேர்ந்து இருக்கிற பிள்ளைகளிடம் நாம போகலாம் வா. இன்னிக்கு தானே நம் உலக சீடர் கூட்டம்?
ஆமாம் சுவாமி என்று பதில் அளித்தாள் ஸ்டெல்லா
சரி அந்த கூட்டம் தீட்சை பூஜைக்கு பிறகு நடக்க வேண்டும் தெரிவித்து விடு. நேரம் ஆகி விட்டது. என்று இறுகி இருந்த முகத்தோடு கிளம்பினார் தீட்சின்ய சுவாமி.
சுவாமியின் ஆசிரமத்தில் விசாலமான ஒரு பகுதியில் கட்ட பட்ட பிரம்மாண்டமான ஒரு பூஜை கூடம் இருந்தது. அதில் நடு நாயகமாக ஒரு பெரிய மேடை இருந்தது. தூய வெள்ளை படுதாக்கள் தொங்க, முழுவதும் குளிரூட்டப்பட்ட அறையில் பல்லாயிரம் பேருக்கு மேல் அமர்ந்திருந்தனர். முற்றிலும் இறுக்கமாக நிரம்பி இருந்த அந்த கூட்டத்தில் ஒரு துளி சத்தம் கூட வரவில்லை. சுவாமி வருவதற்கான அறிவிப்பாக வேத கோஷங்கள் முழங்கின. அவர் மெதுவாக நடந்து வந்தார். தீக்ஷை சடங்குகள் நடைபெற்றன. ஒருவர் பின் ஒருவராக அவரிடம் வந்து மந்திர உபதேசம் பெற்றனர்.
சுவாமிகள் அவருக்கு அருளாசி வழங்கினார். அத்தனை பெரும் இளம் பெண்கள், இளைஞர்கள்.அவர்கள் யாவரும் மேலே சொல்ல சொன்னாற்போல தலை சவரம் செய்யபெற்று காவி வெள்ளை அங்கியை உடுத்தி இருந்தனர். ஜெய் சுவாமி மகாராஜ் என்று சொன்ன வுடன் அத்தனை பேறும் ஒரே முழக்கமாக ஜெய் ஜெய் என்று முழங்கினர். அனைவரின் கண்களிலும் ஒரு வெறுமை. அவரயே உற்று நோக்கி கொண்டு இருந்தனர். பிரதம சீடர்கள் அவர்களுக்கு தீர்த்தம் கொடுத்து, அவருக்கு மனிக்கயிரில் கட்ட பெற்ற ஒரு கருமை நிற தாயத்தினை கட்டி விட்டனர்.உடனே அனைவரும் அருள் வந்தது போல ஆடினார். கண்கள் சொருகின. அனைவரும் அனந்த நிலைக்கு எட்டினர்.
இப்போது சுவாமி அவர்கள் எல்லோருக்கும் அருளாசி வழங்கி தன அருள் உரையினை வாசித்தார்.
இன்று ஸ்ரீ யோகா மாயாவின் அடிக்கமலத்தில் சரண் அடைந்துள்ள பிள்ளைகளே! இனி நீங்கள் என்றும் அவளுடைய ஆக்யைக்கு உட்பட்டு அரும் பெரும் சாதனைகளை செய்ய போகிறீர். அனைவரும் மாயாவின் ஜெகதம்பாவின் கட்டளை படி உங்கள் இறை பணியினை மேற்கொள்ள நான் எல்லாம் வல்ல யோகி மாயாவை பிரார்த்திக்கிறேன்.
நீங்கள் அனைவரும் தத்தம் பிரதம உப குருவின் கட்டளை படி தங்கள் ஆன்மீக பணியினை மேற்கொண்டு இந்த யோகி மாயாவின் புகழை பரப்பி இந்த உலகிற்கு தெரிவிக்கும் படி அவள் சார்பாக உங்களுக்கு அன்பு கட்டளை இடுகிறேன்.
ஜெய் ஜோக மாஜா என்று பிரார்த்தித்தார் சுவாமி. அனைவரும் பல பல மந்திர உச்சாடனங்களை ஆரம்பித்தனர். பெரும் தூப புகை அந்த பிரதேசத்தையே சூழ்ந்தது.
சுவாமி அனைவரையும் நோக்கி கொண்டிருந்தார். ஏற்க்கனவே சாமி வந்து ஆடி கொண்டிருந்தவர்கள் மேலும் தீவிரமாக ஆட தொடங்கினர். அனைவருக்கும் பிரசாதங்கள் தர தொடங்கினார். பிரத ம சீடர்கள் ஒரு நகரம் தள்ளு வண்டியை உருட்டி கொண்டு உண்டியல் காணிக்கை வாங்க தொடங்கினர். அனைவருக்கும் சி டீ, புகைப்படம்,ஜெப மாலை என்று வித விதமாக பரி சு பொருட்கள் கிடைத்தது. சந்தொஷமாக களைந்து சென்றனர்.

ஸ்டெல்லா ஜி இன்று முதல் நான் கொஞ்ச நாட்கள் யார் கண்ணிலும் படாமல் தவம் இயற்றனும். எனவே என்னுடைய எல்லா சந்திப்புகளையும் நிகழ்ச்சி நிரல்களையும் ரத்து பண்ணிடுங்க இன்ரூ கழிச்சு 15 நாட்கள் என்னை யாரும் சந்திக்க கூடாது. அதுக்கு வேண்டிய ஏற்பாடு பண்ணுங்க. என்று கட்டளை இட்டார்.
உத்தரவு சுவாமிஜி.
ஆமா சம்பத் சுவாமி எங்கே? என்று கேட்டார்
தெரியல்லியே சுவாமி உங்களிடம் சொல்லி இருப்பார் என்று தானே நினைத்தேன்?
என்ன என்கிட்ட ஒன்னும் சொல்லல்லியே?
சம்பத் இன்னைகுள்ளே என்ன சந்திக்க ஏற்பாடு பண்ணுங்க. சீக்கிரம். என்று சொல்லி விட்டு அவர் கூடாரத்திற்கு சென்றார்.
சம்பத்தின் நினைவு மீண்டும் மீண்டும் வந்து அவரை பாடு படுத்தியது.
மணி சரியாக 10 ஆயிற்று. இன்னும் அரை மணி நேரம் தான். அவளை எப்படியேனும் இன்று வசியப்படுத்தி விட வேண்டும் என்று முடிவுடன் தியானத்தில் அமர்ந்தார். சம்பத்தை நினவு படுத்தினார். மெதுவாக அவன் மனதினை தொடர்பு கொள்ள முயன்றார். அவர் யோகா சாதனையால் உயிர் அற்றவன் தவிர எங்கு வேண்டுமானாலும் அவர் தவ சக்தியை பயன் படுத்தி அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அறிய முடியும்.
ஆகவே சம்பத்தை தேடி அவர் சக்தியை பயன் படுத்தினார். ஆனால் அவர் கண்ட காட்சி அவரை வியர்க்க வைத்தது.
சம்பத் குமாரா செத்து தோலைஞ்சிட்டியா! அட கடவுளே!

-----------------------------------------------------------------------------------------------------------------
சம்பத் குமார் சற்று கருமை யான நிறம் கொண்டவனாக இருப்பினும் மிகுந்த களை பொருந்திய எப்போதும் சிரித்த முகமும் துரு துரு கண்களும் எதற்கும் சுளிக்காமல் வேலை செய்யும் சுறு சுறுப்பும் மொத்தத்தில் அந்த யோகினி மாய ஆசிரமத்தில் ஒரு கதாநாயகனாய் தெரிந்தான். தீட்சின்ய சுவாமிகளுக்கு அடுத்த நிலையில் சம்பத் குமார சுவாமிகள் என்று பலர் காது படவே பேசும் அளவிற்கு அவன் புகழ் பரவி விட்டது. வெளி நாடு வரை செல்லும் செல்வாக்கினை அவன் பெற்றிருந்தான். ஆனால் அனைத்தும் திரை மறைவு தான். வெளியில் அவன் தலை காட்டுவது தெரியாது. பின்னால் ஆட்டுவிக்கும் சூத்திரதாரி போல வேலைகளை செய்வதில் அவன் கை தேர்ந்திருந்தான். அதனை புதிய ப்ராஜெக்டுகளையும் அவனே தான் ஆசிரமத்திற்கு வழங்கினான். மொத்தத்தில் தீட்சின்ய சுவாமிகளின் வலது கரமாக இருப்பவன் இந்த சம்பத்குமார். இவன் பூர்வீகம் தெரியாது ஆனால் அவனும் காசியில் ஸ்வாமிகள் போல யோக சித்தி பெற வந்திருந்தான். சுவாமியார் ஒரு ஸ்ரீ வித்யா உபாசகரிடம் இருந்த பல சூட்சும உபதேசம் பெற முயன்று கொண்டிருந்தார். ஆனால் அவர் நாட்டம் தந்தீரீக உலகிற்கு சென்றது. அதில் உள்ள யோக மாயயைகின் சக்தியை பெற வேண்டி அவர் பல காபாலிகர்கள், அகோரிகளிடம் தவம் பயின்றார். அதில் ஒரு முறை இந்த சம்பத் குமாரை சந்திக்க வேண்டி வந்தது. அவர் இவன் மூலம் பல சித்துக்களை கற்று அவனுக்கே உபதேசம் செய்து அவனுடைய ஜெபம் சித்தியடைய செய்தார். அதன் மூலம் இந்த தீட்சின்ய சுவாமிகளின் சீடனாக நிழல் போலவே திகழ்ந்தான் சம்பத் குமார். மேலும் பல தாந்திரீக யோகிகளை வாக்கு வன்மையால் இவர் வசியம் செய்து அவர்கள் மூலம் தவ வலிமையினை யாசகம் வாங்கி அவர் பெரும் தேஜஸ் அடைந்தார். இது மட்டும் சம்பத் குமாருக்கு சித்திக்க வில்லை. பிறரிடம் கரன்ட் வாங்கி இங்கு விளக்கு எரிக்கும் தந்திரமே இந்த சித்தி. ஆனால் அவர் இதை மட்டும் சம்பத்குமாருக்கு சொல்லி தரவில்லை. இருபினும் பல வகையான யோகிகளை அவர்களின் இயலாமையினை அல்லது அவர்களது பலவீனத்தினை தெரிந்து அதை சுவாமிகளிடம் சொல்லுவதே இவன் பிரதான தோழில். அவர்களை கிட்ட தட்ட சிறை பிடித்து அவர்களின் சக்தியை கிரகிக்கும் மாந்திரீக தந்திரத்தை பிரயோகம் செய்வது தீட்சின்ய சுவாமிகளின் வேலை. இதன் மூலமே தீட்சின்ய சுவாமி பெரும் புகழ் அடைந்ததும் இப்போது உச்சாணி கொம்பில் இருப்பதும். ஆனால் அவருடைய பிரத்தியேகமான ஒரு உபாசனை உண்டு. அதுவே யோகினி உபாசனை. இதை கற்றுக்கொள்ள நினைத்த பலர் அதற்க்கு மேல் ஒரு சக்தி உண்டு என்று நினைப்பதில்லை. சம்பத் குமாரும் இத்தகைய சக்தியை பெற வேண்டியே அவரிடம் தவமாய் கிடந்தான். ஆனால் அவர் ஏனோ அவருக்கு இதை சுலபத்தில் சொல்லி கொடுக்கவில்லை. இதில் அவனுக்கு இருந்த வருத்தம் நாளடைவில் மன கசப்பாக மாறி விட்டது. அத்தகைய உன்னத சக்தியை அவனிடம் சொல்லி கொடுத்து விட்டால் அவன் தன்னையே மிஞ்சி விடுவான் என்று அவனை தன பக்கத்திலேயே வைத்து கொண்டு இருந்தார்.
சம்பத் இப்போது உயிரோடு இல்லை ஆகவே அவருக்கு இப்போது பெரிய சிக்கல் ஏற்பட்டு விட்டதுபோல உணர்ந்தார். தன கண் போய் விட்டால் எப்படி கொடுமையான வலியினை ஒருவன் உணருவானோ அதகிஅய நரக வேதனையில் அவர் இருந்தார். நேரே அவர் நடந்து பெரிய கூடத்தின் வில் கதவினை திறந்தார். பொது மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது- நிர்வாகம் என்ற அறிவிப்பு பலகையை அப்பால் தள்ளி விட்டு வேகமாக அந்த கதவினை இடித்தார்.
காவலன் அவரை கண்டதும் வேகமாக எழுந்து சலாம் போட்ட்டான். கதவை திற என்று சமிக்கை கொடுக்கவே அவன் அந்த பெரும் இரும்பு கதவினை மெதுவே திறந்தான். ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவிற்கே திறந்தான். அப்படி அகால வேளையில் அவன் இந்த கதவினை திறப்பது வாடிக்கை ஆகவே அவன் சுவாமியார் உள்ளே சென்ற வுடன் வேகமாக கதவை மூடினான்

Comments
Post a Comment