Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 7


புதுவை கடற்க்கரை அன்று கூட்டமாக காணப்பட்டது. ஹரி அலுவலகம் முழுவதும் கேளிக்கை சுற்றுலா விற்கு வந்ததால் அங்கு வழக்கத்திற்கு மாறாக கொஞ்சம் கூட்ட மிகுதியுடன் தான் காணப்பட்டது.

தேவதை என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறான் ஹரி. அனால் அதை பற்றி அப்போது அவன் அதிகமாக சிந்தனை செய்ததில்லை. ப்ரியாவை அன்று பார்த்தபின் அவள் தன் தேவதையோ என்று நினைத்தான். நீளமான கூந்தல் அலை கடல் போல் பாய்ந்தது. அதில் சிறிய படகு போல் சிவந்த நிற ஒற்றை ரோஜா. .
வில் புருவங்களின் கீழ் மை இட்டிறுந்தால் போல இயற்கை நிறம் கொண்ட அகலமான வேல் விழிகள். அவள் சற்று ஏறக்குறைய அகலமான நெற்றி அதில் ஒரு கற்றை முடியை அவள் சரி செய்து கொண்டாள். ஏழினை கவிழ்த்தார் போல அளவான நாசி. தன் செம்பருத்தி நிற அதரங்களை சுழித்து அவள் தோழியிடம் எதோ பேசிக்கொண்டிருந்தாள் .சந்தன நிற மேனியை மஞ்சள் நிற சுடிதார் மறைத்தது . மானம் போற்றும் மங்கை அவளல்லவா? கைகளா அது? எதோ தாமரை மலர்களின் மொட்டுக்கள் கூம்பி இருந்தது போல! அதில் வெண்டை விரல்களை 'கொன்னுடுவேன்' என்ற பாவனை செய்து அவள் தோழிகளில் ஒருத்தியை முறைத்தாள். வாழை தண்டு செதுக்கி அமைத்தார் போல் இருக்கும் என்று கதைகளில் படித்ததுண்டு அந்த கால்கள் இது தானோ?

பிரியா தானே இது? என் கண்கள் என்னை ஏமாற்றுகிறதா? என்று வியந்து கொண்டிருந்தபோது..

"ஹரி! "எப்போ வந்தீங்க ? அய்யோ எவ்ளோ ஸ்மார்டா இருக்கீங்க தெரியுமா?" என்று குழந்தை போல சிரித்துக்கொண்டே வந்தாள்.குரலா அது? ஆயிரம் குயில்கள் ஒன்றாக கீதம் பாடும் ஓசை போல் இன்று கேட்கின்றதே?"பேச நா எழ வில்லை அவனுக்கு ஒரு அடி அடித்தாள் பிரியா.

"ஹலோ! என்னாச்சு?"

அப்போது தான் அவன இக வுலகில் இருப்பதை உணர்ந்தான்.

"பிரியா...ஒன்னு சொல்லட்டுமா? "

"ஹ்ம்ம் சொல்லுங்க?"

"உன்ன எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...நீ இனிக்கி நெஜமாவே தேவதை போல இருக்க!"

"ஆங்?!! அப்படியா! ரொம்ப நன்றி! ஆயிரம் கோடி நன்றி..இனிக்கி தான் என்ன வாய் திறந்து பாராட்டி இருக்கீங்க..அதை விட முக்கியமான விஷயம் இனிக்கி என்ன நீங்க திட்டாம இருக்கறது. மழை தான் வரணும்" என்று கிண்டல் செய்தாள்.

"ச்சே பைத்தியம்! உன்ன எப்போவும் திட்ட நான் என்ன சிடு மூஞ்சி யா ? சரி சரி என்ன சாப்பிடுற ?"

"எதிர்க்க இருக்கிற குச்சி ஐஸ் கடை இருக்கில்ல அங்க எனக்கு ரெண்டு குச்சி ஐஸ் வேணும் "

"என்னது சின்ன புள்ள மாதிரி குச்சி ஐஸ் கேக்குற?"

"எனக்கு சின்ன புள்ளயிலிருந்தே குச்சி ஐஸ் மேல கொள்ள அசை! எங்க அப்பா வங்கி தரவே மாட்டார். ப்ளீஸ் எனக்கு இப்போ வங்கி தரீங்களா?" என்று குழந்தை போல கெஞ்சினாள்.

"எனக்கு வேண்டாம் நீ பொய் வங்கிக்கோ!" என்று கூறி காசை அவளிடம் கொடுத்தான்.

மகிழ்ச்சியுடன் குச்சி ஐஸ் வங்கி கொண்டு சாலை இருவரும் கடந்து வந்தனர் பிரியா அப்போது திடீரென சிறு பெண்ணை போல துள்ளிக்கொண்டு ஓட சாலையை கடந்தாள் அவள்.

"ப்ரியா! நில்லு!" என்று அவள் மீது மோதி தள்ளினான். இருவரும் சற்றும் எதிர் பார்க்க வில்லை திருப்பத்தில் இருந்து வந்த கார் அவளை மோதாமல் இருக்க அவன் அவள் மீது பாய்ந்து அவளை தள்ளி விட்டிருந்தான் ஹரி. ஆனால் துரதிர்ஷ்ட வசமாக அவன் காலை பதம் பார்த்தது அந்த கார். எல்லாம் கண நேரத்தில் நடந்து முடிந்தது.

"ஐயோ ஹரி! என்று பிரியா வீறிட்டாள் ". மின்சாரம் பாய்ந்தது போல அலறி துடித்தான் ஹரி. அவன் கண்கள் மயக்கத்தில் சேருகின. உலகம் இருண்டது.
-----------------------

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
Kamini_Yogini 7 காமினி_யோகினி 7 எஸ் பி ஸ்வாமிநாதன் கொஞ்சம் ஆடித்தான் போனார். அடேயப்பா! என்னய்யா இது? இந்த ஆசிரமன்தான் இவங்க எட் ஆபிஸா? என்றார் ஆச்சரியம் தாளாமல் இல்ல சார்! இது இவங்களோட தமிழ்நாடு பிராஞ்சு ஆபீஸ் சார் .எட் ஆபீஸ் மைசூரில் இருக்குது சார். என்றாள் கங்கா ஓ அப்படியா! இந்த பிள்டிங்கே  கோடி கணக்கிலே மதிப்பிற்கும் போல இருக்குதே இதுவே மாளிகை போல இருக்குதுன்னா அப்போ அங்கேனே? சொர்க்கம் போல இருக்கும் சார்  அதோ அங்க பாருங்க! என்று கங்கா சுட்டி காட்டிய திசையில் படிய வாரிய தலை, கொஞ்சம் மாநிறம். நரைத்த திருத்தப்பட்ட மீசை தாடி. அகலமான நெற்றியில் குங்கும பொட்டு.  இளம் சிவப்பு நிற வெட்டி அதில் வெள்ளை பச்சை நீல கரை கதர் சட்டை வைர மோதிரம் பிரேஸிலேட் மின்ன வேட்டை நாய் போல கத்தி கொண்டிருந்த சேகரமூர்த்தி தென்பட்டார். பல பேர் அங்கு பளிங்கு தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அதில் பலரும் வட நாட்டிலிருந்து வேலைக்கு வந்தவர்கள் என்று அவர்கள் முகத்தை பார்த்த உடனே தெரிந்து கொண்டனர் போலீசார். பலர் பெரிய ரோஜா தோட்டத்தினை செப்பனிட்டு கொண்டிருந்தனர். வானளா...