Skip to main content
காமினி யோகினி - பகுதி 10

காமினி எழுந்திரு சீக்கிரம் காமினி காமினி? கேக்குதா? எழுந்திரு கிளம்பு காமினி?!!
எங்கோ ஒரு சந்தில் இருந்து யாரோ கத்தும் ஓசை போல கேட்டு மெல்ல சுய  நினைவிற்கு வந்தால் காமினி. தலை சுற்றியது யாரோ சம்மட்டியால் அடித்தது போல  வலி விண்ணென்று தெறித்தது. மெல்ல கண்களை திறந்தாள். யாரோ  மூட்டைகளை தன்   மேல் போட்டத்து போல பாரமாக இருந்தது.  சுதாரித்து கொண்டு எழுவதற்குள் போதும் போதும் என்று ஆனது.  மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். யாரோ  அடித்தது போல இருந்தது. எதோ ஒரு பெண்ணின் முகம் மங்கலாக தெரிந்தது. சுளீர் சுளீர் என்ற அடிகளுக்கும் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை மாறாக எறும்பு கடிப்பது போல இருந்தது. கலைந்த தலை முடியுடன் அலங்கோலமான வெள்ளை அங்கியுடன் இருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் நம்பிகளான  கார்த்திகா, கலை, கனகதுர்கா மூவரும் அவள் அருகிலேயே அதே நிலையில் கிடந்தனர். இவர்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று புரியாமல் விழித்தாள். 
கார்த்தி டீ கார்த்தி எழுந்திருடீ ! கலை கனகா !  இவங்களுக்கு  பரபரப்புடன் மற்ற மூவரையும் உலுக்கினாள்.
மெல்ல மற்ற மூவரும் முனகி கொண்டே நெளிந்தார்.
அம்மா வலிக்குதும்மா என்று   ஆரம்பித்தாள் கனகா
காலை மெதுவாக தாங்கியபடி எழுந்தாள். கார்த்திகா  ஆ ஊ என்று  அழுதாள். கலை  ஹே கலை. ஏண்டி அழற? என்றால்
அப்பா அப்பாவை அடிச்சாங்க
இரு இரு அழாத. நாம எங்க இருக்கோம்
தெரியலை எப்படி இங்க வந்தோம்? எதுக்கு நம்மளுக்கு இப்படி ஒரு டிரஸ்ஸை போட்டு விட்டிருக்காங்க?
 காமினி என்று கனக முனகினாள்
கனகா ஆர் யூ ஆள் ரைட் ?
இங்க ?என்ன நடக்குது
நான் சொல்றேன் என்று உள்ளே வந்தாள் சுமித்ரா
============================================
சா.. சார்!  அவசர செய்தி! என்று பதறியபடி உள்ளே வந்தால் கங்கா
என்ன? என்று ஸ்வாமிநாதன்  ஏறிட்டார்
சேகர மூர்த்திக்கு ஹார்ட் அட்டாகாம்!
என்ன? எப்போ ஆச்சாம்?
இன்னிக்கி மார்னிங் தான் அட்மிட் பண்ணி இருக்காங்களாம் அவசரமா ஊட்டியில் இருந்து அவரை கோவையில் உள்ள இன்னொரு ஹாஸ்பிடலுக்கு மாத்தி இருக்காங்க.
இதை யார் உங்ககிட்ட சொன்னாங்க?
அவசரமா அவரை சேர்த்து இருக்காங்களாம் அவரு மேனேஜர் தான் கால் பண்ணுறார்
எத்தனை மணிக்கு?
நமக்கு அரை மணி நேரத்துக்கு முன்னால தான் சார் சொன்னாங்க.
சரி இப்போ அவரு எங்கே?

இப்போதைக்கு  கோயம்புத்தூரில்  உள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலிலே  இருக்கிறாராம் அவரு கட்சி காரங்க எல்லாம் அங்கே குமிஞ்சி இருக்காங்களாம் ஒரே ரகளையான இருக்குதுன்னு  மெசேஜ் வந்தது என்றார் சிவகிரி.

சரி அப்போ நாம தேடிகிட்டு இருக்கிற ஆள் அநேகமா அங்கே தான் இருக்கணும் சிவகிரி நீங்க வண்டியை எடுத்துக்கிட்டு போங்க எனக்கு இங்கே ஒரு வேலை இருக்கு என்று சொல்லி அவருடைய காரை எடுத்து கொண்டு கிளம்பினார் ஸ்வாமிநாதன்.
================================================

இன்ஸ்பெக்டர் சிவகிரியும் சுவாமிநாதனும் மருத்துவமனை அருகில் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றனர். அந்த குளிரிலும் அவ்வளவு ஜனக்கூட்டம் இருந்தது அவருக்கு வியப்பிணை அளித்தது. என்னய்யா சேகர மூர்த்திக்கு பெரிசா ஏதாச்சும் ஆயிடுச்சா? என்றார் ஸ்வாமிநாதன்.

அப்படி தெரியல சார், அப்படி இருந்த பெரிய கலவரமே ஆகி இருக்கும் நம்ம ஊருல? என்று சொல்லி கொண்டே கூட்டத்தை விலக்கி நேராக அவர்கள் தலைமை டாக்டரிடம் சென்றனர்.

எஸ்கியூஸ் மீ டாக்டர்! நான் அசிஸ்டன்ட் கமிஷனர் ஸ்வாமிநாதன், இவரு இன்ஸ்பெக்டர் சிவகிரி
நல்லது ஏ சி பி சார், சொல்லுங்க!
சேகர மூர்த்தி இங்க  ஒரு பேஷண்டு ஹார்ட்அட்டாக் வந்து அட்மிட் ஆகி இருக்காரில்லையா?
ஆமா!
இப்போ எப்படி இருக்காரு?
சார் ரொம்ப ரகசியம் அவரு இப்போ டேஞ்சரான நிலைமையில் இருக்காரு என்ன சொல்றீங்க?

 ஆமாம் சார் அவருக்கு யாரோ இதய துடிப்பை நிறுத்த முயற்சி பண்ணி இருக்காங்க!

இருவரின் முகமும் அதிர்ச்சியில் உறைந்தது!

என்ன சொல்றீங்க டாக்டர்?அப்போ அவரை கொலை முயற்சி பண்ணி இறுக்கங்களா?

கிட்ட தட்ட அது மாதிரி தான், எனக்கும் ஒன்னும் புரியல டெஸ்ட் எடுக்க ரத்த மாதிரிகளை கொடுத்து பார்த்தோம் ஆல்கஹால் தவிர விஷம் ஒன்னும் இல்லை.

என்னதான் நடந்திச்சுன்னு கொஞ்சம் விவரமா சொல்றீங்களா?

அவரு இன்னிக்கி முழுக்க ஏகத்துக்கும் ப்ரீசரில் இருந்துருக்கார் ஸ்ட்ரெஸ் அதிகமாக இருந்திருக்கு அவரு ரத்த கொதிப்பு மாத்திரை எடுக்கிறவர். கூடவே நிறைய ட்ரிங்க்ஸ் சாப்பிட்டு இருந்து இருக்கிறார் போல. அவரை சோதிச்சப்போ எங்களுக்கு தெரிஞ்சது.

இன்னைக்கு நடந்த ரெய்டில் 2500 கோடி அவருக்கு எப்படி பி பி வராம இருந்திருக்கும்? என்றார்  சிவகிரி.

Excatly! அந்த நேரத்தில் அவரு ட்ரிங்க்ஸ் சாப்பிட்டதுதான் வினையே!  அவருக்கு பி பீ ஷூட்டுப் ஆகி இருக்கு குடிச்ச ஆல்கஹால் விஷம் மாதிரி வேலை செய்ய வெச்சிருக்கு.அவரா இதை எடுத்துகிட்டாரா இல்லை யாரேனும் சரியா கொடுத்திருக்காங்களா ன்னு தெரியலை.

புரியுது டாக்டர்!ஆமா ஊட்டி ஹாஸ்பிடல் லே இருந்து அவரை யாரு கூட்டிகிட்டு வந்தது?

அவரு மேனெஜர் தான்.

அப்போது சேகர மூர்த்தியின் மேனேஜர் உள்ளே வந்தார்
சார் கொஞ்சம் இம்மிடியேட்டா வாங்க அய்யாவுக்கு இழுத்துக்குது
மூவரும் விரைந்தனர்.

டாக்டர் அவர்களை தடுத்து நிறுத்தினார். சார் அவர்கள் மூவரையும் ICU  வெளியே தடுத்தார். நாங்க பத்துக்குறோம் இங்கேயே நில்லுங்க என்று சொல்லி உள்ளே சென்று விட்டார்.

அதற்குள் கும்பல் கூடி விட்டது போலீஸ் இருந்ததும் சற்று தயங்கிய கூட்டம்
சலசலக்க ஆரம்பித்தது.

டேய் என்னங்கடா கூட்டம், போங்க என்று இருவரும் விரட்ட ஆரம்பித்ததும் சற்று கலைந்து சென்று விட்டனர்.

அப்போது மானேஜரை இருவரும் மடக்கினர்.

நீங்க இன்னிக்கி ரெய்டு நடந்தது இருந்து எங்கே இருந்தீங்க?

நான் ஆபீசில் விசாரணையில் இருந்தேன் சார். என்றார் பயத்துடன்.
அவர் ரெய்டு நடக்கும்போது உங்ககூட இருந்தாரா?

கொஞ்ச நேரம் இருந்தாரு அப்புறம் எங்கேயோ வெளியில போய்ட்டாரு
அது எப்படி ரெய்டு நடக்கும் பொது வெளியில் விட்டாங்க? என்றார் ஸ்வாமிநாதன்,
அது வந்து சார் அவர்க்கு இன்னொரு வீடு பக்கத்தில் இருக்கு யாருக்கும் தெரியாது அங்கே போய்ட்டாரு அவரு மட்டும் தன இருக்காரா வேற யாராச்சும் இருக்காங்களா ?
அது வந்து சார்!
உண்மையை சொல்லு இல்லேன்னா நீதான் அவரை போட்டு தள்ள பார்த்தேன்னு உன் மேல கேஸை திருப்பி விட முடியும்
அய்யோயோ! நன் புல்லை குட்டி காரன்  சார் மாட்டி விட்டுடாதீங்க
சொல்லு அங்கே யாரு இருக்கா? ஊட்டி ஹாஸ்பிடல்ல யாரு கொண்டு வந்து சேர்த்தது ? அவங்க ஏன் இந்த ஹாஸ்பிடல் க்கு வரலை?
அது வந்து சார் அவரு கூட ஒருத்தர் இருகாங்க. அவங்க பேரு சுமித்ரா...

================================================

ஸ்வாமிநாதன் புன்னகைத்தார். அவருக்கு வேண்டிய விவரம் கிடைத்து விட்டது.

கங்கா உனக்கு ஒரு வேலை என்று கைத்தொலைபேசியில் கூறினார். 

சோர்வுடன் அங்கிருந்த நாற்காலியில் சரிந்தார். சுவாமிநாதனுக்கு தலை சுற்றியது, இவர் இறந்து வைத்தால் இந்த கேஸ் இல்லாமல் போகுமே, சித்தரே! இதுதான் முடிவா? என்று கங்கணத்தை ஒரு முறை தடவினார்.
உடனே சிவகிரியை ஏறிட்டார்.

நீங்க நாம பேசின மாதிரி நம்மாளு இங்க இருக்காங்களான்னு செக் பண்ணுங்க என்று கூறினார். சிவகிரியும் சற்று விறைப்பாக சல்யூட்டு வைத்து விட்டு நகர்ந்தார்.

விபூதியின் வாசம் திடீரென அவர் நாசியை அடைந்தது. ஸ்வாமிநாதன் சற்று தெம்பானார்.

சிரித்த முகத்துடன் அங்கு நின்று கொண்டிருந்தார். சிவா ஸ்வாமிகள் மந்தஹாஸத்துடன் அருகில் அமர்ந்தார்.

சுவாமி உங்களை நம்பி நான் ரொம்ப தைரியமா எல்லா விவரத்தையும் சேகரிச்சிட்டேன், நீங்க சொன்ன அந்த கார் லே இருந்து தஸ்தாவேஜு காப்பி எல்லாத்தயும் நான் எடுத்து உடனடியா அனுப்பினேன் அமலாக்கத்துறையும் இது வரை இல்லாத அளவுக்கு பெரிய ரெய்டு நடத்தினாங்க, ஆனால் யோகினி மாயா ஆசிரமம் பத்தி எந்த விவரமும் கிடைக்கல, இந்த ஆளு இப்போ படுத்த படுக்கையை கிடக்கிறார். இவரு எழுந்து உண்மையா சொன்ன தான் அந்த ஆசிரமம் பத்தியும் அந்த பொண்ணுங்க பத்தியும் தெரியும்.

கொட்டிட்டியா? உன் பாரம் தீர்ந்ததா? எண்டு சிரித்தார் சிவா ஸ்வாமிகள்.
என்ன சுவாமி எனக்கு ஒன்னும் புரியலையே?

சரி அதிருக்கட்டும் இப்போ உனக்கு ஒருத்தரை வைத்து நான் சில சித்து விளையாட்டை காட்ட போறேன் பார் என்றார்.

கண்ணை மூடி காப்பை கையிலே பிடிச்சிக்கிட்டு என்னை நினைச்சுக்கோ என்றார். ஸ்வாமிநாதன் அதை அப்படியே செய்தார்.

சற்று நேரத்தில் அவரும் சிவா ஸ்வாமிகளும் கூட சம்பத்தும் அவசர சிகிச்சை பிரிவு அறையில் இருந்தனர். ஸ்வாமிநாதனால் நம்பவே முடியவில்லை. ஆனால் யாராலும் அவர்களை பார்க்க முடியவில்லை.

சிவா ஸ்வாமிகள் மெளனமாக சம்பத்திடம் சைகை செய்தார்.

சம்பத் அதை புரிந்து கொடவனாக தன்  கைகளை மீன் போல வைத்து கொண்டான். பெரு விறல் முதல் உள்ளங்கால் வரை சேகர மூர்த்திக்கு வர்மா புள்ளிகளை தொட ஆரம்பித்தான்.
அவன் அந்த பகுதியை உருவி விட்டு தலையில் சென்று ஊதினான். 

சேகரமூர்த்தி இப்போது மானிட்டரில் உயிர் துடிப்பு பெற ஆரம்பித்தார். சற்று ஏறக்குறைய சாக இருந்தவன் எப்படி உயிர் பெற்றான் என்று புரியவில்லை  சுவாமிநாதனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மூவர் இப்போது வெளியே வந்து விட்டனர்.

சுவாமி இனிமே அந்த ஆளு பிழைச்சிப்பானா?

ஈஸ்வரன் போட்ட முடிச்சு அவ்வளவு சீக்கிரம் அவன் போவானா அவனுக்கு கண்டம் போயிடுது.இனிமே பயம் இல்ல. என்றார் சிவா ஸ்வாமிகள்.

சம்பத் இந்த ஆளு லேசு பட்டவன் இல்லா சார்! ஆயுசு கெட்டி. அவன் உயிர்நாடியை அடிச்சிக்கிட்டு இருந்த கொழுப்புகளை சூட்டினை கொண்டே அவனை பிழைக்க வைத்தாகிவிட்டது. 

அதுவும் இன்னமும் எவ்வளவு உண்மை இவன் மூலம் வெளிவர வேண்டி இருக்கு? லேசில் தப்பிச்சிடுவான?? என்றான்.

உண்மை தான் ஆனால் ஒன்று இவனை செத்து போன மாதிரி இருந்தால் இவனுக்கு தொல்லை போகும் அதுக்கு ஒரு வழி இருக்கு என்று சொல்லி மீண்டும் மாயமானார் சிவா ஸ்வாமிகள்.

================================================
கன்னடத்தில் சேகர மூர்த்தி மரண படுக்கையில் இருக்கும் செய்தி அலறியது. அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு காரணமாக அவர் கடும் இதய கோளாறு அடைந்ததாக வும் அவர் மரண படுக்கையில் இருப்பதாகவும் 48 மணி நேரம் தாண்டினால் மட்டுமே எதுவும் சொல்ல முடியும் என்றும் கன்னட செய்தி வாசிப்பாளர் சொல்லி கொண்டிருந்தார் பரபரப்பு செய்திகள் அன்று நாள் முழுவதும் ஓடின.

ஸ்டெல்லா குழப்பமாக இருந்தாள். அவள் இதயம் எதோ பிசைந்தது. காலையில் ஸ்வாமிஜி அஸ்ஸாம் போக வேண்டும் என்றும் சூரா சுவாமி அவளை அழைத்து செல்வதாகவும் சொன்னது அவ்வளவு நல்ல செய்தியாக இல்லை.

அன்று சூரசுவாமி அவளை பார்த்திருந்தால் சம்பத் அவளை காப்பாற்றி இருக்க வில்லை என்றால் அவள் இந்நேரம் பரலோகம் சென்றிருப்பாள். சூரஸ்வாமி ஆசிரமத்திற்கு தெரியாமலும் ஸ்வாமிஜீயின் விவரம் சொல்லாமலும் எதோ உள்ளடி வேலைகளை செய்வதாகவே அவள் கருதினாள்.அவன் எதற்காக பெட்டிகளை நிலவறைக்குள் சேர்க்க வேண்டும் அதற்குள் என்ன இருந்தது? நாடு வழியில் அவள் அந்த பெட்டிகளுக்குள் இருந்ததை கண்டு பிடித்திருந்தால் சூரஸ்வாமியை பற்றி பல தகவல்கள் கிடைத்திருக்கும்.  நாள் ஆக ஆக அவளுக்கு குழப்பமும் பயமும் அதிகரித்தன. ஸ்வாமிஜி முன்னரை போல் அவளிடம் சகஜமாக பேசுவதில்லை. அவர் சமாதி நிலை அடைய அவ்வப்போது செல்வதும் வருவதுமாக இருந்தார்.

அம்மா என்ற ஒரு குரல் கேட்டதும் நினைவிற்கு வந்தவள் என்ன என்பது போல கண்களை காட்டினாள். அம்மா சூரசுவாமி உங்களை பார்க்கணும்னு காத்துக்கிட்டு இருக்கார்.

சரி பார்க்க வரேன்னு சொல்லு என்ற பதிலளிக்கவும் அவள் நகர்ந்தாள்.
அவள் இதயம் மெல்ல படபடத்தது.

கனத்த தோள்களும் அசோகா மரம் போல உயரமும் கடுமையான முகத்துடனும் ஆசிரம மேல் மாடி விதானத்தில் சாளரத்தினை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் சூரா ஸ்வாமி.அவன் பளிங்கு போல கண்களும் பாறை போன்ற உணர்ச்சி அற்ற முகமும் யாரையும் கலக்கி விடும்.

மெளனமாக வணக்கம் சொல்லி கைகளை கூப்பி ஜெய் யோகா மாயா!  என்று கனத்த குரலில் கூறினான். பதிலுக்கு இறுக்கமாக ஒரு பார்வையை செலுத்தி ஜெய் யோகா மாய என்று கூறி கரம் கூப்பினாள்.

இரண்டு வினாடிகள்   அவள் கண்களை ஊடுருவினான் சூரஸ்வாமி.
எனக்கு எதுவும் ஸ்வாமிஜி கட்டளை இட்டவரா என்று ஆங்கில தமிழிலில் கேட்டாள்  ஸ்டெல்லா.

கட்டளை இட்டால் சிறை மேற்கொண்டு செய்வது சிஹயர்களின் கடமை என்று பதிலளித்தான்.

இதற்க்கு என்ன அர்த்தம்? நீங்கள் வந்ததன் நோக்கம்? என்று வெட்டினாள்.

சுவாமி இன்று எனக்கு ஒரு முக்கிய பணியை சொல்லி இருக்கிறார். வரும் பௌர்ணமி நன்னாளில் சுவாமி ஆத்ம பூஜை செய்ய அஸ்ஸாமில் உள்ள யோனி தேவி கோயிலுக்கு செல்லவேண்டும் அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றான்.

மேற்கொண்டு ஸ்வாமிஜி அவளுடன் பயணம் மேற்கொள்ள போவது அவளுக்கு ஆறுதலாகவும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூரஸ்வாமி பற்றிய தகவல்களை சொல்லி எச்சரிக்கவும் முடியும் என்று எண்ணினாள்.

உடனடியாக செயுதுவிடலாம். அவர் எப்போது இங்கு வருவார்?என்னிடம் அவர் தொடர்புகொள்ளவே இல்லையே?

அவர் ஆத்ம பூஜைக்கு தன்னை தயார் படுத்திக்கொண்டுள்ளார். அவர் பெரும்பாலும் சமாதி நிலையில் இருப்பதால் யாரும் தொடர்பு கொள்ள முடியாது ஆதனால் தான் நானே நேரில் வந்தேன் இது சற்று ரகசியமான வேலை மேலும்,முக்கியமாக உதவிக்கு தங்களையும் என்னையும் அவர் வர சொல்லி இருக்கிறார். வேறு யாரையும் அவர் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை.

ஸ்வாமியே இதை சொன்னாரா?

அதில் சந்தேகமா?

அப்படி இல்லை. இத்தகைய நிகழ்ச்சி நிரல்களை எனக்கு தான் அவர் நேரிடையாக சொல்வது வழக்கம். இது புதியதாக இருக்கிறதே.

இது சுவாமி ரகசியமாக செய்ய வேண்டிய பூஜை ஆதாலால் அவர் இட்ட கட்டளையை கேள்வி இன்றி உடனே செய்ய வேண்டியது நம் கடமை.

ஸ்வாமிகளை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவருக்கு என் மேல் என்ன வருத்தமோ தெரிய வில்லை.

உங்கள் மேல் அவருக்கு வருத்தம் ஏற்பட வாய்ப்பே இல்லை. தங்கள் செய்யும் வேலைகள்  அவருக்கு பரம திருப்தி அளிக்கிறது என்றே தெரிகிறது.
இந்த வேலையை அவர் என்னிடம் கொடுத்தது ஒரு வேளை உங்களுக்கு அதிக பளு கொடுக்க வேண்டாம் போல தோன்றுகிறது. ஆகவே விசன படவேண்டாம் என்று ஒருவித மர்ம புன்னகையுடன் சொன்னான்.

ஸ்டெல்லா துணுக்குற்றாள். ஆனாலும் எந்த வித முக குறிப்பையும் கொடுக்கவில்லை. 

ஸ்வாமிகளுக்காக எந்த பளுவையும் என்னால் முடிந்த வரை தொக்க எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் அவரை காண வேண்டும்.

சீக்கிரமே காணலாம் அவர்தான் பூஜைக்கு நம் இருவரையும் துணைக்கு வைத்து கொள்ள போகிறாரே

அந்த திருப்தி தான் இப்போது ஆறுதல். நான் விரைவில் பயண ஏற்பாட்டினை செய்து முடிக்கிறேன் என்று விடை கொடுத்தாள் ஸ்டெல்லா.

வந்த வேலை முடிந்த திருப்தியில் அங்கிருந்து சூரஸ்வாமி புறப்பட்டான்.

 ===========================================
காமினி,கனகா, கலா கார்த்திகா என்று நான்கு பெரும் ஒருவாறு நினைவு திரும்பி எழுந்து கொண்டனர். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து விழித்து கொண்டு இருந்தனர். நாம் எல்லாரும் இங்கே எப்படி வந்தும்? என்ன டிரஸ் இது எங்கே இருக்கோம்? என்று பதிலுக்கு கேள்வி கேட்டு கொண்டிருந்தனர்.
சுமித்ரா வை அப்போது தான் முதலில் பார்த்தனர். அவள் பூனை கண்கள் அவர்களை பயம் கொள்ள செய்தது. 

நீங்க சுய நினைவுக்கு வந்துடீங்களா? என்று புன்னகையுடன் கேட்டாள்.

ஆமா நீங்க யாரு நாங்க எங்க இருக்கோம் என்று கேட்டனர்.
முதல்ல இந்த பால குடிங்க சீக்கிரம் என்றாள்.

சந்தேகத்துடன் நால்வரும் பார்க்க, பயப்படாதீங்க சீக்கிரம் என்று துரித படுத்தினாள் சுமித்ரா. நால்வரும் பாலை குடித்தனர். சூடான பால் அவர்களுக்கு தெம்பினை தந்தது.

சீக்கிரம் கிளம்புமங்க! நாம இங்க இருக்கிற ஒவ்வுறு நிமிஷமும் நமக்கு ஆபத்து என்று சுமித்ரா சொன்னாள் .

காமினி உடனே அதிருக்கட்டும் முதலில் நீங்க யார் இது என்ன இடம் நாங்க எப்படி இங்க வந்தும் என்றாள்

கண்டிப்பா பதில் சொல்றேன் ஆனா கேட்க நீங்க உயிரோட இருக்கணும் இல்லையா? என் மேல நம்பிக்கை இருந்த உடனே ஓஞ்சு இருந்து புறப்படுங்க என்றாள் சுமித்ரா.

அதிர்ச்சியில் ஒருங்கே  அவளை பார்த்தனர். சீக்கிரம் இந்த கதவு வழியா என்னோட வாங்க என்றாள்.

ஐந்து பெரும் சிறிய கதவு ஒன்றில் நுழைந்து அந்த அறையை விட்டு வெளியேறினர்.   
அங்கு விபூதியின் வாசம் மட்டுமே மிச்சம் இருந்தது.
=================================================

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...