Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 6

-------------------------
"முழுச் சந்திரனை கிரகணம் பிடித்தது அன்று. சந்திரன் எந்த தவரும் செய்யவில்லை. ஏனோ இருளிர்க்கு அவளை அணைத்திட ஆசை. ஆனால் அவனுக்கு மட்டும் தான் அவள் சொந்த என்பது போல இந்த இருள் அரக்கன் சந்திரன் காணாமல் செய்து விட்டானே பாவி?"
-------------------------

"நிஜமா வா சொல்றீங்க?" ஹரி முகத்தில் கலவரம் விகாரத்துடன் வெளிப்பட்டது.

"இனிக்கி தான் எனக்கு தகவல் வந்தது டா. இன்னும் ஒரு மாசம் தான் நீ பண்ணிட்டு இருக்கிற இந்த Short-Term ப்ராஜெக்ட் முடிஞ்சி போய்டும். எப்படி இருந்தாலும் உனக்கு தலை வலி விட்டது."

"அப்போ இந்த பசங்க எல்லாம்?"

"அவங்க எல்லாரும் இன்னொரு வேலைக்கு போக வேண்டியது தான்?!" அவங்க 'Provider' ஆபீஸ்ல அத பாத்துக்க போறாங்க நாம 'Client' தானே நமக்கு என்ன கவலை?" என்று அமைதியாக பதில் அளித்தார் மேலாளர்.

சிறிது நேரம் அவன் முகத்தை நோக்கிய வாறே இருந்தார் அவர்.

மிகுந்த கவலையோடும் ஆர்வத்துடனும் ஹரி அவரை பார்த்து கொண்டிருந்தான்.

"டாய் சாமியார்! நீ இவ்வளோ மாறி போவேன்னு நான் எதிர் பாக்கல்ல.
என்னடா லவ்வா?;-)" என்று கண் அடித்த வாரே கேட்டார்.

ஹரி மறு மொழி கூறாமல் 'இல்லை' என்று மட்டும் தலை ஆட்டினான்.

"நான் ஒண்ணு சொன்ன தப்பா எடுத்துக்க மாட்டியே? " என்றார்.

"சே! சே! நீங்க சொல்றதை போய் தப்பா எடுத்துப்பேனா ஸார்?
எனக்கு எவ்ளோ பிரச்சனை இருந்தும் உங்க கிட்ட நான் மறைக்கிறது இல்ல. நீங்க எது சொன்னாலும் அதை கேட்டு நடந்துக்குறேன். சொல்லுங்க .." என்றான் ஹரி.

"உன்னோட நடவடிக்கை எல்லாம் மாறி போச்சு டா"

"இல்லையே! எதை வெச்சி அப்படி சொல்றீங்க?" என்று மறுத்தான்.

"எனக்கென்னவோ அந்த பொண்ணு மேல நீ ஏதோ over-infatuation வெச்சிறுக்கிற மாதிரி தெரியுது. அவளோட மனச புரிஞ்சி அப்புறம் எதுவா இருந்தாலும் முடிவு பண்ணிக்கோ அது தான் உனக்கு நல்லது. தேவை இல்லாம ஆசை வளர்த்துக்கிறது அவ்வளவு நல்லதா படல்ல." என்று ஓங்கி உடைத்தாற்போல் பேசினார்.

"அய்யோ! அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல ஸார்! எனக்கு ஒண்ணும் அந்த பொண்ணு மேல அபிப்பிராயம் எல்லாம் இல்லை." என்று கூறினான்.

"என் மறைக்கிறாய்? ப்ராஜெக்ட் முடியப் போகுதுன்னு சொன்ன உடனேயே உன் மூஞ்சி மாறி போச்சே? அவள பத்தி தானே நினைச்ச நீ? அதை சர்வ லட்சணமா உன் முகமே அதை காட்டிக்குடுத்திருச்சே?" என்றார் அவர்.

"ஸார்..அது வந்து" என்றதும்

"எல்லாம் எனக்கு தெரியும் அந்த பொண்ணு கூட நீ சாப்பிட போறதும் வீட்டுக்கு கொண்டு விடுவதும். இதெல்லாம் தேவையா உனக்கு?"என்றார் அவர்.

பதில் ஏதும் கூற நா எழ வில்லை அவனுக்கு.

"அப்படியே அந்த பொண்ணுக்கு உன்னை பிடிச்சிருக்குன்னு தெரிஞ்ச அவள propose பண்ணுவியா நீ? என்று வெடி வைத்தார் அவர்.

"ஸார்..எனக்கு ஒண்ணும் அந்த மாதிரி நெனப்பெல்லாம் இல்ல இருந்தாலும் அத அவ கிட்ட சொல்லிடுவேன். எனக்கு எதுவும் பிரச்னை இல்ல. " என்று அசட்டு தைரியத்துடன் பதில் சொல்லிவிட்டான் ஹரி.

"ஓ பரவால்ல டா! நல்ல இம்ப்ரூவ் பண்ணி இருக்கா உன்னை! வாழ்த்துக்கள்! இன்னொரு முக்கிய மான விஷயம் அவங்க ஆபீசில நாங்க பேசி இருக்கோம் 15 பேர்ல 5 பேரை இங்கேயே வேலைக்கு சேர்க்கிறத்துக்கான முயற்சி நடந்துகிட்டு இருக்கு தெரிஞ்சிக்கோ."

"அவங்க யாரு ஸார்?" முகத்தில் மின் விளக்கு எறிந்தது ஹரிக்கு.

"இன்னும் முடிவாகல்ல..இந்த தகவல் உனக்கு போதும்"? என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்தார் அவர்.

"இப்போதைக்கு இது போதும்:-)"என்று விடை பெற்றான் ஹரி.

------*********---------

மாலை வழக்கம் போல அவன் இணைய அரட்டையில் அவன் நண்பன் விகாசுக்கு காலையில் நடந்தவை எல்லாம் ஒப்பித்திதான்.

"மச்சான்! உங்க மேனேஜர் இந்த வேலை எல்லாம் பாப்பாரு ன்னு சொல்லவே இல்ல ;-) ஆனாலும் அவர் கரெக்டா உன்னை மடக்கிடரே "

"அத விடுடா! எனக்கு இப்போ குழப்பாமா இருக்கு! அவ என்ன பத்தி என்ன அபிப்பிராயம் வெச்சிறுக்கான்னு தெரியல? நான் அவ பழகுற விதத்தை உனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கேன் இல்ல இப்போ சொல்லு இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்?"

" பொண்ணுங்கள அவ்ளோ சுலபத்தில எடை போட்டு விட முடியாது டா! இன்னும்
நல்லா பழகிப்பார் அப்போ தான் ஓரளவுக்கு தெரிஞ்சிக்க முடியும்." என்றான் விகாஸ்.

"ஹரி! உண்மையா சொல்லு அவள நீ லவ் பண்ணுறியா என்ன ?"

"ஆமாம்! அப்படி தான் இருக்கும்ன்னு நினைக்க தோணுது டா ! அவ பேசுறது, பழகுறது, சிரிக்கறது அழறது என்கூட இருக்கிற எல்லா நேரமும் எதோ தனி உலகத்துல இருக்கிற மாதிரி தோணுது டா ! அவ என் கூடவே இருக்கனுமுன்னு எப்போதும் ஒரு நினைப்பு இருந்திகிட்டே இருக்கு. ." என்றான் ஹரி.

"வாழ்த்துக்கள் டா! சொன்ன நம்பணும் நீயும் காதல் வலையில விழுந்துவிட்டாய் சிக்கிரம் அதை அந்த பொண்ணு கிட்ட சொல்லிடு டா :-)
ஆனால் ஒண்ணு அவளுக்கு இந்த எண்ணம் இருக்கான்னு முதலில் தெரிஞ்சிக்கிட்டு அப்புறமா உன்னோட மனச திறந்து காட்டு!" என்றான்.

"அப்படியே குருஜி! தங்கள் ஆணை ! ;-)" என்று முடித்தான் ஹரி.

தூக்கம் வருவது போல் இருந்தாலும் தூங்க பிடிக்கவில்லை அவனுக்கு. ஏதோ எண்ணங்கள் வந்து போயின. ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் சற்று பயமாகவும் இருந்தது அவனுக்கு.அவள்அப்படி ஒரு எண்ணத்துடன் இத்தனை நாளாக பழக வில்லை அவன் இருந்தாலும் அவள் அவனிடம் சொன்ன வாசகம் இன்னும் அவன் மனதில் ஓடிற்று.

"உங்கள மாதிரி ஒரு வித்தியாசமான மனிதரை இது வரை என் வாழ்க்கையில் பார்த்தது இல்லை. உங்களை பற்றி நிறைய தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு வேண்டும் போல இருக்கிறது தெரியுமா?" என்று பிரியா சொன்னது இன்னும் அவன் காதுகளில் ரீங்காரம் இட்டது.

நெடுநேரம் இப்படியே அவன் இதனை பற்றியே எண்ணிக்கொண்டு தூங்கி போனான் ஹரி . தன் அம்மாவின் விழிகள் அவனை கவனிப்பது கூட தெரியாமலே!

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 10

--------------------------------- "பாலைவனத்தில் ஓர் சோலை தெரிந்தது.ஆசையாய் அதை துரத்தி சென்றேன். கால்கள் ஏறிய, கண்கள் கூசும் வெய்யிலில் சென்ற பின் தான் தெரிந்தது அது கானல் நீரென்று!" --------------------------------- இரண்டு நாட்கள் அவர்கள் முன்பு போல சகஜமாக பேசிக் கொள்ளவில்லை.அலுவலகத்தில் பொதுவாக ஹரியை ஓர் இடத்தில் யாரும் சேர்ந்தர்ப்போல் ஒரு ஐந்து நிமிடங்கள் கூட பார்த்தது இல்லை.பரபப்புக்கும் சுறுசுறுப்பிர்கும் பேர் போனவன் ஹரி. அவன் வேலை செய்யாமல் இருந்தே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த ஹரி சோபையுடன் காணப்பட்டது எல்லோருக்கும் சற்று ஆச்சரியத்தை அளித்தது. அவனை பார்க்கும் போதெல்லாம் பிரியா அவனிடம் முகம் கொடுக்காமல் பேசினாள். எதை கேட்டாலும் இயந்திரம் போல பதில் சொன்னாள்.வேலையை பற்றி மட்டும் பேசினாள் தவிர மற்ற நேரத்தில் மௌனீயாக அமர்ந்திருந்தாள்.மற்றொரு நாள் அவன் மிகவும் வற்புறுத்தி அவளிடம் பேச தொடங்கினான் ஹரி. "தயவு செய்து என்ன மன்னிச்சிடு பிரியா. நான் உன்னை ரொம்ப நோக வெச்சிடென்னு நினைக்கிறேன். ஆனால் என் காதல் உண்மை பிரியா. உன் கூட மட்டும் தான் பழகினேன் அப்படிங்கிறததுக்கு...

வாசகி நானல்ல! - பக்கம் 2

"நான் தான் கிடைச்சேனா உங்களுக்கு?" என்று எப்போதும் இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்காமல்அவர் ' டீம் லீட்' இடம் கேட்டான் ஹரி. "பின்ன? உன்ன விட்ட யாருடா அவங்களுக்கு Training குடுக்கறது? உன்ன மாதிரி Qualified employee' தான் அந்த வெள்ளக்காரிக்கு Trainer ஆ வேணுமாம் தலை ழா நிக்கிறா அவ!" என்றார் அவர். "என்னவோ போங்க என்ன வெச்சி ஏதோ விளையாடனும்னு முடிவு பண்ணிட்டீங்க. நடத்துங்க." என்று பொருமினான். "டாய்! என் டா பயப்டுற? சும்மா போய் ஜமாய் இது எல்லாம் ஒரு experience தானே ?" என்றே அவர் ஆசை அஸ்திரம் ஏவினார். "Project completion இருக்கு coding work வேற இருக்கு. இப்போ போய் எனக்கு இந்த வேலை குடுகுறீங்க நான் என்னத்த சொல்றது?" " வேண்டாம்ணு சொல்லாதே அதுசின்ன ப்ராஜெக்ட் தான் நாலு மாசத்துல முடிஞ்சிடும். இவங்களுக்கு நீ training குடுதிட்டேன்னா வேலை முடிஞ்சித்து. ஹாயா இருக்கலாம் அப்புறம் அந்த பசங்க உனக்காக வேலை பக்க போறானுங்க." என்று சாத்தான் வேதம் ஓதினார் அவர் மேலாளர். 15 பெருக்கு அவன் பணி நேரம் போக 4 மணி நேரம் கூடுதல் பயிற்சி வகுப்புகள் ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...