Skip to main content

Kamini_Yogini 5

காமினி யோகினி 5


இன்ஸ்பெக்டர் சுவாமிநாதனுக்கு இன்று தினசரி ராசி பலன் பார்த்திருப்பார் என்றால் அவருக்கு இன்று அதிர்ச்சி ஆச்சரியம் எதிர்பாராத திருப்பம் என்றே போட்டிருக்கும். அன்று அவர் அலுவலகத்திற்கு ஒரு ஃ போன் வந்தது.
அதில் காமினி இருக்கும் இடம் தனக்கு தெரியும் என்றும் உடனே தான் சொல்லும் இடத்திற்கு வருமாறு சொல்லிவிட்டு மறுமுனையில் இருந்த நபர் தொடர்பை துண்டித்து விட்டார்.

அந்த இடம் ஊட்டி மைசூரு  ஒட்டி ஒரு மலை கிராமம் என்று தெரிந்து கொள்ளவே சுவாமிநாதனுக்கு பத்து நிமிடம் பிடித்தது. அங்கு எதற்காக இந்த நபர் வர சொல்கிறான் என்று சந்தேகி த்துக்கொடே ஒரு சிகரெட்டை பற்ற வைத்து கொண்டார். இப்போதெல்லாம் அவருக்கு இந்த பழக்கம் புதிதாய் தொத்தி கொண்டது. கங்கா அவளின் பதவியையும் மீறிய ஒரு உரிமையில் கடிந்து கொண்டாள் . அதனால் இந்த பழக்கத்தை ஒருவாறாக  கட்டு படுத்த படாத பாடு பட்டு கொண்டிருந்தார்.
கங்கா என்னமா! அங்க உனக்கு தெரிஞ்ச ஆளுங்க  யாராவது அங்கே இருக்காங்களா? என்று கேட்க இருக்கானே சார் என்ன ஒண்ணுவிட்ட அண்ணன் மவன் கான்ச்டபிள் செல்வம். என்று ஒரு போடு போட்டு விட்டு அவன் என்னை டயல் செய்ய ஆரம்பித்து விட்டாள் . இவளுக்கு இந்தியா பூரா சொந்தக்காரங்களை வெச்சிருப்பாளா ? என்று சற்று அதிர்ந்து போனார் சுவாமிநாதன்.

------------------------------------------------------------------------------------------------------------------

மணி பன்னிரண்டை நெருங்கிக்கிண்டிருந்தது

தீக்ஷண்ய ஸ்வாமிஜி தன்னிலை மறந்து யோகினி ஜெபத்தை நடத்தி கொண்டிருந்தார். அவர் தோளில் மிருதுவான ஸ்பரிசம் பட்டது. அன்பரே! எழுந்திரும் என்று யோகினி அவரை எழுப்பினாள். அவர் முகம் ஆயிரம் மின்சார விளக்குகள்  ஜொலித்தது. வந்துவிடாயா யோகினி என்று வாஞ்சையுடன் பற்றினார்.
பின்னிரவு முழுவதும் அவருக்கு யோகினி சுகத்தினை அல்லி தெளித்து    கொண்டிருந்தாள். அன்பரே! உங்கள் ஜாதகத்தினை என்றேனும் உணர்ந்துள்ளீர்களா? என்று  கேட்டால். தாம்பூலத்தினை சுவைத்துக்கொண்டு இல்லை  கவலை இல்லை, நீ  நான் ஏன் அதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?  என்றார்.யோகினி , உங்கள் ஜாதக படி அஷ்டம சனியும் சுக்கிரனும் வக்கிரம்  பெற்றுள்ளனர்.என்றாள் . இதனை கேட்ட தீக்ஷண்ய ஸ்வாமி முகம் பேயறைந்தது போல உள்ளது  உங்களுக்கு கண்ட சனி வந்திருக்கும் காலம் இது. இதனை நீங்கள் எப்படியேனும் ஜெயிக்க வேண்டும். மேலும் சந்திரனும் புதன் உங்களுக்கு  சாதகமாக இல்லை சந்திரன் மனத்துக்காரன். ஆகவே  நீர் எதையும் இனிமேல் சர்வ ஜாக்கிரதையாய் செயல் படுத்தவேண்டும். கவனம்! இது தேவ ரகசியம், இதனை கணவன் மனைவிக்கும் தெரிவிக்கலாகாது, இதனால் எனக்கு என்ன ஆகுமோ என்றும் எனக்கு தெரியாது, மற்ற உபாசகங்களை விட நீ சிறப்பு பெற்றவர் ஆகவே உங்களுக்கு இதனை சொன்னேன். உங்கள் வாக்கோ செயல்பாடுகளோ  உங்களை என்னிடமிருந்து  பிரித்து விடலாம். நினைவிருக்கட்டும் நீங்கள் வேறு பெண்களிடமிருந்து ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் இல்லையெனில் மரணம் நிச்சயம் .
இதனை தடுக்க வழியே கிடையாதா? என்றார் தீக்ஷண்ய ஸ்வாமி.   இருக்கிறது உம்மிடம்  ஒரே நட்சத்திரத்தில், அதுவும் மிருகஷீரிஷ நட்சத்திரமாக இருந்தால் உன் ஜாதகத்திற்கு விசேஷம்  நீ ஒரே நேரத்தில் நான்கு கன்னிப்பெண்களையும் மயானக்காளிக்கு ஆத்ம பிரசாதம் அளித்தால் உன் ஆயுள் தப்பும் என்றாள். இது நடக்குமா என்றார் தீக்ஷண்ய ஸ்வாமி முயற்சி திருவினையாக்கும். மேலும் இதனை ஒரு மாத்திற்குள் முடிக்க வேண்டும் நிறைந்த அமாவாசையில் முடிந்தால் உனக்கு சகல காரியமும் சிரஞ்சீவி தன்மையும் கிடைக்கும்.

அப்படியே செயகிறேன் எனக்கு இன்னொரு உதவியும் வேண்டும் என்றார் தீக்ஷண்ய ஸ்வாமி என்ன கூறும் என்றாள்  யோகினி, எனக்கு நிறைய ஸ்வர்ண பாளங்கள் வேண்டும் இந்த மடத்தினை நான் விரிவு படுத்தி ஒரு பெரிய அமைப்பாக உருவாக்க வேண்டும் அதற்க்கு இந்த உதவியை தேவி அருள வேண்டும் என்றார். எம்மை விடவும் பெரும் அழியாப்பதவியம் பரம்பொருளை உணரும் யோக சித்தியினை விட்டு சிற்றின்பத்திலேயே  இந்த மானிடர்கள் அலையும் அல்ப ஆசைகள் என்னே! என்று யோகினி நினைந்து சிரித்தாள்.
அதற்க்கென்ன தந்தேன்! ஆனால் பேராசை பெருநஷ்டம்.  உமக்கு இயற்கையிலேயே வசிய சக்தி உள்ளது. நான் இதுவரை கொடுக்கும் பொன்னும் நகைகளும் உமக்கு போதும். ஆயினும் உமக்கு ஒரு பக்ஷத்திற்கு  பொருள் தரும் வசியத்தினை அளிக்கிறேன். விதி வசத்தால் யாரேனும் உம்மை காண வந்தால் அவர்கள் உம்  வாக்கினால் அடிமை படுவர்.  அது ஒரு பக்ஷத்திற்கு வேலை செய்யும் அப்படியே கொடுங்கள் என்று சொன்னார். அவள் தன் வாய் தாம்பூலத்தில் ஒரு சிறு துளியை ஏந்தி அவர் வாயில் விட்டாள். இதையும் உமக்கு தருகிறேன் என்று சொல்லி அவள் அணிந்திருந்த நகைகளை அனைத்தையும் களைந்து  விட்டு  ஒற்றை ஆடையுடன் மறைந்தாள்.
------------------------------------------------------------------------------------------------------------------
சம்பத் படுத்திருந்த இடம் மிகவும் புதுமையாகவும் புதிராகவும் இருந்தது. அது மலை குகைகளிலேயே ஒரு பெரும் குகை. அங்கு வெளிச்சம் என்பது மருந்தளவிற்கு கூட இருக்க கூடாது. ஆனால் நல்ல உற்சாகம் அளிக்கும் விதமாக நறுமணமும், மூலிகை வாசமும் கொண்ட புகை அவன் நாசியை சுற்றியது. அவனை சுற்றி நல்ல வெளிச்சம் நிறைந்திருந்தது. புன்னகையும் தெளிவும் கொண்ட ஒரு மனிதர் அவனை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார். அவர் தாடி மீசைகளை தாண்டி ஒரு மெல்லிய புன்னகை மலந்திருந்தது. எழுந்துட்டியா சம்பத்? எப்படி இருக்கே? என்று ஒரு தெளிவான குரல் அவன் காதுகளில் ஒலித்தது. அந்த கண்கள். அப்பா வைரங்கள் டால் அடிப்பது போல எத்தனை தேஜஸ்! அந்த பார்வை சொக்க வைக்கும் திறன் உடையதாய் இருக்க வேண்டும். எத்தனை தீர்க்கமான அருள் பார்வை.
சம்பத் மெதுவாக  எழுந்தான். அவன் உடலை கூறு போட்டால் போல் வலியினை ஒருவாரமாக அனுபவித்து வந்தது அவன் நினைவிற்கு வந்தது. அப்போது அவன் பார்த்தது அந்த முகமம்  அந்த கண்களும் மட்டுமே, அப்புறம் அவன் இறந்து விட்டதாகவே அவன் நினைத்திருந்தான். இரண்டு நாட்களில் அவன் சற்றே சுயநினைவுக்கு திரும்பிய பொது உடல் எங்கும் தீ காயங்களும் கால் எலும்பு இரண்டாக பிளந்திருந்ததும் அவனுக்கு நினைவு வந்தது. முகத்தில் ஒரு எரிச்சல் நிச்சயம் அவன் முகம் தீயினால் சிதைந்து போயிருக்கும் என்று  நினைத்திருந்தான். அந்த நினைப்பு இப்போது மிரட்டவே உடனே அவன் கை கால்களை பார்த்தான். ஒரு இடத்திலும் தீக்காயங்கள் இல்லை, அவன் கால் எலும்பு முறிந்தது போல நினைவு. ஆனால் அந்த இடத்தில் சற்றே வலி இருந்தது  தவிர காயங்களை காண வில்லை. முகத்தை தடவி பார்த்தான் ஆனால் முகத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவன் ஆச்சரியங்களுக்கு அளவே இல்லை.
என்ன நாம உயிரோட இருக்கோமா  இல்லை செத்து போயிட்டோமா  இல்லை செத்தவன் எப்படி பிழைச்சேன்னு பார்க்கிறாயா? என்று கடகடவென்று சிரித்தார்   பாலைசித்தர் என்று அழைக்க பெற்ற சிவா ஸ்வாமிகள்.
======================================================================

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 10

--------------------------------- "பாலைவனத்தில் ஓர் சோலை தெரிந்தது.ஆசையாய் அதை துரத்தி சென்றேன். கால்கள் ஏறிய, கண்கள் கூசும் வெய்யிலில் சென்ற பின் தான் தெரிந்தது அது கானல் நீரென்று!" --------------------------------- இரண்டு நாட்கள் அவர்கள் முன்பு போல சகஜமாக பேசிக் கொள்ளவில்லை.அலுவலகத்தில் பொதுவாக ஹரியை ஓர் இடத்தில் யாரும் சேர்ந்தர்ப்போல் ஒரு ஐந்து நிமிடங்கள் கூட பார்த்தது இல்லை.பரபப்புக்கும் சுறுசுறுப்பிர்கும் பேர் போனவன் ஹரி. அவன் வேலை செய்யாமல் இருந்தே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த ஹரி சோபையுடன் காணப்பட்டது எல்லோருக்கும் சற்று ஆச்சரியத்தை அளித்தது. அவனை பார்க்கும் போதெல்லாம் பிரியா அவனிடம் முகம் கொடுக்காமல் பேசினாள். எதை கேட்டாலும் இயந்திரம் போல பதில் சொன்னாள்.வேலையை பற்றி மட்டும் பேசினாள் தவிர மற்ற நேரத்தில் மௌனீயாக அமர்ந்திருந்தாள்.மற்றொரு நாள் அவன் மிகவும் வற்புறுத்தி அவளிடம் பேச தொடங்கினான் ஹரி. "தயவு செய்து என்ன மன்னிச்சிடு பிரியா. நான் உன்னை ரொம்ப நோக வெச்சிடென்னு நினைக்கிறேன். ஆனால் என் காதல் உண்மை பிரியா. உன் கூட மட்டும் தான் பழகினேன் அப்படிங்கிறததுக்கு...

வாசகி நானல்ல! - பக்கம் 6

------------------------- "முழுச் சந்திரனை கிரகணம் பிடித்தது அன்று. சந்திரன் எந்த தவரும் செய்யவில்லை. ஏனோ இருளிர்க்கு அவளை அணைத்திட ஆசை. ஆனால் அவனுக்கு மட்டும் தான் அவள் சொந்த என்பது போல இந்த இருள் அரக்கன் சந்திரன் காணாமல் செய்து விட்டானே பாவி?" ------------------------- "நிஜமா வா சொல்றீங்க?" ஹரி முகத்தில் கலவரம் விகாரத்துடன் வெளிப்பட்டது. "இனிக்கி தான் எனக்கு தகவல் வந்தது டா. இன்னும் ஒரு மாசம் தான் நீ பண்ணிட்டு இருக்கிற இந்த Short-Term ப்ராஜெக்ட் முடிஞ்சி போய்டும். எப்படி இருந்தாலும் உனக்கு தலை வலி விட்டது." "அப்போ இந்த பசங்க எல்லாம்?" "அவங்க எல்லாரும் இன்னொரு வேலைக்கு போக வேண்டியது தான்?!" அவங்க 'Provider' ஆபீஸ்ல அத பாத்துக்க போறாங்க நாம 'Client' தானே நமக்கு என்ன கவலை?" என்று அமைதியாக பதில் அளித்தார் மேலாளர். சிறிது நேரம் அவன் முகத்தை நோக்கிய வாறே இருந்தார் அவர். மிகுந்த கவலையோடும் ஆர்வத்துடனும் ஹரி அவரை பார்த்து கொண்டிருந்தான். "டாய் சாமியார்! நீ இவ்வளோ மாறி போவேன்னு நான் எதிர் பாக்கல்ல. என்னடா லவ்வா?;-)...

வாசகி நானல்ல! - பக்கம் 9

ஆசை ஒரு பக்கம் பயம் ஒரு பக்கமும் பிடுங்கி தின்றன ஹரிக்கு.இந்த நாள் அவன் வாழ்க்கையை எப்படி திருப்பி செலுத்த போகின்றது என்று அவனுக்கே தெரியாது. எதுவானாலும் சரி இன்று கேட்டு விடுவது என்றும்,அதே சமயம் எப்படி கேட்பது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தான் அவன். வீட்டில் யாரும் இல்லை.அன்று விடுப்பு வேறு இன்று தான் சரியான தினம் என்று முடிவு செய்தான். சரியான சமயத்தில் செல்பேசி அடித்தது. "ஹலோ ஹரி!" "...." "ஹரி??!" "ஹ்ம்ம் சொல்லு பிரியா.." "இப்போ தான என்திரிசீங்க?என்ன சமையல்? வீட்டுல யாரும் இல்லேன்னு நேத்திக்கி மெசேஜ் பண்ணி இருந்தீங்க? இன்னிக்கி என்ன ப்ரோக்ராம்?"என்று கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தாள் அவள். "ஒண்ணும் இல்ல..இனிக்கி திருவல்லிக்கேணி கோயிலுக்கு போறேன்.. நீயும் வரியா ..எனக்கு ஒரு சந்தேகம்..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பிரியா..இன்னிக்கி நீ என்கூட வர சம்மதமா?" "என்னடா இது?சார் அதிசயமா இன்னிக்கி கோயிலுக்கு எல்லாம் போறீங்க? என்ன மத்தியானம் லஞ்சு அங்கேயேவா :-D? சரி சரி என்ன திடீர்னு?" என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்டாள்...