விபரீத விளையாட்டு - 1 உ அருள்மிகு வடபழனி ஆண்டவர் துணை திருமண அழைப்பிதழ் அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது. அன்புடையீர், எல்லாம் வல்ல முருகன் அருளாலே பெரியோர்கள் ஆசியுடன் நிகழும் சர்வதாரி வருடம் ஆனி திங்கள், 9 ஆம் நாள் (23.06.2008)அவிட்ட நட்சத்திரம், மிதுன லகினத்தில் (6:00- 7:30 AM) கூடிய சுப முகூர்தத்தில் திருவாளர் இராமு - திருமதி வசந்தம்மாள் அவர்களின் கனிஷ்ட புத்திரி திருநிறை செல்வி இரா. கண்மணி க்கும், அமரர் திரு. இராமேஸ்வரன் -திருமதி பார்வதியம்மாள் அவர்களளின் கனிஷ்ட குமாரர் திரு நிறை செல்வன் இரா.செந்தில்வேல் க்கும் அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோயில் சந்நிதானத்தில் 15 இலக்க தூண் அருகில் நடை பெறுவதால் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வந்து மணமகளை வாழ்த்த வேண்டுகிறோம். திரு.இராமு, ...