Skip to main content

Posts

வாசகி நானல்ல! - பக்கம் 1

இன்றுடன் 2 மாதங்கள் ஆகி விட்டன. பிரியா இனி வரமாட்டாள் என்று அவனால் ஏற்க முடிய வில்லை. மனக்குரங்கு செய்யும் சேட்டை இது என்று மூளைக்கு தெரியும். ஆனால் மனம் செய்யும் அட்டகாசம் தான் அடிப்படையில் இந்த உலகையே ஆட்டி வைக்கிறது. ஹரி தன் கணினியை வெறித்ததுக்கொண்டிருந்தான். அவன் இப்படி தன்னிலை மறக்கும் அளவிர்க்கு என்றும் நேர்ந்ததில்லை. பிரியாவை சந்திக்கும் வரை. பிரியா ஒரு ப்ராஜெக்ட் நிமித்தமாக அவன் உடன் பணி செய்தவள். பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று ஹரி ஒரு கற்பனையும் வைத்தததிருக்க வில்லை. அவன் இது வரை எந்த பெண்ணுடனும் பழகி இருக்கவும் இல்லை. அவன் ஒரு சாமியார் என்றே சொல்ல வேண்டும். அவன் மேலாளரும் அவனுடன் பணிசெய்யும் மற்ற சாகாக்களும் அவனை இது பற்றி கிண்டல் செய்வதுண்டு. "டேய் சாமியார்! பாத்துக்கிட்டே இரு ஒரு ரதி உன் தவத்தை கலைச்சிட்டுப் போக போறா பாரு!" என்று பலவாறு கிண்டலுக்கு உட்படுவதும் உண்டு. ஆனால் ஹரி அது பற்றி கவலைப் படுவதில்லை. "சிங்கம் சிங்களாவே போகும் அப்பிடியே தான் இருக்கும் மச்சி!"என்று பீற்றிக்கொள்வதும் ஆர்கட்டில்(Orkut) போன்ற நண்பர்கள் வட்டார வலை தளத்திலும் கூ...

தண்டனை

இடி இடித்து ஒருவர் தலை மேல் விழுந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது அக்காயிக்கு.தன் ஒரே மகன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருக்கின்றான் என்று சொன்னால் எந்த அம்மாவுக்கும் அப்படி இருப்பது இயற்கை தானே? அவள் அப்படி ஓடிய வேகம் அவள் வாழ்க்கையில் முன் எப்போதுமே ஓடியதே இல்லை. தென்னைவயல் கிராமம் முழுவதுமே அவள் அப்படி ஓடிய வேகத்தை வெறித்து பார்த்துகொண்டிருந்தது. ஓடியது அவள் மட்டும்தான். ஆனால் அவள் பின்னால் பெரும்பாலான ஊர் சாபத்தின் சத்தம்மும் முனகலும் அவள் பின்னே ஓடியது யார் கண்ணுக்கும் தெரிய வாய்ப்பில்லை. ஸ்ரீதர் மதிய சாப்பாட்டிற்கு வரும் போதே சுவாரஸ்யமாகவே பேசிக்கொண்டே வந்தான். கேட்டியம்மா சேதியை? அந்த பால்ராசு பயலை பத்தி?" அம்மா அடுக்களையில் இருந்து கொண்டே பதிலை மட்டும் விட்டாள். "மொதல்ல கை கால் அலம்பிண்டு வாடா! கண்டவாளோட சங்கதி இப்போ என்னத்துக்கு? அப்பாவும் ஸ்ரீதரும் வெகு நேரம் பேசிக்கொண்டே சாப்பிட வந்து விட்டார்கள். நானும் கேள்விப்பட்டேன். அந்த பால்ராசு பய நேத்து ராத்திரி நல்லா தீர்த்தம் போல இருக்கு. அந்த பயலும் இன்னும் பக்கத்து தெருவிலேந்து ரெண்டு பயல்களும் சேந்துண...