Skip to main content

வாடகை வயிறு

ரேகாவுக்கு அவளையே பார்த்துக்கொள்வது போல இருந்தது. மணி போல இரு கண்கள், திறந்தும் திறவாமலும் பாதி மலர்ந்த மல்லிகைப் பூ போல இருந்தது. கீரை தண்டு போல இளசாக இருந்த கைகளும் கால்களும், கூரிய மூக்கும், சுருளாக முளைத்திருந்த தலை முடியும், தங்கப் பதுமை போல இருந்த உருவமும், அஹா! பார்த்தவுடனே அழுகை பீரிட்டு கொண்டு வந்தது. தனக்கு இதனால் ஒரு கேவலமும் இல்லை என்றே தோன்றியது. ரவியின் நல்ல குணமும், அவனுடைய துன்பமும் அவன் வெளிப்படையாக அதே சமயம் ஞாயமான அவன் வேண்டுகோளும் அவளை இப்படி ஒரு காரியத்திற்கு துணிய வைத்தது.  தன் மூலம் அவனுக்கு ஒரு குழந்தையினை கொடுக்க முடியும் என்ற திருப்தியும், தைரியமும் அவளுக்கு வந்ததால், இன்று அவன் மூலம் அவள் ஒரு குழந்தையின் தாயாக ஆகிவிட்டாள் .

"கங்க்ராட்ஸ் மிஸ்டர் ரவி! உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு."
என்று டாக்டர் ஹேமா வாழ்த்தினார். ரவிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.
"கடவுளே எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல்ல டாக்டர். நான் இப்போவே வர்றேன். ரேகா பக்கத்துல இருந்தா குடுங்க. ...ஹலோ ரேகா கண்ணா.. வாழ்த்துக்கள்...இதோ வரேன்."

ரவி கிலோ கணக்கில் இனிப்புகள் வாங்கினான். ரேகாவின் மகன் மகேஷையும் அழைத்துக்கொண்டான். கார் டிரைவர் உடனே புரிந்து கொண்டார்.
"என்ன தம்பி? கொழந்தை பிறந்திடுச்சா? என்றார்.
"ஆமா அண்ணே! ஆமா! நானும் அப்பா ஆயிட்டேன் " என்று கண்ணில் துளிர்த்த கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னான் ரவி.
"கடவுள் இருக்காரு தம்பி! இன்னைக்கு ஊர் வாயி எல்லாம் முடிருச்சே!" எத்தனை பேச்சுக்கள்! சரி சரி இப்போ எதுக்கு அதெல்லாம்?வாங்க போகலாம்." என்று காரை விரைவாக எடுத்தார். மூவரும் காரில் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தனர். 

அவனுக்கு முன்னால் அவன் நினைவுகள் குதிரை பாய்ச்சலில் ஓடியது . இன்று போல என்றும் ஆனந்தமாய் இருந்ததில்லை. ஒரு பெரிய அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருந்தும், நன்கு பேர் அவன் இட்ட கட்டளை படி வேலை செய்வதும், கொள்ளை கொள்ளையாய் சொத்து சேர்ந்து இருந்தும், நல்ல அந்தஸ்த்து இருந்தும் பயன் பெறுமா?
ஒன்றல்ல இரண்டல்ல, எழு வருடங்கள்! அவர்கள் சந்திக்காத அவமானங்களும், கிண்டல்களும், பச்சாதாபங்களும், வாழ்த்தும், வசைகளும், பின்னால் இருந்து கேட்கும் குத்தல் பேச்சுக்களும், எதுவும் மிச்சம் இல்லை.அவனை விட ரேகா தான் அனலில் இட்ட புழு போல துடித்துப் போனவள்.பார்க்காத வைத்தியம் இல்லை, போகாத கோயில்கள் இல்லை.  அந்த டாக்டர் சேது என்ன சொன்னார்?
 "ஐ அம் சாரி மிஸ்டர் ரவி! உங்களுக்கு கூட ப்ராப்ளம் இல்லை உங்க மனைவி ரேகாவுக்கு தான்.."
மேற்கொண்டு கேட்க முடியவில்லை. துக்கம் தொண்டை அடைக்க உடைந்து போய், விக்கி விக்கி அழுத ரேகாவை பார்க்கமுடியாமல் அவன் தவித்த தவிப்பு. அவளை மலடி என்று சொல்லாமல் சொல்லி விட்டாரே அவர்!தினமும் அவர்களின் படுக்கை அரையில் கழித்த நரக வேதனைகள்..அப்பப்பா! 
"செத்துடலாம் போல இருக்கு ரவி!" என்று சொன்ன அவளுக்கு இந்த டாக்டர் தானே தன்னம்பிக்கை தந்தாள்!
"ஹைய்யா அம்மா ஆஸ்பத்திரி வந்திருச்சு என்று மகேஷ் கூவியது கேட்டு ரவி நனவுலகிற்கு திரும்பினான். "சுமுகி மருத்துவமனை "

ரவி டாக்டர் ஹேமா வின் அறைக்கு விரைந்தான்.

 "வாங்க மிஸ்டர் ரவி.என்னது இது? ஒ ஸ்வீட்டா ?
"ரேகா எங்க டாக்டர்?" என்றான்
"ஓ அவங்களா? சரி மெட்டர்னிட்டி வார்டுலதான் உங்க மனைவி இருக்காங்க.  போகலாமா? " என்றார்.
"உங்க மனைவி ஒரு நிமஷம் கூட தூங்கவில்லை தெரியுமோ? டெலிவரி டைம் பூரா குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருந்தாங்களாம்."என்றார். ரவி சிரித்தான்.

ரவியுடன் அழைத்து வந்த ரேகாவின் மகன் மகேஷை பார்த்த டாக்டர் "ஹலோ மகேஷ் எப்படி இருக்க ?" எண்டார் டாக்டர்.
முட்ட முட்ட விழித்த மகேஷ் "உம்" என்று சொல்லி ரவியின் பின்னால் போய் ஒளிந்தான்.
"ரேகாவுக்கு பணம் போட்டாச்சா? " என்றார் டாக்டர்.
"அப்போவே பேங்க் அக்கவுன்ட்டுல போட்டுட்டேன் டாக்டர். "என்றான் ரவி.
"நீங்க தேங்க்ஸ் சொல்லனும்னா ரேகாவுகுத்தான் சொல்லணும். நம்ம  ஊருல யாருமே இப்படி முன்வந்து இந்த மாதிரி ஒரு துணிச்சலான  காரியம் செய்ய மாட்டாங்க! ஆனா இவங்க கேட்ட தொகை தான் ஜாஸ்தி."
"பணத்த பத்தி கவலை இல்ல டாக்டர் அவங்க தான் இன்னிக்கி எனக்கு வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தயே குடுத்து இருகாங்க!" என்று உணர்ச்சி பெருக்குடன் சொன்னான் ரவி.
"உங்க மனைவியையும் பாராட்டித்தான் ஆகணும் அவங்க மட்டும் ஒத்துகலன்னா அவ்ளோ தான் என்னால ஒன்னும் பண்ணி இருக்க முடியாது."
"ஆமாம்  டாக்டர்! ஒரு கட்டம் வரைக்கும் அவ இதுக்கு சம்மதிகல்லை.
அப்புறம் நான் நிலமைய எடுத்து சொன்னதுக்கு அப்புறம் அவ புரிஞ்சிக்கிட்டா."
எப்படியா இருந்தாலும் இப்போ நீங்களும் ஒரு தந்தை சந்தோஷ படுங்க."
"சரி சரி! இப்படியே வசனங்கள் பேசி என்னோட "ட்ரீட் " மறந்து போயிடாதீங்க" என்று கண்ணடித்து கிண்டல் செய்தார் டாக்டர் ஹேமா.
 
"விடமாட்டீங்களே !" என்று சிரித்தவாரே இருவரும் மகபேறு அறைக்குள் சென்றனர். ரவி இன்றுதான் ரேகாவின் முகத்தில் அத்தனை சந்தோஷத்தினை கண்ணுற்றான். அதில்தான் எத்தனை நிம்மதி? எத்தனை பிரகாசம்? வாழ்க்கையின் இலட்சியத்தை அடைந்ததின் திருப்தி? அனைத்தையும் ஒரு சேரக் கண்டான் ரவி.

"ரவி! பாத்தீங்களா! நம்ம பாப்பா எவ்ளோ அழகா முத்தா இருக்குன்னு பாருங்க! "என்று பேசிக்கொண்டே கைகளில் குழந்தையை கிடத்தினாள் ரவியின் மனைவி ரேகா. ரவி குழந்தையை அணைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தான். படுத்து கொண்டிருந்த ரேகா எழுந்திரிக்க  எத்தனித்தாள்.

"படுங்க படுங்க!இப்போ நீங்க எழுந்திரிக்க கூடாது 
ரொம்ப சோர்வா இருக்கீங்க! "என்றான் டாக்டர்.
"பரவா  இல்லைங்க, என்று அவள் மகன் மகேஷை வரும்படி சமிஞை செய்தாள். "என் மகன் உங்கள ரொம்ப தொந்தரவு பண்ணானா?" என்றாள் ரேகா
"அதெல்லாம் இல்ல ரொம்ப  சமத்தா தான் இருந்தான்." என்று அவள் மகன் மகேஷை அருகில் விட்டான் ரவி.
"ரேகா! நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல்ல. எங்களால முடியாததை நீங்க தந்துட்டீங்க! உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது. ரொம்ப தாங்க்ஸ்! என்று கண்ணீர் மல்க கரங்கள் கூப்பி சொன்ன நன்றிகளையும், குழந்தையை எடுத்து பாசத்துடன் அரவணைத்து கொண்டிருந்த ரேகாவின் ஆனந்தத்தையும் அமைதியாக, படுக்கையில் படுத்தவாறே பார்த்துக்கொண்டு இருந்தாள் வாடகை தாய் ரேகா.
"யாரோட புள்ளையோ போய் சொமக்க சொல்றாங்க உனக்கு அதோட பேரு என்னனு தெரியுமா?" என்று அவள் தோழி சரளா கேட்டது நெஞ்சை குத்தி  கிழித்தது தான்.ஆனாலும் இது வயிற்று பிழைப்புக்காக, தன் குடும்பம் பிழைக்க பணம் வேண்டுமே? விதவை பெண்ணான எனக்கு ஒரு புகலிடம் வேண்டாமா? பிழைப்பு வேண்டாமா? திக்கு இல்லா பக்தனுக்கு இன்று தெய்வமே பணத்தின் மூலம்தானே துணை செய்கிறது? சமுதாயம் எப்படியும் என்னை போல அபலைகளை சீரழிதுவிடுமே.காப்பாற்ற யாரும் அற்ற அவர்களுக்கு இப்படி ஒரு வசதி வந்தது ரவி ரேகாவால் தானே?அவள் மானத்தை அடகு வைக்க வில்லை, வயிற்றை தான் அடகு வைத்தாள்.  அவளுக்கு இப்போது ஒரு நிம்மதி அவள் வாடகை வயிறு செய்தது வியாபாரம் அல்ல சேவை!
********

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
Kamini_Yogini 7 காமினி_யோகினி 7 எஸ் பி ஸ்வாமிநாதன் கொஞ்சம் ஆடித்தான் போனார். அடேயப்பா! என்னய்யா இது? இந்த ஆசிரமன்தான் இவங்க எட் ஆபிஸா? என்றார் ஆச்சரியம் தாளாமல் இல்ல சார்! இது இவங்களோட தமிழ்நாடு பிராஞ்சு ஆபீஸ் சார் .எட் ஆபீஸ் மைசூரில் இருக்குது சார். என்றாள் கங்கா ஓ அப்படியா! இந்த பிள்டிங்கே  கோடி கணக்கிலே மதிப்பிற்கும் போல இருக்குதே இதுவே மாளிகை போல இருக்குதுன்னா அப்போ அங்கேனே? சொர்க்கம் போல இருக்கும் சார்  அதோ அங்க பாருங்க! என்று கங்கா சுட்டி காட்டிய திசையில் படிய வாரிய தலை, கொஞ்சம் மாநிறம். நரைத்த திருத்தப்பட்ட மீசை தாடி. அகலமான நெற்றியில் குங்கும பொட்டு.  இளம் சிவப்பு நிற வெட்டி அதில் வெள்ளை பச்சை நீல கரை கதர் சட்டை வைர மோதிரம் பிரேஸிலேட் மின்ன வேட்டை நாய் போல கத்தி கொண்டிருந்த சேகரமூர்த்தி தென்பட்டார். பல பேர் அங்கு பளிங்கு தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதில் பலரும் வட நாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் என்று அவர்கள் முகத்தை பார்த்த உடனே தெரிந்து கொண்டனர் போலீசார். பலர் பெரிய ரோஜா தோட்டத்தினை செப்பனிட்டு கொண்டிருந்தனர். வானளா...