இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே?
அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது.
ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை.
ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?"
அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு?
அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள்.
நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண்டு பக்கத்து ஊர் திருவிழாவுக்கு போயிருக்கா, போனவ இந்த லட்சணத்துல வருவாளோ?"
"உங்க அப்பா எப்பவுமே விஷயத்த ஒழுங்க சொன்னதே இல்லை?" என்று வழக்கமான இடித்துரைத்தல் உடன் கூடிய பரபரப்புடன், "ஸ்ரீதர்! எண்டா அம்பி நீ சொல்லுடாமுழு கதையும் என்றாள் உணவு பரிமாறிக்கொண்டே.
ஸ்ரீதர் சொல்ல ஆரம்பித்தான். "வேற ஒண்ணும் இல்லம்மா!அந்த பால்ராஜ்,அவன் கூட்டாளிகள் கூட நல்லா தண்ணி அடிச்சிட்டு வண்டில வந்து இருக்கான் அவன் திரும்பி வர வழியில நம்ம ஊர் கொளது பக்கத்தில இருக்கிற புளிய மரம் மேல வண்டிய வேகமா விட்டு தொலைச்சிட்டான்.அந்த ரெண்டு பயலுகள்ள ஒருத்தன் அந்த இடத்திலே போயி சேந்துட்டான்! இந்த பால்ராசு பயலும் அவன் கூட்டாளியும் இப்போ கோமா ஸ்டேஜுல இருக்கா!
அம்மா உடனே " ராம ராமா! என்னத்துக்கு அந்த பயல் இப்படி ஆகணும்!சரியான கஷ்ட காலமான்ன இருக்கு!"
உனக்கு கஷ்டமா இருக்கு, ஊர்க்கரளுக்கு சந்தோஷமா ன்னா இருக்கு? என்றார் பங்கஜத்தின் அகமுடயார். "ஊர்க்கரளுக்கு வெவஸ்தை ஏது? அவாளுக்கு யார் கஷ்டப்பட்டாலும் கொண்டாட்டம் தான்.
அவர்கள் சொன்ன கதையும், ஊரார் இப்போது சந்தோஷப்படுவதும் உண்மைதான். யார் தான் அவளுக்கு பரிந்து பேசுவார்கள்?
போன மாதம் நடந்தது இப்போதும் யாரும் மறக்கவில்லை.அக்காயி வீட்டில் இருந்த கறவை மாடுகள் செத்து மடிந்ததை யாரும் மறக்கமாட்டர்கள்.
அரவை மில் ஷண்முகம் மிகவும் நல்ல மனிதர், எல்லோரிடமும் பண்பான பேச்சு, சாந்தமான குணம் எல்லோருக்கும் அவரை பிடிக்கும். அவர் நல்ல நடததையினை வைத்தது அவர் முதலாளி அவரின் மகளை திருமணம் செய்து வைத்து அவருடைய மில்லயும் கொடுத்து விட்டார். அக்காயி சென்றால் சென்ற இடமெல்லாம் அழிவு தானே? இங்கு மட்டும் விதி விலக்கா? அரவை முடிய மிதி இருக்கும் தவிட்டை விற்று விடுவது எல்லா அரவை மில்லிலும் வாடிக்கை தான்.அக்காயி விஷயத்தில் கொஞ்சம் ஏமாந்து தான் போனார் ஷண்முகம். மறுநாள் காலை கறவை மாடுகள் இறந்து போனதற்கு அவர் தான் காரணம் என்று முத்திரை குத்தி விட்டால் யாருக்கு மனது வெறுத்து போகாது?
மில்லில் இருக்கும் அரிசி மூட்டையினை எலிகள் பதம் பார்க்காமல் இருக்க தவிடுடன் கொஞ்சம் எலி மருந்தினை சேர்த்து வைப்பது தான் வாடிக்கை அதனை கள்ளத் தனமாய் திருடி மாட்டிர்க்கு வைத்து விட்டாள் அக்காயீ. அவ்வுளவு தான் அவள் மாடுகள் ஐந்தும் நுரை தள்ளி செத்தன. அதை அரவை மில் ஷண்முகம் தான் பழி வாங்க விஷம் வைத்து விட்டார் என்று ஊர் பஞ்சாயத்து கூட்டி விட்டாளே! எத்துணை பெரிய கைகாரி அவள்.
அக்காயி யின் குணமும் அவள் பூத்தியும் ஊர் அறிந்ததே. ஆனால் அவள் பேச்சில் மயங்கினால் பாம்பு படம் எடுத்து ஆடுவது பார்த்த தவளை போல இருக்கவேண்டியது தான். அவள் தான் "நெஞ்சிலே விஷம் நாக்கிலே தேன்! " என்ற பழ மொழிக்கு சரியான பாத்திரம்.
அன்று பஞ்சாயத்தில் அவள் ஷண்முகத்தை ஆட்டி வைத்தது போல் அவர் வாழ்க்கையில் யாருமே ஆட்டி வைத்திருக்க மாட்டார். ஷண்முகம் அப்போது கேட்ட வார்த்தைகள் அனைத்தும் கேட்ட வார்த்தைகள்! அவர் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல இருந்தது ஒவ்வொரு சொல்லும்.
"பெரிய மனுஷன் போல இருந்துகிட்டு என்ன பாத்தீயே ஒரு பார்வை அய்யோ கடவுளுக்கே ஆடுக்காதே! "இப்படியே பேசி மயக்கித்த்தானே உன் பொஞ்சாதி கொழுந்தியா, இந்த மில்லு எல்லாத்தயும் வளைச்சி போட்ட நீ?"
பஞ்சாயத்தார் எவ்வளவோ வாதாடியும் அவள் ஜெயித்து விட்டாளே! சுளையாக ஒரு இலகரம் பிடுங்கினாள்.அவர் அதைப் பற்றி சிறிதும் கவலை பட வில்லை.ஆனால் அவரை ஸ்திரீ லோலர் என்று சொன்னது அவர் மனத்தை மிகவும் அரைத்தது.அவர் மனைவி இறந்த பிறகு அவளின் தங்கை அவரை விரும்பி கலியாணம் செய்து கொண்டாள். அவர் முதல் மனைவி இறந்த பிறகு ஊர் மக்கள் அனைவரும் அவரை வற்புறுத்தி அவரை கலியாணம் செய்து வைத்தார்கள். அதன் பின்னர் அவர் தான் மில் வேலை எல்லா வற்றையும் பார்க்க வேண்டியதாயிற்று.
பால்ராசு மட்டும் இலேசு பட்டவன் இல்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் மனைவியை பார்க்க வருவதும் அவளிடம் வம்பு அளப்பதும் ஊர் அறிந்ததே. அதனாலேயே இவர்கள் குடும்பம் பற்றி யார் பேசினாலும் அவர்கள் முகம் சுண்டைக்கையாக வதங்கி போய்விடும். அவன் கொலைக்கு கூட அஞ்சாதாவன் என்றாலும் ஓரிரு முறை அடங்கி போய்விடுவதும் உண்டு.
பொருத்தவர் கோபம் பொங்கி வரும் பிரவாகம்! அன்று பொறுமை இழந்து அந்த பால்ராசுவை ஊர் அறிய நன்றாகவிட்டு வாங்கினார் ஷண்முகம் . அப்போது முதல் பழி வாங்க கருவிக்கோண்டிருந்தான் பால்ராசு. சரியான நேரத்தில் தவிடு பிரச்னை யை சேர்த்து விட்டான் அவன்.
"டாக்டர் அய்யா!எனக்கு இருக்கிறது ஒரு கொத்து கறிவேப்பிலை. தயவு செய்து விடவில்லை புள்ளய வாழ வெய்யுங்க சாமி" என்று கதறினாள்."
"இங்கப்பாரும்மா! உன் புள்ளய காபாத்த ஒருவழி தான் இருக்கு அவனுக்கு 4 பாட்டில் இரத்தம் தேவை படுது. இனிக்கே கிடைச்சித்துன்னா நல்லது இல்லேன்னா உன் புள்ளய கடவுள் தான் காப்பாதணும்."
என் தலைய அடமானம் வெச்சாவது எப்படியாச்சும் கொண்டாரேன் என்று சொல்லிவிட்டு தான் ஓடி வந்தாள் மருத்துவமனையிலிருந்து தலை தெறிக்க!. தென்னைவயல் அதிசயிக்கும் அளவிர்க்கு!
அவளுக்கு பணம் கூட பொருட்டாக வில்லை எல்லா இடத்திலும் ஈரம் இன்றி பேசினால் நீர் மட்டும் என்ன இரத்தம் கூடத்தான் கிடைக்காது. இது அக்கயிக்கு இப்போது புரிந்திருக்கும்!
அன்று போய் பேசினாள் புறம் சொன்னாள், நம்பினார்கள்.
இன்று உண்மை பேசினாள் யாருமே கேட்க வில்லை.
"அய்யோவ்! சாமிகாளா! நான் பண்ணினது எல்லாமும் எப்போதும் தப்பு தான்! தயவு பண்ணி என்னோட ஒத்தப்புள்ள இந்த மூளிக்கு, என்னய காப்பாத்துங்க." என்று தொண்டை வீங்க கதறினாள்.
"அக்காயி! உன் கதைய வேற எங்கனாச்சதும் கட்டு! இன்கிட்டு வேணாம் தாயி நாங்க எல்லாம் போறக்கும் போதே காது குத்தியாச்சு." என்றும்
"உன் வம்பு எனக்கு வேணாம் தாயி நான் உனக்கு உதவி பண்ண வந்த நீ எங்களயே உபதிரவத்துல விட்டுடுவீயே." என்றும் நன்றாக பழி தீர்த்தனர்.
மேலும் சிலர் கொலை வெறியுடன் " உன் புள்ளய நானே வெட்டி கூறு போட்டிருப்பேன் என் குடும்பம் நடு தெருவுக்கு வந்துற கூடா தென்னு தான் நான் என்ன கட்டு படுத்திக்கிட்டேன். இனி உன் புள்ள வந்தாலும் அவன் சாவு எங்க கைய்யால தான் தெரிஞ்சிக்க "என்று வீரவேசமாக முழங்கினர்.
அன்று தென்னை வயல் பெரிய மனிதர்கள் எல்லாரும் ஒரு முடிவு செய்தனர். அக்காயிக்கும் அவள் மகன் பால்ராசுவுக்கும் இனி எந்த உதவியும் செய்வது இல்லை என்று. ஷண்முகம் மட்டும் இதார்க்கு உடன் பட வில்லை. "நீங்கள் எல்லாம் மனுஷங்க தான? உங்களுக்கு என் அக்காயி மாதிரி புத்தி போவுது? என் அய்யா உங்க வீட்டு பிள்ளைக இந்த மாதிரி உயிருக்கு போராடினா இப்படி தான் இருப்பீங்களோ?
"ஏங்க மில்லு காரரே! அவன் உங்க குடும்பத்தை யும் மத்த ஊர் காரங்களயும் பண்ண இம்சை இதோட விட்டது சனியான்னு போறத விட்டு பூட்டு வெட்டி ஞாயம் பேசிக்கிட்டு இருக்கீங்களே!" என்று பெரிய மனிதர்கள் வாதாடினார்கள்.
"இல்லயா பெரியவுங்களே நான் சொல்றத கேளுங்க! என்ன மதிச்சு என் வார்த்தைய கேக்குறீங்களா? "என்று சொல்லி முடித்தார் ஷண்முகம்.
"அப்போ அவனை தண்டிக்காம அப்படியே விட சொல்றீங்களா? என்று இளைஞர்கள் கொததித்த்னர்.
"தண்டிக்க எத்தனையோ வழி இருக்கு தம்பிகளா!என் கூட வாங்க சொல்றேன் ."
என்று கூறி ஆண்கள் அனைவரையும் ஆஸ்பத்திரிக்கு அழைத்தது சென்றார் ஷண்முகம்.
அனைவரின் வரவையும் சற்றும் எதிர் பார்க்க வில்லை அக்காயி. "அய்யா! என் புள்ளய விட்டுடுங்கய்யா! நாங்க ரெண்டு பேரும் இனி ஊர் பக்கமே தலை வெச்சு படுக்க மாட்டோம் என்று கதறியவளை யாரும் சட்டை செய்யவில்லை. நேரே டாக்டர் அறைக்குள் நுழைந்தனர்.
அன்று இரவு நரகமாய் போனது அக்காயிக்கு. டாக்டர் வந்தார்.
"உங்க ஊர் காரருங்க மாதிரி நான் இது வரைக்கும் பாத்ததே இல்லம்மா! அந்த ஷண்முகம் மட்டும் 6 பாட்டில் இரத்தம் குடுத்திருக்காங்க ன்னா பாரேன். இப்போ அவன் கோமா நிலமையிலிருந்து வந்துட்டான் கொஞ்ச நாள்ல அவனை கூட்டிக்கிட்டு போகலாம்." என்றார்.
அக்காயிக்கு ஆச்சரியம் தங்க முடியவில்லை!
அதிர்ச்சியிலிருந்து கடுமையாக போராடி முயன்று வெளியே வந்தாள். தட்டா மாலையாக சுற்றியது அவளுக்கு.ஊர்க்காரர்கள் வந்த வேகமும் அவர்கள் பார்த்த பார்வையும் என்ன இப்போது நடப்பது என்ன?ஊர்க்காரர்கள் அவளை ஒதுக்கி வைத்துவிட்டதாக நினைத்தவள் அவர்கள் தான் தன் மகனை காப்பாற்றினார்கள் என்றால் நம்புவது கடினம் தானே?
ஊர்க்காரர்கள் அனைவரும் முறைத்ததுகொண்டும் கண்கள் கொபவேசத்துடனும் போனதை பார்த்தது அவர்கள் எல்லோரும் தன் மகனை கொன்றே விட்டார்கள் என்று நினைத்தது எவ்வளவு தவறு என்று கடவுளிடம் மன்னிப்பு கேட்டாள்.
ஆஸ்பத்திரியிலிருந்து வந்த மகனுடன் முதல் வேலையாக ஷண்முகத்தின் வீட்டிற்கு சென்று அவர் கால்களில் விழுந்து மன்றாடினாள். ஷண்முகம் தான் பெரிய மனித தனத்தை விட வில்லை . பெருந்தன்மையும் விடவில்லை
"மில்லய்யா! நீங்க தான் எங்க குடும்பம் தழைக்க ஊர்க்கறங்கால பகைச்சிக்கிட்டிங்கன்னு நான் கேள்வி பட்டேன். நாங்க உங்களுக்கு எவ்வளவோ கேட்டது பண்ணோம் நீங்க ஒரே ஒரு நல்லது பண்ணி எங்களை முறியடிச்சுடீங்க! எங்களை மன்னிச்ச தோட மட்டும் இல்லாம எங்க குடும்பத்தை காப்பாததிநீங்க. உங்கள எங்க குல சாமியா வெச்சி கும்பிடுவோம்!"
நான் உங்கள மன்னிச்சி விட்டதும் ஒரு தண்டனை தான். ஒருத்தர் தப்பு பண்ணா அதை மன்னிக்கிரத விட ஒரு பெரிய தண்டனை யாரலயும் குடுக்க முடியாதுன்னு என் பொஞ்சாதி சொன்னா! அதை உங்களுக்கு நான் குடுத்துடேன்! இனிமே யாராயும் பகைக்காதீங்க கேட்டதனத்தை மறந்து மனுஷ சென்மமா வாழ முயற்சி பண்ணுங்க.
ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்டு அவர்கள் அடங்கி போயினர். கொஞ்ச நாளில் அவர்கள் தென்னை வயலயும் விட்டுப் போயினர். அது எவ்வளவு பெரிய தண்டனை?!

(This is my First Story in Tamil -Please comment)
Mudhal kadhai madhiri illai... Rombave nalla irukku! Keep writing... Idhu pola neriya stories edhir paakaren!
ReplyDeleteThanks!a Ton!!
ReplyDelete