Skip to main content

வாசகி நானல்ல! - பக்கம் 1

இன்றுடன் 2 மாதங்கள் ஆகி விட்டன. பிரியா இனி வரமாட்டாள் என்று அவனால் ஏற்க முடிய வில்லை. மனக்குரங்கு செய்யும் சேட்டை இது என்று மூளைக்கு தெரியும். ஆனால் மனம் செய்யும் அட்டகாசம் தான் அடிப்படையில் இந்த உலகையே ஆட்டி வைக்கிறது.

ஹரி தன் கணினியை வெறித்ததுக்கொண்டிருந்தான். அவன் இப்படி தன்னிலை மறக்கும் அளவிர்க்கு என்றும் நேர்ந்ததில்லை. பிரியாவை சந்திக்கும் வரை. பிரியா ஒரு ப்ராஜெக்ட் நிமித்தமாக அவன் உடன் பணி செய்தவள். பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று ஹரி ஒரு கற்பனையும் வைத்தததிருக்க வில்லை. அவன் இது வரை எந்த பெண்ணுடனும் பழகி இருக்கவும் இல்லை. அவன் ஒரு சாமியார் என்றே சொல்ல வேண்டும்.


அவன் மேலாளரும் அவனுடன் பணிசெய்யும் மற்ற சாகாக்களும் அவனை இது பற்றி கிண்டல் செய்வதுண்டு. "டேய் சாமியார்! பாத்துக்கிட்டே இரு ஒரு ரதி உன் தவத்தை கலைச்சிட்டுப் போக போறா பாரு!" என்று பலவாறு கிண்டலுக்கு உட்படுவதும் உண்டு. ஆனால் ஹரி அது பற்றி கவலைப் படுவதில்லை.


"சிங்கம் சிங்களாவே போகும் அப்பிடியே தான் இருக்கும் மச்சி!"என்று பீற்றிக்கொள்வதும் ஆர்கட்டில்(Orkut) போன்ற நண்பர்கள் வட்டார வலை தளத்திலும் கூட அவன் இந்த பெயரே பெற்றிருந்தான்.மிகவும் கூச்ச சுபாவமும், சரியாக செய்ய வேண்டும் என்ற மனோபாவமும் அவன் வளர்ப்புக் கோளாறுகளில் ஒன்று போலும்!
---------------------------------------------

Comments

Popular posts from this blog

வாசகி நானல்ல! - பக்கம் 10

--------------------------------- "பாலைவனத்தில் ஓர் சோலை தெரிந்தது.ஆசையாய் அதை துரத்தி சென்றேன். கால்கள் ஏறிய, கண்கள் கூசும் வெய்யிலில் சென்ற பின் தான் தெரிந்தது அது கானல் நீரென்று!" --------------------------------- இரண்டு நாட்கள் அவர்கள் முன்பு போல சகஜமாக பேசிக் கொள்ளவில்லை.அலுவலகத்தில் பொதுவாக ஹரியை ஓர் இடத்தில் யாரும் சேர்ந்தர்ப்போல் ஒரு ஐந்து நிமிடங்கள் கூட பார்த்தது இல்லை.பரபப்புக்கும் சுறுசுறுப்பிர்கும் பேர் போனவன் ஹரி. அவன் வேலை செய்யாமல் இருந்தே இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இருந்த ஹரி சோபையுடன் காணப்பட்டது எல்லோருக்கும் சற்று ஆச்சரியத்தை அளித்தது. அவனை பார்க்கும் போதெல்லாம் பிரியா அவனிடம் முகம் கொடுக்காமல் பேசினாள். எதை கேட்டாலும் இயந்திரம் போல பதில் சொன்னாள்.வேலையை பற்றி மட்டும் பேசினாள் தவிர மற்ற நேரத்தில் மௌனீயாக அமர்ந்திருந்தாள்.மற்றொரு நாள் அவன் மிகவும் வற்புறுத்தி அவளிடம் பேச தொடங்கினான் ஹரி. "தயவு செய்து என்ன மன்னிச்சிடு பிரியா. நான் உன்னை ரொம்ப நோக வெச்சிடென்னு நினைக்கிறேன். ஆனால் என் காதல் உண்மை பிரியா. உன் கூட மட்டும் தான் பழகினேன் அப்படிங்கிறததுக்கு...

வாசகி நானல்ல! - பக்கம் 2

"நான் தான் கிடைச்சேனா உங்களுக்கு?" என்று எப்போதும் இருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்காமல்அவர் ' டீம் லீட்' இடம் கேட்டான் ஹரி. "பின்ன? உன்ன விட்ட யாருடா அவங்களுக்கு Training குடுக்கறது? உன்ன மாதிரி Qualified employee' தான் அந்த வெள்ளக்காரிக்கு Trainer ஆ வேணுமாம் தலை ழா நிக்கிறா அவ!" என்றார் அவர். "என்னவோ போங்க என்ன வெச்சி ஏதோ விளையாடனும்னு முடிவு பண்ணிட்டீங்க. நடத்துங்க." என்று பொருமினான். "டாய்! என் டா பயப்டுற? சும்மா போய் ஜமாய் இது எல்லாம் ஒரு experience தானே ?" என்றே அவர் ஆசை அஸ்திரம் ஏவினார். "Project completion இருக்கு coding work வேற இருக்கு. இப்போ போய் எனக்கு இந்த வேலை குடுகுறீங்க நான் என்னத்த சொல்றது?" " வேண்டாம்ணு சொல்லாதே அதுசின்ன ப்ராஜெக்ட் தான் நாலு மாசத்துல முடிஞ்சிடும். இவங்களுக்கு நீ training குடுதிட்டேன்னா வேலை முடிஞ்சித்து. ஹாயா இருக்கலாம் அப்புறம் அந்த பசங்க உனக்காக வேலை பக்க போறானுங்க." என்று சாத்தான் வேதம் ஓதினார் அவர் மேலாளர். 15 பெருக்கு அவன் பணி நேரம் போக 4 மணி நேரம் கூடுதல் பயிற்சி வகுப்புகள் ...

வாசகி நானல்ல! - பக்கம் 5

"பக்கத்தில் இருக்கும் போது நமக்கு அவர்கள் நினைவு வருவதில்லை. பிரிவு ஒன்றே அதனை நினைவு படுத்துகின்றது.." புது வாசகம் ஒன்றை அவன் டைரியில் ஏற்றினான் ஹரி. நெடு நேரமகியும் பிரியா வரவில்லை. அவளை தான் அலுவலகத்தில் தேடுகின்றான் ஹரி என்பதை அவன் முகம் சர்வ லட்சணமாய் காட்டிக்கோடுத்தது. ஸெல் பேசி சிணுங்கியது.குறுந்தகவல் ஒன்று உதித்தது. "ஹரி! நான் ஒரு முக்கியமான விஷயமா ஊருக்கு போறேன். எனக்கு ரெண்டு நாள் லீவ் வேணும். மற்றவை நேரில்.."எங்கே போய் தொலைந்தாளோ!:-@" என்று அவன் வெறுப்புற்றிருந்தான். அது பண்டிகை மாதம் அதலால் அவள் இரண்டு நாள் விடுப்பு ஒரு வார பிரிவிர்க்கு காரணம் ஆயிற்று.அந்த ஒரு வாரம் அவளிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக கழிந்தது அவனுக்கு அதிக தவிப்பை ஏற்படுத்தியது.அவனை தவிர மற்ற எல்லா நிகழ்வுகளும் ஏனோ நத்தை வேகத்தில் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.அவள் செல்பேசி அணைக்கப் பட்டுள்ளது என்றே எத்தனை முறை முயற்சிதாலும் பதில் கூறியது. மற்றோர் நாள் பிரியா வந்தாள். முகம் கொடுத்து பேசவில்லை அவன். தேநீர் நேரத்தில் அவனை சந்திப்பது என்று முடிவு செ...