விபரீத விளையாட்டு - 11 தப்பு செய்யறவங்க யாரும் எனைக்குமே சுதந்திரமா வாழ முடியாது ஒன்னு தெரியுமா? குத்தம் செய்யறவேன் தன்னையே அறியாமல் எதாவது ஒரு சாட்சி வெச்சிருப்பான். அந்த உண்மை அவனை எப்படியாவது மாட்டிவிட்டுறும். ஒரு அலைவரிசையில் மதிய நேரம் தமிழ் சினிமா ஓடி கொண்டிருந்தது. சிவாஜி யின் கணீர் குரல் வசனம் ஒன்று தெளிவில்லாமல் யோசித்து கொண்டிருந்த செந்திலுக்கு ஒரு உத்வேகத்தை கொடுத்தது. நல்லவன் வாழ்வான்! தப்பு பண்ணவன் தண்டனை அனுபவிச்சே ஆகணும்! ராமுவின் வார்த்தைகள் அவன் காதில் ஒலித்து கொண்டிருந்தது. தப்பு செஞ்சவங்களை மாட்டி விடனும் ஆனால் எங்கேருந்து ஆதாரம் சிக்குறது. ஜான் வீட்டில் இல்லை, கண்மணியுடன் தான் சென்றிருப்பான் என்று தெரியும். சரி வீட்டை துழாவ வேண்டியது தான் என்று முடிவு கட்டி ஒவ்வொறு பக்கமாக தேட ஆரம்பித்தான். அப்போது ஒரு துணி குவியலில் லேசாக அதிர்வு தெரிந்தது. எலி வந்து விட்டதா என்று எண்ணியவன் துணியை விலக்கி பார்த்தான். ஒரு செல் பேசி. மணி ஒலித்து கொண்டிருந்தது. செந்தில் சிரித்தான்.ஜான் தனக்கு தெரியாமல் ஒரு செல் இணைப்பு வைத்து இருக்கிறானா? எடுத்து பேசினான்...