Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே
அதனை நினைவு படுத்துகின்றது.."

புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி.

நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது.

ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது.

"ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான்.

அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது.

மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செய்தாள் பிரியா.
அவனை போலவே திடீரென அவன் முன்னால் வந்து "மிஸ்டர் ஹரி நீங்க தானே? மரியதாயா என்கூடகாப்பி சாப்பிட இப்போ வறீங்க." என்று அதிகார தோரணையில் சொல்லிவிட்டு சென்றாள்.சற்றும் எதிர் பாரமல் அவள் நடந்து கொண்டதால் அவனுக்கு அவள் மீதிருந்த கோபம் விலகியது.

"ஹே எங்க போய் தொலைஞ்ச நீ? இங்க மேனேஜர் என்ன கோடாஞ்சி எடுகிறாங்க. லூசு..என்று திட்ட ஆரம்பித்தான்."

"நீங்க திட்டினா இப்போ எல்லாம் எனக்கு கோவம் வரமாட்டேங்கிதே எனக்கு என்னாச்சு?" என்று சிரித்த முகத்துடன் பதில் சொன்னாள் பிரியா.

"ஹே என்ன பா? நான் என்ன கேக்குறேன் நீ என்னத்த பதில் சொல்ற?""சொல்றேன் டா முந்திரிக்கோட்டை! ( கொஞ்ச நாளில் அவள் பேச்சு இப்படி ஆகி விட்டது பற்றி வாசகர்களுக்கு சொல்ல மறந்து விட்டோம்!)

"எங்க அக்கா என்ன ஊருக்கு வர சொல்லி கால் பண்ணி இருந்தா. நான் வர மாட்டேன் ன்னு சொல்லி இருந்தேன்.திடீர்னு அன்னிக்கு எங்க அம்மா அப்பா ரெண்டு பெரும் பேசி அவசரமா ஊருக்கு வர சொல்லிருந்தாங்க. போன அப்புறம் தான் தெரிஞ்சித்து எங்க அக்காவை பொண்ணு பாக்க வர போறங்கன்னு."

"ஓஹோ! பொண்ணு தானே பக்க போறாங்க அதுவும் உங்க அக்காவை நீ எதுக்கு போகணும்?"

"நானும் அப்படி தான் நெனச்சேன். ஆனா எனக்கும் சேர்த்து தான் அண்ணன், தம்பி ரெண்டு பேரயும் வர சொல்லி இருக்காங்கன்னு எனக்கு அப்புறம் தான் தெரியும்."

சுரீர் என்று காப்பி கையை சுட்டது ஹாரிக்கு.

"அ..அப்புறம்:O?என்று மென்று விழுங்கினான்.

"அப்புறம் என்ன? எங்க ரெண்டு பெருக்கும் புடிச்சி போச்சு. நாங்க சரின்னு சொல்லிட்டொம் கல்யாணம் பிப்ரவரியில் நடக்கும் னு நிச்சயம் ஆயிடுச்சு. மாப்பிளைங்க பெரிய I.T software என்ஜினீர் தெரியுமா?" என்று சொல்லி விட்டு அவன் கண்ணை உற்று நோக்கினாள் பிரியா.

"நிஜமாத்தான் சொல்றியா பிரியா?" என்று அவன் விரக்தியோடு கேட்டான்.
பட்டென சிரித்தது பிரியாவின் அதரங்கள். "அய்யொடா! பாரேன் பச்ச புள்ள முகத்தை.." என்று கிண்டல் செய்தாள்.

"அப்டியே போட்டேன்னா தெரியுமா? காமெடி பண்ற விஷயமா இது?" என்று கடுமையாக கோபித்திதான்.

"ஐ ஐ ஆஸ்க்கு பூஸ்க்கு! நீங்க மட்டும் என்ன திட்டுறா மாதிரி மேனேஜர் கிட்ட நல்ல வேலை பாத்தேன்னு ஸர்டிஃபிகேட் குடுக்கலாம் . நாங்க இப்டி உங்கள எமாத்த கூடாதோ?"

ஆம். அவள் கடுமையாக பணி செய்ததர்க்காக நற்சான்றிதழ் கொடுக்க ஆவன செய்திருந்தான். அதனை தெரிந்து கொண்டு தான் அவள் சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டான். இப்படி சண்டையும் சமாதானமுமாக அவர்கள் கதை தொடர்ந்தது.

அவளுக்கு பிடித்த அத்தனையும் தெரிந்து கொண்டான். அதை செய்தும் காட்டினான். பிரீயவும் அவனும் பழகியது முதல் இருந்த உறவு இப்போது. ஒரு படி உயர்ந்தது. ஒருமையில் பேசினர். அடிக்கடி சேடிங் செய்தனர். எவ்வளவு பேசினர் என்று தெரியாது என்? என்ன பேசினர் என்றும் தெரியாது.
--------------------------
அன்று ஹரியின் பிறந்தநாள். பொதுவாக அவன் கொண்டாடாத பண்டிகைகளில் அதுவும் சேரும்.

"சாமியாரும், ரதி தேவியும் இன்று அவன் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர்." என்று ஹரியின் அலுவலக ஸகாக்கள் குறுந் தகவல் பரிமாறி கொண்டனர்.
பிரியா அன்று மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தாள். "பிறந்தநாள் வாழ்த்துகள்! ஹரி! என்று வாழ்த்து அட்டை ஒன்றை தந்தாள். "இனிக்கி நான் என் கைய்யால என்னோட நண்பருக்கு இனிப்பு செஞ்சி கொண்டு வந்திருக்கேன் என்று இனிப்பினை அவனுக்கு கொடுத்தாள்.

அம்மாவின் நினைவு வந்தது ஹரிக்கு. அவன் அப்பா அம்மா தவிர வேறு எவரும் அவன் பிறந்த நாளினை சிறப்பாக கருதுவதில்லை. அதன் பின் பிரியா தான் அவன் கண் முன்னே நின்றாள்.

"Thank you very much my dear! But, இந்த present எனக்கு போதாது. நான் ஒண்ணு கேப்பேன் அப்போ நீ எனக்கு அதை தரணும் சரியா?"

"அது என்னால குடுக்க முடிஞ்சா கண்டிப்பா தரேன்!" என்றாள் பிரியா.

"இப்போ வேண்டாம் சமயம் வரும் போது கேக்குறேன்." என்றான் அவன்.

"Hey if you dont mind , can I ask you something? இப்போ எல்லாம் என்னய உத்து உத்து பாக்குரீங்க.. எது கேட்டாலும் சுத்திச் சுத்தி பேசுறீங்க.I dont know what has happened in you? என்னவோ தெரியல்ல என்ன ஆச்சுன்னு! இருந்தாலும் உங்கள நான் ரசிக்கிறேன்". என்று குழந்தை முகத்துடன் சிரித்தாள்.

"Yes you're right!Something has happened to me. So what? It's tasting sweet and sounds melody. I like it the most:)" என்று நினைத்துக்கொண்டான்.

Comments

  1. Nalla improvement theriyudhu indha part le... Nalla ending kooda!

    ReplyDelete
  2. Thank you for your valuble comments! Upon request I have changed the slang:-)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 4

"மேலாளர் என்பவர் நம்முடைய வேண்டப்பட்ட விரோதி!" என்று அவன் கணினி டைரியில் குறித்து கொண்டான் ஹரி. இது தான் அந்த குறிப்பிர்க்கு காரணம். ஹரியின் நேர் கீழ் பிரியாவை பணி செய்ய நியமிதுவிட்டார் அவர் மேலாளர். கீறி- பாம்பு சண்டை என்பதை நாம் அடிக்கடி பார்ப்பதற்கு வாய்ப்பில்லை. பிரியா- ஹரி சண்டையினை நாம் நன்றாக ரசித்து பார்க்கலாம். ஒரு துளி வகையிலும் அவர்களுக்குள் ஒத்து போகவில்லை. ஒரு முறைக்கு மேல் ஹரி சொல்வதில்லை எனில் பத்து முறையேனும் கேட்பாள் பிரியா. அவள் வேலை திறன் பட செய்தாலும் அதை வாய் கொண்டு பாராட்டவில்லை ஹரி. இது குற்றம், அது தவறு என்றே அவளை அலை கழித்தான். ஒரு நாள் அளவிர்க்கு அதிக மாக போகவே கடுமையாக வாதித்து பிரியாவினை உச்ச ஸ்தாயியில் திட்டி தீர்த்தான் ஹரி. எல்லோர் முன்னிலையிலும் அவமான பட்ட பிரியா மறுநாள் வேலைக்கு வர வில்லை. விகாசுக்கு chat அடித்தான். விவரத்தினை கூறினான். விகாஸ் அன்று தான் அவன் செய்தது தவறு என்று இடித்து உரைத்தான். "அறிவு கேட்டவனே! பொண்ணுங்க கிட்ட எப்டி பழகனும்னு உனக்கு தெரியாதா? இவ்ளோ rudeism எல்லாம் இருக்கக் கூடாது போய் அவ கிட்ட சாரி கேளு. என்று கூறினான். ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...