Skip to main content
காமினி யோகினி - 8

காமினி இப்போதும் ஒரு ரண வேதனையை அனுபவித்து கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போது வரைக்கும் எங்கிருக்கிறோம் தான் யார் என்பது கூட தெரியாமல் போயிருந்தது. தன்னுடைய ஸ்நேகிதிகளுடன் வரும்போது ஒருவர் காரில் ஏறிக்கொள்ள லிப்ட் கேட்டதும் பின்னர் அவரிடமிருந்து ஒரு கடுமையான வாடை வந்ததும் அதில் அவர்கள் மயக்கமுற்று கொண்டைஊசி வளைவில் தங்களுடைய வாகனம் மோதி தலைகுப்புற விழுவதும் மட்டுமே அவளுக்கு நினவிருந்தது. அதுவும் யார் எதற்க்காக அவர்களோடு வந்தனர் என்று தெரியவில்லை. சூரஸ்வாமி அவர்களை ஒரு பெட்டியில் வைத்து ஆசிரம நிலவறையில் கிடத்த  சொன்னதும் உப சீடர்கள் அவர்களை பெட்டியில் வைத்து பின்னர் அவர்களை கிடத்தி கொண்டு போயினர். அப்போது இருபதடி உயரத்தில் ஆஜானுபாகுவாக ஒரு பெரிய படம் அவள் கண்களில் தென்பட்டது. பெட்டியில் கிட்டத்தட்ட சவம் போல அசைவின்றி படுத்திருந்த அவளுடைய கண்கள் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தன. அவை பெட்டியின் துவாரத்தின் வழியே அந்த படத்தினை பார்த்தன. ஆமாம் அது அந்த உருவம் யாரோ ஸ்வாமியை போல உள்ளதே, ஆமாம் இதை நான் எங்கோ கண்டமாதிரி இருக்கே என்ற கேள்விகளுடன் அவள் நினைவு மெல்ல திரும்ப ஆரம்பித்தது.
=========================================
ஸ்வாமிநாதன் டேபிளில் கங்கா மொத்த ரிப்போர்ட்டுகளையும் வைத்தாள்
ஸ்ஸ் அப்பா ஊட்டியிலேயே இந்த கொளுத்து  கொளுத்துது சார்! இதென்ன ஊட்டி யா இல்ல கொதிக்க வச்ச காபி டீயா!
ஸ்வாமிநாதன் மெல்ல நகைத்தார். நீ இன்ஸ்பெக்டர் வேலைக்கு பதிலா கவுண்டமணி வடிவேலுவுக்கு காமடி வசனம் எழுதி கொடுக்க போயிருக்கலாம்.
என்ன சார் செய்ய அவங்க அதிர்ஷ்ட்டம் அவ்ளோதான் என்று சொன்னாள்  கங்கா. ஜனங்க அதிர்ஷ்ட்டம்  ன்னு சொல்லு அம்மா நா கேட்ட எல்லா ரிபோர்டும் ரெடியா!
ஆமாம் சார் நான் விசாரிச்சா வரைக்கும் சேகர மூர்த்தி இந்த சாமியாரோட கூட்டு வியாபாரம் பண்ணுறவன். அவன் பொண்ணு கலைவாணி காமினி கூட ஒண்ணா ஸ்கூலு லிருந்து படிக்கிறவங்க , இதுல இன்னொரு விஷயம் இந்த காமினியோட அப்பா ரமேஷோட கூட்டு வியாபாரம் பண்ணுறவரு, இவருக்கு பணம் கொடுக்கிறதுல தகராறு அரசியல் செல்வாக்கு அதிகம் அதனால ரமேஷ் கூட்டணியிலிருந்து வெளியில வந்துட்டாரு.
ஆமாம் மற்றவை  நான் சொல்றேன் என்று இன்ஸ்பெக்டர் சிவராஜ்
காமினியோட பிறந்தநாள் அன்னிக்கி இவங்க எல்லாருமா சேர்ந்து ஜாலியா பக்கத்துலே இருக்கிற  ஷில்பா  ஹவுஸுக்கு போயிருக்காங்க, இவரோட சொந்த டிராவலசுலேருந்து வராம வேற ஒரு புது வண்டி வந்திருக்கு அதை விசாரிச்சப்போ அது சேகர மூர்த்தியோட  நண்பர் வண்டின்னு சேசிஸ் நம்பர்  வெச்சி கண்டு பிடிச்சோம்.
நடுவுலே கார் குன்னூர் ரோட்டிலே நின்னு ஒரு உயரமான ஆளை ஏத்திக்கிட்டு போயிருக்கு அந்த கேரட்டு லாரி டிரைவர் கிளீனர் அப்புறம்  ஜனங்க சொன்ன அடையாளத்தை பார்த்தால் அது யாரோ சாமியாரோட ஆளுங்க போலத்தான் இருக்கு. அப்புறம் 5 கிலோமீட்டர் வரைக்கும் ஒரு வேன் இவங்களை தொடர்ந்து போயிருக்கு. வேன் அப்புறமா திரும்பி ரிட்டர்ன் ஆகி இருக்கு அதை அந்த லாரி காரன் தவிர வேற . அப்புறமா அங்கிருந்த ஜனங்க எதோ  பெரிய  சத்தம் கேட்டு என்ன ஆச்சுன்னு  போய் பார்த்து இருக்காங்க. காமினி போன வண்டியை தவிர    இன்னும் சில டூரிஸ்ட் வண்டிதான் போயிருக்கு அப்புறமா அங்கே எந்த வண்டியும் இந்த இடைப்பட்ட நேரத்திலே வரலை அதை செக் போஸ்ட் தகவல் உறுதி படுத்தி இருக்கு.
இதுக்கப்புறமா தான் கார் தறிகெட்டு ஓடி 5 கிலோமீட்டர் தள்ளி பள்ளத்தாக்கில் விழுந்துருக்கு ஆக இந்த இடைப்பட்ட நேரத்திலே தான் அவங்க பொலியா  பாடியை ரெடி பண்ணி அவங்க வந்த அதே வானிலே தூக்கிட்டு போயிருக்கணும் என்று முடித்தார். பிரமாதம் சார்  என்னை  இந்த ஃ பர்மேஷன்  எடுக்க சொல்லிட்டு நீங்க எல்லாத்தையும் முடிச்சிடீங்களே ? ம்ம்? அரசாங்க சம்பளத்துக்கு  கொஞ்சமாவாவது வேலை  பார்க்கணுமே அதுக்குதான். என்று  கிண்டலடித்தார்.
ஆக இந்த கேசில் துருப்பு சீட்டு சேகர மூர்த்தி தான் அவரை விசாரணை பண்ணினாதான் எல்லா உண்மையும் தெரியும் அப்பிடின்னு சொல்லுங்க
ஆனா அந்தாளு கெளுத்தி மீனில்லே வலை போட்டாலும் வெட்டி விடுற மனுஷன்.

சகதியில் சிக்குனா  சுறாக்கூட சுண்டக்காய் தான் அதுக்கு வேற வழி இருக்கு. என்று நிறுத்தினார்.
நீங்க சென்னை போயிட்டு வந்ததிலிருந்து ஒரு பெரிய மற்றம் இருக்குது சார் என்று நமுட்டு சிரிப்பு சிரித்தாள் கங்கா
========================================================
எஸ்  எம் பி லிமிடெட்  அலுவலகம்
சேகர மூர்த்தி கலவரமாக காணப்பட்டார். இன்கம் டாஸ் ரெய்டு தடாலடியாக நடக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க வில்லை அவர். லேவாதேவிகள் கொடுக்கல் வாங்கல் ஆசிரம தஸ்தாவேஜிகல் என்று சகலமும் அவர் பத்திரப்படுத்தி வைத்திருந்தார் அவர்களின் ஏவலால்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியங்கள் தஸ்தாவேஜுகள் என்று சொல்லி வைத்தார் போல எப்படி அமலாக்க பிரிவுக்கு  தெரியவில்லை. மண்டை குழம்பியது. சாமியை எப்படி தொடர்பு கொள்வது என்று தெரியவில்லை அப்போது தான்   ஸ்வாமிநாதன் கண்ணில்  பட்டார்.இவனை நம்பி பொறுப்பை விடலாமா? என்று எண்ணி கொண்டிருந்த வேளையில் அருகில்  ஸ்வாமிநாதன் , மெதுவாக  வந்தார். என்னய்யா நடக்குது இங்க என்ற தோரணையில் சைகை செய்தார்/ உதட்டை பிதுக்கி தெரியவில்லை என்று பாவனை செய்தார்.
உடனே  சேகர மூர்த்தி   அவர் அருகில் வந்து ஒரு சிறிய செல்ல பேசியை தந்து அங்கிருந்து நழுவி  விட்டார்.
=======================================
ஸ்டெல்லா கிட்ட தட்ட கைதியின் நிலைமையில் தான் இருந்தாள்.

அவளை  துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் மேற்கொண்டு முக்கிய போலீஸ் உய அதிகாரிகள் என்று கூட்டமாக சோதனை மேற்கொண்டு இருந்தனர். இதை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் தீக்ஷண்ய ஸ்வாமிகள் எங்கு சென்றார் என்றே தெரியவில்லை.
சேகர மூர்த்தி கைது செய்ய பட்டு இருக்கிறார் அவர் வீடும் சோதனையில் சிக்கியுள்ளது என்று  கேள்விப்பட்டாள். அவளிடம் உள்ள லேப்டாப் தொலைபேசி அத்தனையும் சோதனைக்கு உள்ளது.
அவளை கேள்வி மேல் கேள்வி கேட்டு அடுக்கி கொண்டிருந்தனர். அவளுடைய உற்ற சிஷ்யை மட்டும் அவளுக்கு துணையாக விவாதித்து கொண்டிருந்தாள். அவள் ஒரு பட்டாயா கணக்காளர் சுவாமி மேல் உள்ள பக்தியில் அனைத்தையும் துறந்து ஆசிரமத்திற்கு வந்தாள் அவள் தான் அதனை கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் கொடுத்து கொண்டிருந்தாள்.
இதை எல்லாம் கண் கட்டு போலவும்  கனவு போலவும்  ஸ்டெல்லா கவனித்து கொண்டிருந்தாள் அவள் மனம் அங்கில்லை. இரண்டு நாட்களும்மு முன்னர் நடந்த சம்பவம் மனதில் ரீங்காரமிட்டு கொண்டிருந்தது,
ஸ்டெல்லாவை புகை போல வந்து சம்பத் காப்பாற்றியது அவன் சொன்ன தகவல்கள் அது தந்த அதிர்ச்சியிலுருந்து மீள் வதற்குள் சூரஸ்வாமியின் கண்ணில் இருந்து தப்பியது. சம்பத்தின் தோற்றம் தான்  விட்டது. அவனிடம்  தேஜஸை விட பன்மடங்கு  இருந்ததே. அவன் எப்படி மாறி விட்டான் அவன் முகத்தின் குறுக்கில் அந்த தழும்பு ஆனாலும் அது தான் பார்க்கும் பொது மறைந்து போனது, அத்தனை பெரிய சாதனமும் யோக பயிற்சியும் அவனுக்கு எப்படி யார் சொல்லி கொடுத்தனர்?அடே  அப்பா, மேற்கொண்டு அவன் தன் குருவை பற்றி சொன்னது எப்பேர்ப்பட்ட தகவல்? நம்பமுடிய வில்லை ஆனாலும் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அதனை நம்பும்படி அவள் மூளைக்கு அறிவுறுத்தியது.

ஒரு கட்டை குட்டையான அமலாக்க பிரிவு அதிகாரி ஸ்டெல்லாவின் சிந்தனையை தன கட்டை குரலில்  கலைததார்.
மிஸ் ஸ்டெல்லா ஸ்வாமிஜி, உங்களை எப்படி அழைப்பது ன்னு புரியலை.
பரவ இல்லை ஸ்டெல்லனே அழையுங்கள்,
நல்லது, இதுவரை நீங்கள் கொடுத்த கணக்கில் எந்த வித குறையும் இல்லை அனால் உங்கள் கணக்கு அனைத்துமே போலியானவை ன்னு எங்களுக்கு ஏற்கனே வே கிடைத்த ரிக்கார்டு மூலம் நாங்க கண்டு பிடிச்சி இருக்கோம்.
ஸ்டெல்லாவின் முகத்தில் ஈ ஆடவில்லை,
நீங்க என்ன சொல்லுறீங்க, ஆமாம் உங்க சி ஏ உதவியாளர் சொன்னது போல உங்களுக்கு கொடுக்க பட்டிருக்கிற கணக்கில் எந்த பிழையும் இல்லை ஆனால் அது எல்லாமே சமைக்கப்பட்ட கணக்குகள். உங்கள் கணக்கு படி ஆசிரமம் நஷ்டத்தில் போட்டுக்கணும் ஆனால் உங்க ஆசிரமத்தின் மூலம் கணக்கில் இல்லாத சொத்துக்கள் மதிப்பு சுமார் 8000 கோடிகள்.
ஸ்டெல்லா அதிர்ச்சியின் விளிம்பிற்கே சென்றாள்
ஆமாம்  இதோ ஒரு சாம்பிள் என்று கேத்தியில் உள்ள ஆசிரமங்கள் சொத்து மதிப்பை யும் ஒரு பத்திரத்தின் நகலையும் அந்த அதிகாரி காண்பித்தார்.

இருக்காது அப்போ எங்களின் நிர்வாகத்தினரையே இன்னொரு நிர்வாகம் பொழிய இயங்குதுன்னு சொல்றீங்களா? ஆமாம் அது தான் உண்மை.
இல்லவே இல்லை இந்த பத்திரங்கள், கணக்குகள் எல்லாம் தான் பொய். நான் சீக்கிரமே இந்த நிர்வாகத்தின் தலைமை ஏற்க  போகிறவள்.ஆகையால் என் பார்வையில் போபண்ணின பாலன்ஸ் சீட் இது.
இருக்கலாம் மேடம் உங்களை ஒரு பாலி ஆடாக மற்ற முயற்சி யாக இருக்கலாம் இல்லையா இது.

உங்க மடத்தின் தலைவர் தீக்ஷண்ய சுவாமி எங்கே?
சாரதா என்று அவள் உதவி சிஷ்யை கூப்பிட்டால்
ஸ்வாமிகள் எங்கே
இன்னமும் தகவல் பெற முயற்சி செய்துகிட்டு தான் இருக்கிறோம் அம்மா.
என்ன இன்னமும் அவர் வரவில்லையா?
என்னிடம் கூட சொல்லாமல் அவர் எங்கேயும் செல்ல மாட்டாரே
ஸ்வாமிகள் அவர் தனிப்பட்ட ப்ரோகிராம் ன்னு சொல்லிட்டு சூரஸ்வாமி ன்னு ஒருத்தர் கூட போனாரு மேடம்
அவர் பூஜை அறையில் அவர் உபாசனை விக்கிரகம் கூட இல்லை தாயே.
என்ன என்று அதிர்ந்தாள் ஸ்டெல்லா.
அப்போதுதான் சில நாட்களாக தீக்ஷண்ய சுவாமி அங்கில்லை என்றது தெரிந்து கொண்டாள் ஸ்டெல்லா.

-------------------------------------------------------------------------------------------------
சம்பத்! சம்பத்! எழுந்திரு உனக்கு  ஒரு வேலை இருக்கு என்று சொல்லி  சிவா ஸ்வாமிகள் தட்டினார் அகால வேளையில் எழுந்ததால் சம்பத்துக்கு உடனே என்ன நடந்தது என்று புரியவில்லை.  சிவா ஸ்வாமிகள் குரல் கேட்டாலும் எதிரில் யாரையுமே கண்ணுக்கு தெரியவில்லை அருகெ ஒரு கோட்டான் பறந்து வந்து அமர்ந்தது.
குருவே நீங்கதானே என்று ஒரு குத்து மதிப்பாக கேட்டான். ஊ ஊ என்று கத்தி விட்டு கோட்டான்  சும்மா இருந்தது. குருவே என்று மறுபடியும் கூப்பிட்டான். பதில் இல்லை. சில வினாடி கழித்து கோட்டான் வாயிலிருந்து பேச்சு வந்தது சம்பத் . ஹாஹா பயந்து போனியா என்றது. குருவே? கூடு விட்டு கூடு பாஞ்சுடீங்களா? இல்லயப்பா இது "காம ரூபம் "  நினைத்த மாத்திரத்தில் எந்த உருவத்தை வேண்டுமானாலும் அடையலாம்.
 இப்போ உனக்கு இதை சொல்லி கொடுக்க போகிறேன். இன்னைக்கு உனக்கு நிறைய வேலை இருக்கு. என்று  அவனை கூட்டி கொண்டு சென்றார் சிவா ஸ்வாமிகள்.
சற்று நேரத்தில் இரண்டு கோட்டான் கல் குகையை விட்டு பறந்தன.  பாறைகளால் மூடி கொண்டன.  அதற்க்கு காவலாய்  இரண்டு சிறுத்தை  புலிகள் சுற்ற ஆரம்பித்தன.
-----------------------------------------------------------------------------------------
அடே அப்பா மொத்தம் 8000 கொடிகளா?

ஒரு மினி அரசாங்கமே நடக்கும் போல இருக்குதே! எப்படி சார் இதை எல்லாம் கண்டு பிடிசீங்க? என்று அகலமாக வாய் பிளந்தாள் கங்கா.
அந்த அறையில் உள்ள தொலைக்காட்சியில் யோகினி மாயா ஆசிரமத்தினை கிழித்து  கொண்டிருந்தனர். பல கோடி ரூபாய் தஸ்தாவேஜுகள் இரண்டு   நாட்களுக்கு  முன்னர் சுவாமிநாதனுக்கு கிடைத்தது. அவர் ரோந்து சுற்றி வந்தபோது இரு கோட்டான்கள் சதா சடவென்று பறந்து அவர்  அனாயாசமாக அமர்ந்தது. அதிர்ச்சியில் ட்ரைவர் சடன் பிரேக்கை அழுத்தினான். அப்போதும் அது அசையவில்லை  பெரு  பறவைகள் கம்பீரமாக அவரை தன முட்டை விழிகளில் நோக்கியது.  ட்ரைவர் நீ இங்கேயே இரு என்று அவனை நிறுத்திவிட்டு கட்டுண்ட நாகம் போல ஸ்வாமிநாதன்  இறங்கினார். அவைகள் முன்னே பறக்க பின்னால் அவர் சென்றார். கொஞ்ச தூரத்தில் பள்ளத்தில் ஒரு கார் க்விழ்ந்து கிடந்தது. அதை ஒருவன் ஓட்டி வந்து  பள்ளத்தில் கவிழ்ந்ததும் அவன் இறந்து போயிருப்பதும் சுவாமிநாதனுக்கு புரிந்தது.
என்ன ஸ்வாமிநாதா! என்னை தெரிகிறதா? என்று கோட்டான் சொன்னது. அதிர்ச்சியில் அதனை பார்த்துக்கொண்டிருக்கும் பொது சம்பத்தும் சிவா ஸ்வாமிகளும் அங்கு நிண்று கொண்டிருந்தனர்.
ஸ்வாமி நீங்களா அன்னிக்கு வந்தது போலவே மாய மந்திரம் செய்து  வந்துட்டீங்களா?
ஆமாம் பா என்னதான் நான் நிறைய கலைகள் கற்றாலும்  தகவல் சொல்லுவது தான் என் வேலை இப்போ உனக்கு ஒரு வேலை இருக்கு அதனால் தான் உன்னை கூட்டி வந்தேன்.
சுவாமி இது என்ன இங்க ஒரு விபத்து ஆகி இருக்கு போல தெரியுதே?
ஆமாம் வா பொய் பார்க்கலாம் என்றார். மூவரும் அங்கு சென்றனர்.
ட்ரைவர் இறந்து கிடைக்க அந்த வண்டியில் பல அட்டை பெட்டிகளும் சூட்கேசுகளுமாய்  இருந்தன.சாமி இது எல்லாம் எதோ தஸ்தா வேஜுகள் போல இருக்கு, சரி சரி நீயே இதை கொஞ்சம் திறந்து  பாரேன்,
என்று புன் முறுவல்  செய்தார்.
தன்  ஜீப் டிரைவருக்கு தகவல் சொல்லி விட்டு உடைந்து கிடந்த சூட் கேசில் ஒன்றை எடுத்து பார்த்தார். பல  பாத்திரங்கள், கணக்குகள்,சொத்து விவர பினாமி ப்ரோ நோட்டுக்கள், தீக்ஷிண்ய ஸ்வாமியின் கையெழுதிக்குக்களுடன் பல கோப்புகள். சுவாமிநாதனுக்கு இப்போது எல்லாமே புரிந்து விட்டது. ஸ்வாமி என்று திரும்பி பார்த்தான். இருவரையும் காணவில்லை.

எதிர்பார்த்ததுபோல அவர்கள் மறைந்து விட்டனர். கைபேசியை எடுத்தார்,முதலில் அமலாக்க பிரிவு நண்பர் ஒருவருக்கு தகவல் கொடுத்தார், பின்னர்  கமிஷஷனருக்கும் தகவல் கொடுத்து தன கைபேசியை  வைத்தார்.

பாதி வேலை முடிந்தது என்று கோட்டான் சொல்லி விட்டு பறந்தது.
----------------------------------------------------------------------------------------------------
ஆமாம் பாதி வேலை யை முடிச்சாச்சு. இன்னும் மீதி வேலை இருக்கு

அந்த தீக்ஷண்ய ஸ்வாமியை எல்லா மணிலா போலிசும் வலை வீசி தேடுது ஆனா அவர் எங்கயும் இல்லை.
என்ன அவரை காணோமே?
ஆமா அந்த பெண்கள் விவகாரத்தில் ஸ்வாமியின் பங்கு இருக்கிறாற்போல தெரியுது.

சார் நீங்க சொன்னப்புறம் தன ஒரு முக்கியமான விஷயம் தெரியுது.
என்னது?
அந்த ஆசிரமத்தின் மேல ஏதாச்சும் புகார் இருக்குதான்னு தேட சொன்னீங்க. நான் நம்ம எஃப் ஐ ஆர் செக்ஷனிலே கேட்டேன், பக்கத்து ஸ்டேட்டிலே எல்லாம் கேட்டேன். ஒரு சுவாரசியமான தகவல் கிடைச்சது.
என்ன சொல்லுங்க.
சில மாசங்களுக்கு முன்னால யோகா மாய மைசூரில் இருக்கிற யோகா மாயா ஆசிரமும் தீக்ஷண்ய ஸ்வாமிகளும் ஒரு  போலின்னு நிரூபிக்க மைசூரு ல இருக்கிற ஒரு க்ரைம் பத்திரிக்கை ஒரு ஸ்டிங் ஆபிரேஷன் பண்ணி இருக்காங்க. ஒரு பொம்பளை ரிப்போர்ட்டரை கால் ஊனமான பொண்ணு போல   நடிக்க வெச்சி அவளை ஆசிரமத்திற்கு அனுப்பி இருந்திருக்காங்க.
அப்புறம்?
அந்த பொண்ணு பெரு சுமித்ரா சரியான பிரச்சனை புடிச்ச பொண்ணு. இந்த காவேரி பிரச்னை வந்து மாண்டியா மாவட்டத்தில் பெரிய கலவரம் ஆச்சுதே
அதில் இவங்க பத்திரிகை நிறைய வேலை பார்த்திருக்கு. அதிலும் இந்த பொண்ணு தான் அதிலே நிறைய எழுதி சிண்டு முடிஞ்சி விட்டது.
ஓஹோ அவளை பத்தி நிறைய தெரிஞ்சிகிட்டே
அதுக்கு ஒரு காரணம் இருக்கு சார்,
என்ன உன் ஒன்னு விட்ட சின்னாத்தா மகள் அவ கூட தங்கி இருந்தவளாக்கும்.
ஐயோ சார்  எப்படி கண்டு பிடிசீங்க?

ஆங் பட்சி சொல்லிச்சு. சரி அந்த பொண்ணுக்கு என்னாச்சு?
அந்த பொண்ணு ஆசிரமத்திற்குள் பொய் அவ ஸ்வாமியாரை பார்க்கணும் தன்னுடைய உடல் ஊனம் சரியாய் போகணும்னு பூஜைக்கு ரிஜிஸ்டர் பனி இருந்திருக்க.
அப்புறம் அந்த பொண்ணை காணாம போய்ட்டாள் அப்படித்தானே?
சார் கொஞ்ச நாளாவே உங்களுக்கு அதீத சக்தி இருக்கு என்றால் கங்கை
இளிக்காதே அம்மா. மேல சொல்லு.
ஆமாம் சார் அந்த பொண்ணு ஆசிரமத்தில் போனவள் காணாம  போய்ட்டதாகவும்,எங்கேயும் கிடைக்க ல்லெனும் அவங்க பெத்தவங்க ஹெபெயஸ் கார்பஸ் போட்டாங்க, ஆசிரமத்தில் ஒரு ரைடும் வந்தது.
அப்புறம்?
ஆனாலும் அவளை கண்டு பிடிக்க  முடியலை,இப்ப அவங்க கேஸ் கர்நாடக ஸ்பெஷல் க்ரைம்  பிராஞ்சில் தொங்கலில் நிக்குது.

அந்த பொண்ணு எங்க இருக்கன்னு எனக்கு தெரிஞ்சு போச்சு. மேற்கொண்டு நம்மகிட்டே இருக்கிற அந்த காமினி கேசுக்கும் விடை கிடைக்க போகுது.
எப்படி சார் சொல்றீங்க.
சொல்றேன். ஆமாம் நீ அன்னைக்கு கமிஷனர் ஆபீசில் காண்பிச்சியே  ஒரு வீடியோ உன்கிட்டே அது இருக்குதா?
நிச்சயமாயிருக்குது சார்.
அதை மறுபடியும் போடு
கங்கா அந்த வீடியோவை போட்டாள்.அதனை தன லேப்டாப்பில் ஷேர் செய்தார் ஸ்வாமிநாதன். சிவகிரி யம் அப்போதுதான் அங்கு வந்தார்,
மூவரும் பெரிய திரையில் அந்த படக்கட்சியி உன்னிப்பாக பார்த்து  கொண்டிருந்தனர்.
காமினி மற்றும் அந்த ஆறு பெண்கள் என்று ஒரு பெரிய கூடத்தில் பூஜை முன்னால் உட்கார வைக்க பட்டிருந்தனர்.எல்லோரும் எதையோ விழுங்கி கொண்டிருந்தனர்.  அவர்கள் தங்கள் நிலையில் இல்லாதது அவர்களை பார்க்கும் போது விளங்கிற்று. திடீரென்று ஸ்வாமிநாதன் இடை  மரித்தார்.
வீடியோவை  பாஸ் பண்ணு
அதோ அந்த கூட்டத்தில் பின்னாடி வரிசையில் உள்ளது யார் ன்னு தெரியுதா?
ஸ்டெல்லா இன்னும் சில பொண்ணுங்க இருக்காங்க சார்.
இன்னும் பின்னாடி வரிசையில் ஸ்வாமியாருக்கு கொஞ்சம் தள்ளி பார்.
ஆமாம் சார் சேகர மூர்த்தி தான்.
அவர் கூட இருக்கும் அந்த பெண்ணை பார்.
சரியாய் தெரியலியே.
கங்கை நீ கொண்டு வந்த அந்த சுமித்ரா கேஸ் ஃ பைலை லேப்டாப்பில் போடு.
சிவகிரி அந்த ஃ பைலை ஓபன் பண்ணுங்க. அந்த பொண்ணு போட்டோவை திறங்க.
கங்கா அந்த  வீடியோவில்;இருக்கும் பொண்ணை பாரு
சிவகிரி அவ ஃ போட்டோவை சூம் பண்ணுங்க்க.
இருவரும் அதிர்ச்சி ஆனார்கள்  சார் அதே பொண்ணுதான்.
அது மட்டும் இல்லை இவளை சமீபத்தில் எங்கேயாவது பார்த்த ஞாபகம் இல்லை?
இல்லையே சார்,
இவ்வளவுதானா உங்க ட்ரைனிங்? நல்ல ஞாபக படுத்தி பாருங்க.
சிவகிரி வேகம் எடுத்தார் சார் நினைவுக்கு வந்திருச்சு சேகர மூர்த்தி மூர்த்தி அவர் ஆபீசில் ரெய்டு நடந்ததே ஆமாம்
அப்போ நாலாவது மாடியில் ஒரு பொண்ணு குறுக்கும் நெடுக்கும் நடந்துகிட்டு இருந்தாளே பார்த்தியா?
ஆமாம் சார் அவளே தான்.  
அப்போ அவதான் இந்த பொண்ணு சுமித்ரா.
இவளை பிடிச்சா நமக்கு ஒரு விடை கிடைக்கும். சீக்கிரமா நூலை பிடிமேலே  ஏறிடலாம்.
பிரமாதம் சார் எப்படி தான் இதை எல்லாம் கண்டுபிடிசீங்க?
ஸ்வாமிநாதன் காப்பை  தொட்டு பார்த்துக்கொண்டே எல்லாம் ஒரு பொறியை வெச்சுதான் என்று சொன்னார்.

பெரிய பொறியாதான் வெச்சிருப்பீங்க போல இருக்குது
அப்போது தான் கங்கா அதனை கவனித்தாள் என்ன சார் புதுசா காப்பெல்லாம் போட்டு கலக்குறீங்க? என்று அதனை திருப்பி பார்த்தாள் ஓம் நம சிவாய என்று அது மின்னிற்று. சிவன் படத்திற்கு மேல் இருந்த பூ கீழே விழுந்து தீபம் பட படுவென்று பொறி பறந்தது. அதாய் கவனித்த ஸ்வாமிநாதன் பூ கீழே விழாமல் இருக்க அதனை பிடிக்க  சென்றார்.அப்போது கங்காவும் அதனை பிடிக்க முற்படவே  இருவரும் முட்டிக்கொண்டனர்.
ஸ்வாமிநாதன் நகைத்து கொண்டே, ஏம்மா சின்ன பிள்ளை கணக்கா இருக்கிற உனக்கு பூ தானே வேணும் எடுத்துக்கோ. என்று  கொடுத்தார்.நீங்க கொடுத்தால் சந்தோஷமா எடுத்துகிறேன் சார் என்று கங்கா சொன்னாள்
ஸ்வாமிநாதன் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாலும் சிவகிரி அதை நோட்டம் விட தவறவில்லை.
கங்காவை புது விதமாக அவர் பார்த்தார். கங்கா எந்த வித சலனமும் இல்லாமல் இருந்தாள்.
சார் தீபம் பிரி விட்டுச்சு நல்ல சகுனம் சார் வாங்க போவோம் என்று சிவகிரி கூற உற்சாகமாய் கிளம்பினாள் கங்கா.
======================================================================
  






Comments

Popular posts from this blog

KAmini_Yogini4

காமினி யோகினி 4 இந்த கதையில் பல சொற்கள் பயன்படுத்துவதால் அதன் அர்த்தத்தை எனக்கு தெரிந்த வரையில் கூறுகிறேன். ஜபம்- உரு போடுதல் உபாசனை- தீவிர பிரார்த்தனை சாதனை - செயலாக்குவது கிரியை-செயல், பிரயோகம்- பயன்படுத்துதல் என்ற வார்த்தைகள் பயன் படுத்த பட்டுள்ளன. இவை அனைத்தும் வடமொழி சம்ஸ்க்ரித சொற்களாகும். இதன் பொருளை உணர்ந்து படிப்பதற்கும், யோகினி என்பது கடவுளர்கள் இல்லை. தேவர்களும் இல்லை, ஆனால் தேவர்களின் நிலைக்கு ஏறக்குறைய பெற்றிருக்கும் தேவதைகள் என்று சொல்லலாம். இவர்களை யோகிகளின் மனைவிகள் என்றும் துணை தேவதைகள் என்றும் சொல்ல படுவதுண்டு. இவர்கள் யட்சிங்கள், கணங்கள், பூதங்களுக்கும் சற்று மேலே சக்தி பொருந்திய தேவதைகள் என்று சொல்ல படுகின்றன. இதற்க்கு மந்திரங்கள் உபாசனை முறைகள், அதற்க்கான பலன்கள் உண்டு என்று அதர்வ வேதமும் யோகினி தந்திர உபாசனை நூல்களும் குறிப்பிடுகின்றன. இவர்களை அம்பிகை பண்டாசுரனுடன் போர் புரிந்த காலத்தில் தன் உப தேவிகளுக்கு துணை யாக போர் புரியவும், அசுர படைகளின் மேல் போர் செய்ய 64 படை தலைவிகளும் தேவைக்காக இவர்களை படைத்ததாகவும், இவர்கள் கீழ் முறையே 1000 கோடி தேவதைக

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண
காமினி யோகினி - பகுதி 10 காமினி எழுந்திரு சீக்கிரம் காமினி காமினி? கேக்குதா? எழுந்திரு கிளம்பு காமினி?!! எங்கோ ஒரு சந்தில் இருந்து யாரோ கத்தும் ஓசை போல கேட்டு மெல்ல சுய  நினைவிற்கு வந்தால் காமினி. தலை சுற்றியது யாரோ சம்மட்டியால் அடித்தது போல  வலி விண்ணென்று தெறித்தது. மெல்ல கண்களை திறந்தாள். யாரோ  மூட்டைகளை தன்   மேல் போட்டத்து போல பாரமாக இருந்தது.  சுதாரித்து கொண்டு எழுவதற்குள் போதும் போதும் என்று ஆனது.  மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். யாரோ  அடித்தது போல இருந்தது. எதோ ஒரு பெண்ணின் முகம் மங்கலாக தெரிந்தது. சுளீர் சுளீர் என்ற அடிகளுக்கும் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை மாறாக எறும்பு கடிப்பது போல இருந்தது. கலைந்த தலை முடியுடன் அலங்கோலமான வெள்ளை அங்கியுடன் இருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் நம்பிகளான  கார்த்திகா, கலை, கனகதுர்கா மூவரும் அவள் அருகிலேயே அதே நிலையில் கிடந்தனர். இவர்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று புரியாமல் விழித்தாள்.  கார்த்தி டீ கார்த்தி எழுந்திருடீ ! கலை கனகா !  இவங்களுக்கு  பரபரப்புடன் மற்ற மூவரையும் உலுக்கினாள். மெல்ல மற்ற மூவரும் முனகி கொண்டே நெள