Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 10

---------------------------------
"பாலைவனத்தில் ஓர் சோலை தெரிந்தது.ஆசையாய் அதை துரத்தி சென்றேன்.
கால்கள் ஏறிய, கண்கள் கூசும் வெய்யிலில் சென்ற பின் தான் தெரிந்தது அது கானல் நீரென்று!"
---------------------------------

இரண்டு நாட்கள் அவர்கள் முன்பு போல சகஜமாக பேசிக் கொள்ளவில்லை.அலுவலகத்தில் பொதுவாக ஹரியை ஓர் இடத்தில் யாரும் சேர்ந்தர்ப்போல் ஒரு ஐந்து நிமிடங்கள் கூட பார்த்தது இல்லை.பரபப்புக்கும் சுறுசுறுப்பிர்கும் பேர் போனவன் ஹரி. அவன் வேலை செய்யாமல் இருந்தே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த ஹரி சோபையுடன் காணப்பட்டது எல்லோருக்கும் சற்று ஆச்சரியத்தை அளித்தது.

அவனை பார்க்கும் போதெல்லாம் பிரியா அவனிடம் முகம் கொடுக்காமல் பேசினாள். எதை கேட்டாலும் இயந்திரம் போல பதில் சொன்னாள்.வேலையை பற்றி மட்டும் பேசினாள் தவிர மற்ற நேரத்தில் மௌனீயாக அமர்ந்திருந்தாள்.மற்றொரு நாள் அவன் மிகவும் வற்புறுத்தி அவளிடம் பேச தொடங்கினான் ஹரி.

"தயவு செய்து என்ன மன்னிச்சிடு பிரியா. நான் உன்னை ரொம்ப நோக வெச்சிடென்னு நினைக்கிறேன். ஆனால் என் காதல் உண்மை பிரியா. உன் கூட மட்டும் தான் பழகினேன் அப்படிங்கிறததுக்கு சொல்லல உன்னை விட எனக்கு ஒரு நல்ல துணை கிடைக்குமான்னு தெரியல அப்படியே இருந்தாலும் அது எனக்கு வேண்டாம் .உன்னை மட்டும் தான் இந்த உலகத்தில நல்ல பொண்ணா, என் உயிர் தொழியா, ஒரு நல்ல வாழ்க்கை துணையா நினைக்க தோணுது.
உனக்காக நான் எங்க அப்பா அம்மாகிட்ட பேச கூடத் தாயார். ஆனால் உன் சம்மதம் எனக்கு கிடைக்குமா? நீ எதையும் சொல்லல. இது தப்புன்னு சொல்றியே தவிர ஏன் தப்புன்னு சொல்லவே இல்ல..பேசு பிரியா பேசு.."

"...."

"சொல்லு பிரியா, நானும் இதுக்காக தான் காத்து கிட்டு இருந்தேன். "

"எனக்கு ஒண்ணு தான் தெரியணும். எதை வெச்சி நான் உங்கள காதலிக்கிறேன்னு நீங்க முடிவு பண்ணினீங்க?"

"என் பிரியா தேரியாதா? ஏன் வேணுமின்னு என்னை சோதிக்கிற?"

"முதலில் என் கேள்விக்கு பதில்.."

"ஓஹோ!அப்படியா? சரி நானும் கேக்குறேன் இத்தனை நாளா என் கூட பேசினியே, இதுக்கு முன்னாலயும் அப்புறமும் இதை போல என் கூட பேசினத்தை போல யார் கிட்டேயும் பேசி இருக்கியா நீ?" என் கூட பழகுன மாதிரி intimacy யோட யார் கூட யாச்சும் பழகியிருக்கியா? உனக்கு என்ன புடிக்கமாய என்ன செல்லம் கொஞ்சின? 'வாடா' 'போடா' ன்னு உரிமை கொண்டாடுன? "

"கடவுளே!கடவுளே! :'-( இது இத்தனை மோசமாக போகுதுன்னு நான் கொஞ்சம் கூட நெனச்சி பார்க்க வில்லையே"

"அப்போ நீ என்ன இது வரைக்கும் பார்த்த பார்வை எல்லாம் வெறும் நட்புன்னு சொல்லுரியா பிரியா?

"போதும் ஹரி நிறுத்துங்க! முதலில் என்ன மன்னிச்சிடுங்க. உங்கள நான் அந்த மாதிரி பார்த்தது கூட கிடையாதே. பின்ன எதை வெச்சி முடிவு பண்ணுநீங்க?

நான் உங்கள இவ்வளவு பாதிச்சிருக்கேன்ணு எனக்கு தெரியவில்லை.என் பழக்கம் உங்கள இந்த அளவுக்கு மாற்றி இருக்குன்னு தெரிஞ்சி இருந்தா நான் இப்படி பழகி இருக்க மாட்டேன். இப்போதைக்கு என்னால இவ்வளவு தான் பேச முடியும். இதுக்கு மேல என் கூட பேச என்ன வற்புறுத்தாதீங்க." என்று கண்ணீர் மல்க எழுந்து சென்று விட்டாள் பிரியா.

ஒரு பெரிய போட்டல் நிலம். அதில் ஒரு ஒற்றை பனை மரம் பூ விட்டு இருந்தது.அதன் குருத்துக்கள் பசுமையாக வளர்ந்து அழகாக இருந்தன. ஒரு குருவி அதன் மேல் கஷ்டப்பட்டு கூடு கட்டி ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தது.கோடை கால மழை மேகம் இடியும் மின்னலுமாக பிரசண்டம் செய்து வந்தது. எங்கிருந்தோ ஒரு மின்னல் கீற்று அந்த ஒற்றை பனை மரத்தின் மீது இடியுடன் மின்னி விழுந்தது.குருவிகள் கூடு கட்டி இருந்ததை கூட கரிசனம் பார்க்காமல் அந்த மின்னல் அந்த ஒற்றை பனை மரத்தின் வாழ்க்கையினை தின்று தீர்த்தது. எப்படி அதன் வேர் அடி வரை பற்றி எரியுமோ அதை போல தகித்தது அவன் மனம். பதினாயிரம் தேள்கள் ஒரே நேரத்தில் அவன் நெஞ்சில் கொட்டின.

தலையை பிடித்துக்கொண்டு குனிந்து எத்தனை நேரம் உட்கார்ந்து இருந்தான் என்று ஹரிக்கு தெரிய வில்லை. அவன் நண்பன் ரவி அவனை கூப்பிடுவது கூட அவன் கவனிக்க வில்லை.

"ஹரி உனக்கு ரொம்ப நேரமா கால் வருது.. நீ எடுக்காம என்ன பண்ணிக்கிட்டு இருக்க?" உங்க வீட்டு லே இருந்து கால் வந்துகிட்டே இருக்கு டா!"

ஹரி எடுத்து பேசினான்." ஹரி சீக்கிரம் டீ.வீய பாருடா. உன் ப்ரெண்டு விகாஸ் போட்டோ போட்டுக்கிட்டு ஏதோ செய்தி பொடுறான்டா. என்னனு தெரியல எனக்கு பயம்மா இருக்கு சீக்கிரம் பாரேன்". என்றாள்.

இணைய தளத்தில் வந்த செய்தியை படித்து "அய்யோ!" என்று அதிர்ச்சியில் அலறினான்.
ஆயிரம் தேள்கள் வந்து கொட்டிய இடத்தில் நெருப்பை அள்ளிக் கொட்டியது போல் உணர்ந்தான் ஹரி.

கொஞ்ச நாளாகவே விகாசுடன் அவன் பேசவில்லை. ஏதோ வேலை நிமித்தம் ஆஸ்திரேலிய நாட்டிற்கு சென்று இருந்தான் அவன். பின்னர் அவன் தொடர்பு விட்டு போய்ருந்தது. அவன் இன படுகொலையில் கொல்லப்பட்டான் என்று செய்தியும் பரிதாபமாக சுருண்டு கிடக்கும் அவன் உடலையும் பார்த்து உயிர் அற்ற மரம் போல சாய்ந்தான் ஹரி.

பிரியா விடம் தான் காதலை எடுத்து சொல்லி விட்ட தாகவும் அதர்க்கு அவன் மகிழ்ச்சி உற்று அவனிடம் ஆயிரம் கேள்விகள் கேட்பான் அதார்க்கு பதில் சொல்லி சந்தோஷப் பட வேண்டும் என்றெல்லாம் கர்ப்பானை செய்து வைத்திருந்தான் அவன். இப்படி ஓர் பூகம்பம் வரும் என்று எதிர் பார்க்க வில்லை அவன். கலங்கிய கண்களுடன் விகாசின் பெற்றோர் இல்லத்திர்க்கு சென்றான் ஹரி.

பின் எல்லாமே தலை கீழாக மாறிப்போனது. விகாசின் கொலை நடந்து பல நாட்கள் ஆயின என்றும் அவன் உடலை அங்கேயே அடக்கம் செய்யுமாரும் ஆஸ்திரேலிய அரசாங்கம் கூறியதால் இந்திய அரசாங்கம் அவன் பெற்றோரை விமானம் மூலம் அங்கு அனுப்பியது. துணைக்கு ஹரி வருமாறு விகாசின் பெற்றோர் கேட்டு கொண்டதால். விகாசின் உறவினர் மகன்களும் ஹரியும் அவர்களுடன் அனுப்பி வைக்கப் பட்டனர்.
-------------------------------------------------

விகாசின் இறுதிச்சடங்குகள் முடித்து விட்டு ஒரு வாரம் கழிந்த பின் அலுவலகம் வந்தான் ஹரி.

ஒரு வாரம் சென்ற பின் அவன் வந்த அலுவலகம் சூனியமாக இருந்தது. பிரியாவை காணவில்லை என்று அவன் மனம் சொன்னது.அடி மேல் அடி விழுந்தது போல ஆனான் ஹரி. அவன் நண்பன் ரவி விவரங்களை சொன்னான்.

பிரியா வேலை செய்யும் அலுவலகம் அவர்களின் பணியாளர்களை இவர்களுக்கு விட்டு தரும் ஒப்பந்ததை நிராகரித்து விட்டதால் அவர்கள் அனைவரும் ஒப்பந்த காலம் முடிந்தவுடன்வெளியேறி விட்டனர் என்றும் பிரியா மட்டும் தன் வேலையினை ராஜினாமா செய்து விட்டு சென்று விட்டதாகவும் கேள்விப் பட்டான் ஹரி.

பின் எவ்வளவோ முறை அவள் செல்பேசிக்கு முயன்றான்.அவள் அலுவலகத்தில் பணியாற்றிய அனைவருக்கும் அவளின் தொடர்பு இருக்கிறதா என்று முயன்றான். பலன் எதுவும் கிடைக்க வில்லை.

இரண்டு மாதங்கள் இப்படி அவன் முயன்று சோர்ந்து போனான். இனி அவள் வர மாட்டாள், அவள் தொடர்பு இனியும் நமக்கு கிடைக்காது என்று முடிவு செய்தான்.
அன்று மாலை அவன் தன்னுடைய மேஜையை சுத்தம் செய்து கொண்டுறிந்த பொது ஒரு வாழ்த்து அட்டயினை கண்ணுற்றான்.அதன் மேல் உரையில் "A Farewell to Hari!...From Priya!" என்று எழுதி இருந்தது. அதனுடன் ஒரு வாழ்த்து அட்டையும் ஒரு கடிதமும் வைக்கப்பட்டிருந்தது.அவன் முகம் சட்டென மின்னியது.

பிரியா தான் கிளம்பி செல்லும் பொது ஹரி வெளி நாடு சென்றிருந்ததால் அவர்களுக்குள் தொடர்பு விடுபட்டிருந்தது. மேலும் அவள் ஒப்பந்தம் முடிவடைந்ததால் இந்த அலுவலகத்தினை விட்டுச் சென்று விட்டாள். இது நாள் வரை அவன் கண்ணுக்கு இந்த கடிதம் அகப்படாமல் போனது நினைத்து நொந்து கொண்டான் ஹரி. "ஒரு வேளை நேரில் சொல்ல வெட்கப்பட்டு என்னை பொரிந்து தள்ளிவிட்டு சூசகமாய் அவள் இதில் சம்மதம் தெரிவித்து இருப்பாளோ? பெண்கள் மனத்தை அளக்க முடியாது என்று விகாஸ் முன்னர் சொன்னது நினைவில் இருந்தது.அதை போல் இதுவும் ஒன்றோ?" என்று பலவாறாக எண்ணிக்கொண்டான்.ஆர்வத்துடனும், பெருத்த எதிர்பார்ப்புடனும், மகிழ்ச்சியுடனும், உட்கார்ந்து அதை பிரித்துப் படிக்கலானான் ஹரி.
***************************

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...