விபரீத விளையாட்டு - 20
செந்தில் கருணா சொல்லியிருந்த வீட்டை கண்டு பிடிக்க நெடு நேரம் ஆனது, போலீஸ் ஜீப் ஒன்று நிற்பதை பார்த்து குழப்பமாய் இருந்தது,
ஒருவேளை வேளை நம்முடைய திட்டம் வெற்றி பெற்றுவிட்டதோ என்று ஒரு நிமிடம் நிம்மதி அடைந்தான். வாசலில் ஜான் நின்று அவனுக்கு செய்கை காட்டி அவனை உள்ளே வரும்படி சொன்னவுடன் அப்படி எதுவும் நடக்க வில்லை என்று எண்ணிகொண்டான். இவர்கள் கண்மணியை என்ன செய்து தொலைத்தார்கள் என்று ஒரு வித அச்சம் பரவியது.
வழக்கத்துக்கு மாறாக ஜானின் முகம் கொஞ்சம் கடு கடுப்பாக இருந்தது. செந்தில் உள்ளே சென்றதும் அவனை கருணா சிரித்தபடியே தொளில் கை போட்டு உள் அழைத்து சென்றான். மறு நிமிடம் அவன் பின் மண்டையில் ஒரு கிரிகெட் மட்டை நன்கு பதம் பார்த்தது.
ரதம் ஒழுக, பின் பக்கம் கைகள் கட்ட பட்டு தரையிலே கிடந்தான் செந்தில். அவன் தலை சுக்கு நூறாக போய்விட்டதை போன்று இருந்தது. நன்றாக கண்களை திறந்து பார்த்தான். அவன் கண்கள் சிகப்பு நிறமாகி மங்கலாக தெரிந்தன. இன்னமும் அவன் நினைவு தெளியவில்லை. ஜான் அவன் முகத்தில் ஐஸ் தண்ணீரை அடித்தான்.
ஊசி குத்தியதை போல வலித்தது.செந்திலுக்கு இப்போதுதான் நினைவு மின்சாரம் போல வந்தது. என்னபா செந்தில் எப்படி இருக்க? என்று கண்ணடித்தான் கருணா?
செந்தில் கொஞ்சம் சுதாரித்துகொண்டான். எதோ தப்பு, கருணா இங்கு தீடீரென கண்மணியை அழைத்து கொண்டு வந்த திட்டமே ஒரு தீடீர் முடிவு, மாறாக ஜான் இதனை நேரம் வேறு விஷயங்களை மனதிற்குள் வகுத்திருக்க வேண்டும் இரண்டும் நடக்கவில்லை, பின் எதோ பெரிய தப்பு நடந்திருக்கிறது என்று நினைத்து கொண்டான்.
செத்த்துகிட்டு இருக்கேன்! இருந்தாலும் சந்தோசமா இருக்கேன் என்று சிரித்தான் செந்தில்.
ஜான் சூடானான். ஓங்கி தன காலால் செந்திலின் வயிற்றில் உதை விட்டான். டேய் செந்தில்! காது கேக்குதா? இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ஊருக்கு போறவன் இங்கே எதுக்கு சுத்திகிட்டு இருக்க?
நான் ஊருக்கு போறதா எப்போ சொன்னேன்?என்று விஷயமாக பார்த்தான்.
சும்மா இரு ஜான்!
செந்தில் எனக்கு ஒரு விஷயம் சொல்லு. அன்னைக்கு நீ என்ன வீட்டுக்கு போக சொன்னியே அப்போ ஜான் எங்க இருந்தான்?
எங்க கூட தான் ரூமிலே!
பொய் நான் வெளியில இருந்தேன். ஏன் உங்க வீட்டுல இருந்தேன்.
சரி சரி செந்தில்! உனக்கு ஷேக்கு நம்பர் எப்படி தெரியும்?
நீங்க தான் ஜானுக்கு கொடுத்திருக்கணும், கொடுக்கல்லியா ?அப்டிதானே ஜான் என்கிட்டே சொன்னான்?
பொய் நீ தான் முதல்லே என்கிட்டே அவன் நம்பரை கொடுத்த?
சரி சரி நீ கொலை பண்ணியே அந்த பொம்பள!அவ சாகிறதுக்கு முன்னால! அவகிட்ட எவ்வளவு நேரம் சந்தோஷமா இருந்த?
யார கொலை பண்ணினேன் எனக்கு தெரியாது
தெரியாது? அவ பேரு சாந்தி என் பொண்டாட்டி!
ச்சே நா எதுக்கு உன் பொண்டாட்டியோட சந்தோஷமா இருக்கணும்? இந்த ஜான் சொல்லி தான் அந்த வீட்டுக்கு போனேன் அதுவும் சிஸ்டம் சரி பண்ணுறதுக்கு தான்.
என்ன சொன்ன? நான் போனேனா? உனக்கு எப்படி அந்த நம்பர் தெரியும்?
நீ தான் கொடுத்த? பின்ன நான் எப்படி அங்க போக முடியும்?
சரி சரி செந்தில்! நீ தானா போகல்ல ஓகே ! உனக்கு நம்பர் தெரியாது ரைட்டு !அது இருக்கட்டும். என் வீட்டிலேருந்து திருடுனியே ஹர்ட் டிஸ்க் அது இப்போ எங்க இருக்கு?
ஹர்ட் டிஸ்க் பத்தி எனக்கு தெரியாது!
பொய் சொல்லாதே செந்தில் இப்போ கண்மணி என் கிட்ட இருக்கா அவள நான் என்ன பண்ண போறேன்னு தெரியாது.பார் என்றான்.
மரியாதைய ஹர்ட் டிஸ்க் இருக்கிற இடத்தை சொல்லிட்டா உக ரெண்டு பேரையும் விட்டுடுவோம் இல்லேன்னா முதலிலே அவள நாசம் பண்ணிட்டு அப்புறம் உன்ன ரொம்ப மோசமா கொல்லுவோம். பாரு அங்க என்று அவன் தலை முடியை கொத்தாக பிடித்து தள்ளினான். ஜான் நான் சொல்லுற அறைக்கு போ!அங்க கண்மணியை அடிச்சி வெச்சிருக்கேன். உனக்கு என்ன வேணுமோ செஞ்சுக்கோ!
வேண்டாம்! ஜான் ஒன்னும் பண்ணிடாதே!அந்த பொண்ணு பாவம்! வேண்டாம் மேல மேல பாவத்தை சேர்துக்காதீங்க!
ஜான் அவளின் அரை நோக்கி செல்ல முற்பட்டான்.
ஓஹோ! பாவமா சரி ஜான் அவளை முடிச்சிட்டு அவள கொன்னுடு! ஒரே பாவமா போகட்டும் இல்ல என்று பிசாசு போல சிரித்தான் கருணா.
டேய் ----பயலே! உங்களுக்கு எவ்வளவு பொண்ணுங்க டா வேணும்! என் குடும்பத்தை நாசம் பண்ணுனிங்க! என் அக்காவையும் தொலைச்சு தலை முழுகிட்டீங்க! --இன்னும் என்னடா வேணும் உங்களுக்கு?
ஜான் தலையில் இடி விழுந்தார் போல இருந்தது. கருணா விக்கித்து பொய் நின்றான்.
என்ன சொன்ன? உங்க அக்காவா?யாரு அவ?சொல்லு?என்று ஜான் வெறி பிடித்தது போல விழித்து கேட்டான் .
ஆமாம் டா! தறுதலை நாயே! உங்க கிட்ட சீரழிஞ்சி போன ரம்யா! ஞாபகம் இருக்கா? இல்லை ஞாபக படுத்தட்டுமா? டார்ஜ்லீங் கூட்டிகிட்டு பொய் கெடுத்தியே எங்க அக்கா ரம்யா!
செந்திலை நெட்டி தள்ளினான் ஜான்.
ச்சே ச்சே! நாசமா போச்சு நீ அவ தம்பியா? என்று உறுமினான் கருணா!
ரத்தம் கோட்டம் எழுந்து உட்கார்ந்து செந்தில் கர்ஜித்தான்.ஆமாடா அவளே தான்.அவளை தேடித்தான் இந்த ஊருக்கு வந்தேன். அவ இருக்காளா செத்தாளா ன்னு இன்னும் தெரியலே! பயித்தியம் பிடிச்சா மாதிரி ரோடு ரோடா அலைஞ்சேன்.ஆனா கடைசியிலே உன் வாயால நான் அவ கேவலமான நிலமைய தெரிஞ்சிகிட்டேன். உன்னோட விபரீதம் புடிச்ச இழவு விளையட்டுனால எத்தனை நாசம் வந்திருக்குன்னு தெரிஞ்சிகிட்டேன். என் அம்மாவை உடம்பு சரியில்லாம மானம் கெட்டு போக வெச்சிங்க!என் வேலையை கேடுதீங்க! நிம்மதியே நாசம் பண்ணீங்க!
கடைசீயிலே என்னையும் திருடனாக்கிடீங்க.என்னை போல எதனை பசங்க எதனை வயசு பொண்ணுங்க?இப்படியே உங்கள விட்டா இந்த ஊரே அழிஞ்சி போய்டும்.இதுகெல்லாம் ஒரே ஆதாரம் உன்னோட ஹர்ட் டிஸ்க் அது இப்போ எங்கே போகணுமோ அங்கே சேர்ந்திருக்கும். உன் புத்திசாலித்தனம். நீயும் ஜானும் இருக்கிற மாதிரி எல்லா தப்பையும் செஞ்சு அதை ரெகார்டு பண்ணி இருக்கீங்க அதுனால என் வேலையும் போலீஸ் வேலையும் சுலபமாகி இருக்கும் என்று சொல்லி விட்டு இடி இடி என சிரித்தான்.
ஜானுக்கு அமிலத்தை முகத்தில் ஊற்றியது போல இருந்தது.
டேய் கருணா! எனக்கு கடைசியில ஆப்பு வெச்சிட்டியா? என்னை எல்லா தப்பும் செய்ய ஏவி விட்டுட்டு நீ அத படம் பிடிச்சு வச்சிருக்கியா?
செந்தில் சிறித்து கொண்டே சொன்னான், டேய் ஜான் நீ என்னவோ அவனை ரொம்ப நம்பினே இவன் கூட சேர்ந்துகிட்டு எவ்வளவு கேவலமான காரியம் எல்லாம் செஞ்சிருப்பே? இவன் அத்தனையும் நீ யாருக்கும் தெரியாம செஞ்சேன்னு நினிசிகிட்டு இருக்க!ஆனா இந்த கருணா எப்போவும் உனக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்திட்டு உங்க பின்னாலேயே வந்திடுவான். நீங்க வேலை முடிக்கிற வரைக்கும் ஒரு காமிராவை செட் பண்ணி வெச்சி படம் பிடிச்சிடுவான். நீங்க எப்போவாவது வசமா மாட்டிகிட்ட அங்கே உடனே ஆஜர் ஆகி யாராச்சும் ஆளுங்க உளறரதுக்கு முன்னாலேயே அவங்களை சுட்டுடுவான் அப்பிடித்தான் முன்னாடி ட்ரைனிங் கொடுத்த நம்மாளுங்களை கொன்னுட்டு என்கௌண்டர் ன்னு சொல்லி பீத்திகிட்டான்!
டேய் செந்தில் வாய மூடு!
டேய் கருணா! தூ! நீ வய மூடுடா! அப்போ என்னை நம்ப வெச்சி கழுத்தை அறுத்துட்டு நீ கம்பி நீட்டிடலாம்னு பார்த்தியா?
ஜான் இவன் உண்மை முகம் தெரிஞ்சதா? அது மட்டும் இல்ல உன்னை நாளைக்கு கொலை கூட பண்ண திட்டம் போட்டிருக்கன் இவன். ஷேக்குகிட்டே பொண்ண ஒப்படைச்சதும் உனக்கு பாடை கட்ட ஆள் கூட வெச்சிருக்கான். எங்கே அது தெரிஞ்சி போச்சுன்னா அவனை கொன்னுடுவியோன்னு தான் அவன் சின்ன வீட்டிலே இந்த இரகசியங்கள ஒளிச்சி வெச்சிருந்தான்.
போதும் நிறுத்து!பயித்தியம் புடிச்சவனே! எங்க அதை அனுப்பி வெச்சே அதை சொல்லுடா!என்று கொள்ளி கண்களுடன் அலறினான் கருணா!
எப்படியும் நான் உயிரோட இருக்க போறதில்லே! உங்களுக்கும் தெரிஞ்சு போச்சு சொல்றேன் அதை அனுப்பிச்சிருக்கேன் உங்க மாமியார் வீட்டுக்கு, Commissioner office, CBCID wing Chennai! என்று சொல்லிவிட்டு சிரித்தான் செந்தில்.
கருணா கோபத்தின் உச்சிக்கு சென்றான்! தன் துப்பாக்கியை அவன் முகத்திற்கு நேராக வைத்தான் கருணா.முதலிலே உன்னை கொன்னுட்டு!
முதலிலே நீ எனக்கு பதில் சொல்லுடா?என் இப்படி செஞ்சே?
உனக்கு நான் பதில் சொல்லனுமா? அனாதை கழுதை!ஏன்டா என் கிட்டே வேலை செஞ்சிட்டு இன்னொரு கடை தனியா போடுவியா? அதை நான் பாத்துகிட்டு இருக்கனுமா? உன் புத்தி எப்போவாவது இந்த மாதிரி போகும்னு தெரிஞ்சு தான் நீ செஞ்ச எல்லா லீலைகளையும் ரெக்கார்டு பண்ணினேன்!அது போன கூட பரவில்லை நான் மாட்டிக்க மாட்டேன்!ஆனா நீ என் அடி மடியிலேயே கை வெச்சிட்டே! அதை நான் எப்படி மன்னிப்பேன்?
பொறம்போக்கு!உன்னை பத்தி தப்பு கணக்கு போட்டுட்டேன்! கடைசீயிலே உன் போலீஸ் நாய் புத்தி யை காண்பிச்சிட்டேஇல்லை? ஏன்டா அப்போ என்கிட்டே உண்மைய நடந்துகிட்டேனு சொல்லி என்னை ஏமாத்திட்டே இல்ல?துரோகி! என்று துபாக்கியை எடுத்தான் ஜான்!
முதலிலே உன்னை தான் துரோகின்னு நினைச்சேன்! நீங்க ரெண்டு பெரும் இருந்தா என்நால நிமத்தியா இருக்க முடியாது. ரெண்டு பெரும் செத்து போங்க! என்று சுட ஆரம்பித்தான்.
அப்போ நீயும் செத்து தொலை! என்று செந்தில் திடீரென அவர்கள் மேல் பாய்ந்தான்.
------------------------------
வெளியே அறை பக்கம் சூழ்ந்து கொண்டிருந்த காவல் சிறப்பு படைக்கு உஷாராக இருக்குமாறு ரவி ஆணை இட்டார்.
மிஸ்டர் கருணா கதவை திறங்க! உங்க வீட்டை சுத்தி போலீஸ் இருக்கோம். உங்க குற்றத்தை ஒப்புகுங்க! எங்களுக்கு எல்லா தகவலும் கிடைச்சிருச்சு! ஒழுங்க வெளியில வந்தீங்கன்னா உயிர் பிழைக்கலாம்!
கருணா முகம் இருட்டில் கவிந்தது. ஜான் முகம் வெளிறி பேஸ்து தட்டியது.
போலீஸ் ரவுண்டு அப் பண்ணி இருகாங்க! நாம செத்தோம்!
ச்சே இந்த நாயல தான எல்லாம்! என்று ஜான் திடீரெனெ செந்திலை சுட்டான்.
ஒரு வினாடியில் செந்தில் விலகிக்கொள்ள அவன் காலின் ஆடு சதையில் புல்லட் பதம் பார்த்தது. செந்தி வேதனையால் அலறினான்.
ரவி உடனே தன துப்பாக்கியால் வெளி ஜன்னலை சுட்டான்.
கண்ணாடி தெறித்து விழுந்து அவர்களை காட்டிற்று.
போச்சு போச்சு!அவசர குடுக்கை! நீ பண்ணின வேலையால நாம மொத்தமா போக போறோம்!மரியதையா சரண் அடைஞ்சிடுவோம்!என்று கருணா ஜானை திட்டினான்!
முடியாது!இவனுங்க நம்மள போடுவானுங்களா இவன் கிட்ட சரண் டையவா! இப்போ பாரு என் வேலையை என்று கூறியபடி விளக்கு இருந்த திசையை பார்த்து சுட்டான். மேலும் மின் இணைப்பிணை நோக்கி சுட்டுவிட்டான். அந்த இடமே திடீரென இருள் கவிந்து கொண்டது.
கோரமான கடல் அவர்கள் வீட்டின் பின் அலை எழுப்பி வந்த சத்தம், காவலர்களின் ஜீப் விளக்கொளி, துப்பாக்கி சத்தம்! இவற்றால் மட்டுமே அந்த இடம் நிறைந்திருந்தது.
துப்பாக்கி குண்டுகளுக்கு அடி படாமல் ரவி சூதானமாக வீட்டின் முன் முற்றத்தின் உள்ள பூ செடிகளுக்குள் பதுங்கினார். அவர் பதுங்கும் முன்பு ஜான் மறுமுறை ரவியை நோக்கி சுட்டான்!அது ரவியின் அருகில் உள்ள காவலர் ஒருவரின் தோளில் பதிந்தது. அலறியபடி அவர் கீழே சாய்ந்தார்.
ரவி கோபமாக ஆயுத படைக்கு கட்டளை இட்டார்!
இரண்டு நிமிடங்கள் அங்கு ஒரு போர்க்களமே நடந்தது. துப்பாக்கி குண்டுகள் அங்கிருந்த அத்தனை பொருட்களையும் சல்லி வேறாக பீய்த்து எரிந்தன. அவைகளை சல்லடை துளைகளாக ஆக்கின. எங்கும் புகை சூழ்ந்தது. குண்டு துளைக்கும் சத்தம் அனைவரின் காதுகளையும் செவிடாக்கி துளைத்தது. கருணா துப்பாக்கிசுடுதலில் கை தேர்ந்தவன் என்றாலும் அவனால் அதிக நேரம் தாக்கு பிடிக்க முடியவில்லை. அனேக குண்டுகள் அவன் உடலில் தைத்தன.அவன் அங்கங்கள் அனைத்தும் குண்டு பட்டு தெரித்தது. ஒரே தடவையில் ஆயிரம் முறை உயிரிழக்கும் வேதனை அடைந்தான்.மரண வலி அவனை ஆட்கொண்டது.அவன் கண்கள் இருண்டன. வாய் குழறிய படி அவன் கீழே சாய்ந்தான். கருணா காலாவதியானான்!
========================================================================
விபரீத விளையாட்டு - 21
இதற்குள் ஜான் ஒரு அறைக்குள் ஒளிந்து கொண்டான். அது ஓரி பெரிய வீடு, சுமா அரை ஏக்கர் பரப்பளவுள்ள வீட்டினை சூழ்ந்து நிறைய தென்னை, சவுக்கு, மாமரம் என்று வகை வகையான மரங்கள், வீட்டின் உள் பல ரகசிய அறைகள் என்ற மூன்று அடுக்கு மாடி வைத்து இருந்த அந்த பெரிய வீட்டில் ஒரு மனிதனும் இல்லை. ஜான் ஒன்றாவது மடிக்கு சென்றான் இருட்டு அறையில் அவன் முகம் அரைகுறையாக தெரிந்தது. அவன் கண்முன் கருணா இறந்ததை பார்த்ததும் அவன் முகம் பேய் அடித்தாற்போல் மாறியது.
ஜான் நீ உள்ள இருக்கேன்னு தெரியும். உனக்கு ரெண்டு நிமிஷம் நேரம் தரேன். வெளியிலே வந்துடு. இல்லே சுட்டு தள்ளிடுவோம் என்றார் ரவி.
செந்தில் மெதுவாக கதவின் அருகில் நகர்ந்தான். சுற்று முற்றும் பார்த்தான். கருணாவின் சடலம் புகை மூடி இருந்த அறையில் தெளிவில்லாமல் தெரிந்தது. எங்கும் ஒரே இருட்டாக இருந்தது. போலீஸ் அந்த வீட்டின் மின் இணைப்பை துண்டித்திருக்க வேண்டும். எப்படியோ அவன் பின் பக்கம் கட்ட பட்டிருந்த கயிறை அவிழ்த்துகொண்டான் செந்தில். ஜான் கூட செத்து விட்டானா?
செந்தில் அந்த பெரிய வீட்டில் எங்கு தேடுவது என்று தெரியாமல் விழித்தான். தட்டு தடுமாறி அவன் எழுந்தான். எங்கேனும் வெளிச்சம் தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே நோண்டினான். கால் ஒவ்வொரு அடி வைக்கும் போதும் சில துளி ரத்தம் சின்தியது.வலித்தாலும் அதை பற்றி கவளி பட வில்லை. இப்போது கண்மணியும் ஜானையும் கண்டு பிடிக்க வேண்டும் என்று எண்ணி ஒவ்வொரு அறையாக தேடினான். பல அறைகள் பூட்ட பட்டிருந்தது. திறந்திருக்கும் அறைகளுக்குள் அவர் காணவில்லை. இதற்கிடையே வாயில் கதவு உடைக்க படும் சத்தம் கேட்டது.போலீஸ் உள்ளே வந்துவிட்டது.
கண்மணியை தேடிக்கொண்டு ஜான் மேல் மாடி அறைக்கு சென்றான். அங்கு அவளின் நிலையினை பார்த்து அவன் ஒரு நொடி நினைவு தப்பிவிட்டான். அவள் கொள்ளை அழகு அவனை வெறி கொள்ள செய்தது.
கடைசியில் ஜான் செய்த முட்டாள் தனம் அவனை கட்டி கொடுத்தது. இந்த முறை அவளின் கற்பை சூறை ஆட அந்த அறைக்குல் சென்றுவிட்டான். கண்மணி அவனை கண்டு வாய் உளறி பெரும் சத்தம் இட்டாள்.
==================================================================
செந்தில் அந்த சத்தம் வந்த திசையை நோக்கி ஓடினான். அதற்குள் ஒரு காவலன் அவனின் கால்களில் சுட்டு விட்டான். செந்தில் பெரும் குரல் எடுத்து கதறி துடித்து விழுந்தான்.
முட்டாள் என்ன வேலை செஞ்ச? இவன் நம்மாளு!பாயஸ் க்விக்! கவிக்! யாராவதுஇவனை தூக்கிட்டு போங்க!"என்று அங்கு உடனே வந்த ரவி ஆவேசமாய் கட்டளை இட்டார்.
ரவியின் படைகள் அதற்குள் அங்கு இருந்த அனைத்து அறைகளையும் உடைத்து பார்த்துவிட்டன.
மேலே பாருங்க சீக்கிரம் என்று அவர்களை ரவி விரட்டினார்.
அங்கே கேவலமான நிலையில் கண்மணி கிடந்ததை பார்த்து அவள் மேல் போர்வையை போர்த்தினார். யாரது கேள்ஸ் கமாண்டோ இருக்கீங்களா!
அம்பென ஒரு இளம் பெண் துப்பாக்கியுடன் அங்கு வந்தாள் ! சீக்கிரம் இந்த பெண்ணை தூக்கிட்டு போங்க! என்றார்! எஸ் சார்! என்று இன்னொரு பெண்ணுடன் அங்கிருந்து கண்மணி தூக்கி செல்லப்பட்டாள்.
திடீரென வீட்டின் பின் பக்கம் உள்ள சமையல் அறையில் பெரும் சத்தம் கேட்டது. அந்த அரை கதவு துப்பாக்கி மூலம் பூட்டு உடைபட்டு திறந்து கொண்டது. அதன் வழியாக ஒரு உருவம் ஓட தொடங்கியது. ரவி காவலர்களை கூவி அழைத்தான். பாயிஸ் புல்லெட் வேஸ்ட் பண்ணாதீங்க சீக்கிரம்" என்றார் . துப்பாகிகள் வெடித்தது. சில குண்டுகளுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஜான் சரிந்து விழுந்தான்.

விபரீத விளையாட்டு - முடிவு
இந்த ரெண்டு வருஷமா என் மனசுக்குள்ள அறிசிகிட்டு இருந்த உண்மையை சொல்லிட்டேன் வசந்தா!உண்மையிலே உன் மகள் தான் கேட்டு போனவ சோரம் போனவ!உன் மகளோட கற்பை சூறை ஆடிட்டு அந்த ஜான் செத்து வெச்சான். அவளை ஆஸ்பத்திரியிலே மன நல சிகிச்சை எல்லாம் கொடுத்து செந்தில் தான் பிழைக்க வெச்சான். இதனை வருஷமா அவளை கண்ணை போல பாதுகாத்துகிட்டு வந்தவனை நான் வசந்தன் இன்ஸ்பெக்டர் ரவி உதவியோட இந்த கேசுகளை எல்லாத்தையும் உடைச்சி இவனை நிரபராதின்னு நிரூபிச்சோம். அவர் மூலமா ரெகமண்டேசன்ல வேலையும் கிடைச்சது. இப்போ சொல்லு கேட்டு போன பொண்ணு யாரு?இவளால வந்த வினை என்ன? யாரு பிரச்சனை?
செந்தில் இப்போது பொங்கி எழுந்தான். நிறுத்துங்க மாமா என்று கர்ஜித்தான்.
ராமு வசந்த உட்பட அனைவரும் பயந்து நடுங்கினர்.
செந்தில் கூறினான். மாமா!இனி ஒரு போதும் உங்க மகளை கேட்டு போனவன்னு சொல்லாதீங்க. ஜான் உண்மையை சொன்னதை ஒரு நல்ல நேரத்துல சொல்லலாம்னு இருந்தேன். நீங்க பெசுற பேச்சுக்கு உண்மை சொல்றேன் கேளுங்க என்று சொல்ல ஆரம்பித்தான்.
செந்தில் இருந்த அறையில் ஜான் அவசர வார்டில் கிடத்த பட்டிருந்தான். அவன் நிலை கவலை கிடமாக இருந்தாலும் அவனுக்கு பூரண நினைவிருந்தது. போலிஸ் மூலம் செந்தில் அருகில் இருப்பதை தெரிந்து அவனை அழைத்து வர சொன்னான்.
செந்தில்! என்னை மன்னிச்சிடு!
உன்னை நான் எதுக்கு மன்னிக்கணும் அந்த கடவுள் மன்னிசா சரி!
செந்தில் அப்படி சொல்லாதே!உன் குடும்பத்தை கிட்ட தட்ட உரு தெரியாம அழிச்சிட்டேன்! அறிவில்லாமல் உன் அக்க வை நாசம் பண்ணி அவளை நேபாளுக்கு வித்துட்டேன். ஆனா அவ ஆதரிசிகிட்டு என்னை தெரிஞ்சிகிட்டா! அவள் கடைசீயிலே இரயில் பெட்டியிலேருந்து குதிசிட்டா!
என் வாழ்கையிலே எவ்வளவோ கொடுமைகளை விளையாட்ட செஞ்சிட்டேன்! மோசமான என்னை திருத்த ஆளில்லை. ராமு என்னை தத்து எடுத்து வளர்க முயற்சி பண்ணினாரு ன்னு கேள்விபட்டேன். என்னை நினைச்சி வெட்க படுகிறேன். அவர பழி வாங்குறதா நினைச்சி அவர் பெண்ணை கெடுக்க போனேன். ஆனா என் மனசு கடைசீயிலே என்னை ஜெய்சிடுச்சு! ஆமாம் செந்தில் அவளை நான் கெடுக்கலை! கருணா அவளை படம் பிடிக்க அந்த அறையிலே ஒரு வீடியோ தயார் பண்ணி வெச்சிருந்தான். அதிலே அவளை ஊசி போட்டு கட்டி வெச்சிருக்கிற மாதிரி காட்சி பதிவாகி இருந்ததை பார்த்தேன்.அவளோட அலறல் பதிவாகி இருந்தது உடனே ரம்யாவை எனக்கு அது ஞாபக படுதிருச்சு . தற்செயலா அதை நான் பார்த்துட்டேன். கண்மணி அழுதுகிட்டே ஊமை மாதிரி கதரினது என் மனச அழுதிச்சு.நான் அவளை அப்படியே விட்டுவிட்டு பின் படிக்கட்டு வழியா ஓடி போனேன். சமையல் அரை கதவு பூட்டி இருந்தது அதை சுட்டு திறந்து ஓடினேன்! அப்புறம் தான் உனக்கு தெரியுமே!
செந்தில் மெளனமாக ஜானை ஏறிட்டான்!
செந்தில் நான் சாகிறது எனக்கு தெரியுது. அதுக்கு முன்னாடி ஒரு சின்ன வேலை இருக்கு. என்று ஒரு கடிதத்தை கொடுத்தான்.
என்ன இது?
எவளவோ கெட்டது பண்ணியாச்சு!கடைசீய சாகிறதுக்கு முன்னாடி ஒரு நல்ல காரியம்!கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க வந்துட்டு போன காலெஜ் பசங்க போட்டுட்டு போனது இதை படிச்சி பார்த்துட்டு டாக்டர் கிட்ட கொடுத்துடு.
செந்தில் படித்தான். அது உடல் உறுப்பு தனத்திற்காக படிவம். செந்தில் புரிந்து கொண்டான்.ஜானின் விவரங்களை விரைவாக அதில் பதிந்தான். அவன் கண்களில் ஒரு துளி கண்ணீர் சிந்தியது.
"திருந்திவிட்ட மிருகம்- ஜான் என்ற கண்ணன்" என்று கையெழுத்து இட்டு விட்டு தன் கோணை வாய் சிரிப்புடன் அசையாமல் அவனை பார்த்துகொண்டிருந்தான்.அவன் அருகில் இருந்த நாடி துடிப்பு கருவி அலறியது. ஆனால் ஜானின் உயிர் துடிப்பு அடங்கி போயிருந்தது.
======================================================================
ஒருத்தரோட தப்பினாலே சுத்தி இருக்கிறவங்களுக்கு எவ்வளவு பாதிப்பு பார்த்தீங்களா? ரம்யாவின் பேராசை புத்தி , செந்திலின் சபல புத்தி,
உங்களின் சந்தேக புத்தி, கண்மணியின் அவசர புத்தியும், இதனை பேரின் நிம்மதியை கெடுத்து விட்டிருக்கு.எதோ நல்ல வேலைய நாம இருக்கிற இடமே ஆஸ்பத்திரி பக்கத்திலே இருக்கிற கோயில் இங்கேயே இந்த கல்யாணம் முடியனுமின்னு இருக்கு என்று ராமுவிற்கு செய்கை காண்பித்தான் வசந்தன்.
கண்மணி நன்றியோடு செந்திலின் கரம் பற்றினாள் அவள் இன்னமும் அதை கெட்டியாகத்தான் பற்றி கொண்டு இருக்கிறாள். அதை விடுவதே இல்லை!!
888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888888

Comments
Post a Comment