Skip to main content

வாடகை வயிறு

ரேகாவுக்கு அவளையே பார்த்துக்கொள்வது போல இருந்தது. மணி போல இரு கண்கள், திறந்தும் திறவாமலும் பாதி மலர்ந்த மல்லிகைப் பூ போல இருந்தது. கீரை தண்டு போல இளசாக இருந்த கைகளும் கால்களும், கூரிய மூக்கும், சுருளாக முளைத்திருந்த தலை முடியும், தங்கப் பதுமை போல இருந்த உருவமும், அஹா! பார்த்தவுடனே அழுகை பீரிட்டு கொண்டு வந்தது. தனக்கு இதனால் ஒரு கேவலமும் இல்லை என்றே தோன்றியது. ரவியின் நல்ல குணமும், அவனுடைய துன்பமும் அவன் வெளிப்படையாக அதே சமயம் ஞாயமான அவன் வேண்டுகோளும் அவளை இப்படி ஒரு காரியத்திற்கு துணிய வைத்தது.  தன் மூலம் அவனுக்கு ஒரு குழந்தையினை கொடுக்க முடியும் என்ற திருப்தியும், தைரியமும் அவளுக்கு வந்ததால், இன்று அவன் மூலம் அவள் ஒரு குழந்தையின் தாயாக ஆகிவிட்டாள் .

"கங்க்ராட்ஸ் மிஸ்டர் ரவி! உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு."
என்று டாக்டர் ஹேமா வாழ்த்தினார். ரவிக்கு ஆனந்தம் தாங்க முடியவில்லை.
"கடவுளே எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல்ல டாக்டர். நான் இப்போவே வர்றேன். ரேகா பக்கத்துல இருந்தா குடுங்க. ...ஹலோ ரேகா கண்ணா.. வாழ்த்துக்கள்...இதோ வரேன்."

ரவி கிலோ கணக்கில் இனிப்புகள் வாங்கினான். ரேகாவின் மகன் மகேஷையும் அழைத்துக்கொண்டான். கார் டிரைவர் உடனே புரிந்து கொண்டார்.
"என்ன தம்பி? கொழந்தை பிறந்திடுச்சா? என்றார்.
"ஆமா அண்ணே! ஆமா! நானும் அப்பா ஆயிட்டேன் " என்று கண்ணில் துளிர்த்த கண்ணீரை துடைத்து கொண்டே சொன்னான் ரவி.
"கடவுள் இருக்காரு தம்பி! இன்னைக்கு ஊர் வாயி எல்லாம் முடிருச்சே!" எத்தனை பேச்சுக்கள்! சரி சரி இப்போ எதுக்கு அதெல்லாம்?வாங்க போகலாம்." என்று காரை விரைவாக எடுத்தார். மூவரும் காரில் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தனர். 

அவனுக்கு முன்னால் அவன் நினைவுகள் குதிரை பாய்ச்சலில் ஓடியது . இன்று போல என்றும் ஆனந்தமாய் இருந்ததில்லை. ஒரு பெரிய அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருந்தும், நன்கு பேர் அவன் இட்ட கட்டளை படி வேலை செய்வதும், கொள்ளை கொள்ளையாய் சொத்து சேர்ந்து இருந்தும், நல்ல அந்தஸ்த்து இருந்தும் பயன் பெறுமா?
ஒன்றல்ல இரண்டல்ல, எழு வருடங்கள்! அவர்கள் சந்திக்காத அவமானங்களும், கிண்டல்களும், பச்சாதாபங்களும், வாழ்த்தும், வசைகளும், பின்னால் இருந்து கேட்கும் குத்தல் பேச்சுக்களும், எதுவும் மிச்சம் இல்லை.அவனை விட ரேகா தான் அனலில் இட்ட புழு போல துடித்துப் போனவள்.பார்க்காத வைத்தியம் இல்லை, போகாத கோயில்கள் இல்லை.  அந்த டாக்டர் சேது என்ன சொன்னார்?
 "ஐ அம் சாரி மிஸ்டர் ரவி! உங்களுக்கு கூட ப்ராப்ளம் இல்லை உங்க மனைவி ரேகாவுக்கு தான்.."
மேற்கொண்டு கேட்க முடியவில்லை. துக்கம் தொண்டை அடைக்க உடைந்து போய், விக்கி விக்கி அழுத ரேகாவை பார்க்கமுடியாமல் அவன் தவித்த தவிப்பு. அவளை மலடி என்று சொல்லாமல் சொல்லி விட்டாரே அவர்!தினமும் அவர்களின் படுக்கை அரையில் கழித்த நரக வேதனைகள்..அப்பப்பா! 
"செத்துடலாம் போல இருக்கு ரவி!" என்று சொன்ன அவளுக்கு இந்த டாக்டர் தானே தன்னம்பிக்கை தந்தாள்!
"ஹைய்யா அம்மா ஆஸ்பத்திரி வந்திருச்சு என்று மகேஷ் கூவியது கேட்டு ரவி நனவுலகிற்கு திரும்பினான். "சுமுகி மருத்துவமனை "

ரவி டாக்டர் ஹேமா வின் அறைக்கு விரைந்தான்.

 "வாங்க மிஸ்டர் ரவி.என்னது இது? ஒ ஸ்வீட்டா ?
"ரேகா எங்க டாக்டர்?" என்றான்
"ஓ அவங்களா? சரி மெட்டர்னிட்டி வார்டுலதான் உங்க மனைவி இருக்காங்க.  போகலாமா? " என்றார்.
"உங்க மனைவி ஒரு நிமஷம் கூட தூங்கவில்லை தெரியுமோ? டெலிவரி டைம் பூரா குறுக்கும் நெடுக்குமா நடந்துகிட்டு இருந்தாங்களாம்."என்றார். ரவி சிரித்தான்.

ரவியுடன் அழைத்து வந்த ரேகாவின் மகன் மகேஷை பார்த்த டாக்டர் "ஹலோ மகேஷ் எப்படி இருக்க ?" எண்டார் டாக்டர்.
முட்ட முட்ட விழித்த மகேஷ் "உம்" என்று சொல்லி ரவியின் பின்னால் போய் ஒளிந்தான்.
"ரேகாவுக்கு பணம் போட்டாச்சா? " என்றார் டாக்டர்.
"அப்போவே பேங்க் அக்கவுன்ட்டுல போட்டுட்டேன் டாக்டர். "என்றான் ரவி.
"நீங்க தேங்க்ஸ் சொல்லனும்னா ரேகாவுகுத்தான் சொல்லணும். நம்ம  ஊருல யாருமே இப்படி முன்வந்து இந்த மாதிரி ஒரு துணிச்சலான  காரியம் செய்ய மாட்டாங்க! ஆனா இவங்க கேட்ட தொகை தான் ஜாஸ்தி."
"பணத்த பத்தி கவலை இல்ல டாக்டர் அவங்க தான் இன்னிக்கி எனக்கு வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தயே குடுத்து இருகாங்க!" என்று உணர்ச்சி பெருக்குடன் சொன்னான் ரவி.
"உங்க மனைவியையும் பாராட்டித்தான் ஆகணும் அவங்க மட்டும் ஒத்துகலன்னா அவ்ளோ தான் என்னால ஒன்னும் பண்ணி இருக்க முடியாது."
"ஆமாம்  டாக்டர்! ஒரு கட்டம் வரைக்கும் அவ இதுக்கு சம்மதிகல்லை.
அப்புறம் நான் நிலமைய எடுத்து சொன்னதுக்கு அப்புறம் அவ புரிஞ்சிக்கிட்டா."
எப்படியா இருந்தாலும் இப்போ நீங்களும் ஒரு தந்தை சந்தோஷ படுங்க."
"சரி சரி! இப்படியே வசனங்கள் பேசி என்னோட "ட்ரீட் " மறந்து போயிடாதீங்க" என்று கண்ணடித்து கிண்டல் செய்தார் டாக்டர் ஹேமா.
 
"விடமாட்டீங்களே !" என்று சிரித்தவாரே இருவரும் மகபேறு அறைக்குள் சென்றனர். ரவி இன்றுதான் ரேகாவின் முகத்தில் அத்தனை சந்தோஷத்தினை கண்ணுற்றான். அதில்தான் எத்தனை நிம்மதி? எத்தனை பிரகாசம்? வாழ்க்கையின் இலட்சியத்தை அடைந்ததின் திருப்தி? அனைத்தையும் ஒரு சேரக் கண்டான் ரவி.

"ரவி! பாத்தீங்களா! நம்ம பாப்பா எவ்ளோ அழகா முத்தா இருக்குன்னு பாருங்க! "என்று பேசிக்கொண்டே கைகளில் குழந்தையை கிடத்தினாள் ரவியின் மனைவி ரேகா. ரவி குழந்தையை அணைத்துக்கொண்டு முத்தம் கொடுத்தான். படுத்து கொண்டிருந்த ரேகா எழுந்திரிக்க  எத்தனித்தாள்.

"படுங்க படுங்க!இப்போ நீங்க எழுந்திரிக்க கூடாது 
ரொம்ப சோர்வா இருக்கீங்க! "என்றான் டாக்டர்.
"பரவா  இல்லைங்க, என்று அவள் மகன் மகேஷை வரும்படி சமிஞை செய்தாள். "என் மகன் உங்கள ரொம்ப தொந்தரவு பண்ணானா?" என்றாள் ரேகா
"அதெல்லாம் இல்ல ரொம்ப  சமத்தா தான் இருந்தான்." என்று அவள் மகன் மகேஷை அருகில் விட்டான் ரவி.
"ரேகா! நான் உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல்ல. எங்களால முடியாததை நீங்க தந்துட்டீங்க! உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் பத்தாது. ரொம்ப தாங்க்ஸ்! என்று கண்ணீர் மல்க கரங்கள் கூப்பி சொன்ன நன்றிகளையும், குழந்தையை எடுத்து பாசத்துடன் அரவணைத்து கொண்டிருந்த ரேகாவின் ஆனந்தத்தையும் அமைதியாக, படுக்கையில் படுத்தவாறே பார்த்துக்கொண்டு இருந்தாள் வாடகை தாய் ரேகா.
"யாரோட புள்ளையோ போய் சொமக்க சொல்றாங்க உனக்கு அதோட பேரு என்னனு தெரியுமா?" என்று அவள் தோழி சரளா கேட்டது நெஞ்சை குத்தி  கிழித்தது தான்.ஆனாலும் இது வயிற்று பிழைப்புக்காக, தன் குடும்பம் பிழைக்க பணம் வேண்டுமே? விதவை பெண்ணான எனக்கு ஒரு புகலிடம் வேண்டாமா? பிழைப்பு வேண்டாமா? திக்கு இல்லா பக்தனுக்கு இன்று தெய்வமே பணத்தின் மூலம்தானே துணை செய்கிறது? சமுதாயம் எப்படியும் என்னை போல அபலைகளை சீரழிதுவிடுமே.காப்பாற்ற யாரும் அற்ற அவர்களுக்கு இப்படி ஒரு வசதி வந்தது ரவி ரேகாவால் தானே?அவள் மானத்தை அடகு வைக்க வில்லை, வயிற்றை தான் அடகு வைத்தாள்.  அவளுக்கு இப்போது ஒரு நிம்மதி அவள் வாடகை வயிறு செய்தது வியாபாரம் அல்ல சேவை!
********

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 10

--------------------------------- "பாலைவனத்தில் ஓர் சோலை தெரிந்தது.ஆசையாய் அதை துரத்தி சென்றேன். கால்கள் ஏறிய, கண்கள் கூசும் வெய்யிலில் சென்ற பின் தான் தெரிந்தது அது கானல் நீரென்று!" --------------------------------- இரண்டு நாட்கள் அவர்கள் முன்பு போல சகஜமாக பேசிக் கொள்ளவில்லை.அலுவலகத்தில் பொதுவாக ஹரியை ஓர் இடத்தில் யாரும் சேர்ந்தர்ப்போல் ஒரு ஐந்து நிமிடங்கள் கூட பார்த்தது இல்லை.பரபப்புக்கும் சுறுசுறுப்பிர்கும் பேர் போனவன் ஹரி. அவன் வேலை செய்யாமல் இருந்தே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த ஹரி சோபையுடன் காணப்பட்டது எல்லோருக்கும் சற்று ஆச்சரியத்தை அளித்தது. அவனை பார்க்கும் போதெல்லாம் பிரியா அவனிடம் முகம் கொடுக்காமல் பேசினாள். எதை கேட்டாலும் இயந்திரம் போல பதில் சொன்னாள்.வேலையை பற்றி மட்டும் பேசினாள் தவிர மற்ற நேரத்தில் மௌனீயாக அமர்ந்திருந்தாள்.மற்றொரு நாள் அவன் மிகவும் வற்புறுத்தி அவளிடம் பேச தொடங்கினான் ஹரி. "தயவு செய்து என்ன மன்னிச்சிடு பிரியா. நான் உன்னை ரொம்ப நோக வெச்சிடென்னு நினைக்கிறேன். ஆனால் என் காதல் உண்மை பிரியா. உன் கூட மட்டும் தான் பழகினேன் அப்படிங்கிறததுக்கு...

வாசகி நானல்ல! - பக்கம் 2

"நான் தான் கிடைச்சேனா உங்களுக்கு?" என்று எப்போதும் இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்காமல்அவர் ' டீம் லீட்' இடம் கேட்டான் ஹரி. "பின்ன? உன்ன விட்ட யாருடா அவங்களுக்கு Training குடுக்கறது? உன்ன மாதிரி Qualified employee' தான் அந்த வெள்ளக்காரிக்கு Trainer ஆ வேணுமாம் தலை ழா நிக்கிறா அவ!" என்றார் அவர். "என்னவோ போங்க என்ன வெச்சி ஏதோ விளையாடனும்னு முடிவு பண்ணிட்டீங்க. நடத்துங்க." என்று பொருமினான். "டாய்! என் டா பயப்டுற? சும்மா போய் ஜமாய் இது எல்லாம் ஒரு experience தானே ?" என்றே அவர் ஆசை அஸ்திரம் ஏவினார். "Project completion இருக்கு coding work வேற இருக்கு. இப்போ போய் எனக்கு இந்த வேலை குடுகுறீங்க நான் என்னத்த சொல்றது?" " வேண்டாம்ணு சொல்லாதே அதுசின்ன ப்ராஜெக்ட் தான் நாலு மாசத்துல முடிஞ்சிடும். இவங்களுக்கு நீ training குடுதிட்டேன்னா வேலை முடிஞ்சித்து. ஹாயா இருக்கலாம் அப்புறம் அந்த பசங்க உனக்காக வேலை பக்க போறானுங்க." என்று சாத்தான் வேதம் ஓதினார் அவர் மேலாளர். 15 பெருக்கு அவன் பணி நேரம் போக 4 மணி நேரம் கூடுதல் பயிற்சி வகுப்புகள் ...

வாசகி நானல்ல! - பக்கம் 9

ஆசை ஒரு பக்கம் பயம் ஒரு பக்கமும் பிடுங்கி தின்றன ஹரிக்கு.இந்த நாள் அவன் வாழ்க்கையை எப்படி திருப்பி செலுத்த போகின்றது என்று அவனுக்கே தெரியாது. எதுவானாலும் சரி இன்று கேட்டு விடுவது என்றும்,அதே சமயம் எப்படி கேட்பது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தான் அவன். வீட்டில் யாரும் இல்லை.அன்று விடுப்பு வேறு இன்று தான் சரியான தினம் என்று முடிவு செய்தான். சரியான சமயத்தில் செல்பேசி அடித்தது. "ஹலோ ஹரி!" "...." "ஹரி??!" "ஹ்ம்ம் சொல்லு பிரியா.." "இப்போ தான என்திரிசீங்க?என்ன சமையல்? வீட்டுல யாரும் இல்லேன்னு நேத்திக்கி மெசேஜ் பண்ணி இருந்தீங்க? இன்னிக்கி என்ன ப்ரோக்ராம்?"என்று கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தாள் அவள். "ஒண்ணும் இல்ல..இனிக்கி திருவல்லிக்கேணி கோயிலுக்கு போறேன்.. நீயும் வரியா ..எனக்கு ஒரு சந்தேகம்..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பிரியா..இன்னிக்கி நீ என்கூட வர சம்மதமா?" "என்னடா இது?சார் அதிசயமா இன்னிக்கி கோயிலுக்கு எல்லாம் போறீங்க? என்ன மத்தியானம் லஞ்சு அங்கேயேவா :-D? சரி சரி என்ன திடீர்னு?" என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்டாள்...