Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 8

-----------
"எட்டி சென்றால் கிட்டி வரும்
கிட்ட சென்றால் எட்டி போகுமோ? "
--------------
மெல்லிய விசும்பல் சத்தம் கேட்டு விழித்தான் ஹரி. பிரியா அவன் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தாள். அப்போது அவன் கால்கள் மிகுந்த வலி ஏற்பட்டிருப்பதை உணர்ந்தான். " சிரமப்படாத ஹரி! ஒண்ணும் இல்ல என்று அவன் நெஞ்சின் மேல் மெல்ல அழுத்தினாள் பிரியா.

" பிரியா? உனக்கு ஒன்னும் ஆகலியே? அடி படல்லியே?" என்று விசாரித்தான் ஹரி.
"எனக்கு என்ன ஆயிருந்தாலும் பரவா இல்ல. நல்ல வேளையா உனக்கு எதுவும் ஆகல்லை அது போதும் சாமி !". என்று கூறினாள் அவள்.

அப்போது டாக்டர் வந்தார். "என்ன ஹரி எப்படி இருக்கீங்க ?"

"கொஞ்சம் வலிக்கிறது டாக்டர் என்னாச்சு என் காலுக்கு?"
Nothing serious! Thank God there is no fracture or injury.Just a sprain தான் காலில டயர் ஏறினதால நீங்க அதிர்ச்சி ஆயிடீங்க அவ்வளவு தான். சாயங்காலம் கொஞ்சம் சரி ஆயிடும். நீங்க போயிடலாம். ரெண்டு நாள் வீட்டில ரெஸ்டு எடுத்துகிட்டு ஆபிஸ் போங்க போதும். பாவம் இந்த பொண்ணு தான் ரொம்ப பயந்து போய்ட்டா. "என்று தேற்றினார் அவர்.

"ரொம்ப தேங்க்ஸ் டாக்டர். " என்று ஹரி புன்னகைதான்.

ஹரியை பிரியா விட்டிற்கு கொண்டு சென்று விட்டாள். அவன் விட்டில் அல்லோ கலோல பட்டது. ஹரியின் அம்மா மிகவும் பயந்து விட்டாள். பின் அனைத்து விவரங்களும் சொன்ன பிறகு ஓர் அளவிற்கு அமைதி ஆனாள்.

பிரியா பின்னர் விடை பெற்று சென்ற பின் அப்பா அவன் அருகில் வந்தார்.

"ரொம்ப நல்ல பொண்ண இருக்காடா அவ! ரொம்ப நல்ல வேலை செஞ்சிருக்க இனிக்கி உன் உயிரை பத்தி கவலை படாம நீ அவள காபாத்தி இருக்க . நிஜம்மாவே ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு!" என்றார்.

-----------------------------
அவன் தேறி வந்ததும் அன்று தேனீர் நேரத்தில் பேச்சு தொடங்கியது.

"உன்கிட்ட எத்தன கோடி தடவ தேங்க்ஸ் சொன்னாலும் போதாது!" என்று கண்கள் பனிக்க சொன்னாள் பிரியா.

"அட போதும் பா! நான் என்ன உலக சாதனைய செஞ்சிட்டேன். உனக்கு ஒரு பிரச்சனை அப்டின்னா நான் சும்மா இருபேன என்ன? நண்பர்களுக்குள்ள என்ன இருக்கு? அதுலயும் நீ எனக்கு ஒரு படி மேல. "

"என் மேல அவ்வளோ மதிப்பு வெச்சிருக்கியா ஹரி? என்ன அவ்வளவு புடிக்கும உனக்கு? நான் அவ்வளவு அருகதை உள்ள நண்பியா என்ன ?"

"அப்படி சொல்லாதே நீ தான் எனக்கு எல்லாமே.. இல்லேன்னா உன்கிட்ட இப்படி பழக மாட்டேன் பிரியா.வாழ் நாள் எல்லாம் எனக்கு உன்னை புடிக்கும் ."

"நீங்க ஒரு புரியாத புத்தகம். சில நேரம் உங்கள படிக்க முடியல சில நேரம் கொஞ்சம் படிக்க முடியுது. என்ன அவமான படுத்தி நோக அடிச்சா ஹரியா இனிக்கி என்ன நண்பியா ஒரு உயர்ந்த ஸ்தானத்தில வேசிருகாருன்னு நினைக்கும்போது எனக்கு திகைப்பாவும் மலைப்பாவும் இருக்கு. அதே சமயம் உங்கள பத்தி முழுசவும் தெரிஞ்சிக்கிற அளவிற்கு இன்னும் நாம பழகல்ல அதுக்குள்ள எவ்வளோவோ பெரிய விஷயங்கள கத்தும் குடுத்தீங்க ஏன்? என் உயிரை காபற்றிநீங்க . "

"எனக்கு தெரியும் நான் அவ்வளவு அழகில்லை. பெரிய வேலை எல்லாம் கூட இல்லை சும்மா திரிஞ்சி கிட்டு இருந்தேன், அம்மா அப்பா அக்க கல்யாணத்திற்கு காசு சேர்க்க கஷ்ட படுரங்கன்னு தெரிஞ்ச அப்புறம் தான் பொறுப்பா வேலைக்கு சேர்ந்து செய்ய ஆரம்பிச்சேன்.

"எனக்கு கிடைச்ச முதல் நண்பன் நிங்கதான். உங்கள பாத்து தான் ரொம்ப பொறுப்பா இருக்க கத்துகிட்டேன். நீங்க என்ன திட்டும் பொது எல்லாம் அப்படியே உங்கள கொன்ன என்னனு நினைக்க தோணும். பிறகு தான் நீங்க ஏன் மேல அக்கரை எடுத்து கிட்டு சொல்றிங்கன்னு புரிஞ்சிது. நானும் ரொம்ப அதிர்ஷ்ட காரி தான். அதுக்கு தான் நன்றி சொன்னேன். "

"எனக்கு மட்டும் என்ன பிரியா உனக்கே தெரியும். நான் யாரையும் வெறுக்கிறது இல்லை. என்ன யாரும் புரிஞ்சிகல்லை. நான் எதை சொன்னாலும் என்னை சிடு மூஞ்சி நு திட்டினாங்க. நான் வலியப் பொய் எந்த பொண்ணுங்க கிட்டயும் பேசினது இல்ல. அனால் நீ தான் ஏன் கூட என்ன புரிஞ்சி கிட்டு பேசின. நிர்பந்தைனால என்கூட இருக்க வேச்சங்கன்ன்னு நினைச்சேன் அனால் இப்போ அது நட்பா ஒரு நல்ல துணையா எனக்கு கிடைச்சதுதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுனால நான் தான் உனக்கு நன்றி சொல்லணும்.."

"சரிதான் நீங்க ஒரு புரியாத மொழி புத்தகம் தான் உக்காந்து. நிறைய படிக்கணும்." என்றாள் பிரியா.

விகாசிடம் அனைத்தையும் சொன்னான் ஹரி. அவர்க அன்று நிறைய பேசினார்கள்.

"உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டேன் விகாஸ். இப்போ சொல்லு உனக்கு எதாச்சும் புரியுதா?

"நல்ல புரியுது உனக்கு முத்தி போச்சு ன்னு ."

"விளையாடாதடா! சரியாய் சொல்லு அவ ஏன் மேல வெச்சிருக்கிறது என்ன? "

"இன்னும் சொல்ல தெரியலடா! ஆனா நீ சொல்றத பாத்தா அவளுக்கு உன்மேல ஒரு அபிப்ராயம் இருக்கிற மாதிரி தான் தெரியுது என்றான்."

"அது போதும்! நான் அவ கிட்ட மனச திறக்க வேண்டியது தான். என்னால இனிமே காத்துகிட்டு இருக்க முடியாதுடா."

"எனக்கு ஒண்ணும் இது சரியான நேரம் மாதிரி தோணல. இருந்தாலும் உன் ஆசை நிறைவேறட்டும்.வாழ்த்துக்கள்!" என்றான்.

விகாசிடம் சொல்லிவிட்டனே தவிர அவன் எடுத்த முடிவு சரியா என்று மூளை தர்க்கம் செய்து கொண்டிருந்தது.அனால் மனம் ? அது யாருக்கேனும் அடங்கியது உண்டோ ? ஹரியும் விதி விலக்கல்ல. விரைவில் அவளிடம் சொல்லி விடுவது என்று முடிவெடுத்தான்.
*******************

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 10

--------------------------------- "பாலைவனத்தில் ஓர் சோலை தெரிந்தது.ஆசையாய் அதை துரத்தி சென்றேன். கால்கள் ஏறிய, கண்கள் கூசும் வெய்யிலில் சென்ற பின் தான் தெரிந்தது அது கானல் நீரென்று!" --------------------------------- இரண்டு நாட்கள் அவர்கள் முன்பு போல சகஜமாக பேசிக் கொள்ளவில்லை.அலுவலகத்தில் பொதுவாக ஹரியை ஓர் இடத்தில் யாரும் சேர்ந்தர்ப்போல் ஒரு ஐந்து நிமிடங்கள் கூட பார்த்தது இல்லை.பரபப்புக்கும் சுறுசுறுப்பிர்கும் பேர் போனவன் ஹரி. அவன் வேலை செய்யாமல் இருந்தே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த ஹரி சோபையுடன் காணப்பட்டது எல்லோருக்கும் சற்று ஆச்சரியத்தை அளித்தது. அவனை பார்க்கும் போதெல்லாம் பிரியா அவனிடம் முகம் கொடுக்காமல் பேசினாள். எதை கேட்டாலும் இயந்திரம் போல பதில் சொன்னாள்.வேலையை பற்றி மட்டும் பேசினாள் தவிர மற்ற நேரத்தில் மௌனீயாக அமர்ந்திருந்தாள்.மற்றொரு நாள் அவன் மிகவும் வற்புறுத்தி அவளிடம் பேச தொடங்கினான் ஹரி. "தயவு செய்து என்ன மன்னிச்சிடு பிரியா. நான் உன்னை ரொம்ப நோக வெச்சிடென்னு நினைக்கிறேன். ஆனால் என் காதல் உண்மை பிரியா. உன் கூட மட்டும் தான் பழகினேன் அப்படிங்கிறததுக்கு...

வாசகி நானல்ல! - பக்கம் 2

"நான் தான் கிடைச்சேனா உங்களுக்கு?" என்று எப்போதும் இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்காமல்அவர் ' டீம் லீட்' இடம் கேட்டான் ஹரி. "பின்ன? உன்ன விட்ட யாருடா அவங்களுக்கு Training குடுக்கறது? உன்ன மாதிரி Qualified employee' தான் அந்த வெள்ளக்காரிக்கு Trainer ஆ வேணுமாம் தலை ழா நிக்கிறா அவ!" என்றார் அவர். "என்னவோ போங்க என்ன வெச்சி ஏதோ விளையாடனும்னு முடிவு பண்ணிட்டீங்க. நடத்துங்க." என்று பொருமினான். "டாய்! என் டா பயப்டுற? சும்மா போய் ஜமாய் இது எல்லாம் ஒரு experience தானே ?" என்றே அவர் ஆசை அஸ்திரம் ஏவினார். "Project completion இருக்கு coding work வேற இருக்கு. இப்போ போய் எனக்கு இந்த வேலை குடுகுறீங்க நான் என்னத்த சொல்றது?" " வேண்டாம்ணு சொல்லாதே அதுசின்ன ப்ராஜெக்ட் தான் நாலு மாசத்துல முடிஞ்சிடும். இவங்களுக்கு நீ training குடுதிட்டேன்னா வேலை முடிஞ்சித்து. ஹாயா இருக்கலாம் அப்புறம் அந்த பசங்க உனக்காக வேலை பக்க போறானுங்க." என்று சாத்தான் வேதம் ஓதினார் அவர் மேலாளர். 15 பெருக்கு அவன் பணி நேரம் போக 4 மணி நேரம் கூடுதல் பயிற்சி வகுப்புகள் ...

வாசகி நானல்ல! - பக்கம் 9

ஆசை ஒரு பக்கம் பயம் ஒரு பக்கமும் பிடுங்கி தின்றன ஹரிக்கு.இந்த நாள் அவன் வாழ்க்கையை எப்படி திருப்பி செலுத்த போகின்றது என்று அவனுக்கே தெரியாது. எதுவானாலும் சரி இன்று கேட்டு விடுவது என்றும்,அதே சமயம் எப்படி கேட்பது என்று தெரியாமல் விழித்து கொண்டிருந்தான் அவன். வீட்டில் யாரும் இல்லை.அன்று விடுப்பு வேறு இன்று தான் சரியான தினம் என்று முடிவு செய்தான். சரியான சமயத்தில் செல்பேசி அடித்தது. "ஹலோ ஹரி!" "...." "ஹரி??!" "ஹ்ம்ம் சொல்லு பிரியா.." "இப்போ தான என்திரிசீங்க?என்ன சமையல்? வீட்டுல யாரும் இல்லேன்னு நேத்திக்கி மெசேஜ் பண்ணி இருந்தீங்க? இன்னிக்கி என்ன ப்ரோக்ராம்?"என்று கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தாள் அவள். "ஒண்ணும் இல்ல..இனிக்கி திருவல்லிக்கேணி கோயிலுக்கு போறேன்.. நீயும் வரியா ..எனக்கு ஒரு சந்தேகம்..உன்கிட்ட கொஞ்சம் பேசணும் பிரியா..இன்னிக்கி நீ என்கூட வர சம்மதமா?" "என்னடா இது?சார் அதிசயமா இன்னிக்கி கோயிலுக்கு எல்லாம் போறீங்க? என்ன மத்தியானம் லஞ்சு அங்கேயேவா :-D? சரி சரி என்ன திடீர்னு?" என்று சிரிப்பை அடக்கி கொண்டு கேட்டாள்...