Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 2

"நான் தான் கிடைச்சேனா உங்களுக்கு?" என்று எப்போதும் இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்காமல்அவர் ' டீம் லீட்' இடம் கேட்டான் ஹரி.

"பின்ன? உன்ன விட்ட யாருடா அவங்களுக்கு Training குடுக்கறது? உன்ன மாதிரி Qualified employee' தான் அந்த வெள்ளக்காரிக்கு Trainer ஆ வேணுமாம் தலை ழா நிக்கிறா அவ!" என்றார் அவர்.

"என்னவோ போங்க என்ன வெச்சி ஏதோ விளையாடனும்னு முடிவு பண்ணிட்டீங்க. நடத்துங்க." என்று பொருமினான்.

"டாய்! என் டா பயப்டுற? சும்மா போய் ஜமாய் இது எல்லாம் ஒரு experience தானே ?" என்றே அவர் ஆசை அஸ்திரம் ஏவினார்.

"Project completion இருக்கு coding work வேற இருக்கு. இப்போ போய் எனக்கு இந்த வேலை குடுகுறீங்க நான் என்னத்த சொல்றது?"

" வேண்டாம்ணு சொல்லாதே அதுசின்ன ப்ராஜெக்ட் தான் நாலு மாசத்துல முடிஞ்சிடும். இவங்களுக்கு நீ training குடுதிட்டேன்னா வேலை முடிஞ்சித்து.
ஹாயா இருக்கலாம் அப்புறம் அந்த பசங்க உனக்காக வேலை பக்க போறானுங்க." என்று சாத்தான் வேதம் ஓதினார் அவர் மேலாளர்.

15 பெருக்கு அவன் பணி நேரம் போக 4 மணி நேரம் கூடுதல் பயிற்சி வகுப்புகள் எடுக்க வேண்டும் என்பது Client உத்தரவு.

உத்தரவை திறம்பட திணிப்பது தான் மேலாளரின் சாதுர்யம்.

ஹரி ஒரு நல்ல அலுவலகத்தில் கணினி மென் பொருள் கடலில் நீந்த தெரிந்த மாலுமி. அபாயாமானஅலுவலக சூழல்களில் சிக்கி நல்ல ஒரு கரையினை அடைவதார்க்கு அவன் பட்ட துன்பங்கள் பல. அவன் அம்மா அப்பா கொடுத்த பலமும், அன்பும் அவனை அவர்களுடன் கட்டி வைத்தன. அப்பா ஜகதீசன் ஒரு தனியார் அலுவலகத்தில் ௨0 வருட பணியில் ஒய்வு பெற்றிருந்தார். உலகத்தில் சகஜமாகப் பழகும் பெண் அம்மா லட்சுமி தான். அப்பா தான் அவன் நண்பர். சென்னையில் உள்ள அவன் வீடு தான் அவன் உலகம். அலுவலகம் ஒரு வேற்று உலகம் . அவன் வண்டி தான் அவன் உற்சவம் செய்யும் வாகனம்.
அவன் அவர்களுக்கு திரும்ப அளித்தது நம்பிக்கை மட்டுமே. அதுவே அவர்களுக்கு போதுமானது. மற்ற பெற்றோர்கள் ஹரி பற்றி விசாரிக்கும் போது அவன் தாய் பெருமையோடு பேசுவதார்க்கு அது மட்டுமே காரணம் என்பது அவனுக்கு தெரியும்.

எல்லோரிடமும் "என் பய்யனை பொறுப்பா வளர்திருக்கேன்!" என்று பொருளோடே சொன்னார்கள் அவன் பெற்றோர். "சாமியார்" என்று சொன்னதர்க்கு இதுவும் காரணம் என்றே ஹரி நினைத்து கொண்டான்.

அது கொஞ்சம் பெருமையாகவும் இருந்தது அவனுக்கு!
-------------------------------

Comments

  1. Nalla interesting ah irukku!! Continue giving the next part soon! :)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாசகி நானல்ல! - கடைசி பக்கம்

அன்புள்ள ஹரிக்கு, உங்கள் தோழி என்று சொல்ல விரும்பாத, அதர்க்கு அறுகதை அற்ற பிரியா எழுதிக்கொள்வது. நான் ஏன் உங்கள் வாழ்க்கையில் நுழைந்தேன் என்று தெரிய வில்லை. நீங்கள் ஏன் என் வாழ்க்கையில் குருக்கிட்டீர்கள் என்றும் தெரியவில்லை. உங்களை பார்த்த முதல் நாளில் எனக்கு ஒரு நல்ல நண்பர்,கண்ணியமான நண்பர் கிடைத்தது விட்டார் என்று நான் பெருமை உற்றிருந்தேன். உங்களை என் முதல் நண்பர் என்ற இடத்தில் இருத்தி வைத்திருந்தேன். சமூகத்தில் உள்ள ஆண்களில் நீங்கள் தான் உண்மையான ஆண் மகன் என்று பூரித்து போய்ருந்தேன். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னிடம் பழகி இருந்தாலும் உங்களை போல் அவர்களுக்கு பெண்களை மதிக்க தெரியவில்லை. அவர்களை ஒரு கீழான நோக்கத்துடன் தான் பார்த்திருந்தனர். எனக்கு ஏற்பட்டது ஒரு கசப்பான அனுபவம். என்றே எனக்கு தோன்றியது. இத்தனை நாளாக நன்றாய் இருந்த நம் நட்பில் நல்லபாம்பு வந்தது போல் உங்கள் மனத்தில் எப்படி ஏன் காதலாக உருவமெடுத்தது என்று என்னால் சிந்திக்க முடிய வில்லை. இதார்க்கு நானும் ஒரு காரணம் என்பதை ஜீரணிக்க முடியவில்லை. மறந்து கூட என் நண்பர்களுக்கு எந்த வித தீங்கும் என்னால் ஏற்படக் கூடாது என்று நினைப்பவள...
காமினி யோகினி - 8 காமினி இப்போதும் ஒரு ரண வேதனையை அனுபவித்து கொண்டிருந்தாள். அவளுக்கு இப்போது வரைக்கும் எங்கிருக்கிறோம் தான் யார் என்பது கூட தெரியாமல் போயிருந்தது. தன்னுடைய ஸ்நேகிதிகளுடன் வரும்போது ஒருவர் காரில் ஏறிக்கொள்ள லிப்ட் கேட்டதும் பின்னர் அவரிடமிருந்து ஒரு கடுமையான வாடை வந்ததும் அதில் அவர்கள் மயக்கமுற்று கொண்டைஊசி வளைவில் தங்களுடைய வாகனம் மோதி தலைகுப்புற விழுவதும் மட்டுமே அவளுக்கு நினவிருந்தது. அதுவும் யார் எதற்க்காக அவர்களோடு வந்தனர் என்று தெரியவில்லை. சூரஸ்வாமி அவர்களை ஒரு பெட்டியில் வைத்து ஆசிரம நிலவறையில் கிடத்த  சொன்னதும் உப சீடர்கள் அவர்களை பெட்டியில் வைத்து பின்னர் அவர்களை கிடத்தி கொண்டு போயினர். அப்போது இருபதடி உயரத்தில் ஆஜானுபாகுவாக ஒரு பெரிய படம் அவள் கண்களில் தென்பட்டது. பெட்டியில் கிட்டத்தட்ட சவம் போல அசைவின்றி படுத்திருந்த அவளுடைய கண்கள் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தன. அவை பெட்டியின் துவாரத்தின் வழியே அந்த படத்தினை பார்த்தன. ஆமாம் அது அந்த உருவம் யாரோ ஸ்வாமியை போல உள்ளதே, ஆமாம் இதை நான் எங்கோ கண்டமாதிரி இருக்கே என்ற கேள்விகளுடன் அவள் நினைவு...
காமினி யோகினி - பகுதி 10 காமினி எழுந்திரு சீக்கிரம் காமினி காமினி? கேக்குதா? எழுந்திரு கிளம்பு காமினி?!! எங்கோ ஒரு சந்தில் இருந்து யாரோ கத்தும் ஓசை போல கேட்டு மெல்ல சுய  நினைவிற்கு வந்தால் காமினி. தலை சுற்றியது யாரோ சம்மட்டியால் அடித்தது போல  வலி விண்ணென்று தெறித்தது. மெல்ல கண்களை திறந்தாள். யாரோ  மூட்டைகளை தன்   மேல் போட்டத்து போல பாரமாக இருந்தது.  சுதாரித்து கொண்டு எழுவதற்குள் போதும் போதும் என்று ஆனது.  மெல்ல எழுந்து உட்கார்ந்தாள். யாரோ  அடித்தது போல இருந்தது. எதோ ஒரு பெண்ணின் முகம் மங்கலாக தெரிந்தது. சுளீர் சுளீர் என்ற அடிகளுக்கும் எந்த வலியையும் ஏற்படுத்த வில்லை மாறாக எறும்பு கடிப்பது போல இருந்தது. கலைந்த தலை முடியுடன் அலங்கோலமான வெள்ளை அங்கியுடன் இருப்பதை அப்போதுதான் பார்த்தாள். அவள் நம்பிகளான  கார்த்திகா, கலை, கனகதுர்கா மூவரும் அவள் அருகிலேயே அதே நிலையில் கிடந்தனர். இவர்கள் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று புரியாமல் விழித்தாள்.  கார்த்தி டீ கார்த்தி எழுந்திருடீ ! கலை கனகா !  இவங்க...