விபரீத விளையாட்டு - 20 செந்தில் கருணா சொல்லியிருந்த வீட்டை கண்டு பிடிக்க நெடு நேரம் ஆனது, போலீஸ் ஜீப் ஒன்று நிற்பதை பார்த்து குழப்பமாய் இருந்தது, ஒருவேளை வேளை நம்முடைய திட்டம் வெற்றி பெற்றுவிட்டதோ என்று ஒரு நிமிடம் நிம்மதி அடைந்தான். வாசலில் ஜான் நின்று அவனுக்கு செய்கை காட்டி அவனை உள்ளே வரும்படி சொன்னவுடன் அப்படி எதுவும் நடக்க வில்லை என்று எண்ணிகொண்டான். இவர்கள் கண்மணியை என்ன செய்து தொலைத்தார்கள் என்று ஒரு வித அச்சம் பரவியது. வழக்கத்துக்கு மாறாக ஜானின் முகம் கொஞ்சம் கடு கடுப்பாக இருந்தது. செந்தில் உள்ளே சென்றதும் அவனை கருணா சிரித்தபடியே தொளில் கை போட்டு உள் அழைத்து சென்றான். மறு நிமிடம் அவன் பின் மண்டையில் ஒரு கிரிகெட் மட்டை நன்கு பதம் பார்த்தது. ரதம் ஒழுக, பின் பக்கம் கைகள் கட்ட பட்டு தரையிலே கிடந்தான் செந்தில். அவன் தலை சுக்கு நூறாக போய்விட்டதை போன்று இருந்தது. நன்றாக கண்களை திறந்து பார்த்தான். அவன் கண்கள் சிகப்பு நிறமாகி மங்கலாக தெரிந்தன. இன்னமும் அவன் நினைவு தெளியவில்லை. ஜான் அவன் முகத்தில் ஐஸ் தண்ணீரை அடித்தான். ஊசி குத்தியதை போல வலித்தது.செந்திலுக்கு இ...