Skip to main content
விபரீத விளையாட்டு - 1

 
அருள்மிகு வடபழனி ஆண்டவர் துணை 

திருமண அழைப்பிதழ் 

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அன்புடையீர்,

எல்லாம் வல்ல முருகன் அருளாலே பெரியோர்கள் ஆசியுடன் 
நிகழும் சர்வதாரி வருடம் ஆனி திங்கள், 9 ஆம் நாள் (23.06.2008)அவிட்ட நட்சத்திரம், மிதுன லகினத்தில் (6:00- 7:30 AM) கூடிய சுப முகூர்தத்தில் 

திருவாளர் இராமு - திருமதி வசந்தம்மாள்  

அவர்களின் கனிஷ்ட  புத்திரி
 திருநிறை செல்வி 

இரா. கண்மணி க்கும், 

அமரர் திரு. இராமேஸ்வரன் -திருமதி பார்வதியம்மாள் 

அவர்களளின் கனிஷ்ட குமாரர் 

திரு நிறை செல்வன்  
இரா.செந்தில்வேல் க்கும்

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் சந்நிதானத்தில் 15 இலக்க தூண் அருகில் நடை பெறுவதால் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வந்து மணமகளை வாழ்த்த வேண்டுகிறோம்.

திரு.இராமு,                              
திருமதி வசந்தம்மாள்,
12, தெற்கு ரயில்வே குடியுருப்பு,
பெரம்பூர், சென்னை 600 011.

அவ்வண்ணமே கோரும்

மாப்பிள்ளை திரு. வசந்தன் 
பெண் திருமதி.ரஞ்சனி வசந்தன் 
பேரன்கள் 
ஆகாஷ்,
வருண் .
------------------------------------------------------------------------------------------------------------
"பத்திரிக்கை நல்லா  வந்திருக்கான்னு பாருங்க அக்கா, முருகன் கருணையால இன்னைக்கே பத்திரிக்கை குடுக்க அரம்பிக்க்சிட்டேன் கல்யாணத்துக்கு தயவு செஞ்சி மாப்பிள்ளையோட வந்து எங்க பொண்ண ஏத்துக்கணும் " என்று பணிவான குரலில் சொல்லி நிறுத்தினார் ராமு. 

செந்திலின் அம்மாவுக்கோ பரம சந்தோசம்.பத்திரிக்கையை பார்த்துவிட்டு

"உங்களுக்கு தெரியாததா? நீங்க தான் என் மகனை ஆதரிக்கீரிங்க! உங்க தயவால தான் நாங்க இன்னைக்கி வாழுறோம்.கரும்பில்லாத போங்லா? நாங்க இல்லாத கல்யாணமா? நம்ம வீட்டுல நடக்குற முதல் விசேஷம் இது. நல்ல படியா நடக்க மாரியம்மன் வழிகட்டுவா".

என்று சாமி படத்தின் அருகில் தட்டை வங்கி நகர்த்தினாள் பார்வதி. வசந்தாவிர்க்கு உபசரணைகள் செய்து கல்யாண முறை பற்றி பேசிக்கொண்டனர். செந்தில் சிரித்த முகத்துடன் ராமுவை பார்த்தான்.அவன் அர்த்த புஷ்டியுடைய புன்னகை ராமுவை கதிகலங்க செய்தது.பார்வதியோ மனதில் பூரிப்படைந்தாள் .கடைசியில் தன்  மகன் செந்தில் இப்போது பொறுப்பாக இருக்கிறான்.இத்தனை நாளாக தொலைந்து போயிருந்த.அவனை நல்வழி படுத்தி அவன் விபத்தில் சிக்கியபோது ஆஸ்பத்திரியில் சேர்த்து வயித்தியம் பார்த்து, எவ்வளவு பெரிய பாவி அந்த சண்டாளன் செத்து ஒழிந்த பின், ராமு தான் அவனை ஆதரித்து அவர் உதவியால் ரயில்வே வேலை வாங்கி தந்து, இப்போது அவனுக்கு தன் பெண்ணையும் கொடுக்க போகிறார் என்று பூரிப்பு. ராமு அவர்களை  நெகிழ்ச்சியுடன் பார்த்தாலும் அவருக்கு ஒரு குற்ற உணர்வு இருந்தது.

செந்தில் எனக்கு இந்த கை மாறு  செய்து விட்டதன் மூலம் எவ்வளவு உயர்ந்து போய் விட்டான்?இப்போது அவன் அதற்கும் மேல் தியாகம் செய்ய போகிறான்
இவனுக்கு விஷயம் தெரியுமா? இல்லை தெரியாதா? 
கண்மணி தன் கண்டிப்புக்கு பயந்து எங்கு போய் விழுந்து விட்டாள் ?இவள் அறியாமையையும் அறீவீனமும் திமிரும்  எவ்வளவு பெரிய விலையினை வாங்கிவிட்டது? 

திங்கட்கிழமை காலை முஹுர்த்தம், வடபழனி கோயிலில் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.பட்டு புடவை அது கலப்பு காஞ்சி பட்டோ, கூரை புடவையோ உடுத்தி இருப்பார். வேண்டுதல் கல்யாணம், திருட்டு கல்யாணம், ரெண்டாம் கல்யாணம், ஏழை கல்யாணம் என்று இங்கு நிறைய கல்யாணங்கள் நடைபெறுவதுண்டு.மாப்பிள்ளை பட்டு சட்டை, டர்பன், பட்டு வெட்டி தட்டு கட்டாக, மை பொட்டு  திருஷ்டிக்கு வைத்து, ரோஜா மாலைகளோ, சம்பங்கி மாலைகளோ போட்டு,தக தகவென்று ஜொலிப்பார்.உற்று பார்த்தால் அவருக்கு வயது 40 மேல் இருக்கும். பள்ளி மாணவிக்கு பெண் வேடம் இட்டு மலை பக்கத்தில் சுண்டெலி வைத்தாற்போல அமர வைத்திருப்பர். பாலிய விவாகம் தடுத்து நிறுத்த பட்டது என்று சட்டம் இங்கு செல்லுமா? என்று நமக்கு சந்தேகம் வரும் அளவிற்கு ஜோடிகள் உலா வருவர். குண்டு மணப்பெண், ஒல்லி பிச்சான் மாப்பிள்ளை, சுமார் குமாருக்கு சுப்பர் ஐஸ்வரிய ராய் என்று பல பேர் கேலி செய்வது, புரளி பேசுவது அங்கு கண்கூடு. முஹுர்த்தம் நெருங்கும் சமயத்தில் அங்கு கார் வரமுடியாத அளவிற்கு பெரும் கூட்டம் நிரம்பியது. ட்ரைவரை அவசரபடுதினார் ராமு. செந்திலும், வசந்தனும் அவரை கவலைபடாமல் இருக்க சொன்னான். கோடம்பாக்கம் சாலையில் திங்கள் கிழமை போக்குவரத்து சொல்லவே வேண்டாம். கோவில் வளைவு வரும் பொது மெதுவாக சென்றாலே பல விபத்து ஏற்படும் விரைவாக சென்றால்?
திடீரென்று எதிர்பக்கம் கடக்க முற்பட்ட பெண்ணின் மீது ராமுவின் கார் இடித்துவிட, அவள் சுருண்டு விழுகிறாள். ராமுவுக்கு பதட்டம் மேலிட, "முருகா" என்று அலறுகிறார். அனைவரும் ஒரு வினாடி ஸ்தம்பித்து விடுகின்றனர். செந்தில் உடனே கார் கதவினை திறந்து வெளியே பாய்கிறான். என்னாச்சு என்று கூட்டம் கூடி விட, குழப்பம் மேலிடுகிறது.

"கூட்டம் கூடாதிங்க! நகருங்க!"என்று ஒலிபெருக்கியில் போலீஸ் அலற செந்தில் முகத்தில் மகிழ்ச்சி "அக்கா! அக்கா! அம்மா! அக்க்கா ம் மா!" என்று அலற பார்வதி விழுந்து அடித்து கொண்டு காரில் இருந்து இறங்க, அவளுக்கு துக்கம் தொண்டை அடைக்கிறது.
"செந்திலு யாருடா ரம்யாவா ?"என்று பதற, அவன் அக்கா கிடைத்த சந்தோஷத்தில் திக்குமுக்காடி போகிறான்.

போலீஸ் வந்து கூட்டத்தை கலைத்து, அனைவரும் அந்த பெண்ணை தூக்கி கொண்டு மருத்துவமனையில் சேர்த்துவிடுகின்றனர்.

ராமு விஷயத்தை கேட்கிறார். அவள் சரித்திரத்தை அறிகிறார். வசந்தா, ரஞ்சனி, மாப்பிள்ளை, கண்மணி என்று அனைவரும் குழம்புகின்றனர்.

வசந்தாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது!" கலியாணம் இஷ்டம் இல்லேன்னா சொல்ல வேண்டியது தானே?" என் இப்படி இழுதடிக்கிறாங்க? " அங்க முஹுர்த்தம் தவரிட போகுது ன்னு பாத்தா  இங்க யாரோ ஒரு பொம்பள, பாக்குறதுக்கு லூசு மாதிரி இருக்கு,ரெட் லைட்டு கேசு மாதிரியும் தெரியுது  இவங்க அக்கானு கூதடிகிறாங்க, என்னங்க நடக்குது இங்க?"  என்று எகிரினாள்  வசந்தா.

ராமு 'வாய மூடுடி! இன்னைக்கு இந்த பொண்ணு கிடைச்சிருக்கே இவ யாருன்னு  தெரியுமா? உன் பொண்ணு இப்போ கல்யாணம் பொண்ண இருக்கிறாளே அதுக்கு காரணம்  யாரு தெரியுமா?இல்லேன்னா இவள் வாழ்க்கை சந்தி சிறிச்சு போயிருக்கும் அது தெரியுமா?. உன் பொண்ணு சுத்தமா இல்லையான்னு உனக்கு தெரியுமா? பெருசா பேச வந்துட்டா சரிதான் சும்மா இருடி " என்று பொறிந்தார்.

"வாய மூடுங்க! எதோ உங்க கண்டிப்புக்கு பயந்து மரியாதையை குடுத்துகிட்டு இருந்தேன்.எப்போ கண்டவ கூடயல்லாம் என் பொண்ண சம்பந்த படுத்துனீ ங்களோ இதுக்கு மேலே சும்மா இருக்க முடியாது."

ராமு சட்டென கண்மணியை ஏறிட்டார்."ஏய் சொல்லுடி! உண்மைய சொல்லிடவா?இனிமேலும் மறைச்சா எனக்கு நெஞ்சு வெடிச்சிடும். சொல்லிடவா? "என்று உறுமினார். கண் கலங்கி அப்பாவை பார்த்து பயந்த கண்மணி தலையை அட்டினலே தவிர அவளால் பேச முடியவில்லை.

பார்வதி குறுக்கிட்டு. "இங்க பாருங்க, என் மருமகளை பத்தி என்ன தெரியனுமோ அது எல்லாம் எனக்கு தெரியும். அதுக்காவ நான் வருத்த படல பரிதாப படுரேன். என் பொண்ணு கிடைச்சது உங்க பொன்னாள அந்த சந்தோஷத்துக்கு ஈடே இல்ல.அனாவசியமா அவளோட சுத்தத்தை பத்தி பேச வேண்டாம் தயவு செய்து இந்த விஷயத்த விடுங்க இதோட". என்று சொன்னாள் .

"மாமா சொல்லுங்க இந்த பொண்ணு யாரு?" என்று வசந்தன் கேட்டான்.

"இவ  தான் காணாம போன என் அக்கா ரம்யா ன்னே! ரவி சார் சொன்னாரே? அந்த ஜான் கிட்ட..என்று சொல்ல முடியாமல் துக்கம் தொண்டை அடைத்தது செந்திலுக்கு.கண்ணீர் விட்டான்

அப்படியா? கடவுளே நமக்கு  நல்ல காலம் தான் போல இருக்கு. என்று புன்னகைதான் வசந்தன்.
வசந்தா விட வில்லை, "என்னங்க அசிங்கமாபேசுறிங்க! அப்படின்னா என் பொண்ணு என்ன தத்தாரியா?மரியாதைய பேசுங்க! உங்க பொண்ணாட்டம் இவளை வளத்திருகேனா? தட்டு கெட்டு போச்சா உங்களுக்கு? அவ ஒண்ணும்  மானம் கெட்டவ இல்ல என்றாள் !"

"ஏய் வசந்தா ! ஆமாண்டி அவ மானம் கெட்டவ தான்!" என்று கர்ஜித்தார் ராமு.

சப்த நாடியும் அடங்கி போனது வசந்தாவிற்கு. "வா என்கூட, வசந்த் தம்பி உங்களுக்கும் செந்திலுக்கும் எல்லாருக்கும் தெரியும் இல்லையா?என்று நிறுத்தாமல் சொன்னார்.

செந்திலும் வசந்தனும் ஒரே நேரத்தில்" மாமா தப்பா பேசாதிங்க கண்மணி அப்படி பட்ட பொண்ணு இல்ல இன்னுமா உங்க சந்தேகம் விடல்ல? என்று மறுக்கலானார்கள்.

"சும்மா இருங்க மாப்ள! இங்க பேசினா இருக்கிற மானமும்  போயுடும் ஏய்  வசந்தா! முழு விவரம் சொல்லுறேன் கேட்டுக்க அப்போதான் புரியும் என்று அந்த ஆஸ்பத்திரியின் ஒரு ஒதுக்கு புறமான இடத்திற்கு இட்டு சென்று வசந்தாவிர்க்கும் ரஞ்சனிக்கும் மற்றும் கண்மணிக்கும் நடந்த கதையை உரைக்க ஆரம்பித்தார். 

ராமு,செந்தில்,ரம்யா,கண்மணியின் வாழ்க்கையில் நடந்த விபரீத விளையாட்டு ஒரு சங்கிலித்தொடர். வாருங்கள் பயணிப்போம்.

*****************************************************************************

விபரீத விளையாட்டு  - 2

பெரம்பூர். ரயில் வண்டி பல தொழிலாளர்களால் பிரசவிக்கப்பட்டு நாடெங்கும் ஏன் உலகெங்கும் சேவையை செய்ய பிறந்த வுடன் புறப்பட்டு விடும். சென்னை தான் இதன் அடையாளம் என்றாலும் பலர் இதை சென்று தரிசித்ததே இல்லை. ராமு என்றால் வீட்டிலும் சரி வேளையிலும் சரி கண்டிப்புக்கு பேர் போனவர். அவர் வருகிறார் என்றாலே பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் நாய் கூட கப் சிப் ஆகி விடும். 50 வயதானாலும், நல்ல உடல் அமைப்புடன் இருக்கும் அவர் இரயில் நிலைய Gang-man வேலையை சுறுசுறுப்புடன் செய்வார். நேர்மை வேலை தவறாமை இவர் அடையாளம். அதற்க்கு பல சன்மானங்களும் பெற்றவர். ஆனாலும் வீட்டில் இவர் அதிகாரம் அளவுக்கு மீறியதால் இவர் மனைவியும், மகள்களும் அடியையே தின பரிசாக அடைந்தனர். பெண் என்றால் விளையாடக்கூடாது, படிக்க கூடாது, வெளியே தெருவுக்கு போனால் கெட்டு போவாள் என்று சதா சந்தேகம் கொண்டலைந்தார் ராமு.

கண்மணி பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பசும் கொடி. இவள் சிலசமயம், தேவதை.சிலசமயம் பேய். சில சமயம் வடிவேலுவுக்கு இணை சொல்லும் நகைச்சுவை. பல சமயம் உள்ளூர குடிகொண்ட சோகம்.பல திறமை பெற்றிருந்தாள் கண்மணி.அப்பாவை அவளுக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் அவர் தன்னிடம் நடந்து கொண்ட கண்டிப்போ அவளுக்கு பிடிக்கவில்லை. சுதந்திரமாக இருக்க விரும்புவோர் ஜெயில் கைதி போல நடதபட்டால் துவேஷம் வருவது இயற்க்கை தானே?

கண்மணி படிப்பில் முதல்தரம்.ஆனால் பிஞ்சு பயிரில் வெந்நீர் ஊற்றும் அவள் தந்தை அவளுக்கு வில்லனாக மாறிவிட்டார். விளைவு அடங்காபிடாரி ,சனியன் , செக்குஒலக்க! ​​முண்ட!பீடை தண்ட சோறு! என்று நிதமும் ஒரு பட்டம் பெற ஆரம்பித்தாள்.அவள் துவேஷம் நாட்கள் செல்ல செல்ல அதிகமானது.

ஆச்சரியமா இருக்கு கண்மணி! நீ காசு திருடி திங்கிரியா?உன் படிப்புக்கும் நீ செய்யுற சேட்டைக்கும் சம்பந்தமே இல்லையே என்று வகுப்பாசிரியர்கள் பலதடவை வைவதுண்டு.

கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி போகும் என்பது போல
"இந்த பய்யன் தாண்டி சாம்பாரு","இவன் வேண்டாம், இவன் அதுக்கு சரி வர மாட்டான்" அந்த பையன கவுத்திடு உனக்கு ஐடியா  வேனும்ன என்ன கேளு நான் விட்லேருந்து எஸ் ஆகா சொல்லி தரேன் என்று விடலை வயதில் தன் சக பள்ளி "தொழன் "களை தராசு அளக்கும் அளவிற்கு வந்தாள் கண்மணி.

"அந்த பய்யன் உன்ன டாவடிக்கிரானா? எங்க ஓட போற ? ஒரு கொழந்தையா  இல்ல ரெண்டு மூணு பெதுக்குவியா?"என்று பரிகசிக்கும் அளவிற்கு அவள் தோழிகள் அவளை ஏற்றி விட ஆரம்பித்தனர். ராமுவின் சந்தேகம் அதிகரித்தது.

ஆனால் இவள் படிப்பில் படு சுட்டி. கெட்டிகாரி என்று பிரின்சிபால் சார் பல தடவை ராமுவிற்கு உபதேசம் செய்தார். மனதளவில் எதோ பாரம் அவளை தாக்கி இருக்கிறது, அதனால் இந்த விகரமான குணம் வந்துள்ளது இதை சரி படுத்தினால் கண்மணி தான் பள்ளி முதல் மாணவி என்று எவ்வளவோ உபதேசம் செய்தார். ஆனால் ராமுவிற்கு எப்போதுமே அவள் கெட்டவள் என்று ஒரு முத்திரை குத்தி விட்டார்.

குளவி கொட்டினால் கூட்டு புழு கூட குளவி ஆகிவிடும் என்பது விஞ்ஞானம்.

இந்த சங்கிலி தொடரில் 18 வருடங்கள் கண்மணியை விஷ வசைகளால் கொத்திய ராமு அவளை அளவுக்கு மீறி கண்டிப்பு செலுத்தியது மூலம் அவளை எங்கே கொண்டு நிறுத்தியிருக்கிறார் என்று பார்த்தோம். இவர் இதோடு விட்டவர் இல்லை. கண்ணன் என்பவன் விதியிலும் விளையாட்டு அவருக்கு எமனாக வரும் என்று அவர் நினைத்ததில்லை.

கண்ணன் = பிஞ்சுல பழுத்தது  என்று சொல்லிவிடலாம். குடிகார தந்தை, கள்ள உறவு கொண்ட அம்மா, குப்பத்து வாழ்வு சொல்லி கொடுத்த கேடு கேட்ட பாடம் அவனுக்கு பொய், சூது, திருட்டு தான்! ஒரு புறம் குப்பத்து மக்கள் எல்லோரும் தன பிள்ளை நல்ல நிலை அடைய வேண்டும் என்று அவரவர் பிள்ளைகளை படிக்க வைக்க, இவன் தந்தை கண்ணனை சாராய கடத்தலில் தள்ளி விடுகிறான்.

தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாத வயதில் அவனும் அதை சிற மேல் கொண்டு செய்து கொண்டிருக்கிறான்.ஆம்ஸ்ட்ராங் நிலாவில் ஒரு முறை தான் கால் பதித்தான். ஆனால் போலீஸ் அவன் மேல் எவ்வளவு முறை கால் பதிதிருப்பர்கள் என்று கணக்கே கிடையாது.சிறு வயதிலே பெரும் தவறுகள் செய்ய ஆரம்பித்தான்.திருட்டு, அடிதடி, கொள்ளை என்று அவன் வாழ்வு திரிந்து போன பாலாக நாறியது.

ஒரு நாள் சாராயம் சப்ளை செய்ய வரும்போது போலீஸ் பிடியில் சிக்கினான் கண்ணன். அவர்களிடம் இருந்து தப்பியவன் ரயில் யார்டுக்குள் ஒளிகிறான். ஒரு  பீடி வலித்து கொண்டு கூட்ஸ் வண்டி பக்கம் பதுங்க முற்படுகிறான்.ஒரு வினோதமான சத்தம் அதன் பின் பல பேர் ஒருவரை அடிக்கும் சத்தமும் கேட்க, ஒரு கூட்ஸ் வண்டியின் பக்கம் செல்கிறான்.அவன் அங்கு கண்ட காட்சி அவன் முதுகு தண்டினை சில்லிட வைத்தது. பல மிருகங்கள் ஒரு பூவை கசக்கி முகர்ந்து கொண்டிருந்தது. அந்த பெண்ணின் சத்தம்  அந்த விடலை பையன்கள் அமுக்கி பிடிதுபிடிதுகொண்டிருன்தனர்.அவன் இது போன்ற காட்சியை கண்டதில்லை. யாரோ வழி தவறிய பயணியை சில பேர் தள்ளி கொண்டு வந்து அவளை வன்புணர ஆரம்பித்தனர். அவள் குரல் வலையை நெருக்கி அவள் சத்தம் கேளாமல் இருக்க துணியால் பொத்தி விடுகின்றனர்.

"ஏய் !​​​​--த்த! எவன் டா அது? என்று குரல் கொடுத்து, ஒரு பழய போலீஸ் விசில் வைத்து ஊதுகிறான்.பதட்டம் அடைந்த பொறுக்கிகள் அவளை அப்படியே விட்டு விட்டு ஓடுகின்றனர்.அவள் மயக்கத்தில் கிடந்ததை கண்ட கண்ணன்.பொறுக்கிகள் ஓடுவதை பார்த்து சிரிக்கிறான். அந்த ரயில் பெட்டிக்குள் தாவி ஓநாய் போல பார்க்கிறான்.அவள் மயங்கி கிடக்க்கின்றாள். சட்டென சில மணித்துளிகள் அவன் மனதில் ஒரு எண்ணம் ஓடியது.விகாரமான காட்சியை கண்ட கண்ணன் மனதில் வக்கிரம் குடி கொண்டது.  விட்ட குறையை போக்க அந்த பெண்ணின் மேல் விழுந்து அனுபவிக்க முற்படுகிறான். எதிர்பாராவிதமாக பின்னால் இருந்து "பொளேர்" என்று ஒரு அடி அவன் பின் மண்டையை தாக்கியது. கண்ணன் ஐயோ என்றுஅலறியபடி மயங்கி விழுகிறான்! அவன் பார்வை சூனியமானது!

========================================================================

விபரீத விளையாட்டு -3

ராமு தண்டவாளத்தை சரி படுத்தி கொண்டு வரும்போது இரண்டு போலிஸ் வருவதை பார்க்கிறார். கண்ணனை தேடும் போலீஸ் அவன் அடையாளங்களை சொல்லி விட்டு மேற்கொண்டு தேடுவதற்காக சென்று விட்டனர். ராமு கண்ணன் இங்கு தான் இருப்பன் என்று சந்தேகம் கொண்டு தன வேலையை செய்து கொண்டே கண்காணிக்கிறார். கூட்ஸ் வண்டியில் பின்னாலிருந்து சில விடலை பயல்கள், தலை தெறிக்க ஓடுவதையும் , போலீஸ் விசில் ஊதபடுவதையும் பார்க்கிறார். எதோ ஒரு தப்பு நடக்கிறது என்று நினைக்கிறார். கையில் ஒரு உருட்டு கட்டையுடன் சத்தம் போடாமல் அங்கு விரைகிறார், சுற்று முற்றும் தேட, ஒரு மூலையில் அலறல் முனகல் என்று சத்தம் கேட்கிறது. ஒரு பெண் குரல் அது என்று ராமு ஊகித்து கொண்டு அந்த திசையில் செல்கிறார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைக்கிறது. ஒரு விடலை பய்யன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து கொண்டிருந்தான். சற்றும் யோசிக்காமல் அவன் பின் மிடையில் "பொளேர்" என்று தாக்குகிறார். அலறி கொண்டு சிறுவன் சாய்கிறான். அவனை மடக்கி அவன் லுங்கியை உருவி பின் பக்கமாக அவன் கையை இறுக்கி பிணைத்தார்.

"_  ​​மவனெ! பிஞ்சுல பழுத்த பயலே!இன்னும் மீசை கூட முளைக்கலை இப்போவே உனக்கு மொத ராத்திரி கேக்குதா?என்று வசை படுகிறார்.
அந்த பெண்ணை பார்க்கிறார். அவள் ஆவி அடங்கி போய் விட்டது என்று தெரிந்து கொள்கிறார்.
"ஐயோ! பாவி! கொலைகாரா அநியாயமா ஒரு பொண்ண கெடுத்து கொன்னுட்டியே ஐயோ பாவம் யாரு பேத்த பொண்ணோ என்று கண் கலங்குகிறார்.என்ன செய்வது என்று சுற்றும் முற்றும் பார்க்கிறார். போலீஸ் விசில் ஒன்று அருகில் கிடக்க அதை எடுத்து பல முறை ஊதுகிறார். அதை கேட்ட போலீஸ் கான்ஸ்டபிள்கள் அங்கு ஓடி வருகின்றனர்.நடந்ததை விளக்கி விட்டு ஆம்புலன்சை வரவழைக்க ஓடுகிறார். கண்ணன் கைது செய்யபடுகிறான். பிரேத பரிசோதனை நடந்து வழக்கு பதிய படுகிறது. இறந்த பெண் அவர் துறையில் வேலை பார்க்கும் ஒரு நண்பரின் மகள் அன்று அறிகிறார். குரோதம் கொப்பளிக்கிறது.

கண்ணன் மீது வன்புணர்வு, கொலை குற்றம் பதிவாகிறது.வழக்கு மன்றத்தில் ராமு கண்ணனுக்கு எதிராக சாட்சியம் சொல்கிறார்.
நீதிபதி தீர்ப்பு எழுதுகிறார் சந்தர்ப்பம் மற்றும் சாட்சியாலும் அவன் கொலை மற்றும் வன்புணர்வு செய்தது உறுதியாகிறது. ஏற்கனவே குற்றம் செய்து சிறு தண்டனைகள் பெர்ரிருந்ததாலும் இந்த சிறுவனே இத்தகைய பெரும் குற்றம் செய்திருப்பான் என்று ஊகித்து கண்ணனை குற்றவாளி என்று உறுதி செய்கிறார். ஆனால்  வயது சிறியவனாக இருப்பதாலும், அவன் நலன் கருதியும் அவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 14 ஆண்டுகள் தண்டனை விதிக்கிறார்."
"அய்யா சத்தியமா அந்த பொண்ண முன்னாலேயே கொன்னுடான்ங்க.நான் எந்த தப்பும் செய்யல யா! " என்று சொல்லி சொல்லி அழுகிறான் கண்ணன். ஆனால் சட்டத்தின் காது சாட்சி இல்லாமல் கேட்பதில்லையே! கண்ணன் ராமுவை கருவிக்கொண்டே செல்கிறான்.

"டேய்! நாயே என்ன புடிச்சி உள்ள போட்ட ல்ல! உன்ன மறக்க மாட்டேன் என்னைக்காவது வெளியில வந்து வேசிகிறேண்ட உன்ன! மார்க் போட்டேன் டா! நீ செத்த டா!"என்று கதறிக்கொண்டே செல்கிறான் கண்ணன்.
========================================================

பத்து வருடங்கள் ஓடி விட்டன. ராமு பணி  உயர்வு பெற்று ஒரு நல்ல நிலைமைக்கு வந்து விட்டார். அவரின் ஒரே கவலை கண்மணி  பற்றி தான். ஒரு தந்தை அன்பு செலுத்த வேண்டும், கண்டிக்க வேண்டும், தாங்க வேண்டும், தன தோழன் போல நடத்த வேண்டும். அவளை மறைவில் புகழ வேண்டும்.சலுகைகள் கொடுக்க படலாம், சுதந்திரம் கொடுத்து பொறுப்புகளை சொல்லி தரலாம்.ஆனால் எல்லை மீறினாலோ, அல்லது அளவு குறைந்தாலோ, அதன் விளைவு அபாயமாக இருக்கும். 

அன்று தீபாவளி, இன்றைய சூழலில் தொழில் நுட்பத்தின் வேகம் மனிதனை பண்படுத்துகிறதா பாழ்படுத்துகிறதா என்று சாலமன் பாப்பையா பட்டிமன்றம் கேட்டு தன குட்டி தூக்கத்தில் இருந்து எழுந்தார் ராமு. வசந்தம்மா ஒரு தட்டில் முறுக்கு, அதிரசம் என ஒரு தட்டில் வைத்து அவருக்கு கொடுத்தாள் .

"ஏங்க! உங்க ஒண்ணு விட்ட பங்காளி போன் பண்ணாருங்க நம்ம ரஞ்சனிக்கு ஒரு நல்ல இடம் வந்திருக்காம். பாக்கலாமன்னு உங்களை கேக்க சொன்னாருங்க" என்று ஒரு வித பயத்துடனே சொன்னாள்.

"ஆமாமா! பாக்க வேண்டியது தான். நீயும் இத்தனை நாள் கழிச்சு உருப்படியா ஒரு யோசனை சொன்ன! பாரு டீவில பட்டி மன்றம் வைக்கிற அளவுக்கு நம்ம ஊரு பொண்ணுங்களோட ஒழுக்கம் பாழாய் போச்சு. சட்டு புட்டுன்னு ஒரு கலியாணம் பண்ணிட வேண்டியது தான், என்ன ரஞ்சனி நான் சொல்லுறது ? என்று கேட்டார்.
கண்மணி உடனே துடுக்காக , "அம்மா! அந்த இடம் அக்காவுக்கு வேண்டாம்னா சொல்லிடு, எனக்கு அந்த மாப்பிளைய பேசி முடிச்சுடு நான் அந்த பையன கட்டிக்கிட்டு போயிடுறேன் என்று சொன்னாள்.
"அடி செருப்பால -நாயே! பேச்சை பாத்திய இதுக்கு? கலிகாலம்! ஏண்டி இப்போவே இவ்ளோ கொழுபெடுது அலையுறியே, உங்க அக்கா வயசானப்புறம் என்ன வேலையெல்லாம் பண்ணுவ! என்று சீர ஆரம்பித்தார். 
"ஆமா! அப்படி தான் பேசுவேன் இந்த ஏச் சு பேச்சுக்கெல்லாம் ஒரு முடிவு வேணும். நான் எங்கயோ போய்டுவேன் அப்புறம் என்ன பேச முடியாது இல்ல? அப்போ நான் சுதந்திரமா சௌக்கியமா இருப்பேன் இல்ல?என்றாள்  கண்மணி, "எ வசந்தா! இந்த கேடு கெட்டவளை  பெக்கவா, நீ அரச மரம் சுத்தின?
ரஞ்சனிய பாரு பூனை இது சுத்த பெயா வாச்சிருக்கு சனியன் பீடை! என்று வாய் அஸ்திரம் போட ஆரம்பித்தார். அன்று அந்த வீட்டில் தான் வெடி வெடித்தது. கடைசியில் ஆயிரமாவது முறை ரஞ்சனி தற்கொலை அஸ்திரம் எடுத்தான் பேரில் போர் நிறுத்தம் செய்தார் ராமு.

========================================================================

விபரீத விளையட்டு - 4

கருத்த மேனி, பான் மசாலா நாறும் வாய். அதை விட நாறும் அவரன் பேச்சு அவன் எங்கு பார்க்கிறானோ அங்கு கொடுமை தவிர எதுவும் நடக்காது. கண்ணி வைத்து பிடிக்க கருணா இன்ஸ்பெக்டரை கேளு. என்று சொல்லுவர்.
கருணா ஒரு சந்தர்பவாதி. அவனுடைய எண்ண அலைகள் பரவ விட்டால், கள்ளி செடியும் கருகி போகும். கெட்ட எண்ணத்தின் மொத்த உருவமே கருணா தான். சூது செய்யும் மூளை,தேனொழுகும் பேச்சு, குறுக்கு புத்தி இது தான் அவன் கதாபாத்திரம். அவன் கண்கள் ரெண்டே விஷயங்களை தான் பார்க்கும். ஒன்று பொன் அல்லது பணம். இன்னொன்று பெண்.

எங்கு எங்கு போனாலும் லஞ்சம் தான். இந்தியன் தாத்தா உண்மையில் வந்தால் இவன் குடலை தான் இறக்க வேண்டும். பஞ்சமா பதகன் லஞ்சம் வாங்கி சேர்த்த சொத்துக்கள் ஏராளம். மூன்று பெண்டாட்டிகள், அனால் யாருக்கும் மற்றவரை தெரியாது. அவ்வளவு துல்லியமாக நரித்தந்திரம் செய்வான். ஒரு பொருள் கிடைக்க வேண்டுமெனில் அரசியல் வாதிகள் அவர் மொபில் எண்ணுக்கு தான் தொடர்பு கொள்ளுவர். அத்தனை செல்வாக்கு பெற்ற அவன்.
அவனுக்கு நாய்கள் பிடிக்கும்.ஆனால் அவன் வளர்க்கும் நாய்கள் விலங்கு நாய்கள் அல்ல, மனித நாய்கள்,சொன்னதை செய்யும் நாய்கள். குறைக்க சொன்னால் கடித்து வைக்கும் நாய்கள்.

சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அவன்  பணி இடை மற்றம் பெற்ற போது அங்கும் இவன் சூழ்ச்சி வேலை செய்ய தொடங்கியது. கெஜ போக்கிரிகளை பொருக்கி ஒரு படை திரட்டி அவர்களை தன வசம் வைத்து கொள்ள வேண்டும் என்று சூழ்ச்சி செய்து வெற்றியும் கண்டான். முதல் மாணவனாக தேர்ந்தெடுக்க பட்டவன் கண்ணன். பிஞ்சிலே பழுத்த பழம் எளிதில் வழுக்கி விழும். என்று தெரிந்து வைத்திருந்தான் கருணா.

"உன் ரெகார்டு எல்லாம் சரியில்லையே, நீ நிரபராதி ன்னு சொல்லுற 15 வயசில உனக்கு பொண்ணுங்க கேக்குதா? ​​அந்த---பயல!" அன்று அடிக்க அவன் சூடாக பதிலளித்தான்.
"யோவ் யாருய்யா அனுபவிச்சா? அதுகுள்ளார  அந்த ரயில்காரன் கேடுதுட்டானே! நாங்க எல்லாம் பஞ்ச பசங்கய்யா, எவன் எங்களுக்கு சோறு போடுவான்? அடிச்சி பிடுங்கினா தான் கோழி கூட முட்ட போடும், தானா வந்தத வீணா போக விடுறவன் மனுஷனே இல்ல!"

"ஓஹோ அப்பா உனக்கு நிதமும் சோறு போடணும் இல்ல?"

"ஆமாம் பசிக்குது, சோறு வேணும், என்னைக்கும்!"

"அப்போ அதுக்கு பதில் என்ன தருவ எனக்கு?"

"என்ன சொல்லுறியோ அத எடுத்துகிட்டு வந்து போடுறேன் உன் காலிலே!"

"வாடா ! வா!என் செல்ல நாய்குட்டி! உனக்கு நான் ட்ரைனிங் கொடுக்கிறேன்" என்று அவன் முதல் நாயக பழக்கியது கண்ணனைத்தான்.

கண்ணன் வேலி தாண்டும் வெள்ளடனான், எலும்பு துண்டு போட ஆரம்பித்தான் கருணா. முதலில் கொன்றவனுக்கு தான் பயம் இருக்கும் என்று சொல்லுவார்கள். முன்னரே திருடி பழகிய கண்ணனுக்கு இது ஒன்றும் புதிதல்ல. ஜெயிலர் கருணா சீக்கிரம் கண்ணனை நன்னடத்தை ரிக்கார்டு தயார் செய்து வெளியில் அனுப்பி விட்டான். அவனுக்கு இபோதைக்கு சிறு படை தயார் ஆகி விட்டது. கண்ணன் எங்கு போனாலும் வெற்றி தான், சிறு தவறு கூட இல்லாமல் சாட்சியே தெரியாமல் பல திருட்டுக்கள் செய்ய ஆரம்பித்தார்.காலம் உருண்டது. கருணா மறுபடியும் தன செல்வாக்கை பயன்படுத்தி வேறு பகுதிக்கு இன்ஸ்பெக்டர் மாற்றல் பெற்றுவிட்டான் .

காலம் காலண்டரை விட விரைவாக கரைந்து போனது! இப்போது கண்ணன் என்று சொன்னால் யாருக்கும் தெரியாது, ஏனென்றால் அவனுக்கு ஜான் என்று புது பெயர் சூட்ட பட்டது. பல பொறுக்கிகளுக்கும், தாதாக்களுக்கும், அடியாட்களுக்கும் ஜான் என்ற பெயர் இப்பொது பரிச்சயம். சில பேருக்கு தான் அவன் உண்மை பெயர் கண்ணன் என்று தெரியும்.

ஜான், இப்போது பழகும் தொழில் ஒன்று உத்தமமான தொழில் அல்ல. கீழ்த்தரமானது. இப்போது அவன் ஆள் மயக்கி வேலை செய்துகொண்டிருந்தான்.

பந்தாவான கார், ரே பான் கண்ணாடி, உயர்ந்த உடை, மிடுக்கு ஆங்கில பேச்சு, பர்ஸ் நிறைய கடன் அட்டைகள், அது யாரிடமிருந்து திருடியதோ? புது புது மொபைல் போன் கள் இது தான் இப்போதைக்கு அவன் போக்கு. அவனுக்கு இப்போதைக்கு கொடுக்க பட்டுள்ள வேலை மாப்பிள்ளை வேலை.நடுத்தர வர்க்க சிறு பெண்ணை காதலிப்பது, அவர்களை பரிசுகள் கொடுத்து மயக்குவது, உத்தமன் போல பேசுவது கடைசியில் ஏமார்ந்த பெண்களை விலைமாதர்களாக விற்பது.

"Human trafficking" எனப்படும் உத்தமமான தொழிலை செய்வது தான் அவனுடைய தற்போதைய வேலை. சில முறை வசமாக மாட்ட போக, அவன் செய்த சாட்சியில்லாக் கொலைகள் 2 பரிதாபமாக இறந்தது பெண்கள்  IT ஊழியர்கள். அவனால் பலான தொழிலுக்கு போனவர்கள் கணக்கு 10. ஆக இந்தியாவின் "சீமை கருவேல"தூண்கள்  செய்து கொண்டிருக்கும் பார்ட்டி, பப்புகள், போதை, குடி, சூது போன்ற அறிய கலாச்சார விருட்சங்கள் அவனுக்கு காமதேனு போல மது ,மாது,பணம் என்று அள்ளி தர, அவனுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது இந்த தொழில்.

கொலை, கடத்தல், விபச்சாரம் அவனுக்கு சந்தோசமும், இலாபமும்  தரும் தொழிலாகவும் ஆகி போனது. அவனிடம் ஏமார்ந்த பெண்கள் கடைசியில் கருணாவிடம் தள்ளி விடபடுவார்கள். கருணா அந்த அப்பாவி பெண்களை வருத்தி பிழிந்துவிடுவான். நரக வேதனை  படும்,பெண்கள் ஒன்று சாக வேண்டும் அல்லது அவனை போல தீயவர்களாக உரு மாறவேண்டும். இல்லையேல் பயித்தியம் பிடித்து தெருவில் அலைய வேண்டும்.

விதியின் விளையாட்டு வலியது, அதில் சிக்கும் பஞ்சு பொதிகள் போன்ற  மனித வாழ்க்கையினை அது பிய்த்து எரிந்துவிடும்,அல்லது  அவர்களை சிக்கி சீரழித்து சின்னாபின்னமக்கிவிடும் வலிமையுள்ளது. அதன் அசுர சக்கரங்கள் ஆலை வாய் கரும்பு போல நம் வாழ்க்கையை முறித்து சாறு எடுக்கும். இதனிடமிருந்து மரணம் ஒன்று தான் விமோசனம்.அதன் பாடங்கள் கொடுமையானது. அதை கற்க கடவுள் துணை தான் வேண்டும். ஏன் என்றால் கடவுளே விதிக்கு கட்டு பட்டவரமே?

========================================================================

விபரீத விளையாட்டு - 5

செந்தில் சோறு சென்பதை பார்த்து பல நாட்கள் ஆகியது, சென்னைக்கு வந்த அவன் அக்காவை காண ஆசையுடன் வந்தவனுக்கு கேட்ட செய்தி தான் கிடைத்தது. ஹாஸ்டலில் தமிழ் முதுநிலை படிக்க வந்தவள், அடுத்த வருடம் கலியாணம் நடைபெற இருந்ததையும் பொருட்படுத்தாமல் படிக்க வேண்டும் என்று ஒரே குறிக்கோளுடன் வந்தவள், இன்றைக்கு 3 வாரங்களாக காணவில்லை என்று ஹாஸ்டலில் சொன்னார்கள் . போலீசில் தகவல் கொடுக்க போனபோது அவள் விபச்சாரி என்று வழக்கு பதிவு செய்யபடுள்ளதாகவும் அவளை  பிணை தொகை கொடுத்து ஒருவன் அழைத்து சென்று விட்டதாகவும் மட்டுமே தெரிந்தது. கூனி குறுகி போனவன் என்ன செய்வது என்று தெரியாமல் கையில் இருந்த பணம் எல்லாம் கரைந்து போய்விட கடைசியில் தெருவில் நின்றான். "தா ! சாவு கிராக்கி! சாவனும்ன கடலை வீ ந்து சாவரது!  ஏன் என் ஆடோ ல வீற ! அய்யே ஒத்து! " என்று ஆடோக்காரன் திட்டியதும் தான் அவனுக்கு நினைவு திரும்பியது.

ஊரில் இந்த செய்தியை கேட்டு அம்மா நொறுங்கி போனார்.படிப்பு நிறைய இருந்தும், வேலை கிடைக்க வழியில்லை. நல்ல திறமைசாலியாக இருந்தும் அத்ரிஷ்டம் இல்லை.கையில் காசு இல்லை, சோற்றுக்கு வழியில்லை, குடும்பம் சிதைந்து போனது, பசி அவனை வாட்டியது. மனம் குழம்பி போன நிலையில் அவன் அடுத்து செய்ய நினைத்தது சோறு. பாதி உறிஞ்சி போடப்பட்ட ஒரு தண்ணிர் பாக்கெட்டில் நன்றாக முகம் கழுவினான். கூட்டம் நன்றாக இருந்த ஒரு பெரிய ஹோட்டலில் நலல் சமயத்தில் உள்ளே நுழைந்தான் . அங்கு ஜான் இருக்கும் இடம் காலியாக இருந்தாய் பார்த்து அங்கு அமர்ந்தான். ஜான் பர்சை மேசையில் வைத்திருந்தான்.  அவன் பேச்சு பிறா க்கில் செந்தில் செய்வதை கவனிக்காமல் இருந்தான். மெதுவாக செந்தில் அவன் பர்சை ஆர்டர் செய்வது போல தள்ளி விட்டு. அவன் கவனிக்காமல் இருகிறான என்று பரதன். ஜான் பெசிகொண்டிருந்ததனால் அதை கவனித்து போல தெரியவில்லை. செந்தில் மெதுவாக அந்த பர்சை அவன் பக்கம் தள்ளி அதை காலால் பிடித்து கொண்டு அவன் கைக்கு வருமாறு மடக்கினான். பெரிய திருடன் ஜான், சின்ன திருட்டை கவனிக்காமல் விடுவானா? என்ன தான் செய்கிறான் என்று பார்போமே என்று சும்மா இருந்தான். அதில் இருந்து செந்திலுக்கு கிடைத்தது ஒரு கடன் அட்டை மட்டுமே, இப்பொது அவனுக்கு சங்கடமாக போயிற்று. காசில்லாமல் கடன் அட்டையை என்ன செய்வது? சரி காசு கேட்டால் இதையே கொடுப்போம். தேய்த்து விட்டு திரும்பி வருமுன் ஓடிவிட வேண்டும் என்று திட்டமிட்டான்.ஜான் இப்போது கை கழுவும் இடத்திற்கு போனான். அவன் பர்சில் கடன் அட்டை தவிர ஒரே ஒரு பேப்பர் மட்டும் தான் இருக்கும் என்பது தெரியும். என்ன நடக்கிறது பார்போம் என்று இருந்தான்.

மெதுவாக பர்சை அவன் பக்கம் தள்ளி விட போனான்.ஆனால் மேலும் துழாவி பார்ப்போமே என்று தோன்றியது. அட இது என்ன? ஒரு பேப்பர். அதில் சில எண்கள் பிறந்த தேதி, ஒரு போன் இலக்கம். யோசித்தான். அவன் மூளை வேலை செய்தது.  ஒரு வேளை இவன் பிறந்த தேதியில் பின் எண்ணை போட்டிருப்பானா ? இல்லையென்றால் போன் எண்ணில் ஒன்று பின் எண்ணாக இருக்குமா? அட ஆமாம் இரண்டு நாலு இலக்க எண்கள் ஒரே எண்கள்! கண்டுபிடுதுவிட்டான்  செந்தில்! அவனை பில் போடும் இடத்திற்கு அழைத்தான் பேரர். விரைவாக சென்று அவன் பின்னை அழுத்தினான்! கடவுளே வேலை செய்யணுமே! என்று யோசித்தான். பளிச்! பின் இலக்கம் வேலை செய்தது. கடன் அட்டையை எடுத்துகொண்டு ஓடிவிட்டான் செந்தில்.

ஒரு முறை தவறு செய்து அதில் ருசி கண்டு விட்டால் அதன் பின் மனம் பயப்படுவதில்லை. வெளியே வந்த செந்தில் மூளை புயல் வேகத்தில் வேலை செய்தது. பக்கத்தில் ஒரு காயதிற்கு கட்டு போட துணி ஒன்று கிடந்தது. நன்றாக முகத்தை மறைப்பது போல அதனை கட்டி கொண்டான். பைக் கண்ணாடி ஒன்றில் அவன் முகம் பார்த்தான் அடையலாம் கண்டுபிடிக்க முடியாது என்று தெரிந்தது.

பக்கத்துக்கு ATM மையத்திற்கு நொண்டிக்கொண்டே சென்றான். ATM காவலாளி அவனை ஏற இறங்க பார்த்தான்.
"என்ன சார்! பணம் எடுக்க வந்திங்களா?"
"செந்தில் கொஞ்சம் பயந்தான்  இருந்தாலும் தைரியமாக ஆமா அண்ண்ணே ஒரு சின்ன விபத்து, கட்டு போட்டு அனுபினாங்க. பணம் எடுக்கணும் கண்ணு சரியாய் தெரியல்ல கொஞ்சம் உதவி பண்றிங்களா? என்றான்.
"ஓ ஐயோ பாவம்! வாங்க தம்பி நான் ஹெல்ப் பண்றேன்!"
அடி பட்டிருக்கிறது என்று சொல்லி அவனை நம்ப வைத்தான். அவன் உதவியுடன் விரைவாக அதில் மிச்ச பணம் எவ்வளவு இருக்கிறது என்று சோதித்தான். 1 லட்சம் என்று காட்டியது. அம்மாவுக்கு மற்றும் அவனுக்கு இப்போதைக்கு 50000 போதும் என்று முடிவு கட்டினான். பணம் எடுத்தான்.
காவலாளி ஏமாந்ததை நினைத்து உள்ளுக்குள் சிரித்தான். ஒரு இடத்தில சென்று அவன் வேஷத்தை கலைதான், அந்த அட்டையை வீசி எரிந்து விட்டான்.கை நிறைய பணம் அவனை பார்த்து பல்லிளித்தது. செந்தில் கெட்டவனாக மாறி விட்டான். ஆனால் ஒன்று மட்டும் அவன் கவனிக்கவில்லை. அவனை இரு விழிகள் ஆதி முதல் அந்தம் வரை கவனித்து வந்ததை!

ஜான் கோண வாய் சிரிப்புடன் கருணாவிற்கு போன் செய்தான் "அண்ணே!சந்தோசமான விஷயம் நீங்க கேட்டா மாதிரி நமக்கு ஒரு அறிவாளி எலி நம்ம பொறியில வசம்மா மாட்டிகிச்சி! "

========================================================================

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...